உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
பாகிஸ்தானில், தென்மேற்கே குவேட்டா நகரில் ஆயுததாரிகள் இன்று வெள்ளிக்கிழமையும் பெரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். தாக்குதலில் குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.தாக்குதல் பள்ளிவாசலுக்கு வெளியே, அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். உள்ளூர் அரசியல்வாதி அலி மதாத் ஜட்டாக்கை இலக்கு வைத்தே ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை கூறுகின்றது. ரமழான் மாத நிறைவில் இன்று ஈத் திருநாள் தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே வரும்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித பாதிப்புமின்றி அவர் தப்பிவிட்டார். நேற்று வியாழக்கிழமையும் குவேட்டா நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில்…
-
- 0 replies
- 331 views
-
-
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…
-
- 0 replies
- 591 views
-
-
ஈழம்-இந்தியம்-சர்வதேசம்! சுமார் இரண்டு தலைமுறைகளாக நீடித்த உரிமைப் போரொன்றுஇ இந்தியத்தின் துணையோடும் இ சர்வதேசத்தின் ஆசியோடும் தற்காலிகமாக அடக்கப்பட்டிருக்கிறது! இலங்கை வரலாற்றில்- பெரும்பான்மை அரசு தனது அதிகாரத்தாலும்இ படைபலத்தாலும் புரிந்துவந்த அடக்குமுறைகளுக்கு எதிராகஇ அங்கு உருவான தமிழர்களது அரசியல் எதிர்ப்புணர்வுகள்; ஜனநாயக வழிகளில் அணுகப்படுவதற்குப் பதிலாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட காரணத்தால்இ ஆரம்பத்தில் வெறும் அரசியல் போராட்டங்களாக இருந்துவந்த ஈழத்தமிழர்களது உரிமைக்கான முன்னெடுப்புகள் காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்திருந்தது. இதற்கு இந்திராகாந்தியின் தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசும் ‘பச்சைக் கொடி’காட்டிப் போராளி இயக…
-
- 0 replies
- 960 views
-
-
அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகே சிறிய படகில் ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களுடன் வந்து கொண்டிருந்த 5 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இந்திய கடற்படையினரின் பாதுகாப்புப் பணியின் போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த படகு ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருந்ததை அடுத்து, படகில் வந்த தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரையும், மியான்மரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=92525&category=IndianNews&language=tamil
-
- 1 reply
- 317 views
-
-
டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம். சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது. ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்தியாவுடனான …
-
- 12 replies
- 3.8k views
-
-
அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2011ம் டிசம்பரில் தானே புயலின் கோரத்தாண்டத்தில் கடலூர் மாவட்டம் சிக்கி முற்றிலும் சேதமடைந்தது கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவான‘நிலம்' புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது உருவாகி வரும் புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில் கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிம…
-
- 1 reply
- 544 views
-
-
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவலால் தொல்லியல்துறை அங்கு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர். தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் மகத்தி…
-
- 0 replies
- 640 views
-
-
சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமை நிராகரித்துள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10- நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் (2 ஆண்டுகள் பதவிக்காலம்) உள்ளன பாதுகாப்புக் கவுன்சிலின் இரட்டை நிலைப்பாடு காரணமாக அதனால் உலக அமைதிக்காக பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியே சவுதி அரேபியா அதன் உறுப்புரிமையை நிராகரித்துள்ளது. ஆனால், என்ன வகையான சீர்திருத்தங்கள் என்ற விபரங்களை அந்நாடு வெளியிடவில்லை.பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சவுதி அரசாங்கம் கோரியுள்ளது. சிரியா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்…
-
- 4 replies
- 583 views
-
-
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்! சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் அவசரநிலை தவிர ஏனைய காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடியிருப்பு வளாகங்களில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படுவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூவில் நேற்று முன்தினம் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 18ஆம் திகதி முதல் மொத்தம் 39 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 267 views
-
-
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் வந்திருக்கிறார்! அமெரிக்க தேர்தலில் ரஷ்யத்தலையீடு இருந்த சர்ச்சை குறித்து அவரது ஆதரவு வாக்காளர்களின் கருத்தென்ன? கீழைத்தேசங்களில் வர்த்தகத்தை விரிவாக்க விரும்பும் ஐரோப்பிய திட்டத்துக்கு சீனாவின் புதிய பட்டுப்பாதை உதவியா? உபத்திரமா? மற்றும் சேர்ந்து விளையாடும் சிறாரும் முதியோரும்! முதியோர் இல்லத்துக்கு மத்தியில் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைக்கும் வித்தியாசமான முயற்சி குறித்த சுவாரஸ்யமான செய்தித்தொகுப்பு! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 219 views
-
-
“தீவிரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தனானின் செயற்பாடுகளை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது” :ட்ரம்ப் எச்சரிக்கை “தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பேசும் போதே “தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால் பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும் ஆனால் தீவிரவாதிகளுக்கு …
-
- 0 replies
- 283 views
-
-
தமிழர்கள் விற்பனைக்கு- சிங்கள ஆரிய கூட்டமைப்பு ஆந்திரா தமிழ்நாடு தமிழர்கள் தமிழர் நிலங்களில் இருந்து அடிமைகளாக ஏற்றுமதி செய்யபடுவது இன்று நேற்றல்ல வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. ஒப்பீட்டளவில் ஆந்திர தெலுங்கர்களுக்கு அடுத்து நாம் தான் உள்ளோம்.. நாம் இங்கே கூறவருவது அலுவலக வேலைகளை அல்ல. கூலி வேலை செய்பவர்களை பற்றியே.. மலேசிய சிறைகளில் தமிழர்கள் அவதி.. சவுதி அரேபியாவில் கட்டுமான தொழிலாளர்கள் பலி.. வெளிநாட்டு வேலை என்று கூறி ஏஜண்ட் ஏமாற்றினார்.. இது நாளாந்தம் செய்திதாள்களில் வாசிக்கும் நிகழ்வுகள்.அதிலும் மோசம் நம்மவர்கள் வெளிநாட்டில் இறந்த உடல்களை எடுத்துவர டெல்லி வாலாக்களிடம் சொம்பி சோப்பு போடும் பரிதாப நிலை. …
-
- 2 replies
- 918 views
-
-
தனிநாட்டுக்கு கேட்டலோனியா மக்கள் பெரும்பான்மை ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவாக்கெடுப்பின் முடிவினை அறிவிக்கும் கேட்டலான் தலைவர்கள் ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகாணமான கேட்டலோனியா, தனி நாடாகப் பிரிந்து செல்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தனிநாடு கோரிக்கைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருப்பத…
-
- 3 replies
- 535 views
-
-
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தின் சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்த இரு குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 8 பேர் காயமடைந்தனர். கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தின் சுவரிலும், ஸ்டேடியத்தின் 12வது கேட்டின் அருகே ஜெனரேட்டர் அறைக்கு அருகே உள்ள சுவரிலும் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கூறுகையில், இது குறைந்த சக்தி வாய்ந்த குண்டு. பிளாஸ்டிக் பையில் மறைத்து சுவரில் வைத்துள்ளனர். இதில் 3 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். பீதியை ஏற்படுத்தும் வகையில இதைச் செய்துள்ளனர். இருப்பினும் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றார். குண்டுவெடிப்பால், ஸ்டேடியத்தின் சுவர் சேதமடைந…
-
- 0 replies
- 515 views
-
-
கலிபோர்னியாவில் 8 நகரங்களில் எரியும் காட்டுத்தீ - 10 பேர் உயிரிழப்பு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது. எனவே வனப…
-
- 0 replies
- 369 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் பகிர்க 'ஷி'யின் 'அசாதாரண வளர்ச்சி'யை வாழ்த்திய டிரம்ப் படத்தின் காப்புரிமைREUTERS Image captionடிரம்ப்-ஷி ஜின்பிங் விளம்பரம் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தமது அதிகாரத்தை ஷி ஜின்பிங் வலுப்படுத்திக்கொண்டதை அடுத்து அவரை தொலைபேசி மூலம் அழைத்து அவரது அசாதாரண வளர்ச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இதை டிவிட்டரில் தெரிவித்த டிரம்ப் ஷியுடன் வடகொரியா மற்றும் வணிகம் தொடர்பாக உரையாடியதாகவும் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச கூலிச் சட்டம் நிறைவேற்றும் கத்தார் படத்தின் காப்புரிமைAFP முதல் முறையாக குறைந்தபட்ச கூலிச் சட…
-
- 0 replies
- 374 views
-
-
டிரம்ப் `வெற்றுத்தனமானவர்` -முன்னாள் அதிபர் புஷ் கோபம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குடியரசு கட்சியை சேர்ந்த, அமெரிக்காவில் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் சீனியர், அதிபர் டிரம்ப்பை, `வெற்றுத்தனமானவர்` என்று பொருள்படும், `பிளோஹார்ட்` என்று குறிப்பிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்ததையும் உறுதி செய்…
-
- 0 replies
- 389 views
-
-
கொசோவோ பிரிவினை சரி-சர்வதேச நீதிமன்றம் கொசோவோ சுதந்திர கொண்டாட்டங்கள் செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொத்தமான 14 நீதிபதிகளில் 10 பேர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர். உலகெங்கும் உள்ள பிரிவினைவாத இயக்கங்களில் இந்த தீர்ப்பு சாதகமான தாக்கத்தை ஏற்படு இந்தத் தீர்ப்பு சட்டரீதியில் கட்டுப்படுத்தாதது, ஆனால், மேலதிக சர்வதேச அங்கீகாரத்துக்கு இது கொசோவோவை ஊக்குவிக்கும். செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 வருடங்களின் பின்னர் கொசோவோவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர…
-
- 0 replies
- 373 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 8, ஆகஸ்ட் 2010 (10:21 IST) பாகிஸ்தான் அதிபர் மீது ஷூ வீச்சு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஷூ வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், ‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது’என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் பயங்கர எதிர்ப்பு அலைகள் கிளம்பியிருந்தது. இந்த எதிர்ப்புகளுக்கிடையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அவரின் இந்தப்பயணம் பாகிஸ்தானில் மட்டும் அல்ல பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டன் வாழ் பாகிஸ்…
-
- 1 reply
- 466 views
-
-
பயணிகளை நிர்வாணமாக படம்பிடித்து காட்டும் கருவி லண்டன் ரெயில் நிலையங்களில் பொருத்தப்படுகிறது லண்டன், ஜன.13- லண்டன் நகரில் ரெயில் நிலையங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும் கருவி பொருத்தப்பட இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதல் லண்டன் நகர் ரெயில் நிலையங்களில், அல்கொய்தாவைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தி, 56 பயணிகளை பலி கொண்டனர்.இதைத் தொடர்ந்து, குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வரும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு வசதியாக உயர் தொழில் நுட்பம் கொண்ட டிஜிட்டல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இவை பயணிகளை நிர்வாணமாகப் படம் பிடித்துக் காட்டும். சோதனை முறையில் இந்த ஸ்கேனர் கருவ…
-
- 4 replies
- 2.3k views
-
-
கனடாவின் பாரளுமன்ற தேர்தல் இன்று காலையிலிருந்து இரவு 8.30 வரை நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்
-
- 17 replies
- 3.3k views
-
-
லக்னோ: கடந்த ஒருவார காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் சிக்கி வரும் உ.பி.யில், மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்த்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்தவாரம் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி அன்று உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் தொகுதியான அசாம்காரிலுள்ள சராய்மீர் பகுதியில் 17 வயது சிறுமி, 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று (2ஆம்தேதி) பரேலி பகுதியில் உள்ள பகேரி …
-
- 2 replies
- 532 views
-
-
உலகில் பிரச்சினைகள் சூழ்ந்துதான் கிடக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருகப் பெருகதான் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டது. வாகனம் கண்டுபிடிக்கப்பட்டபோது போக்குவரத்து எளிதானது. பிறகு விமானங்கள் வந்தன. போக்குவரத்து மிகவும் எளிதானது. டிராக்டர், பூச்சி கொல்லி மருந்துகள் போன்ற விவசாயக் கண்டுபிடிப்புகளால் உணவு உற்பத்திப் பெருகியது. பஞ்சம் விலகியது. இவ்வளவு கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லாமல்தான் இருக்கிறது. இந்நிலையில் இன்றைக்கு அறிவியலைக் கொண்டு தீர்க்க வேண்டிய உலகின் பெரிய பிரச்சினை எது? இந்தக் கேள்வியை இங்கிலாந்து அரசு தன் மக்களிடம் முன்வைத்துள்ளது. அவர்கள் சொல்லும் பிரச்சினையைத் தீர்க்கும் கண்டுபிடிப்பைச் செய்பவருக்கு 10 மில்லியன் பவுண்ட…
-
- 0 replies
- 537 views
-
-
தாய்வானுக்கு... விமானம் தாங்கி போர்க்கப்பலை, அனுப்பியது அமெரிக்கா: அதிகரிக்கும் போர் பதற்றம்! தாய்வானைச் சுற்றி வளைத்து சீனா நடத்தும் போர் பயிற்சிகள் உலகின் பரபரப்பான பேசுப்பொருளாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை தாய்வான் கடற்பரப்புக்கு அனுப்பியுள்ளது. யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாய்வானின் தென்கிழக்கே நீரையும் உள்ளடக்கிய பெருங்கடல் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் மற்றும் தாக்குதல் போர் கப்பல்கள் பிலிப்பைன்ஸ் கடலில் வழக்கமான, திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்கிறது. இது சுதந்திரமா…
-
- 1 reply
- 485 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றம்…. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற கீழவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்திற்குப் பின், நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 650 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில், மசோதாவை ஆதரித்து 324 உறுப்பினர்கள் வாக்களித்ததால் அந்த மசோதா நிறைவேறியுள்ளது. பிரெக்சிட் விவகாரத்தில் இந்த மசோதா முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்நிலையில், இனி இந்த மசோதா பாராளுமன்ற மேல…
-
- 0 replies
- 218 views
-