உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின் நெருப்புக்குழம்பு ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. வோல்கானா என்று சொல்லப்படும் இந்த …
-
- 10 replies
- 3.7k views
-
-
துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தோல்வியுற்ற இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். துருக்கி அங்காராவில் அதிபரின் மாளிகையில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிகையில் ஈடுபட்ட சுமார் 10000 பேரின் காவலை நீடிக்கவே இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் 600க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, 1000க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் ஒருபோதும் நாட்டின் ஜனநாயகத்திற்கோ …
-
- 0 replies
- 312 views
-
-
அமெரிக்க புளோரிடா மாநில இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; பலர் காயம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள இரவு விடுதியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சுமார் 14 பேர் காயமடைந் துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போர்ட் மையர்ஸ் எனும் நகரிலுள்ள மேற்படி இரவு விடுதியில் பதின்மர் பருவத்தினருக்கான வைபவமொன்றின்போது இத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18155#sthash.45QN9tX4.dpuf
-
- 0 replies
- 190 views
-
-
மாவோ.,க்களின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளவும், மறைந்து இருக்கும் மாவோ.,க்களை வேட்டையாடவும் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை காட்டுக்குள் அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் கட்டுப்படுத்தவும் முடியும் என அரசு தரப்பில் நம்பப்படுகிறது. மாவோ.,க்களின் தொல்லை மீண்டும் தலைதூக்கி வருவதை அடுத்து அங்கு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. பீகார், ஒடிசாவை விட ஜார்கண்ட்டில் முழுக்கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. கூடுதல் கண்காணிப்பு: இது குறித்து சி.ஆர்.பி,எப்., டைரக்டர் ஜெனரல் பிரணாய் சகோய் கூறியதாவது: நக்சல்கள் அட்டூழியத்தை முறியடிக்க 10 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள…
-
- 3 replies
- 502 views
-
-
கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை கொல்ல இளவரசர் திட்டமா? கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலை அனுப்பினார்’ என சாத் அல் ஜாப்ரி குற்றம்சாட்டியுள்ளார். ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வாயிலாக சந்தேக…
-
- 0 replies
- 459 views
-
-
ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறியை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் பேரணி ஃபின்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் வலதுசாரி தீவிரவாத வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது. ஃபின்லாந்த் தலைநகர் ஹெல்சிங்கியில் சுமார் 15,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது. குவோப்பியோ நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஃபின்லாந்து பிரதமர் ஜுஹா சிபிலா கலந்து கொண்டார். பெரும்பாலான ஃபின்லாந்த் மக்களுக்கு அதிகரித்து வரும் தீவி…
-
- 1 reply
- 442 views
-
-
எட்டு மணிநேர ஊர்வலத்துக்கு பின் வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உடல் தகனம் : கல்லூரிகளை மூடும் அரசின் உத்தரவால் மாணவர்கள் போராட்டம் [ சனிக்கிழமை, 31 சனவரி 2009, 05:55.28 PM GMT +05:30 ] ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் 3மணிக்கு தொடங்கிது. 8மணி நேரத்துக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் மூலக்கொத்தளத்தில் ஊர்வலம் முடிந்தது. இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்தனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டிருந்தது. மூலக் கொத்தளம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்ட முத்துக்குமாருடைய உடல் அங்கே தகனம் செய்யப்ப…
-
- 0 replies
- 840 views
-
-
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை தாக்கிய நிலநடுக்கத்துக்கு 25 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. குறித்த நிலநடுக்கமானது 6.5 அலகு ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம…
-
- 1 reply
- 512 views
-
-
கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் – உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் Rajeevan ArasaratnamDecember 6, 2020 கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவு காணமுடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் அதனோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்துகளின் சோதனை முடிவுகள் காரணமாக வைரஸ் ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் என என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸ் தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் முதலாவது உயர்மட்ட அமர்வில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். பாதை இன்னமும் ஆபத்தானதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக மனித குலத்தின் சிறந்த குணாதிசயங…
-
- 0 replies
- 541 views
-
-
பாரதீய ஜனதா துணைத் தலைவரும் டெல்லி மேல் சபை எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 3 பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. வருகிற ஜூன் 4-ந்தேதி அவர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்கிறார்கள். அங்கு அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை மந்திரிகள் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகிறார்கள். தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர். இது பற்றி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கேட்டபோது, பாரதீய ஜனதா குழு வருகை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார். இதே போல் இந்திய தூதரக அதிகா…
-
- 0 replies
- 355 views
-
-
Should Tamils be ousted from Parliament Square? பிரித்தானிய மாணவர்களால் இன்று அறிவிக்கப்பட்டது... தமிழர்களை பிரித்தானிய நாடாளமன்ற சதுக்கதுதிலிருந்து அகற்றுவதட்குரிய வாகேடுப்பு. லண்டனில் லிருந்து வெளியாகும் பத்திரிகையான London Lite வாகேடுப்பை எண்ணுகின்றது. தயவு செய்து உடனே என்று வாக்களியுங்கள். No என்றால் ஆர்பாட்டம் தொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவோம், உடனே வாக்களியுங்கள் Should Tamils be ousted from Parliament Square? Yes 24% No 76% Thank you for your vote
-
- 0 replies
- 874 views
-
-
நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் முதல் உரையின் 10 அம்சங்கள் கோப்புப் படம்: டொனால்டு ட்ரம்ப் கன்சாஸ் துப்பாக்கிச் சூடு, யூதவெறுப்பு தாக்குதல்களுக்கு ட்ரம்ப் கண்டனம் * அமெரிக்க நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், கன்சாஸ் மாகாணத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், யூத மதத்தவர் மீது நடத்தப்படும் இனவெறுப்பு தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசும் முதல் உரை இதுவாகும். ட்ரம்ப் உரையின் முக்கிய அம்சங்கள் * கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டி…
-
- 1 reply
- 495 views
-
-
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் டஜன்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை எந்த தளத்திருந்து தாக்குதல் நடைபெற்றதோ அப்பகுதியில் தாக்குதல் நடத்த தான் உத்தரவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மனித நேயம் கொண்ட அனைத்து நாடுகளும், சிரியாவில் நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். வியாழக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவ…
-
- 6 replies
- 807 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ரம்ஜான் பண்டிகை நாளன்று கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 18 எனத் தெரிய வந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையொட்டி பாகிஸ்தானில் சாராய விற்பனை அதிகமாக இருந்தது. கடந்த சனிக்கிழமையன்று கராச்சி நகரில் உள்ள மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள குறிப்பிட்ட கடையில் விற்கப்பட்ட சாராயத்தை குடித்த பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விசாரணையில் கடையில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட ‘குடிமகன்கள்' பலர் கராச்சி ஜின்னா ஆஸ்பத்திரியிலும், மேலும் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில், ஜின்னா ஆஸ்பத்திரியில் 16 பேரும், இரு தனியார் ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 18 பேர் சிகிச்சை …
-
- 0 replies
- 352 views
-
-
பெகாசஸ் விவகாரம்: தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி! பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஜனாதிபதி உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார். பெகாசஸ் விவகாரம் மற்றும் ஃசைபர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கியப் ஊடகவியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் தொலைப்பேசிகளை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது…
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
டெல்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என பாரதிய ஜனதா கட்சியும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் முட்டுக்கட்டைகளையும் மீறி ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்களில் ஒருவரான இருந்தவர் நரேந்திர மோடி. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாக வலம் வந்தவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர். கடந்த சில ஆண்டுகளாக நரேந்திர மோடியின் விஸ்வரூபமானது அவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. ராஜ்நாத்சிங், பாஜகவின் தலைவரான பின்னர் மோடி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றார். பின்னர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபா…
-
- 0 replies
- 358 views
-
-
டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது அமெரிக்க மாநிலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு சில வெளிநாடுகள் பணம் தந்துள்ளதாகவும், இவை அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஊழலுக்கெதிரான ஷரத்துக்களை மீறுவதாகவும் கூறி, அவருக்கெதிராக, அமெரிக்க மாநிலமான மேரிலாண்ட் மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகியவை வழக்கு தொடர்ந்திருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிபர் டிரம்ப்பின் வணிகத்தால் ஏற்படும் 'முரண்பட்ட அக்கறைகள்' நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக மேரிலாண்ட் மாநிலத்தின் தலைமை அரச வழக்கறிஞர் பிரையன் ஃப்ரோஷ் கூறினார். டிரம்ப் தனது அதிபர் பதவியை ஒரு விற்பனைக் கருவியாகப் பயன்படுத்தி தனது ஹோட…
-
- 0 replies
- 189 views
-
-
ஒலியை விட ஐந்து மடங்கு வேகமான ஹைபர்சோனிக் ஏவுகணை சோதித்தது ரஷ்யா! ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கி அழிக்கும் சிர்கான் வகை ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை பேரண்ட்ஸ் கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக அழித்ததாக ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கருங்கடல் பகுதியில் நேட்டோ படைகள் பயிற்சியில் ஈடுபட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷ்யாவின் திடீர் ஏவுகணை சோதனை ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2021/1251027
-
- 0 replies
- 382 views
-
-
தங்கள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க தென்னாபிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தல்! தங்கள் மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தென்னாபிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாபிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை’ என கூறியுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை வ…
-
- 0 replies
- 463 views
-
-
இராணுவ வீரர்களை கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொலை பெல்ஜியம், பிரெஸிலஸ் நகரில் படை வீரர்கள் இருவர் மீது கத்திக் குத்து மேற்கொண்ட ஒருவர், இராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரர்ணுவ வீரர்கள் இருவர் மீது மேற்படி நபர் கத்திக் குத்து தாககுதலை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, மேற்படி நபர் மீது இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த 30 வயதான தாக்குதல்தாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர், பயங்கரவாத அ…
-
- 0 replies
- 618 views
-
-
யு.எஸ்.பல்கலைக்கழகத்தில் விபரீதம் - பேராசிரியை சுட்டு இந்தியர் உள்பட 3 பேர் பலி சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010, 11:40[iST] ஹன்ட்ஸ்வில்லி: அலபாமா பல்கலைக்கழகத்தின் ஹன்ட்ஸ்வில்லி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியப் பேராசிரியர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஒரு பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள உயிரியல் பிரிவு கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 உயிரியல் பேராசிரியர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாரும் காயமடையவில்லை என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரே கார்னர் தெரிவித்தார். துப்பாக்கியால் சுட்டதாக பிடிபட்டுள்ள பேராசிரியையின் பெயர் அமி பிஷப். இவரும் உயி…
-
- 6 replies
- 759 views
-
-
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அடுத்தடுத்து அணு உலை அமைக்கப்படுவதைக் கண்டித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கூடங்குளத்தில் 1 மற்றும் 2வது அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழல்களும், குளறுபடிகளும் நிறைந்திருக்கிறது. இதன் உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகள் பரிசோதித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச பரிந்துரைகளை அமுல்படு்தப்பட்டிருக்கின்றனவை என்ற தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். குற்ற சாட்டுகள் உண்மை என்று தெரிந்தால் 2 அணு உலைகளையும் இழுத்து மூட வேண்டும். கூடங்குளத்தில் மேலும் 3,4வது அணு உலைகள் அமைக்க…
-
- 0 replies
- 411 views
-
-
அதிபர் ட்ரம்பால் 3-ம் உலகப் போர் மூளும்: அமெரிக்க எம்.பி. கருத்து பாப் கார்கர் - NYT அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து உள்ளது என்று ஆளும் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி. பாப் கார்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை, ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு” என்று ட்விட்டரில் அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அணு குண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடகொரியா அண்மையில் ச…
-
- 0 replies
- 360 views
-
-
ஜெருசலேமில், மீண்டும் மோதல்: 57 பாலஸ்தீனர்கள் காயம்! ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பொலிஸாருடனான மோதலில், குறைந்தது 57 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் சமமாக மதிக்கும் இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மோதல் பதிவாகியுள்ளது. பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் சேவையின் படி, 14 பாலஸ்தீனியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யூத வழிபாடு நடந்து கொண்டிருந்த மேற்கு சுவரை நோக்கி, நூற்றுக்கணக்கான மக்கள் பாறைகள் மற்றும் வானவேடிக்கைகளை வீசத் தொடங்கியபோது தங்களது படைகள் தலையிட்டதாக…
-
- 0 replies
- 272 views
-
-
டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் எவ்பிஐயிடம் சரணடைந்தார்- அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் போல் மனபோர்ட்டினை சரணடையுமாறு எவ்பிஐ விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவர் சரணைடந்துள்ளார்.. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு குறித்த விசேட விசாரணைகளின் அடிப்படையிலேயே எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.மனபோர்ட்டின் சகாவொருவரிற்கும் எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது அவரும் சரணடைந்துள்ளார். டிரம்பின் பிரச்சார அதிகாரியாக பணியாற்றுவதற்கு முன்னர் மனாபோர்ட் உக்ரைனுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வேளை அவர் ரஸ்யாவின் முக்…
-
- 4 replies
- 608 views
-