Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 35 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் இருந்து பிரான்ஸ் எல்லைக்கு அருகில் உள்ள சார்புரூகேன் என்ற ஜேர்மானிய நகரத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் 250 பயணிகள் இருந்தனர். இதேபோல் ஹங்கேரி நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்றது. தெற்கு ஜேர்மனியில் உள்ள மன்ஹெய்ம் ரயில் நிலையம் அருகே 2 ரயில்களும் வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் 35 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமா…

    • 0 replies
    • 686 views
  2. இலங்கை கடற்படையால் தாம் கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை கண்டித்தும், இராமேஸ்வர மீனவர்கள் இன்று சனிக்கிழமை (02) ஏற்பாடு செய்திருந்த, கச்சதீவில் தஞ்சம் அடையும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை குறித்த மீனவர்கள் வேர்கோடு பகுதியில் இருந்து வெள்ளைக்கொடி ஏந்தி கச்சதீவு நோக்கி செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் மீனவர் சங்க பிரநிதிகளிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன், 10 நாட்களில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்தார். அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, மீனவர்கள் ராமேஷ்வரத்தில் இருந்து கச்சதீவு செல்ல…

  3. லாபாஸ்: காஸா மீது இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக பொலிவியா பிரகடனப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை அரபு நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து வருகின்றன. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. பொலிவியா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கான தூதர்களை வாபஸ் பெற்றன. இந்த நிலையில் இஸ்ரேலை பொலிவியா, ஒரு பயங்கரவாத நாடாக பிரகடனம் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர், இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம். அந்த நாட்டுடனான விசா நடைமுறைகள் ரத்து செய்யப்படும் என்றார். அதாவது 1972ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, பொலிவியாவுக்குள் இஸ்ரேலியர்கள் விசா இன்றி செல்ல முடியும். ஆனால் தற்…

  4. இலங்கையின் அவதூறு கருத்தை முடிந்து போனதாக கருத வேண்டும்: சுப்பிரமணிய சாமி புதுடெல்லி: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதற்கு இலங்கை மன்னிப்பு கேட்டதால், அந்த விவகாரத்தை முடிந்து போனதாக கருத வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனங்கள் செய்து இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியாகி இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர்க…

  5. புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக, பா.ஜ., தலைவர், சுப்ரமணியசாமி தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவருமான, ராகுலுக்கு, டில்லி மெட்ரோபாலிடன் கோர்ட், 'சம்மன்' அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை, அமலாக்கப் பிரிவும் விசாரிக்க துவங்கியுள்ளது. இது, சோனியாவுக்கும், ராகுலுக்கும், புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு துவக்கிய பத்திரிகை, நேஷனல் ஹெரால்டு. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பல ஆண்டுகளாக வெளிவந்த இந்த பத்திரிகைக்கு, டில்லியில் சொந்த கட்டடம் மற்றும் இடங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, 2,000 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.நேஷனல் ஹெரால்டு பத்தி…

    • 0 replies
    • 398 views
  6. மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவுக்கு 700க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும் ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார். இந்த நோயினால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளின் அதிபர்களை கினீயிலுள்ள கொனாக்ரியில் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.இபோலா நோய் அதன் சரித்திரத்தில் இதற்கு முன் இவ்வரவு பெரிய அளவில் பரவியது இல்லை என்று டாக்டர் சான் தெரிவித்தார். ஆனால் இந்த நோயைக் …

  7. மும்பை பங்குச் சந்தை, இன்று பெரும் வீழ்ச்சி கண்டது. ஒரே நாளில் 414 புள்ளிகள் சரிந்தன. கடந்த மூன்று வாரங்களில் இதுவே ஒரு நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சியாகும். உலக அளவில் அதிக அளவு பங்குகள் விற்கப்பட்டதால், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் அதன் தாக்கம் அதிகமாகத் தென்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிந்து 25,480 என்ற நிலையிலும், நிப்டி 118 புள்ளிகள் சரிந்து 7,602 என்ற நிலையிலும் இருந்தன. மாருதி, டிஎல்எப், அல்ட்ரா செம்கோ, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், சன் பார்மா, சிப்லா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன. நேற்று மும்பை பங்குச் சந்தை, 192.45 புள்ளிகள் சரிந்தது, குறிப்பிடத்தக்க…

  8. புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து அமைச்சகங்களிலும் தனக்கான உளவாளிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்திரா, ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு ஒரு நேரத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங், தனது அரசியல் அனுபவங்களை தொகுத்து ‘ஒன் லைப் இஸ் நாட் எனஃப்' ( One life is not enough - ஒரு வாழ்க்கை போதுமானதல்ல) என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை சேர்த்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களை கடந்த இரு தினங்களாக ஆங்கில செய்தி சேனல்களுக்கு பேட்டியாகவும் அளித்து வருகிறா…

  9. அமெரிக்காவில் உடல் முழுதும் கறுப்பு உடையணிந்த வண்ணம் நடந்தே நாட்டைச் சுற்றிவரும் இந்த மர்ம பெண்மணி அமெரிக்கர்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இது வரை இவர் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார்.சமூக ஊடங்களில் இவர் பெரிய அளவு பேசப்படுகிறார். யாரிடமும் பேச மறுக்கும் இவர் பெயர் எலிசபத் போல்ஸ். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு குழந்தைகளின் தாய். அவரது கணவரும் தந்தையும் இறந்துவிட்டார்கள். போலிஸார் இவரது அந்தரங்க உரிமையை மதிக்குமாறு பொதுமக்களைக் கோரியிருக்கிறார்கள். http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/07/140731_uswomaninblack.shtml

  10. ஹமாஸ் கட்டிய சுரங்கங்கள் அழிக்கப்படும்வரை தாக்குதல் --இஸ்ரேல் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ, பாலத்தீனத் தீவிரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதைகளை, போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இஸ்ரேல் அழிக்க உறுதியுடன் இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நேடன்யாகு கூறியிருக்கிறார். இந்த வேலையை முடிக்க இஸ்ரேலை அனுமதிக்காத எந்த ஒரு போர் நிறுத்தத் திட்டத்தையும் தான் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். இந்த வேலையை முடிக்க இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று காசாவில் இருக்கும் இஸ்ரேலியப் படைகளின் தளபதி கூறியிருக்கிறார். இதனிடையே, காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களும், இஸ்ரேலியப் பகுதிகளுக்குள் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களும…

  11. புதுடெல்லி: உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், சோனியா காந்தியை பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ள நிலையில், தானும் சுயசரிதை புத்தகம் எழுதப்போவதாகவும், அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியவரும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது, பிரதமர் பதவியை சோனியா ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் பா.ஜனதா தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் பதவியை தாம் ஏற்கப்போவதில்லை என அறிவித்த சோனியா, மன்மோகன் சி…

  12. மலேஷியாவின் மற்றுமொரு விமானம் விபத்துக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. Tiger Airways விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எடிலைட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில், குறித்த விமான நிலையத்தில் இருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான MH136 விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் பயணத்தை ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், ஒரே ஓடு தளத்தில் ஒரு விமானம் தரையிறங்க முற்படுகையில், மற்றமொரு விமானம் நகர்வதை அறிந்த அதிகாரிகள் MH136 விமானத்தின் விமானிக்கு அறிவுறுத்தல் விடுத்தனர். சிறப்பாக செயற்பட்ட MH136 விமானத்தின் விமானி, பாதையை மாற்றி பாரிய விபத்து ஒன்று நேர்வதை தடுத்தார், அதேவேளை Tiger Airways விமானமும் பாதுகாப்பாக தரையிறங்கியது. இ…

  13. இஸ்ரேல் தாக்குதலில் 1360 பாலஸ்தீனர்கள் படுகொலை , ஹமாஸ் இயக்கமே பொறுப்பு: கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் குற்றச்சாட்டு! [Thursday 2014-07-31 09:00] இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1300-ஐ தாண்டியது. ஹமாஸ் தீவிரவாத இயக்கமே இதற்கு பொறுப்பு என்று கனடா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் - காஸாமுனை இடையிலான போர் கடந்த 8-ந் தேதி மூண்டது. காஸா முனை மீது இஸ்ரேல் முதலில் வான்வழி தாக்குதலைத்தான் நடத்தியது. ஆனால் ராக்கெட் வீச்சை நிறுத்த மறுத்ததால், காஸா முனை மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. இந்தப் போர் நேற்று 24-வது நாளை எட்டியது. நேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தா…

  14. ஆடைகளை கழற்றி வீசி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண் தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த இடத்துக்கு வந்த ஒரு இளம் வயது பெண், மண்டேலாவின் சிலைக்கு வீர வணக்கம் செலுத்தினாள். பின்னர், யாருமே எதிர்பாராத வகையில் தனது ஆடைகளை எல்லாம் களைந்து தூர வீசி விட்டு, நிர்வாண கோலமாக நடந்து சென்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது ஏறிய அந்த பெண் மண்டேலாவின் சிலையை கட்டியணைத்தவாறு சில நிமிடங்கள் நின்றிருந்தாள…

  15. இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் வடக்கு காஸாவின் ஒரு குடியிருப்பு பகுதி. நேரம்: மாலை 4.00 மணி மாலை 5.00 மணிக்கு தரைமட்டமான கட்டிடங்கள். காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருவதால், காஸா நகரம் தரைமட்டமாகி வருகிறது. கடந்த 23 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் மோதலில் இதுவரை 1,283 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும் பாலானவர்கள் பொதுமக்கள். வடக்கு காஸாவிலுள்ள ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் ஐ.நா. பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.ஜபாலியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகமையின் பெண்கள் பள்ளியிலும் இஸ்ரேல் வீசிய குண்டுகள் விழுந்தன. தொ…

    • 1 reply
    • 429 views
  16. ஜப்பானில் அணுகுண்டு வீசிய அமெரிக்க விமானி 93ஆவது வயதில் மரணம்! [Wednesday 2014-07-30 15:00] ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணு குண்டை வீசிய அமெரிக்க விமானப் படை விமானத்தின் விமானியாக இருந்த தியோடர் வன்கிர்க் இன்று தனது 93ஆவது வயதில் மரணம் அடைந்தார். ஹிரோஷிமா மீது 'லிட்டில் போய்' என்ற அணு குண்டை வீசிய குழுவில் இடம்பெற்றிருந்த தியோடர் வன்கிர்க்குக்கு அப்போது 24 வயது. தற்போது ஜோர்ஜியாவில் குடும்பத்துடன் வசித்து வந்த தியோடர் குறித்து அவரது மகன் கூறுகையில், அவரை இரண்டாம் உலகப்போரின் 'ஹீரோ' என்பார்கள். என்னை பொறுத்தவரை அவர் எனக்கு நல்ல தந்தையாகவே இருந்துள்ளார். ஹிரோஷிமா மீது குண்டு வீசியதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. மாறாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வ…

  17. இந்தியாவைச் சேர்ந்த 80பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் பங்கு பெற்றிருப்பதாகவும், அதில் 18 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சமீபத்தில் இந்திய உளவு அமைப்பான ரா தெரிவித்திருந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே. குமுதம் ரிப்போர்ட்டரில்கூட அந்த பதினெட்டில் பத்து பேர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்று எழுதியதற்கு சங்கை ரிதுவான் பாயே கண்டனமெல்லாம் தெரிவித்திருந்தார். இப்போது ராமநாதபுரம் அருகில் உள்ள தொண்டியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் அதே தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சூராவளியாக கிளம்பி இருப்பதாக அண்ணன் சங்கை தெரிவித்துள்ளார். இந்தியா மீது போர் தொடுப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்த போது அது பற்றிய ஒரு பதிவில், ஒரு நண்பர் "இந்தியாவில் ஏற்கனவே தளம் அமைக்கப்பட்…

  18. ஜப்பானில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை, அனல் காற்று காரணமாக கடந்த வாரத்தில் 15 பேர் உயிரிழந்தனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். "அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக கடந்த வாரத்தில் 8,600க்கும் மேற்பட்டோர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்' என்று அந்நாட்டு தேசிய விபத்து தடுப்புதுறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறுபடியும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. …

  19. ஐ.நா பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுப்பேன் என்கிறாா் தூதுவர் மிச்சல் சிசன்! [Wednesday 2014-07-30 15:00] ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுக்கப் போவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் அமெரிக்க பிரதி பிரதிநிதி பதவிக்காக, அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா சிசனின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.இந்த பரிந்துரை காங்கிரஸ் சபை அங்கீகரித்தால், நாட்டின் நலனை முதனிலையாகக் கொண்டு செயற்பட உத்தேசித்துள்ளதாக சிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்காவின் நோக்கங்களையும் இலக்குகளையும் எட்டுவதற்கு முனைப்ப…

  20. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பாலியல் தொடர்பான தொலைபேசி தகவல்களை தனது மிரட்டலுக்கு சாதகமாக இஸ்ரேல் பயன்படுத்தியதாக புதிய புத்தகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் சர்ச்சைக்குரிய அவரது பெண் உதவியாளர் மொனிக்கா லிவின்ஸ்கிக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடலை ரஷ்யாவும், பிரித்தானியாவும் இரகசியமாகப் பதிவு செய்துகொண்டன. இந்த ஒலிப்பதிவை இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சித்ததாக புதிய புத்தகம் கூறுகின்றது. கிளிண்டன் அதிபராக இருந்தபோது அலுவலக உதவியாளரான மோனிகா லெவின்ஸ்கியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இந்த தகவல் 1998ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி பல…

  21. ரஷ்யாவானது அணுசக்தி ஏவுணையொன்றை பரிசோதித்ததன் மூலம் முக்கிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கையொன்றை மீறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. ரஷ்ய கரையிலிருந்து ஏவுகணையொன்றை ஏவிப்பரிசோதித்தது 1987 ஆம் ஆண்டு பனிப்போரின்போது கைச்சாத்திடப்பட்ட மத்திய நடுத்தர அணுசக்தி படைகள் உடன்படிக்கையை மீறியுள்ளதாக அமெரிக்கா சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். அந்த உடன்படிக்கையானது 500 கிலோ மீற்றருக்கும் 5500 கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட தூரம் பயணிக்கக்கூடிய நடுத்தர ஏவுகணைகளை பரிசோதிப்பதற்கு தடை விதிக்கின்றது. உக்ரேனிலான பதற்ற நிலைக்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு வெள…

  22. இந்தியாவும் அமெரிக்காவும் 200 ஆண்டு கால நட்புறவை கொண்ட நாடுகள் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்துடன், தொடர்புகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த உதவி புரிய அமெரிக்கா தயார் எனவும், தமது இந்திய விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜோன் கெரி ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஜோன் கெரி இன்று இந்தியா செல்ல உள்ள நிலையில், இருதரப்பு வர்த்தக மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் சவால்கள் தொடர்பில் இந்திய தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தியா வரும் உயர்நிலை அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெரி என்பத…

  23. திடீரென மாயம், திடீரென வீழ்த்தப்பட்டது போன்று, தொடர்ந்து பயங்கர பாதிப்பை சந்தித்துள்ள, 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், தன் புகழை தக்க வைத்துக் கொள்ள, விமான நிறுவனத்தின் பெயரை மாற்றவும், புதிய முதலீடுகளை சேகரிக்கவும், பல்வேறு புதிய திட்டங்களை பின்பற்ற உள்ளது. கடந்த மார்ச்சில், ஐந்து இந்தியர்கள் உட்பட, 239 பயணிகளுடன் திடீரென மாயமான மலேசிய பயணிகள் விமானத்தின் கதி என்னவென்று இன்னும் தெரியவில்லை. கடந்த 17ல், 298 பேருடன் சென்ற மற்றொரு மலேசிய விமானம், உக்ரைன் நாட்டில் மர்மமான முறையில் விழுந்து நொறுங்கியது. அதை, ரஷ்ய ஆதரவு உக்ரைன் பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என, உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன. இத்தகைய இழப்புகளால் கடும் பா…

  24. ஐ.எஸ்.ஐ.எஸ். ஒவ்வொரு வீரருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது! [Tuesday 2014-07-29 08:00] ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 2003-ம்…

  25. "கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் அமெரிக்கா மீது அணுகுண்டுத் தாக்குதல் தொடுப்போம்' என வட கொரிய ராணுவத்தின் அரசியல் பிரிவு இயக்குனர் ஹவாங் பியோங்-சோ எச்சரித்துள்ளார். வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவப் பேரணியில் அவர் பேசுகையில், "தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய போர் ஒத்திகை நிகழ்ச்சிகள், இப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வட கொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், வெள்ளை மாளிகை மீதும், அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் எங்களது துருப்புக்கள் அணு ஆயுத ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் தொடுக்கும்'' என்றார். வட கொரிய ராணுவத்தின் இரண்டாம் நிலைத் தலைவரான அவரது பேச்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.