உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
ஜோன் எவ் கென்னடி படுகொலை தொடர்பான 13,000 ஆவணங்கள் முதல் தடவையாக வெளியீடு By Sethu 16 Dec, 2022 | 11:27 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடி படுகொலை தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிடுவதற்கு வெள்ளை மாளிகை முதல் தடவையாக உத்தரவிட்டுள்ளது. 13,173 ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதன் மூலம், இக்கொலை தொடர்பான 97 சதவீத ஆவணங்கள் இப்போது பகிரங்கமாக கிடைக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்து;ளளது. இந்த ஆவணங்கள் மூலம் பெரும் தகவல் எதுவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால், குற்றம்சுமத்தப்படும் கொலையாளி குறித்து மேலும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் …
-
- 1 reply
- 425 views
- 1 follower
-
-
இந்தியாவும் அமெரிக்காவும் 200 ஆண்டு கால நட்புறவை கொண்ட நாடுகள் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்துடன், தொடர்புகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த உதவி புரிய அமெரிக்கா தயார் எனவும், தமது இந்திய விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜோன் கெரி ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஜோன் கெரி இன்று இந்தியா செல்ல உள்ள நிலையில், இருதரப்பு வர்த்தக மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் சவால்கள் தொடர்பில் இந்திய தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தியா வரும் உயர்நிலை அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெரி என்பத…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா? ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்! ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் (ஈ.எம்.ஏ) அடுத்த வாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசி குறித்த பரிந்துரையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதுகாப்புக் குழு விரைவான பரிந்துரையை வழங்கும் வரை ஏற்கனவே பெறப்பட்ட அளவுகளை சேமிக்க பரிந்துரைத்ததாகவும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாமதம் ஐரோப்பாவின் தடுமாறும் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது. அமெரிக்க மத்திய சுகாதார முகவரகம் 50 வயதிற்கு உட்பட்ட ஆறு பெண்கள் தடுப்பூசியை பெற்ற பிறகு அரிய இரத்த உறைவினால் பா…
-
- 0 replies
- 460 views
-
-
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு! ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆய்வு முடியும் வரை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உலகளவில் கொவிட்-19 தொற்ற…
-
- 0 replies
- 391 views
-
-
ஜோபைடன் பலவீனமானவர் திறமையற்றவர்; பிரச்சாரங்களில் டிரம்ப்; அமெரிக்க பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிப்பு Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 03:29 PM cnn அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பலவீனமானவர், திறமையற்றவர் என்ற வாதத்தை முன்வைத்துவரும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நிலைமை அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்றது எனவும் தெரிவித்துவருகின்றார். அமெரிக்கா தன்னை காப்பாற்றுவதற்கு அவசியமான வலுவான நபராக டிரம்ப் தன்னை முன்னிறுத்திவருகின்றார். நெவெஸ்டாவில் ஆற்றிய உரையில் பைடனின் எல்லை கொள்கைகளை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இதன் காரணமாக எந்நேரத்திலும் தே…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
ஜோர்ஜியாவின் உயர்மட்ட அதிகாரியுடனான உரையாடலில் ட்ரம்ப் போட்ட திட்டம் அம்பலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியிடம் மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் இணங்கவில்லை என்றால் "ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருடன் ட்ரம்ப் ஒரு மணிநேரம் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் அதனை ஆதாரம் காட்டி வொஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வெளியான தேர்தல் முடிவுகளினால் ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், தேர்தல் ம…
-
- 0 replies
- 337 views
-
-
முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது. South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது. தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நட…
-
- 55 replies
- 7.4k views
-
-
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர் லிசா பெண்டர் அறிவித்துள்ளார். தங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மினியாபொலிஸில், மே 25ம் திகதி, 46 வயத…
-
- 0 replies
- 271 views
-
-
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸில் தடை! அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, பிரான்ஸில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருந்தன. பரிஸில் இரு அமைப்புக்கள் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பரிஸ் பொலிஸ் தலைமைச் செயலகம் இதற்கு தடை விதித்துள்ளது. பத்து பேருக்கு மேல் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ள நில…
-
- 0 replies
- 330 views
-
-
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக... பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை! கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது. இதனிடையே, இந்த தீர்ப்பை ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து ஃப்ளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃப்ளாய்ட் கூறுகையில், ‘பொலிஸாரின் அட்டூழியம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்ப…
-
- 0 replies
- 218 views
-
-
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கீழே விழுந்து கழுத்தெலும்பு ஒன்று முறியவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் வழுக்கி விழுந்ததில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கழுத்து எலும்பு முறிந்து விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் ஜிம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 91 வயதுடைய ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் மைனே பகுதியில் உள்ள கென்னிபங்க்போர்ட் இல்லத்தில் எதிர்பாராத விதமாக தவறிக் கீழே விழுந்ததுள்ளார். இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்துள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக போர்ட்லாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் மட் போல் தெரிவித்துள்ளார். நீண்ட காலம் உயிர் வ…
-
- 4 replies
- 681 views
-
-
ஜோர்ஜ் புஷ்....!!! நீங்களுமா??? அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தன் மீது பாலியல் சேட்டை புரிந்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை ஹீதர் லிண்ட் (34) புகார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் விளம்பரப் பணிகளுக்காக லிண்ட் தனது குழுவினருடன் 2013ஆம் ஆண்டு ஜோர்ஜ் புஷ்ஷை (93) சந்தித்தார். அப்போது புகைப்படம் பிடிப்பதற்காக அனைவரும் ஒன்று கூடிய வேளையில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த புஷ், லிண்டின் கையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அவரது பின்புறத்தை இறுக்கிப் பிடித்ததாகவும், ஒரு மூன்றாம் தர நகைச்சுவை ஒன்றையும் கூறித் தன்னை முகம் சுளிக்கச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, இரண்டாம் முறை மீண்டும…
-
- 4 replies
- 902 views
-
-
ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் பொது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவர் காலணிகளை வீசித் தாக்கிய பரபரப்பு ஓயும் முன்பே அச்சம்பவத்தை கருப்பொருளாகக் கொண்டு இணைத்திள விiளாயட்டுக்கள் பல உருவாக்கபட்டுள்ளன. உங்களால் புஷ் மீது காலணியொன்றை வீச முடியுமா? என்ற தலைப்பில் விளையாட்டு ஒன்று http://play.sockandawe.com என்ற இணையதள முகவரியில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இதில் 1.4 மில்லியன் பேர் புஷ்ஷை சரியாக இலக்கு வைத்து காலணியால் அடித்ததாக மேற்படி இணையதளம் தெரிவிக்கின்றது. நீங்களும் உலக பயங்கரவாதியை ஒரு முறை காலணியால் அடிக்க முயற்சி செய்து பாருங்கள். ஜானா
-
- 0 replies
- 668 views
-
-
இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த விமானிக்கு பதிலாக தம் பிடியில் இருந்த கைதியை விடுவிக்க ஜோர்டான் தயாராக இருந்தது. ஆனால் தமது விமானி உயிருடன் உள்ளார் என்பதை நிருபிக்கும் சான்றுகள் தேவை என்று ஜோர்டான் கேட்டிருந்தது. இந்த விடியோ, இஸ்லாமிய அரசின் பரப்புரைத் தளம் என்று நம்பப்படும் ஒரு டுவிட்டர் தளம் வழியாக வினியோகிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் விமானி பயணித்த விமானம் இஸ்லாமிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதி…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஜோர்டான் விமானி வலியை உணராத வகையில் கொன்றோம்… ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் [ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 12:23.32 பி.ப GMT ] ஜோர்டான் விமானியை கொல்வதற்கு முன்பு அவருக்கு மயக்க மருந்து அளித்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சிறைபிடித்து வைத்திருந்த ஜோர்டான் விமானியை இரும்பு சிறையில் வைத்து உயிருடன் தீயிட்டு கொழுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் ஜோர்டன் மட்டுமின்றி உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. எனவே தீவிரவாதிகளின் இக்கொடூர செயலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தங்கள் நாட்டின் விமானியை கொன்ற தீவிரவாதிகளை பழித்தீர்க்கும் வகையில் ஜோர்ட…
-
- 1 reply
- 399 views
-
-
பெய்ரூட்: தாங்கள் பிடித்து வைத்துள்ள ஜோர்டானைச் சேர்ந்த விமானியை எவ்வாறு கொலை செய்வது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசீஸ்பெஹ்(26) என்ற மாவோஸை பிணையக் கைதியாக பிடித்தனர். விமானப் படை விமானியான அவர் தனது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சிரியாவின் ரக்கா நகரில் தரையிறங்கினார். அப்போது தான் அவர் தீவிரவாதிகளிடம் சிக்கினார். தீவிரவாதிகள் விமானியை பேட்டி கண்டு அதை தங்களின் மாதாந்திர பத்திரிக்கையில் வெளியிட்டனர். அந்த செய்தியை அவர்கள் இணையதளத்தில் ஆங்கிலத்திலும் வெளியிட்டனர். இது குறித்து கருத்து தெர…
-
- 0 replies
- 325 views
-
-
வீரகேசரி இணையம் 11/3/2011 5:43:05 PM செங்கடல் பகுதியில் பயணிக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த எகிப்து நாட்டு கப்பலில் இருந்து 1200 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஜோர்தானின் அகபா துறைமுகத்திலிருந்து எகிப்திய நுவெயிபா துறை முகத்தை நோக்கிச் சென்ற வேளையிலேயே மேற்படி கப்பலில் தீப்பற்றி எரிந்துள்ளது. அப் படகில் பயணம் செய்தவர்கள் பலர் உயிர்காப்பு படகுகள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் காப்பாற்றப்பட்டனர். இந்த அனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும்…
-
- 0 replies
- 611 views
-
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம் நேற்று ஜோர்தான் சிரியா எல்லையில் நிலைகொண்டிருந்த அமெரிக்கத் இராணுவம் மீது அப்பகுதியில் இயங்கிவரும் ஈரானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பொன்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 30 பேர்வரையில் காயப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் ஐஸிஸ் பயங்கரவாத அமைப்பிற்கெதிராகவும், போதைவஸ்த்து நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானினால் வழங்கப்பட்ட தற்கொலை ட்ரோன் வகையினைச் சேர்ந்த ட்ரோன் ஒன்று அமெரிக்கப் படையினரின் பிரதான தங்குமிடப் பகுதியில் தரையிறங்க…
-
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ் சுவிற்சலாந்திற்கு போவதாக இருந்த பயணத்தை தள்ளிப்போட்டுள்ளதாக இன்றய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பயங்கரவாதத்தின் பேரில் பலரை கைது செய்து கியூபாவில் உள்ள குவாண்டனோமா சித்திரவதை முகாமில் போட்டு கொடும் வதை புரிந்தது அமெரிக்கா. அவர்கள் புரிந்த வேதனைக்குரிய செயல்கள் 2500 வரையாக ஆவணப்படுத்தப்பட்டு மனித உரிமைகள் ஆணையம் ஜெனீவாவில் வரும் திங்கட்கிழமை வழங்கப்பட இருக்கிறது. இந்த விவகாரம் சுவிஸ் செல்லும் புஸ்சை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் அவருடைய சுவிஸ் பயணம் தவிர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புஸ்சின் கரங்களில் இருக்கும் இரத்தக்கறையை கழுவுவது இலகுவான காரியமல்ல என்ப…
-
- 0 replies
- 950 views
-
-
ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, சின்ஹா(நடுவில்) மற்றும் இதர மக்கள் ஒன்றிணைைந்து தண்ணீர் பிரச்னை குறித்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர் இந்தியாவின் இமயமலை நகரமான ஜோஷிமட், கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், கண்முடித்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சியது போன்ற காரணங்களால் புதைந்துகொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம். நாட்டின் பல நகரங்கள் இந்தக் கதியை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக வல்லுநர்கள…
-
- 2 replies
- 753 views
- 1 follower
-
-
ஜோஸ்: அமெரிக்கர்களின் அடுத்த தலைவலி! ஹார்வி சூறாவளியின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா இன்னும் மீளாத நிலையில், ‘ஜோஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள மற்றொரு சூறாவளி அமெரிக்காவின் ஏனைய சில பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. “அமெரிக்காவுக்கு தென்கிழக்கில், அத்திலாந்திக் சமுத்திரத்தில் சுமார் 640 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஜோஸ் புயலின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல். அதன் நகர்வு அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தை நோக்கியே அமைந்திருக்கிறது. இதே வேகமும், நகர்வும் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஜோஸ் சூறாவளி அமெரிக்காவைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது” என்று அந்நாட்டின்…
-
- 0 replies
- 710 views
-
-
இந்த வாரக் குமுதம் இதழில் ஏன் ‘ஓ’ பக்கங்கள் இல்லை என்று கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி, மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன. இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளி வரா.காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள். கடிதம் 1 : அன்புக்குரிய டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கு வணக்கம். சென்ற வாரம் குமுதம் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமனுக்கு அனுப்பிய என்மின்னஞ்சல் கடிதத்தினைக் கீழே தருகிறேன். ஏற்கனவே அதை உங்கள் பார்வைக்கு வைக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தேன். இந்த வாரமும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இந்த வாரக் கட்டுரையில் சவுக்கு இணையதளம் பற்றிய சில பகுதிகளுக்கு நம்மிடம் ஆதாரம் இல்லாத நிலையில் அவற்றை வெளியிடஇயலாது என்று ந…
-
- 3 replies
- 3.9k views
-
-
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா தாக்குதலுக்குள்ளாகுமா? வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலின் பத்தாவது வருட நினைவுதினத்தில் அமெரிக்காவின் நியுயோர்க் மற்றும் வாசிங்க்டன் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பகரமான தகவல் என்றும் ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது. மூவர் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் எனவும் ஒருவர் அமெரிக்க பிரசை எனவும் கூறப்படுகின்றது. இவர்களின் பெயர்கள் பொதுவான பெயர்களாக உள்ளதால் இவர்களை தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது என கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் ஒரு கடத்தப்பட்ட வாகனம் ஒன்றின் ஊடாக நடாத்தப்படலாம் என ஊகிக்கப்படுகின்றது. ஒசாமா பின்லாடனை கொலை செய்த பொழுது அவர் இருந்த வீட்ட…
-
- 4 replies
- 832 views
-
-
சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பக்கத்தில் நான்காயிரம் ரஷ்ய பிரஜைகள் சண்டையிடுவதாக விலாடிமீர் பூட்டீன் தெரிவித்துள்ளார். வடக்கு காக்கஸ்ஸில் உள்ள ரஷ்யாவின் டகெஸ்டன் குடியரசை சேர்ந்தவர்களே இதில் அதிகம். ஐ எஸ்ஸுக்கான ஆட்சேர்ப்பு களமாக அது மாறியுள்ளது. ஆயிரத்து இருநூறு 'degastanகாரர்கள்' சிரியாவுக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இஸ்லாமிய தேசத்துக்காக போராடச் சென்ற ஆட்களை மிக அதிகமாகக் கொண்ட பெல்ஜியத்தை விட பத்து மடங்கு அதிகமானோரை டகெஸ்டன் தந்துள்ளது. bbc.com
-
- 0 replies
- 309 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என தெளிவாகத் தெரிந்தும் தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம் என்று இந்தியவின் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது, கண்டனத்துக்குரியது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில், தமிழர் ஒருவரை சுட்டுக் கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா, மத்திய அரசால் தப்பிக்க வைத்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா பற்றிய தகவல் புது டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ்மா அதிபர் கூறியுள்ள நிலையில் அவர் தங்களுக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது கணடனத்துக்குரிய விடயமாகும். டக்ளஸ் தேவா…
-
- 0 replies
- 476 views
-