Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பானில் ஷிங்கான்சென் சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1964 அக்டோபர் முதல் தேதி இது தொடங்கப்பட்டது. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இதைத்தான் புல்லட் ரயில் என்கிறார்கள். இந்த சேவையைப் பார்த்துப் பிரமித்து தங்கள் நாட்டிலும் இதைத் தொடங்கியவர்கள் பலர். ஆனால், இதற்கு இணையாக யாராலும் நடத்த முடியவில்லை. டோக்கியோவிலிருந்து ஒசாகா நகரம் வரை உள்ள 515.4 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயிலுக்கு மொத்தம் 145 நிமிஷங்கள்தான் பிடிக்கின்றன. ஒரு நாளைக்கு 323 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 3,91,000 பயணிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு பயணத்தின்போதும் ரயில் பெட்டிகள் துடைத்துப் பெருக்கிச் சுத்தப்படுத்தியதைப் போல அவ்வ…

  2. புதுடெல்லி: டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவரை வெள்ளைப்புலி அடித்துக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். புலி அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியின் அருகே நின்று அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உள்ளே இருந்த காய்ந்த தடாகத்தினுள் தவறி விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெள்ளைப்புலி பாய்ந்து வந்து அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளைஞர் எவ்வாறு உள்ளே விழுந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. சிலர் அந்த தடுப்பு வேலி மீது இளைஞர் அமர்ந்திருந்தபோது உள்ளே விழுந்ததாகவும், வேறு சிலர் தடுப்பு வே…

  3. இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்! ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்ற…

  4. போராட்டத்தில் ஈடுபட்ட சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் | படம்: ராய்ட்டர்ஸ் ஹாங்காங்கில் சீனாவின் கட்டுப்பாட்டை எதிர்த்தும் வெளிப்படையான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவதை வலியுறுத்தியும், ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டனின் காலனியாதிக்கத்திலிருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஹாங்காங்கில் ஒரு நாடு இரு ஆட்சி முறை அமலில் உள்ளது. அதாவது ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியை சீன அரசுதான் தேர்ந்தெடுக்கும். பாதி சுயாட்சி என்ற அடிப்படையில்தான் ஹாங்காங் நிர்வாகம் இருந்து வருகிறது. இதை எதிர்த்து, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, ஹாங்காங் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டும…

  5. குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஊசி மூலம் மரண தண்டனை! [saturday 2014-09-20 14:00] அமெரிக்காவின் டெக்காஸ் நகரை சேர்ந்தவர் மெர்சல்லா. இவருடன் விசாகோல் மேன் என்ற பெண் தங்கியிருந்தார். இதற்கிடையே மெர்செல்லா வெளிநாடு செல்ல விரும்பினார். எனவே தனது 9 வயது மகன் தேவன் டேயை விசாகோல் மேனிடம் ஒப்படைத்து நல்லபடியாக பார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சிறுவன் தேவன்டேயை நல்லபடியாக கவனிக்கவில்லை. மாறாக அவனை சித்ரவதை செய்தார். உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட விசா கோல் மேனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதி…

  6. பிரதமர் ஜான் கீ நியுசிலாந்தில் ஆளும் தேசியக் கட்சி மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கின்றது. கிட்டத்தட்ட 99 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், 48 வீதமான வாக்குகளை பிரதமர் ஜான் கீ- இன் தேசியக் கட்சி வென்றுள்ளது. இதன்மூலம் ஆளுங்கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியும். எதிரணியான தொழிற்கட்சி 25 வீதமான வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பசுமைக் கட்சி 10 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாற்றில் இம்முறை தேர்தல் பிரசாரமே 'மிகக் கேவலமானது' என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. ஆளுங்கட்சியினர் தங்களின் எதிராளிகளை இழிவு படுத்துவதற்காக அரசியல்-இணைய எழுத்தாளர்களை பயன்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சனைகளை இருட்டடிப்புச் செய்ததாக விமர்சனங்கள் உள்ளன.…

  7. பாரதியார் பயன்படுத்திய ஹார்மோனிய பெட்டியை காண்பிக்கிறார் அவரது பேரன் கே.வி.கிருஷ்ணன். உத்தரப் பிரதேசத்தில் சுப்பிரமணிய பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்குவதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழுக்காக குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், நேற்று முன்தினம் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இதுதொடர்பாக மனு ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். வாரணாசியில், கங்கை நதிக் கரையில் உள்ள கேதார்காட் பகுதியில் பாரதியாரின் அத்தை வாழ்ந்த வீடு உள்ளது. பாரதியாரின் தந்தை இறந்த பிறகு, அத்தை ருக்மணி அம்மாள் அவரை வாரணாசிக்கு அழைத்…

  8. பிலாவல் பூட்டோ| படம்: ராய்டர்ஸ். காஷ்மீரின் ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்க மாட்டோம், இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்வோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பெனாசிர் அலி பூட்டோவின், மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் பகுதியில் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இதனை தெரிவித்தார். பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு வயது 20. அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவராவார். இந்நிலையில், தங்களது பாகிஸ்தான் மக்கள் கட்சியானது, இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும். காஷ்மீரின், ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்காது என பேசியுள்ளது பரபரப்பை…

  9. பிரான்ஸ் போர் விமானங்கள் ஈராக்கில் தாக்குதலைத் தொடங்கின! [saturday 2014-09-20 08:00] ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் முதல் தாக்குதலை நடத்தியிருப்பதாக அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஈராக்கின் வட கிழக்குப் பகுதியில் இருந்த ஐஎஸ் பாசறை ஒன்றின் மீது விமானங்கள் தாக்குலை நடத்தியதாகவும் வரும் நாட்களில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் அமெரிக்கா ஐஎஸ் இயக்கத்தினர் மீது 170க்கும் மேற்பட்ட தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல நகரங்களும் சிறுநகரங்களும் இருக்க…

  10. அவுஸ்­தி­ரே­லி­யாவை தீவி­ர­வா­திகள் இலக்குவைக்­கக்­ கூடும் என்ற புல­னாய்வுத் தக­வ­லை­ய­டுத்து அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தின் பாது­காப்பு என்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கன்­ப­ரா­வி­லுள்ள பாரா­ளு­மன்ற தளத்தின் பாது­காப்பை அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் பொறுப்­பேற்றுக் கொண்­டுள்­ள­தாக பிர­தமர் டோனி அப்பொட் தெரி­வித்தார். சிட்னி நகரில் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான தேடுதல் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு ஒரு நாளின் பின்பே பாரா­ளு­மன்ற பாது­காப்பு தொடர்­பான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஐ.எஸ். போரா­ளி­களின் ஆத­ர­வா­ளர்கள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் தலையை வெட்டி படு­கொலை செய்தல் உள்­ள­டங்­க­லான படு­கொ­லை­களை செய்­வ­தற்கு திட்…

  11. Subscribe இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்ந்து உயிர் துறப்பார்கள்: மோடி இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, இந்தியாவுக்காகவே உயிர் துறப்பார்கள் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மோடி, இந்திய முஸ்லிம்கள் தங்களது தாளத்திற்கு ஏற்ப ஆடுவார்கள் என அல் காய்தா இயக்கம் தவறான எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இம்மாத கடைசியில் தாம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவு…

  12. ஆண்மைக் குறைவு..! திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை! மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோடீஸ்! [Friday 2014-09-19 21:00] தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சேர்ந்த வாலிபருக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார். சமூக நலத்துறை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் திருச்சி ஜூடிசியல் மாஜ…

  13. அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்புவதற்கு ஐ.எஸ் ஐ.எஸ் போராளிகள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ்ஐ.எஸ் போராளி ஒருவர் புதிய திட்டங்கள் குறித்து எழுதியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தின் படி ஐ.எஸ்ஐ.எஸ் போராளிகள் பெப்சி போத்தலில் எபோலா வைரஸை கலந்து அதை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று அங்குள்ள நீர் நிலைகளில் கலந்து விட திட்டமிட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அவர்களை எபோலா வைரஸ் தாக்கியதும், அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு எபோலோ வைரஸை பரப்பவும் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. http://virakesari.lk/articles/2014/09/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%…

  14. தம் தரப்பு வெற்றியை கொண்டாடும் வாக்காளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திர…

    • 15 replies
    • 1.5k views
  15. வீட்டிலேயே ரூ. 348 கோடியில் மருத்துவமனை - சூமாக்கரின், மருத்துவ செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்! பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டில் படுகாயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வரும் பார்முலா -1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கரின் மருத்துவச் செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்முலா-1 கார் பந்தயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் சூமாக்கர். இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சூமாக்கர் சுயநினைவை இழந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சூமாக்…

  16. புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான வழிகளில் அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வெளியிட்ட கருத்து மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 12 புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைத்ததாக ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதில் நான்கு படகுகள் ஒரேஞ் லைப் போட்ஸ் எனப்படும் ஆபத்தான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நிலைமைகளில் உயிர் காப்பதற்காக பயன்படுத்தப்படும் அவசர படகுகளைப் பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர் கடல் வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படகுகள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை, …

  17. தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது கொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்திருக்கிறார். இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்காக பொதுமக்களின் தலையை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தொடர்பாக அரசுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் இவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டதாக அப்பாட் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களும் சண்டையிடுவதாக வெளியான கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாதிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுற…

  18. ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகுமா? இன்று சர்வஜன வாக்கெடுப்பு 2014-09-18 10:47:15 பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கவுள்ளனர். பிரித்தானிய பிரஜைகள், 52 பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளில் ஸ்கொட்லாந்து பிராந்தியத்தில் வசிப்பவர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றலாம். ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என வாக்குச்சீட்டில் கேட்கப்பட்டிருக்கும். இதில் 'ஆம்' என பெரும்பாலான ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தால், 2016 மார்ச் 24 ஆம் திகதி ஸ்கொட்லாந்து புதிய சுதந்திர நாடாகவிடும் என்பது குற…

  19. இபோலா நோயாளிகளுக்கு களத்தில் முன்னின்று உதவி வருகிறது எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உயிர்க்கொல்லியான இபோலா நோய் பரவிவருவதைக் கட்டுப்படுத்துவதில் வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் சக்திமிக்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இபோலாவைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் முன்னின்று செயலாற்றுகின்ற இந்த அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள சூழ்நிலையால் திணறிவருவதாகக் கூறுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே இரண்டாயிரத்து ஐநூறைத் தாண்டியுள்ளது.வெளிநாடுகள் உடனடியாக இராணுவத்தினரையும், மருத்துவ உதவிக் குழுக்களையும் அனுப்பி நோயைக் கட்டுப்படுத்த வேண்…

  20. ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் 'மறை நீர்'! 2 பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள்…

  21. ஆண்மை பரிசோதனைக்காக ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாக நித்தி புகார்! தமக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்களை, பிரதமர் மோடி எனக்கு நெருக்கமானவர் எனக் கூறி நித்யானந்தா மிரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தியதாக கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறியுள்ள நித்யானந்தா, அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நித்யானந்தாவுக…

  22. இளைஞனைக் கத்தியால் குத்திய நான்கு இலங்கையர்களைத் தேடுகிறது பிரித்தானியப் பொலிஸ் லண்டனில் 24 வயதான இளைஞன் ஒருவரை தலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற நான்கு இலங்கையர்களை பிரித்தானியப் பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் லண்டன் மிட்சம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 24 வயதான இளைஞரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு நான்கு இலங்கையர்கள் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதில் ஒருவர் 5 அடி 7 அங்குல உயரமான விளையாட்டு வீரர் போலத் தோற்றமளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. seithy.com

  23. அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது தனது தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலை மத்­திய மட்­டத்­தி­லி­ருந்து உயர்­மட்­டத்­திற்கு உயர்த்­தி­யுள்­ள­தாக அந்­நாட்டுப் பிர­தமர் டோனி அப்பொட் தெரி­வித்தார். ஈராக் மற்றும் சிரி­யா­வி­லான போரா­ளிகள் பிரச்­சி­னையால் உள்­நாட்டில் ஏற்­ப­டக்­கூ­டிய விளைவு குறித்து கவலை அதி­க­ரித்­துள்­ளதை கவ­னத்திற் கொண்டே இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி போராளிக் குழு­வுடன் இணைந்து பணி­யாற்றும் அல்­லது அதனால் ஈர்க்­கப்­படும் அவுஸ்­தி­ரே­லி­யர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது குறித்து அந்­நாட்டு பாது­காப்பு அதி­கா­ரிகள் கவ­லை­ய­டைந்­துள்­ளனர். எனினும் திட்­ட­மி­டப்­பட்ட தாக்­குதல் ஒன்று தொடர்பில் குறிப்­பி­டத்­தக்க புல­னாய்வுத் தகவல் எதுவும் தமக்க…

  24. அமெரிக்க யுத்த விமானம் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மோதல்களில் இராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் நோக்கத்தில், அமெரிக்காவின் யுத்த விமானங்கள் இராக்கின் வட பகுதியிலும் பாக்தாத் அருகிலும் உள்ள இலக்குகள் மீது குண்டுகள் வீசியுள்ளன. அதிபர் ஒபாமா இந்த புதிய வியூகத்தை சென்ற வாரம் அறிவிப்பதற்கு முன்பாக, அமெரிக்கப் படையினரை பாதுகாக்கும் நோக்கிலோ அல்லது மனிதாபிமான நோக்கங்களுக்காகவோதான் முன்னதாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று வாஷிங்டன் கூறியிருந்தது. சமீபத்தில் இராக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.