உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 பயணிகளுடன் ஓசார்னோவில் இருந்து சான்டியாகோவுக்கு சென்ற இந்த விமானம் கடந்த 1961ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி காணாமல் போனது. இந்த விமானத்தில் சிலியின் பிரபல கிரீன் கிராஸ் என்ற கால்பந்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் இருந்தனர். இதனிடையில் சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மாலே பகுதியில் உள்ள மலையில் இந்த விமானத்தின் பாகங்கள் இருந்ததாக மலையேறும் வீரர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். மலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் பாகங்களும், மனித எலும்புகளும், பல்வேறு பொருள்களும் சிதறிக் கிடந்தன. மலையேற்ற வீரர்கள் இதை வீடியோவாக படம் பிடித்து…
-
- 0 replies
- 163 views
-
-
உக்ரைனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும்நிலையில், உக்ரைன் கிளர்ச்சி படைக்கு ஆதரவாக 1,500 ராணுவ வீரர்கள், தளவாடங்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. உக்ரைனின் கிரீமியா பகுதியில் அதிகளவில் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் வசிப்பதால், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ரஷ்யா. இதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டது. உக்ரைன் நாட்டின் 2 பிராந்தியங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என கிளர்ச்சி படையினர் போராடி வருகின்றனர். உக்ரைன் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை வலுத்து வருகிறது. இதுவரை…
-
- 7 replies
- 1.3k views
-
-
வத்திக்கான் - 1 வாடிகன் நகரின் எழில்மிகு தோற்றம் ஒரு நாட்டுக்குள் நகரம் இருக்குமா? நகரத்துக்குள் நாடு இருக்குமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் யோசிப்பீர்கள். ஆனால் அப்படியொரு விசித்திரம்தான் வாடிகன். இத்தாலியின் தலைநகரம் ரோம். அதற்குள் இருக்கிறது கத்தோலிக்கர்களின் அதிகார பீடமான வாடிகன் என்ற நாடு. அரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கூட இல்லாமல் ஒரு நாடு! ‘வாடிகனின் வரலாறைச் சொல்லுங்கள். ஆனால் அதில் மதம் என்பதே கலந்திருக்கக் கூடாது’ என்று நிபந்தனை போட்டால் வேறொரு நாடு பற்றிதான் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் நீரும் செம்புலச் சேறும் கலந்திருப்பதுபோல வாடிகனோடு மதம் கலந்திருக்கிறது. இப்போது ரோம் என்பது (என்னதான் தலைநகர் என்றாலும்) ஒரு சிறு நகரம். ஆனால் அந்தக் கா…
-
- 5 replies
- 1k views
-
-
டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி! பா.ஜ.க, காங். படுதோல்வி!! டெல்லி: டெல்லி மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. கருத்து கணிப்புகளைத் தாண்டி 52 தொகுதிகள் வரை ஆம் ஆத்மி வெல்லும் நிலையில் முன்னணி நிலவரம் இருந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் அரை மணி நேரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி இருப்பதாக தோற்றம் இருந்தது. ஆனால் போகப் போக ஆம் ஆத்மி அதிரடியாக தனிப்பெரும்பான்மையை தாண்டி 52 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் படு…
-
- 17 replies
- 881 views
-
-
Posted Date : 17:00 (09/02/2015)Last updated : 17:09 (09/02/2015) மீரட்: ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ள மிகப்பெரிய சாதனை உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்துள்ளது. ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர், மருத்துவர்களின் மருத்துவ உதவியுடன், கருவுறும் ஒர்அரிய வாய்ப்பை பெற்று இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அந்த பெண், தான் தாயாக வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிகிச்சை வீண்போகாமல் அவரது கனவு தற்போது நனவாகியுள்ளது. இது ஆண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமமான ஆச்சர்யம் என்று மலட்டுத்தன்மை…
-
- 0 replies
- 505 views
-
-
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும் மீட்கப்பட்டிருந்ததுடன் பயணிகள் பலரின் சடலங்களும் மீட்கப்பட்டன. எனினும் மீட்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இதுவரை 101 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீட்பு குழுவினர் விமானத்தில் பைலட்டுகள் அமரும் முன் பகுதியை கண்டுபிடித்தனர். அதற்குள் சென்று தேடிய போது ஒரு சடலம் கிடைத்த…
-
- 0 replies
- 354 views
-
-
ஏலத்துக்கு வந்தது சதாம் உசைனின் தூக்கு கயிறு: இதுவரை 92கோடி ரூபா ஏலத்தொகை சதாம் உசைனை தூக்கிலிட்ட கயிறு ஏலத்தில் விடப்பட்டதையடுத்து தற்போது வரை 92 கோடியே 96 இலட்சம் ரூபா வரை எட்டியுள்ளதோடு மேலும் ஏலத்தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது. பின்னர் பண்ணை வீட்டில் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாம் உசைனை அமெரிக்க இராணுவம் கைது செய்தது. 3 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு 2006 டிசம்பர் 30ஆம் திகதி அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது கழுத்தை இறுக்கிக் கொன்ற தூக்க…
-
- 2 replies
- 993 views
-
-
ராணுவத்துடன் போரிட்டு ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள் பாராளுமன்றத்தையும் கலைத்தனர். ஏமனில் கடந்த 33 ஆண்டுகள் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி செய்தனர். அதனால் அவர் பதவி விலகினார். புதிய அரசு பதவி வகித்தது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. எனவே அவர்களை அழிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அவர்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான ஹூயுதி தீவிரவாதிகள் சன்னி பிரிவு பழங்குடியினர் மற்றும் பொதுமக்களை தாக்கி கொன்று குவித்து வருகின்றனர். இவர்கள் ஈரானை சேர்ந்த ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார். பொதுமக்க…
-
- 0 replies
- 428 views
-
-
பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த நாடு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களும் வெளியாகி உள்ளன. ஒரு சிறிய கடற்படை கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட காட்சியை, வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பார்வையிட்டதைக் காட்டும் படமும் வெளியாகி உள்ளது. இந்த ஏவுகணை, ரஷியாவின் கேஎச்-35 கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைப்போன்றே இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் வடகொரியாவின் கடற்படை பலம் கூடி உள்ளது. வடகொரியா சமீப காலம…
-
- 1 reply
- 444 views
-
-
'எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்?' என்ற இந்த ஓவியம் உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியமாகும். பிரெஞ்சு நாட்டு ஓவியர் கோகென் வரைந்த ஓவியம் ஒன்று 300 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்கப்பட்ட கலைப்படைப்புகளிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படைப்பு இதுவாகும். 'எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்?' என்ற இந்த ஓவியத்தை 1892ல் கோகென் வரைந்தார். தாகித்தி தீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற இந்த ஓவியம் சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சேகரிப்பாளரிடம் இருந்துவந்தது. தற்போது கத்தாரில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இந்த ஓவியம் விற்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, பால் செஸன்…
-
- 0 replies
- 373 views
-
-
லண்டன்: டாக்டரினால் கண்டுபிடிக்க முடியாத நோயை கூகுளில் தேடி தனக்கு வந்திருப்பது புற்றுநோய்தான் என்று உறுதி செய்துள்ளார் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர். இங்கிலாந்தை சேர்ந்த சாதி ரான்ஸ் என்ற அந்த இளம்பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். உறவினர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் ‘இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்' (ஐபிஎச்) எனும் குடல் நோய் இருப்பதாக சொல்லி சில மருந்துகளைக் கொடுத்தார். சில மாதங்களாக மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு வந்த போதும் வயிற்று வலி குறையவேயில்லை. இதனால் சந்தேகமடைந்த சாதி ரான்ஸ், மருத்துவரிடம் திரும்ப சென்றுள்ளார். அவரோ, இது உணவுப்பழக்கத்தால் வரக்கூடிய சாதாரண நோய் தான் என்று கூறி சமாதானம் செ…
-
- 0 replies
- 506 views
-
-
கனடாவில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறொன்ரோவைச் சேர்ந்த 51 வயதான ரூபன் பாலராம்-சிவராம் என்ற நபரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர். நேற்று கனடாவில் வெளியான செய்தி ஒன்றில், குறித்த சந்தேக நபர் மக்களை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் மின்அஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை அனுப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள் பல வித்தியாசமான தரப்பட்ட மக்களிற்கு விடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பொது நபர்கள், அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிரபல்யங்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அச…
-
- 0 replies
- 323 views
-
-
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் சவூதி அரச குடும்பம் இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். அதில் அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த த…
-
- 1 reply
- 364 views
-
-
சென்னை: பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய அழகிப் போட்டியில் பட்டம் வென்ற மாணவிக்கு, தருவதாக கூறிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கவில்லை என்று புகார் தெரிவித்து, அந்த மாணவி தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அம்மாணவியின் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த தடை விதித்ததோடு, வரும் 20 ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போட்டி நடத்திய பொறியியல் பல்கலைக் கழகமும் பதிலளிக்கவேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. http://news.vikatan.com/article.php?module=new…
-
- 0 replies
- 289 views
-
-
அமெரிக்காவின் வன்கூவாரில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் சிறுவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/37560.html#sthash.qdTkQHnT.dpuf மீண்டும் பாடசாலைக்கு செல்வதாக முடிவெடுத்துள்ளேன். "ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது"
-
- 5 replies
- 501 views
-
-
கனடா- ISIS உடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிணையம் செவ்வாய்கிழமை தகர்த்தெறியப்பட்டதுடன் ISIS ல் சேர்ந்து கொள்ள செல்லும் கனடியர்களிற்கு நிதியுதவி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஒட்டாவாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். வெளி நாட்டில் இருக்கும் இவரது சகாக்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 25-வயதுடைய அவ்ஸோ பெஷ்டரி மீது மூன்று எண்ணிக்கைகள் பயங்கர வாத குற்றச்சாட்டுக்களும், 24-வயதுடைய ஜோன் மக்கியுறி என்பவருடன் சேர்ந்து சதிதிட்டங்கள் தீட்டி கனடியர்களை ISIS ல் சேர்வதற்காக சிரியாவிற்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆர்சிஎம்பியின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க அணியினரால் இந்த ‘விரிவான மற்றும் சிக்கலான’ புலன்விச…
-
- 0 replies
- 414 views
-
-
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். 'எங்கள் நாட்டை வீழ்த்திவிட நினைத்து தாதாவாக செயல்படும் அமெரிக்காவின் வரலாற்றின் கடைசி பக்கங்களை எழுதப்போவது நாங்கள்தான்' என்று வட கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரியா - அமெரிக்க படைகள் வரும் மார்ச் மாதம் வழக்கமான தங்களது ராணுவ கூட்டுப் பயிற்சியை துவங்க உள்ளன. இந்த முறை ராணுவ கூட்டுப் பயிற்சி நடத்தப்பட்டால் அதற்கு எதிராக அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது. இந்த நிலையில், வட கொரிய அதிபர் வசம் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "போர்ச் சூழலை கொளுத்திவிட்டு தீவிரப்படுத்தும் வேலைகளைதான் அமெரிக்கா செய்கிறது. தொடர்ந்து வட கொரியாவின் பலத்தை …
-
- 3 replies
- 508 views
-
-
"தைவானில்" 53 பயணிகளுடன் ஆற்றில் விழுந்தது விமானம்! மீட்புப் பணி மும்முரம்!! தைபேய்: தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்தது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தைபேயில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலங் ஆற்றில் 53 பயணிகளுடன் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தைவான் ஊடகங்கள் ச…
-
- 14 replies
- 1k views
-
-
https://www.youtube.com/watch?v=MZykZxjuyNo
-
- 3 replies
- 595 views
-
-
இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த விமானிக்கு பதிலாக தம் பிடியில் இருந்த கைதியை விடுவிக்க ஜோர்டான் தயாராக இருந்தது. ஆனால் தமது விமானி உயிருடன் உள்ளார் என்பதை நிருபிக்கும் சான்றுகள் தேவை என்று ஜோர்டான் கேட்டிருந்தது. இந்த விடியோ, இஸ்லாமிய அரசின் பரப்புரைத் தளம் என்று நம்பப்படும் ஒரு டுவிட்டர் தளம் வழியாக வினியோகிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் விமானி பயணித்த விமானம் இஸ்லாமிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதி…
-
- 7 replies
- 1.6k views
-
-
கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தை ஆக்கிரமித்துள்ள கடும் குளிர்கால புயல் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்படுள்ளது. பனிப்புயலின் தாக்கத்தினால் ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு வித்தியாசமான விந்தையுலகம் போல் காட்சியளிக்கின்றது. பனியினால் மூடப்பட்ட வீதிகளால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலைக்குள்ளானது. பனிக்குழுவினர் நெடுஞ்சாலைகளில் உள்ள பனியை அகற்றி விட்டனர். இருப்பினும் ஏனைய பகுதிகளான வீதிகள், பக்க வீதிகள், மற்றும் நடை பாதைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பனிகளை முற்றிலும் அகற்ற 14 முதல் 16 மணிநேரம் ஆகலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் சமீத்திய பனிப்புயல் செலவு 3 மில்லியன் முதல் 5 மில்லியன் டொலர்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு செவ்வாய்கிழமை வரை …
-
- 0 replies
- 517 views
-
-
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் வாட்ஸ் அப்பில் ஆபாச படம் பார்த்ததால் சட்டமன்றத்திற்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், கர்நாடக மாநிலம் பெல்காவியில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கரும்பு விலை நிர்ணயம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் வாட்ஸ் அப்பில் ஆபாசப் படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அதே கூட்டத்தில் ஹவுரத் தொகுதி எம்.எல்.ஏ பிரபு சவான் பிரியங்கா காந்தியின் போட்டோவை ஜூம் செய்து படத்தை பார்த்துக் கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகியிருந்தது. அதே நாளில், மற்றொரு கட்சியை சேர்ந்த யூ.பி.பனாகர் எம்.எல்.ஏ தனது மொபைலில் 'கேண்டி க்ரஷ் சாகா' கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.…
-
- 2 replies
- 433 views
-
-
எகிப்தில் கடந்த 400 நாட்களுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அல் ஜசீரா ஊடகவியலாளர் மொஹமெட் ஃபாமி (Mohamed Fahmy) அவரது எகிப்துக் குடியுரிமையைத் துறந்தாரென அவரது குடும்பத்தினர் உறுதி செய்தார்கள். அவர் எகிப்திய குடியுரிமையைத் துறந்தால் விடுதலை செய்யப்படுவாரென கடந்த வாரம் செய்தி வெளியாகியது. அதேவேளை, அவருடன் கைது செய்யப்பட்ட ஒஸ்ரேலியரான பீட்டர் கிறெஸ்டெ (Greste) நேற்று விடுதலை செய்யப்பட்டு, ஒஸ்ரேலியா சென்றடைந்தார். இந்த நிலையில், ஃபாமி எகிப்திய குடியுரிமையைத் துறந்தார். அவர் எந்தவேளையும் விடுதலை செய்யப்படலாமென கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட் நம்பிக்கை வெளியிட்டார். முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்புக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாக குற்றம் சுமத்தி, ஃபாமி, கிறெஸ்டெ …
-
- 0 replies
- 401 views
-
-
பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களை ஐரோப்பாவிலிருந்து இஸ்லாத்தை வெளியேற்றும் தேச பக்தர்கள் அமைப்பு என்ற பெயரில் செய்து வந்தார்கள். மதவெறி ஊர்வலக்காரர்கள் முஸ்லிம்களிற்கு பிடிக்காத பொருட்களைக் காட்சிப்படுத்தி ஊர்வலம் சென்றார்கள். ஆனால் இந்த இதற்கு எதிரான முஸ்லிம்களும் எங்களில் ஒரு இனமே என்ற ஊர்வலங்களை மக…
-
- 1 reply
- 409 views
-
-
யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த சேர்பியாவும் குரோஷியாவும் தமக்கிடையே இனப்படுகொலைகளில் ஈடு படவில்லை என்று சர்வதேச நீதிமன்றம் என்று தீர்ப்பளித்தது. 1991 ல் Vukovar நகரம் உள்ளிட்ட பலபகுதிகளில் சேர்பியா இனஅழிப்புக்களில் ஈட்டுபட்டதாக குரவேசியா குற்றம்சாட்டி இருந்தது. இதேவேளை குரவேசியாவிலிருந்து 200,000 க்கும் மேற்பட்ட செர்பியர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக சேர்பியாவும் ஒரு எதிர் மனுவைத் தாக்கல் செய்திருந்திருந்தது. 1991-1995 போரின் போது, பெரும்பாலும் குரவேசிய இன மக்களே கொல்லப்பட்டனர். இன்று செவ்வாய் கிழமை, நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறிய நீதிபதி பீட்டர் ரொம்கா, இருதரப்பு குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார். போரின் போது இருபக்க படைகளும் வன்முறைச் …
-
- 1 reply
- 469 views
-