Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரான் (Iran) ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேல் (Israe) மீது பலஸ்டிக் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். மத்திய இஸ்ரேலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இது தெரிவிக்கப்படுகிறது. 2,040 கிலோமீற்றர் தூரம் இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் ஹைபோசோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ஹூதியின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா செரியா தெரிவித்…

  2. அமெரிக்காவில் டிரம்ப், புஷ் இருவரும் மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றும் அதிபரானது எப்படி? படக்குறிப்பு, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 செப்டெம்பர் 2024, 07:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளர், வெற்றியாளராக முடியாது. ஏனென்றால், வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுதான். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். …

  3. 15 SEP, 2024 | 12:49 PM நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 70 விவசாயிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த மரப்படகு கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகள் கும்பி நகரத்தில் உள்ள தங்கள் விவசாய நிலங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். உளளுர் அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் மூன்று மணிநேர தேடுதலின் பின்னர் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவம் இந்த பகுதியில் இடம்பெற்றமை இது இரண்டாவது தடவை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம்900 விவசாயிகள் தங்கள் நிலங்களிற்கு கடல்மார்க்கமாக செல்கின்றனர்…

  4. அமெரிக்க அதிபா் தோ்தலில் விண்வெளியிலிருந்தே வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ். சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் , நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் சுனிதா வில்லியம்ஸ் , ‘தோ்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். எனவே, நான் விண்வெளியில் இருந்தபடியே அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, பட்ச் வில்மோரும், அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காகவிண்ணப்பத்துள்ளதாகத் தெரிவித்து…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், மாலு கர்சீனோ பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2024 சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கல…

  6. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேர்தலில் குறுக்கீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரச சட்டத்தரணிகள் மேற்படி வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோர்ஜியாவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தோல்வியை முறியடிப்பதற்குச் சதி செய்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 14 இணை பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்…

  7. பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன? பட மூலாதாரம்,JEFF KERBY படக்குறிப்பு, கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஓர் அலையை தூண்டியது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி செய்திகள் - அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந…

  8. Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 12:19 PM ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஆபிரிக்க நாடான கொங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்பு…

  9. உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக் என்ற 36 வயதான சிறந்த பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் திகதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனமதித்த போது கோமா நிலைக்கு செல்லப்பட்டு நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது. ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தள…

  10. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், செப்டம்பர் 21ஆம் திகதி, ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தவிருக்கிறார். டெலவேர் நகரில் இந்த மாநாடு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ‘குவாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. நான்காவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு உத்யோகபூர்வ ஒருங்கிணைப்பு, தடையற்ற, வெளிப்படையான இந்தோ – பசிஃபிக் வட்டாரம் குறித்த ஒருமித்த கருத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி ஆ…

  11. அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் - புட்டின் 13 SEP, 2024 | 02:12 PM ரஸ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்…

  12. Published By: RAJEEBAN 12 SEP, 2024 | 12:02 PM மலேசியாவின் 20 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உடல்ரீதியாக பாலியல்ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என கருதப்படும் 402 சிறுவர்களையும் பதின்மவயதினரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். ஒரு வயது முதல் 17 வயதானவர்களை மீட்டுள்ளோம் இவர்கள் பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மத ஆசிரியர்கள் உட்பட 171 பேரை கைதுசெய்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பிரபலமான இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது எனினும் அந்த அமைப்பு தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்த…

  13. 12 SEP, 2024 | 06:46 AM காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். விமானதாக்குதல் இடம்பெற்றது என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன, கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை மைதானத்தில் அமைந்திருந்த ஹமாசின் கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது துல்லியமான தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதல் இடம்பெற்றவேளை அங்…

  14. 15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் – நாசா எச்சரிக்கை. பயங்கர வேகத்தில் பூமியை நோக்கி வரும் 2024 ON என்ற இராட்சத சிறுகோள், எதிர்வரும் 15ஆம் திகதி பூமிக்கு அருகில் செல்ல உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. 720 அடி விட்டம் கொண்ட இந்த ராட்சத சிறுகோள், இரண்டு கிரிக்கெட் மைதானங்களை விட பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரம்மாண்டமான விண்வெளி பாறை வரும் 15ஆம் திகதி அன்று பூமிக்கு அருகில் செல்ல உள்ளது. இருப்பினும், இந்த சிறுகோள் சுமார் 620,000 மைல்கள் அல்லது தோராயமாக 2.6 மடங்கு பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் 25,000 மைல் வேகமானது வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நாசா…

  15. Published By: RAJEEBAN 11 SEP, 2024 | 11:23 AM மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் ஆராய்ந்து கொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிக்கோ செனெட்டில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததால் செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான மொரேனாவிற்கு தேவையான வாக்குகள் கிடைத்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர். எதிர்கட்சி உறுப்…

  16. ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தியாவும், சீனாவும் இணைய ஆர்வம் காட்டுவதாக ரஷ்யாவின் EurAsian Times தெரிவித்துள்ளது. ரஷ்யா 0.5 மெகாவாட் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட, ஒரு சிறிய அணுமின் நிலையத்தை நிலாவில் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தில் இணைய இந்தியாவும், சீனாவும் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் 2035 க்குள் அணுமின் நிலையம் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா தெரிவித்திருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் அரசு அணுமின் நிறுவனமான Rosatom-த்தின் தலைவர் அலெக்ஸி லிக்காச்சேவ், விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசியதாவது; “0.5 மெகாவாட் ஆற்…

  17. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர். கமலா ஹாரிஸ் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார். மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக…

  18. கடந்த சில தினங்களுக்கு முன் பிரேசிலிய புவியியல் சேவை, அமேசான் படுகையில் உள்ள அனைத்து ஆறுகளும் வரலாறு காணாத அளவில் குறையும் என்றும் இதனால் உள்ளூர் சமூக மக்கள் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது. இத்தகைய சூழலில், அமேசான் மழைக்காடுகளின் வழியாக செல்லும் ஆறுகளில் நீர்மட்டம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வழக்கமாக ஜூன் கடைசி வாரத்தில் இருந்து ஜூலை முதல் வாரத்தில் இங்கே வறட்சிக் காலம் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில், ஜூன் முதல் பாதியிலேயே நீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சராசரியை விட குறைவாக காணப்படுகிறது. நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை அமேசான் பகுதிகள் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவை பெற்றுள்ளது. வறட்சி காரணமாக ஆறு…

  19. இன்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் (Hamas) மேற்கொண்ட அந்த வெற்றிகரமான தாக்குதலின் போது உண்மையிலேயே என்ன நடந்தது? ஹமாஸ் என்ற ஒரு சிறிய குழு- எப்படி உலகத்தின் ஒரு நவீன இரணுவக் கட்டமைப்பை சிதைத்து இஸ்ரேலுக்குள் நுழைந்தது? உலகின் மிகச் சக்திவாய்ந்த பாதுகாப்பு அரண் என்று கூறப்பட்ட காசாவின் சுவர்களைத் தகர்த்து- எப்படி இஸ்ரேல் மீது அது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டது? இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகளை காசா தாக்குதலின்போது எப்படி ஏமாற்றியது ஹமாஸ்? ஹமாஸ் விடயத்தில் எங்கே தவறிழைத்தது இஸ்ரேல்? காலங்கள் கடந்தும் நிலைத்துநிற்கக்கூடிய ஒரு வரலாற்றுச் சம்பவம் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் த…

  20. யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு! யாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும் இதன் விளைவாக வடக்கு வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன மேலும் நாட்டின் 12 மாநிலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், கரையோரப் பகுதியில் இருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன https://athavannews.com/2024/1398754

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த தாக்குதலால் மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதாகவும், வனப்பகுதியான ஹேர் அப்பாஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சனா செய்தி முகமை தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்படுவதற்காக காத்திருந்தது. ஃப்ளைட் 93 இன் நிர்ணயிக்கப்பட்ட புறப்படும் நேரம் கடந்து ஏற்கனவே 40 நிமிடங்கள் ஆகிவிட்டன. முதல் வகுப்பின் ஆறு வரிசைகளில் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவர்கள் திரும்புவதற்கான டிக்கெட்டை வாங்கியிருக்கவில்லை. முந்தைய ந…

  23. 09 SEP, 2024 | 12:30 PM மேற்குகரையில் ஜோர்தான் எல்லைக்கு அருகில் ஜோர்தானை சேர்ந்த வாகனச்சாரதி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று இஸ்ரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோர்தான் ஆற்றினை கடக்கும் பகுதியில் உள்ள அலன்பை பாலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதியொருவர் டிரக்கில் அலைன் பை பாலத்தை நோக்கி வந்தார் டிரக்கிலிருந்து இறங்கினார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்…

  24. 09 SEP, 2024 | 10:27 AM புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவுடன் போரிட்டு வருகிறது. ‘‘இது போருக்கான காலம் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரைகைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடிபல முறை வேண்…

  25. பட மூலாதாரம்,GOV.UK / REUTERS படக்குறிப்பு, பைனான்சியல் டைம்ஸில் முதல் முறையாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவர்கள் கூட்டாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், கோர்டன் கொரேரா பதவி, பிபிசி செய்தியாளர் 8 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "பனிப்போருக்குப் பின் நாம் இதுவரை கண்டிராத வகையில், சர்வதேச உலக ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர். யுக்ரேனில் புதினின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ரஷ்யாவையும் எதிர்ப்பதில் இரு நாடுகளும் ஒன்று பட்டுள்ளன என்று ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.