Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆடைகளை கழற்றி வீசி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண் தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த இடத்துக்கு வந்த ஒரு இளம் வயது பெண், மண்டேலாவின் சிலைக்கு வீர வணக்கம் செலுத்தினாள். பின்னர், யாருமே எதிர்பாராத வகையில் தனது ஆடைகளை எல்லாம் களைந்து தூர வீசி விட்டு, நிர்வாண கோலமாக நடந்து சென்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது ஏறிய அந்த பெண் மண்டேலாவின் சிலையை கட்டியணைத்தவாறு சில நிமிடங்கள் நின்றிருந்தாள…

  2. இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் வடக்கு காஸாவின் ஒரு குடியிருப்பு பகுதி. நேரம்: மாலை 4.00 மணி மாலை 5.00 மணிக்கு தரைமட்டமான கட்டிடங்கள். காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருவதால், காஸா நகரம் தரைமட்டமாகி வருகிறது. கடந்த 23 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் மோதலில் இதுவரை 1,283 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும் பாலானவர்கள் பொதுமக்கள். வடக்கு காஸாவிலுள்ள ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் ஐ.நா. பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.ஜபாலியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகமையின் பெண்கள் பள்ளியிலும் இஸ்ரேல் வீசிய குண்டுகள் விழுந்தன. தொ…

    • 1 reply
    • 430 views
  3. ஜப்பானில் அணுகுண்டு வீசிய அமெரிக்க விமானி 93ஆவது வயதில் மரணம்! [Wednesday 2014-07-30 15:00] ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அணு குண்டை வீசிய அமெரிக்க விமானப் படை விமானத்தின் விமானியாக இருந்த தியோடர் வன்கிர்க் இன்று தனது 93ஆவது வயதில் மரணம் அடைந்தார். ஹிரோஷிமா மீது 'லிட்டில் போய்' என்ற அணு குண்டை வீசிய குழுவில் இடம்பெற்றிருந்த தியோடர் வன்கிர்க்குக்கு அப்போது 24 வயது. தற்போது ஜோர்ஜியாவில் குடும்பத்துடன் வசித்து வந்த தியோடர் குறித்து அவரது மகன் கூறுகையில், அவரை இரண்டாம் உலகப்போரின் 'ஹீரோ' என்பார்கள். என்னை பொறுத்தவரை அவர் எனக்கு நல்ல தந்தையாகவே இருந்துள்ளார். ஹிரோஷிமா மீது குண்டு வீசியதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. மாறாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வ…

  4. இந்தியாவைச் சேர்ந்த 80பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் பங்கு பெற்றிருப்பதாகவும், அதில் 18 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சமீபத்தில் இந்திய உளவு அமைப்பான ரா தெரிவித்திருந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே. குமுதம் ரிப்போர்ட்டரில்கூட அந்த பதினெட்டில் பத்து பேர் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்று எழுதியதற்கு சங்கை ரிதுவான் பாயே கண்டனமெல்லாம் தெரிவித்திருந்தார். இப்போது ராமநாதபுரம் அருகில் உள்ள தொண்டியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் அதே தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சூராவளியாக கிளம்பி இருப்பதாக அண்ணன் சங்கை தெரிவித்துள்ளார். இந்தியா மீது போர் தொடுப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்த போது அது பற்றிய ஒரு பதிவில், ஒரு நண்பர் "இந்தியாவில் ஏற்கனவே தளம் அமைக்கப்பட்…

  5. ஜப்பானில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை, அனல் காற்று காரணமாக கடந்த வாரத்தில் 15 பேர் உயிரிழந்தனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். "அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக கடந்த வாரத்தில் 8,600க்கும் மேற்பட்டோர் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்' என்று அந்நாட்டு தேசிய விபத்து தடுப்புதுறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறுபடியும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. …

  6. ஐ.நா பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுப்பேன் என்கிறாா் தூதுவர் மிச்சல் சிசன்! [Wednesday 2014-07-30 15:00] ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதவி கிடைத்தால் பொறுப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுக்கப் போவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் அமெரிக்க பிரதி பிரதிநிதி பதவிக்காக, அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா சிசனின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.இந்த பரிந்துரை காங்கிரஸ் சபை அங்கீகரித்தால், நாட்டின் நலனை முதனிலையாகக் கொண்டு செயற்பட உத்தேசித்துள்ளதாக சிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் அமெரிக்காவின் நோக்கங்களையும் இலக்குகளையும் எட்டுவதற்கு முனைப்ப…

  7. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பாலியல் தொடர்பான தொலைபேசி தகவல்களை தனது மிரட்டலுக்கு சாதகமாக இஸ்ரேல் பயன்படுத்தியதாக புதிய புத்தகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் சர்ச்சைக்குரிய அவரது பெண் உதவியாளர் மொனிக்கா லிவின்ஸ்கிக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடலை ரஷ்யாவும், பிரித்தானியாவும் இரகசியமாகப் பதிவு செய்துகொண்டன. இந்த ஒலிப்பதிவை இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சித்ததாக புதிய புத்தகம் கூறுகின்றது. கிளிண்டன் அதிபராக இருந்தபோது அலுவலக உதவியாளரான மோனிகா லெவின்ஸ்கியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இந்த தகவல் 1998ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி பல…

  8. ரஷ்யாவானது அணுசக்தி ஏவுணையொன்றை பரிசோதித்ததன் மூலம் முக்கிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கையொன்றை மீறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. ரஷ்ய கரையிலிருந்து ஏவுகணையொன்றை ஏவிப்பரிசோதித்தது 1987 ஆம் ஆண்டு பனிப்போரின்போது கைச்சாத்திடப்பட்ட மத்திய நடுத்தர அணுசக்தி படைகள் உடன்படிக்கையை மீறியுள்ளதாக அமெரிக்கா சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். அந்த உடன்படிக்கையானது 500 கிலோ மீற்றருக்கும் 5500 கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட தூரம் பயணிக்கக்கூடிய நடுத்தர ஏவுகணைகளை பரிசோதிப்பதற்கு தடை விதிக்கின்றது. உக்ரேனிலான பதற்ற நிலைக்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு வெள…

  9. இந்தியாவும் அமெரிக்காவும் 200 ஆண்டு கால நட்புறவை கொண்ட நாடுகள் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்துடன், தொடர்புகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த உதவி புரிய அமெரிக்கா தயார் எனவும், தமது இந்திய விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜோன் கெரி ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஜோன் கெரி இன்று இந்தியா செல்ல உள்ள நிலையில், இருதரப்பு வர்த்தக மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் சவால்கள் தொடர்பில் இந்திய தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தியா வரும் உயர்நிலை அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெரி என்பத…

  10. திடீரென மாயம், திடீரென வீழ்த்தப்பட்டது போன்று, தொடர்ந்து பயங்கர பாதிப்பை சந்தித்துள்ள, 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், தன் புகழை தக்க வைத்துக் கொள்ள, விமான நிறுவனத்தின் பெயரை மாற்றவும், புதிய முதலீடுகளை சேகரிக்கவும், பல்வேறு புதிய திட்டங்களை பின்பற்ற உள்ளது. கடந்த மார்ச்சில், ஐந்து இந்தியர்கள் உட்பட, 239 பயணிகளுடன் திடீரென மாயமான மலேசிய பயணிகள் விமானத்தின் கதி என்னவென்று இன்னும் தெரியவில்லை. கடந்த 17ல், 298 பேருடன் சென்ற மற்றொரு மலேசிய விமானம், உக்ரைன் நாட்டில் மர்மமான முறையில் விழுந்து நொறுங்கியது. அதை, ரஷ்ய ஆதரவு உக்ரைன் பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என, உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன. இத்தகைய இழப்புகளால் கடும் பா…

  11. ஐ.எஸ்.ஐ.எஸ். ஒவ்வொரு வீரருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது! [Tuesday 2014-07-29 08:00] ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 2003-ம்…

  12. "கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் அமெரிக்கா மீது அணுகுண்டுத் தாக்குதல் தொடுப்போம்' என வட கொரிய ராணுவத்தின் அரசியல் பிரிவு இயக்குனர் ஹவாங் பியோங்-சோ எச்சரித்துள்ளார். வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராணுவப் பேரணியில் அவர் பேசுகையில், "தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய போர் ஒத்திகை நிகழ்ச்சிகள், இப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வட கொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், வெள்ளை மாளிகை மீதும், அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் எங்களது துருப்புக்கள் அணு ஆயுத ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் தொடுக்கும்'' என்றார். வட கொரிய ராணுவத்தின் இரண்டாம் நிலைத் தலைவரான அவரது பேச்ச…

  13. கனடாவில் கடனட்டை மோசடியில் உல்லாச ஊர்தி மற்றும் வாடகைக்கார் சாரதிகள் ஈடுபடுவதாக போலிசார் எச்சரிக்கை! [Monday 2014-07-28 20:00] கனடா ரொறொன்ரோ. பியர்சன் சர்வதேச விமானநிலைத்தின் வெளியே செயல்படும் உல்லாச ஊர்தி மற்றும் வாடகைக் கார் சாரதிகள் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு வருபவர்களின் கடனட்டைகளை மோசடி செய்து அவர்களை சுரண்டிவருகின்றனரென தெரியவந்துள்ளது. பீல் பிராந்திய பொலிசார் ரொறொன்ரோ பெரும்பாக விமானநிலைய அதிகார சபையினரினருடனான கூட்டு முயற்சி மூலம் - உல்லாச ஊர்தி மற்றும் வாடகை கார்களை உபயோகப்படுத்தும் விமானநிலையத்தில் வந்திறங்கும் பயணிகளை குறிவைத்து இந்த சூழ்ச்சியை செயல்படுத்துகின்றனரென அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். பயணிகள் சாரதிகளிற்கு தங்களது கடனட்ட…

  14. புதுடெல்லி: கடந்த ஆட்சியில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து நரேந்திர மோடி பேசிய ராஜதந்திரம் எங்கே போனது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஏற்கனவே சில முறை ஊடுருவிய சீன ராணுவத்தினர், இந்திய அரசின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பின்னர் பின்வாங்கி தங்கள் எல்லைப்பகுதிக்குள் சென்றனர். இந்த நிலையில் சர்வதேச எல்லையை தாண்டி, லடாக் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் டெம்சோக் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் கடந்த 25ஆம் தேதி அத்துமீறி நுழைந்து, அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை தீவைத்து நாசமாக்கிவிட்டு சென்ற தகவல் நேற்று வெளியானது. இதை லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. துப்ஸ்தான் சீவாங் உறுதி செய்துள்ளார். இந்நிலையில், இந்த விவகா…

  15. புதிய இணையதளம் ஆரம்பித்து மக்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளார் மோடி! [Monday 2014-07-28 10:00] நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 2014 ஜூலை 26 அன்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் விதமாக 'mygov.nic.in' என்ற புதிய இணையதளத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து 2014 மே மாதம் 26ஆம் தேதி அன்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது. இந்த இணையத்தளத்தை துவக…

  16. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பெயரில் நித்யானந்தா மீது பெங்களூரு ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இன்றைய வழக்கு விசாரணையில் நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும், ஆனால் ஹரிதுவாரில் இருப்பதால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நித்யானந்தாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி ஆண்மை பரிசோதனை மருத்துவ சோதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.satrumun.net/

    • 0 replies
    • 712 views
  17. அமெரிக்காவுக்கு வருகை தரும் காவல்துறை அதிகாரி சைலேந்திபாபுவிடம் யாராவது தமிழ் உணர்வாளர் பின்வரும் கேள்விகளை கேட்பாரா? எதிர்வரும் 31.07.2014 யன்று காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திரபாபு அவர்கள் அமெரிக்க தமிழ் சங்கத்தில் உரையாற்ற உள்ளார். அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் உள்ளார் என அறிகிறோம். எனவே யாராவது தமிழ் இன உணர்வாளர்கள் அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்க வேண்டும் என விரும்புகிறோம். 1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக சைலேந்திரபாபு இருந்தபோது வேடசந்தூர் என்னும் இடத்தில் நாகராசன் என்னும் தமிழ்நாடுவிடுதலை போராளி ஒருவரை “போலி என்கவுண்டர்”மூலம் கொன்றது ஏன்? அண்மையில் தர்மபுரியில் 6 இளைஞர்கள் மரீனா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற குற்ற…

    • 0 replies
    • 570 views
  18. 3000- மீட்டர் சைக்கிளோட்டத்தில் வெள்ளி, வெண்கலம் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை ஜோவானா ரோவ்ஸெல் (நடுவில்) கிளாஸ்கோ கொமன்வெல்த் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகளின் களநிலவரப் படி, (ஜிஎம்டி நேரம் 16.00 மணியளவில்) பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடும்போட்டிகளுக்கு நடுவே முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 23 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 7 தங்கப் பதக்கங்களுடன் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இம்முறை போட்டியை நடத்தும் ஸ்கொட்லாந்து 5 தங்கம் அடங்கலாக 11 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத…

  19. கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ரூ. 100 கோடியில் நினைவு சின்னம்! அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பு [sunday 2014-07-27 13:00] கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு ரூ. 100 கோடியில் நினைவு சின்னம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் கடந்த 1999ம் ஆண்டு கார்கில் பகுதியில் ஏற்பட்ட போரில் ஏராளமான வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அந்த போரில் இந்தியா, பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்தது. கார்கில் போரில் வென்று 15 ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர்ஜவான் ஜோதி எனப்படும் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மத்திய ராணுவ அமைச்சர் அருண்ஜெட்லி அஞ்சலி செலுத்தினார்…

  20. காஸாவில் ஐக்கிய நாடுகள் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடத்தப்பட்டு வரும் குறித்த பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் தங்கியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பான் கீ மூன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பான் கீ…

  21. 2 கிலோ தங்கத்தை ஷூவுக்குள் மறைத்து கடத்தி வந்த ஆப்கானிஸ்தானியர்கள் கைது ஜெய்ப்பூர், ஜூலை 26- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சங்கானர் விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த விமானம் இன்று தரையிறங்கிய போது பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பயணிகளில் இருவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட அதிகாரிகள், அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர்கள் ‘ஷூ’க்களின் உள்பக்கத்தில் ரகசியமாக தங்க பிஸ்கட்களை மறைத்து, கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அவர்களை கைது செய்த போலீசார், மறைத்து கடத்தி வந்த 2 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் மாலைமலர்

  22. மோடிக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம்: அமெரிக்கா விளக்கம்! ) வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் முடிந்து போன ஒன்று என அமெரிக்கா கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அவருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது. இதையடுத்து மோடி பிரதமராக பதவியேற்றதும் அவரை அமெரிக்கா வருமாறு அதிபர் ஒபாமா பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், மோடிக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்தறை இணையமைச்சர் நேஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், "தனி நபர் ஒருவருக்கு அமெரிக்கா விசா வழங்கும் போது அவர் மீதான வழக்குகள் தொடர்பான விஷயங்களை கவனத்தில் எடுத…

    • 0 replies
    • 502 views
  23. மலேசிய விமானம் மீதான தாக்குதலின் எதிரொலி - நெதர்லாந்தில் வசித்து வரும் புடினின் மகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது n உக்ரைனில் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நெதர்லாந்தில் வசித்து வரும் ரஷ்ய அதிபர் புடின் மகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் வெளியேற வேண்டும் என்ற அரசியல் தலைவர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. உக்ரைனில் கடந்த 17ம் தேதி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதியின் மேலே பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 298 பயணிகளுடன் நடுவானில் விமானம் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலுக்கு கிளர்ச்சியாளர்கள்தான் காரணம் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலு…

    • 1 reply
    • 556 views
  24. அமெரிக்காவை கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை! [saturday 2014-07-26 08:00] பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக…

  25. ஓடும் காரில் 4 பேர் என்னை கற்பழித்தார்கள்!! - மும்பை பெண் பரபரப்பு புகார்! [saturday 2014-07-26 08:00] ஓடும் காரில் 4 பேர் சேர்ந்து கற்பழித்ததாக 35 வயது பெண் காவல்துறையில் பரபரப்பு புகார் செய்தார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தானே மிரா ரோட்டில் இருந்து 'ஷாப்பிங்' செய்வதற்காக 35 வயது பெண் ஒருவர் மும்பை பாந்திரா லிங்க் வந்தார். பின்னர் அங்கிருந்து பாந்திரா ரயில் நிலையம் செல்ல ஆட்டோவில் ஏறி சென்றார். ஆட்டோ டிரைவர் அவரை தாராவியில் இறக்கி விட்டார். அப்போது அங்கு 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் காரில் 'லிப்ட்' கொடுப்பதாக கூறி அந்த பெண்ணை ஏற்றி சென்றனர். ஆனால் ஓடும் காரிலேயே அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து கற்பழித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.