உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
துபாய்: அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூரி. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனையான இவர், போர் விமானங்களை அனாயசமாக செலுத்துவதில் வல்லவர். இவர் எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர் ஆவார். 38 வயதான மரியம் சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்தில் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினருடன் இணைந்து அரபு நாடுகளின் விமானப்படையினரும் அதிரடியாக குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தினர். எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளும் இத்தாக்கு…
-
- 3 replies
- 696 views
-
-
பெய்ஜிங்: இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்கு சீனா புகழாரம் சூட்டியுள்ளது. இது இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, ஆசியாவின் பெருமை என்றும் அது வர்ணித்துள்ளது. மனித குலத்தின் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாகவும் இது பதியப்படும் என்றும் சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு செயற்கைக் கோளான மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழைந்திருப்பது குறித்த செய்தி அறிந்தோம். இதற்காக இந்தியாவை வாழ்த்துகிறோம். Read more at: http://tamil.oneindia.in/news/international/china-hails-india-s-mars-mission-success-as-landmark-progres-211644.…
-
- 12 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் சந்திக்க மறுத்த அயல்நாட்டுத் தலைவாகள்! மோடி - நவாஸ் செரீப் இடையே விரிசல்! [Friday 2014-09-26 19:00] நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.பொதுசபை கூட்டத் தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சென்றுள்ளார். நாளை (27–ந் தேதி) ஐ.நா.சபை கூட்டத்தில் பேசுகிறார். அப்போது, இடையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை சந்திக்கிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அது குறித்த தகவல் பாகிஸ்தான் வெளியுறவு துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நவாஸ் செரீப்பை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி மறுத்து விட்டார். இது குறித்து பாகிஸ்த…
-
- 1 reply
- 624 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம்! - இந்தியாவுக்கு தலையிடி..! [Friday 2014-09-26 20:00] உலகில் சர்வதேச பயங்கரவாத இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், புனிதப் போர் எனும் பெயரில் தினந்தோறும் பல மக்களை கொன்று குவித்து வருகின்றனர். ஈராக்கின் ரக்கா நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களது இயக்கத்தில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாக ஆள் சேர்த்து வருகின்றனர். இவர்கள் செய்யும் மூளை சலவையால் பெரும்ப…
-
- 1 reply
- 548 views
-
-
பொக்கோ ஹராம் அமைப்பின் தலைவரான அபூபக்கர் ஷேகோ தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்துள்ளது. போர்னோ மாநிலத்தின் கொன்டுகா நகரில் நடைபெற்ற மோதலொன்றின்போது அவர் சுட்டுககொல்லப்பட்டதாக நைஜீரிய பாதுகாப்பு பேச்சாளர் கிறிஸ் ஒலுகொலாடே செய்தியாளர்களிடம் நேற்றுமுன்தினம் கூறினார். பொக்கோ ஹராம் இயக்கத்தின் தலைவர் மொஹமட் பஷீர் என அறியப்பட்டுள்ளதாகவும் அவர் அபூபக்கர் ஷேகோ உட்பட பல்வேறு பெயர்களில் செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் வீடியோக்களில் பொக்போ ஹராம் தலைவர் அபூபக்கர் ஷேகோவாக தோன்றியவர் என கிறிஸ் ஒலுகொலாடே மேலும் கூறினார். எனினும் அப+பக்கர் ஷேகோ எப்போது கொல்லப்பட்டார் எ…
-
- 0 replies
- 520 views
-
-
-
- 0 replies
- 408 views
-
-
உலகின் மிகப்பெரிய நிதி நிறுவன ஆலோசகராக இருந்த ஒருவர் தனது பத்து வயது மகளுக்காக வேலையை உதறிவிட்டு, தனது மகள் மற்றும் மனைவியுடன் இனி ஜாலியாக காலத்தை கழிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 56 வயது Mohamed El-Erian, என்பவர் உலகின் மிகப்பெரிய நிதிநிறுவனமான PIMCO investment என்ற நிறுவனம் உள்பட பல நிதி நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை செய்து வருகிறார். இவருடைய ஆலோசனையை நம்பி நிதி நிறுவனங்கள் $2 டிரில்லியன் பணத்தை பலவகையிலும் முதலீடு செய்துள்ளன. இவருடைய வருட வருமானம் $100 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பத்து வயது ஒரே மகள் எழுதிய கடித்தத்தில் இதுவரை தான் 28 நிகழ்ச்சியில் தந்தையின் அருகில்…
-
- 0 replies
- 494 views
-
-
குஜராத் கலவர வழக்கு: இந்தியப் பிரதமர் மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்! [Friday 2014-09-26 10:00] குஜராத் கலவர வழக்கு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதகலவரத்தில் அப்போதைய முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கிலேயே, இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் தற்போது, நியூயார்க் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=117526&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 487 views
-
-
பிரியங்காவின் மகனை ராகுல்காந்தி தத்து எடுத்துக் கொண்டதாக டெல்லி பத்திரிகைகளில் செய்தி - பிரியங்கா மறுப்பு. [Thursday 2014-09-25 13:00] காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி தொழில் அதிபர் ராபர்ட் வதேரா தம்பதிக்கு ரெய்கான் என்ற மகனும், மிராயா என்ற மகளும் உள்ளனர். பிரியங்காவின் மூத்த சகோதரரான ராகுல் காந்திக்கு 44 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற் கிடையே பிரியங்காவின் 13 வயது மகன் ரெய்கானை ராகுல்காந்தி தத்து எடுத்துக் கொண்டதாக டெல்லி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. ரெய்கானை ராகுல்காந்தி தத்து எடுத்து பள்ளியில் சேர்த்து இருப்பதாகவும், தன்னை ரெய்கானின் பாது காவலர் என்று குறிப்பிட்டு இருப்பதாக அதில் தெரிவிக் கப்பட்டு உள்…
-
- 8 replies
- 1k views
-
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கத்தார் அணியினர் ஹிஜாப்புடன் தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர். ஹிஜாப் என்ற இந்தத் தலை அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். உலகக் கூடைப்பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை ஆடுகளத்தில் அணிவதைத் தடை செய்கின்றன. ஆனால் இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர…
-
- 2 replies
- 446 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி! – ஐ.நாவில் ஒபாமா கர்ஜனை. [Thursday 2014-09-25 09:00] வன்முறையால் உலகின் பல நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.சபை பொதுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். போருக்கும் சமாதானத்துக்கும் இடையே உலகம் சிக்கி தவிக்கிறது.ம் ஒழுங்கின்மைக்கும் ஒருங்கிணைப்புக்கும் இடையே உலகம் சிக்குண்டுள்ளது. ஈராக், சரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகள் அழிக்கப்பட்டாக வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க பாடுபட வேண்டும். ஒழிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. கெடுபிடிப் போர் காலத்துக்குப் பிந்தைய நிலையை ரஷிய நடவடிக்கை மாற்றிவிட்டது. உக…
-
- 0 replies
- 537 views
-
-
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பிணைக் கைதி ஹெர்வே கோர்டெல். | ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இதனை உறுதிசெய்துள்ளார். அல்ஜீரியாவில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் ஹெர்வே கோர்டெல் (55) பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது தலையை துண்டித்து ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. தகவலை உறுதி செய்த பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே: இச்செயல் மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது என கண்டித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர், ஐ.எஸ். செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார…
-
- 1 reply
- 449 views
-
-
மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கரங்கள் என்று தாம் சந்தேகிக்கும் வகையில் நேரடியான கொலை மிரட்டலும், மின்னஞ்சல் மூலமான மிரட்டலும் விடுக்கப்பட்டதாக அந்த ஊடக இல்லத்தின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கோபிராஜ் என்பவர் தொலைபேசி மூலம் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கருத்தினை பெற மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை. பிரான்ஸில் காணப்படுகின்ற சில குழுக்களுக்கிடையிலான முரண்பாடு காரணமான மிரட்டலே இந்த பத்திரிகை மூடப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுவதையும் கோபிராஜ் மறுத்தார். அவர்…
-
- 1 reply
- 606 views
-
-
சில காலம் முன்புவரை டொமினிக்கன் குடியரசில் வத்திக்கானத்தின் பிரதிநிதியாக இருந்துவந்த உயர் அந்தஸ்து கொண்ட போலந்துப் பேராயர் ஜோசஃப் வெஸெலொவ்ஸ்கியை சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்ய போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தற்போது உத்தரவிட்டுள்ளார். சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டினை கர்ரீபியன் தீவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் 66 வயது பேராயர் மீது முன்மைக்க திருச்சபை அங்கியை அவர் ஏற்கனவே கழற்ற வேண்டியதாயிற்று. குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து வத்திகானத்தின் மூத்தப் பிரதிநிதியாக இருந்த ஜோசஃப் வெஸெலொவ்ஸ்க்கி சென்ற ஆண்டு ரோமுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். 2008 முதல் 2013 வரையான காலகட்டத்தில் டொமினிக்கன் குடியரசில் சிறா…
-
- 2 replies
- 524 views
-
-
பிரதமர் மோடியின் நவராத்திரி விரத 'மெனு': அமெரிக்காவுக்கு இந்திய அதிகாரிகள் அறிவுரை செப்டம்பர் 29- ஆம் தேதி அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கும் இரவு உணவு உபசரிப்பில், மோடியின் விரதத்தை கருத்தில் கொண்டு மோடிக்கு வெறும் எலுமிச்சை சாறு கலந்த நீரும் தேநீரும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் உள்ள அமெரிக்க-வாழ் இந்தியர்களுக்காக அவர் உரையாற்ற உள்ளார். மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருநாட்டு வெளியுறவு கொள்கைகள் குறித்து அதிபர் ஒபாமாவுடன் அவர் கலந்தாலோசிக்க உள்ளார். மோடியின் வருகைக…
-
- 0 replies
- 560 views
-
-
சிரியா: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 58 பேர் பலி சிரியாவில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 58 கொல்லப்பட்டதாக ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் இராக்கில் ஆக்கிரமித்து வந்த ஐ.எஸ்-ஸுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை சிரியாவின் மேற்கு நகரமான அலீபோ எல்லையோரம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 50 பேர் கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் பொதுமக்கள் என்றும், அங்கு இருக்கும் ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும், சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா முன்பே எச்சரித்து …
-
- 0 replies
- 374 views
-
-
பிராந்திய யுத்தத்திற்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவு. இந்திய நாளேடு ஆவேசம். சுமர் எல்லையில் சீன இராணுவம். இந்திய எல்லையில் சீன இராணுவம் ஊடுருவியுள்ள நிலையில் பிராந்திய மட்டத்திலான யுத்தம் ஒன்றுக்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங், சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பீஜிங் நகரில் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த மூன்று ஜெனரல்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கிய பின்னர் சீன ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ரைம்ஸ் ஒப் இந்திய என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சீன படையினர் லத்தீன் கிழக்குப் பிராந்தியத்தின் எல்லையில் சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சீனப் ஜனாதிபதியின் பிராந்திய யுத்தம் என்ற கருத்து சந்தேகத்த…
-
- 0 replies
- 483 views
-
-
துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த தங்க பேரீச்சம்பழம் ! [Tuesday 2014-09-23 13:00] பேரீச்சம்பழத்தில் இருந்த நிஜமான கொட்டைகளை எடுத்துவிட்டு, அதே வடிவில் தங்கத்தை உருக்கி பேரீச்சம் பழ தோலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்தி வந்த கேரள நபரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர்,இண்டியா விமானம் நேற்று காலை 8 மணிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், கேரள மாநிலம் காசர்கோட் பகுதியை சேர்ந்த முகமது உசேன் (22), என்பவர் சுற்றுலா பயணியாக துபாய்க்கு சென்றுவிட்டு சென்னை வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. துபாயில் இருந்து நேரடியாக கேரளா செல்லாமல் சென்னை …
-
- 0 replies
- 433 views
-
-
ஜப்பானில் ஷிங்கான்சென் சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1964 அக்டோபர் முதல் தேதி இது தொடங்கப்பட்டது. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இதைத்தான் புல்லட் ரயில் என்கிறார்கள். இந்த சேவையைப் பார்த்துப் பிரமித்து தங்கள் நாட்டிலும் இதைத் தொடங்கியவர்கள் பலர். ஆனால், இதற்கு இணையாக யாராலும் நடத்த முடியவில்லை. டோக்கியோவிலிருந்து ஒசாகா நகரம் வரை உள்ள 515.4 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயிலுக்கு மொத்தம் 145 நிமிஷங்கள்தான் பிடிக்கின்றன. ஒரு நாளைக்கு 323 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 3,91,000 பயணிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு பயணத்தின்போதும் ரயில் பெட்டிகள் துடைத்துப் பெருக்கிச் சுத்தப்படுத்தியதைப் போல அவ்வ…
-
- 1 reply
- 510 views
-
-
இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்! ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்ற…
-
- 2 replies
- 784 views
-
-
போராட்டத்தில் ஈடுபட்ட சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் | படம்: ராய்ட்டர்ஸ் ஹாங்காங்கில் சீனாவின் கட்டுப்பாட்டை எதிர்த்தும் வெளிப்படையான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதை வலியுறுத்தியும், ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டனின் காலனியாதிக்கத்திலிருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஹாங்காங்கில் ஒரு நாடு இரு ஆட்சி முறை அமலில் உள்ளது. அதாவது ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியை சீன அரசுதான் தேர்ந்தெடுக்கும். பாதி சுயாட்சி என்ற அடிப்படையில்தான் ஹாங்காங் நிர்வாகம் இருந்து வருகிறது. இதை எதிர்த்து, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, ஹாங்காங் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டும…
-
- 1 reply
- 347 views
-
-
குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஊசி மூலம் மரண தண்டனை! [saturday 2014-09-20 14:00] அமெரிக்காவின் டெக்காஸ் நகரை சேர்ந்தவர் மெர்சல்லா. இவருடன் விசாகோல் மேன் என்ற பெண் தங்கியிருந்தார். இதற்கிடையே மெர்செல்லா வெளிநாடு செல்ல விரும்பினார். எனவே தனது 9 வயது மகன் தேவன் டேயை விசாகோல் மேனிடம் ஒப்படைத்து நல்லபடியாக பார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சிறுவன் தேவன்டேயை நல்லபடியாக கவனிக்கவில்லை. மாறாக அவனை சித்ரவதை செய்தார். உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட விசா கோல் மேனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதி…
-
- 0 replies
- 497 views
-
-
-
பிரதமர் ஜான் கீ நியுசிலாந்தில் ஆளும் தேசியக் கட்சி மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கின்றது. கிட்டத்தட்ட 99 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், 48 வீதமான வாக்குகளை பிரதமர் ஜான் கீ- இன் தேசியக் கட்சி வென்றுள்ளது. இதன்மூலம் ஆளுங்கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியும். எதிரணியான தொழிற்கட்சி 25 வீதமான வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பசுமைக் கட்சி 10 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாற்றில் இம்முறை தேர்தல் பிரசாரமே 'மிகக் கேவலமானது' என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. ஆளுங்கட்சியினர் தங்களின் எதிராளிகளை இழிவு படுத்துவதற்காக அரசியல்-இணைய எழுத்தாளர்களை பயன்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சனைகளை இருட்டடிப்புச் செய்ததாக விமர்சனங்கள் உள்ளன.…
-
- 0 replies
- 404 views
-
-
பாரதியார் பயன்படுத்திய ஹார்மோனிய பெட்டியை காண்பிக்கிறார் அவரது பேரன் கே.வி.கிருஷ்ணன். உத்தரப் பிரதேசத்தில் சுப்பிரமணிய பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்குவதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழுக்காக குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், நேற்று முன்தினம் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இதுதொடர்பாக மனு ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். வாரணாசியில், கங்கை நதிக் கரையில் உள்ள கேதார்காட் பகுதியில் பாரதியாரின் அத்தை வாழ்ந்த வீடு உள்ளது. பாரதியாரின் தந்தை இறந்த பிறகு, அத்தை ருக்மணி அம்மாள் அவரை வாரணாசிக்கு அழைத்…
-
- 0 replies
- 360 views
-