உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
லிபியாவின் தலைநகர் திரிபோலியிலுள்ள பிரதான சர்வதேச விமான நிலையத்தின் மீது திங்கட்கிழமை மாலை புதிய ஏவுகணைத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. மேற்படி விமான நிலையம் மூடப்படுவதற்கு காரணமாக அமைந்த மோதல்கள் இடம்பெற்றமைக்கு மறுநாளே இந்த ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்து 6 பேர் காயமடைந்துள்ளதுடன் 12 விமானங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில்இ நாட்டின் பாதுகாப்பை மீள நிலைநிறுத்துவதற்கு சர்வதேச படைகளின் உதவியை நாடுவதற்கு லிபிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறினார். வெளி உலகத்திற்கான லிபியாவின் பிரதான போக்குவரத்த…
-
- 1 reply
- 275 views
-
-
http://tamil.oneindia.in/news/tamilnadu/tn-cm-jayalalithaa-warns-clubs-on-dhoti-issue-206087.html
-
- 3 replies
- 481 views
-
-
இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி போர்ட்டலேசா, ஜூலை 16- ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இதே எண்ணம் இருந்து வந்த நிலையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க இன்று முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும…
-
- 2 replies
- 577 views
-
-
காஸா நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம் பலஸ்தீன தலைவருடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல் பலஸ்தீனில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு ள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, பலஸ்தீனின் பிந்திய நிலவரங்கள் குறித்து அறிந்துகொண்டதுடன், உயிரிழந்த மக்களுக்குத் தனது ஆழ்ந்த கவலையையும் வெளியி ட்டார். காஸா பகுதியில் பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழ ப்புகள் குறித்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விளக்கமளித்தார். உயிரிழந்த மக்களுக்கு அனுதாபங்களைத் தெரி விப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறினார். காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களா…
-
- 1 reply
- 286 views
-
-
பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். [Tuesday 2014-07-15 09:00] அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலையொட்டி பிரதமர் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளார். இதன் எதிரொலியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஹேக் விலகியுள்ளார். இது குறித்து ஹேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹேக்கின் விலகலையடுத்து தற்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் பிலிப் ஹம்மோன்ட் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=113162&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 340 views
-
-
இங்கிலாந்து தேவாலயங்ளில் பெண்கள் பிஷப் ஆக அனுமதி! [Tuesday 2014-07-15 09:00] இங்கிலாந்து தேவாலயங்ளில் இதுவரை பெண்கள் பிஷப்களாக நியமிக்கப்பட்டதில்லை. ஆனால், பெண் களை பிஷப்களாக நியமிக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடப் பட்டு வந்தது. இது தொடர்பாக, 'சர்ச் ஆப் இங்கிலாந்து' என அழைக்கப்படும் திருச்சபைகளில் கடந்த 2012ல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பெண் பிஷப் நியமனம் தொடர்பாக, சர்ச் ஆப் இங்கிலாந்தின் 3 திருச்சபைகளில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. யோர்க் நகரில் நடந்த திருச்சபைகளின் பொது குழு கூட்டத்தில், 'பெண்கள் பிஷப் ஆக தடையில்லை' என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிஷப்கள் சபையில், தீர்மானத்துக்கு ஆதரவாக 37 ஓட்டுக…
-
- 1 reply
- 285 views
-
-
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம் சாய் ராம் அந்தக் குடும்பத்திற்கு அது ஒரு விசேஷ சந்திப்பு. கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், தம்பதியரின் தாய் தந்தையர் என எல்லாரும் மதிய விருந்திற்காக குழமியிருந்தார்கள். வெளியே மதிய வெயில் பழுக்க தொடங்கியிருந்தது. சிரிப்பும் சந்தோஷமுமாய் மதிய விருந்து தொடங்கியது. என்ன விசேஷம்? அந்தக் கணவன் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பது தான் விசேஷம். இரண்டாம் உலகப் போரிலே ராணுவ வீரராய் பணியாற்றி விட்டு போர் முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறார் அவர். பெயர் வெயின் மில்லர். வயது 27. இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பியிருப்பது மட்டும் விசேஷமல்ல, அந்தப் போரிலே வெயின் மில்லர் எடுத்த புகைப்படங்கள் பெரும் புகழைப் …
-
- 0 replies
- 691 views
-
-
காஸாவில் இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இனப்படுகொலை நிகழ்த்தி வரும் இஸ்ரேலை கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் காஸா மீதான இஸ்ரேல் கொடுந்தாக்குதலை நடத்தி இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் விவகாரம் இன்று எதிரொலித்தது. காஸா பகுதி மீதான இஸ்ரேலின் கொடுந்தாக்குதலை கண்டித்தும் ஐ.நா. சபையில் காஸா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல், மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், மஜ்லிஸ்…
-
- 2 replies
- 440 views
-
-
கோட்சே கோல் போட்டார்! - காதலி முத்தமிட்டார்! கோட்சேவை விட அவரது காதலியை தேடுகிறது உலகம்! [Tuesday 2014-07-15 00:00] ஜெர்மனிக்கு 4வது உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள அந்த அணியின் ஸ்டார் வீரர் மரியோ கோட்சே, போட்டியின் முடிவில் தனது காதலிக்கு நன்றி தெரிவித்திருந்தார். சும்மா சொல்லக் கூடாது, கோட்சேவின் முழு எனர்ஜிக்கும் அவரது காதலி ஆன் காத்ரின் பிரோமல் விடா 100 சதவீதம் பொருத்தமானவராகவே இருக்கிறார். இப்போது எல்லோரும் கோட்சேவை விட்டு விட்டு அவரது காதலி பற்றித்தான் தேடித் தேடிப் படிக்கிறார்கள்.. படம் பார்க்கிறார்கள்! கோட்சேவின் காதலியான ஆன், ஒரு மாடல் அழகி ஆவார். சாதாரண மாடல் அழகி அல்ல, கவர்ச்சிகரமான மாடல் அழகி. இவரும் கோட்ச…
-
- 3 replies
- 638 views
-
-
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார் நாடின் கார்டிமர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது இல்லத்தில், தூங்கிக் கொண்டிருந்த போது கார்டிமர் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கார்டிமர் 1991-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கவுரவிக் கப்பட்டார். கார்டிமர் 15 புதினங்களையும், ஏராளமான சிறுகதைகள், புனைவுகளற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. இனவெறிக்கு எதிரான போராளி தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவை சார்ந்தே அவர் அதிகம் எழ…
-
- 0 replies
- 312 views
-
-
'ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா' என்று இவ்வம்மையாரையும், அவர் பின்னில் இருக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கையும் ஆவேசமாகச் சாடும் இவ்வேளையில், இந்நிகழ்வில் வெறித்தனமான பற்றோடு பங்கேற்று, வரலாறுக் காணாத வகையில் விழாவைச் சிறப்பாக அரங்கேற்றிய இப்பாழும் மக்களின் மீதும் கொஞ்சம் சாடல்களை வீசுவது தவறாகிவிடுமா? வாழ்க நம் மக்கள்! வளர்க நம் கல்விக்கலாச்சாரம்! fb.
-
- 0 replies
- 508 views
-
-
அமெரிக்க ராணுவ வீரர்களின் சுகபோக வாழ்க்கைக்காக தென் கொரிய அரசால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், தங்களுக்கு உரிய நஷ்ட ஈடும், இறுதிவரை அரசின் அரவணைப்பும் தேவை என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். 1960-களில், அப்பா அடிக்கிறார் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே இளம் பெண்ணாக வந்த சோ மியுங் ஜா (76), பாலியல் தொழில் தரகர்களிடம் சிக்கினார். அமெரிக்க வீரர்களுக்காக நடத்தப்பட்ட பாலியல் தொழில் விடுதியில் விற்கப்பட்டார். இரண்டாவது உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட தென் கொரிய மகளிரைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதற்காக தங்கள் நாட்டுக்கு உரிய நஷ்டஈட்டைத் தர வேண்டும் என்று தென் கொரிய அரசு ஜப்பான் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில், தென் கொரிய அரசு மீதே முன்னாள்…
-
- 1 reply
- 434 views
-
-
7-வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல். | படம்: ஏ.பி. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. ஏழாவது நாளை எட்டியுள்ள வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து காஸா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தெற்கு காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தந்தை, மகன் உள்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ரஃபான், கான் யூனிஸ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள…
-
- 0 replies
- 457 views
-
-
நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜுலை 13 ஆம் தேதி மாலை நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா 144 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இடது புற என்ஜினில் தீ பற்றியதாக விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் நியூ ஜெர்சி விமானநிலையத்தை வந்தடைந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்டதாக வெளிவந்த…
-
- 1 reply
- 278 views
-
-
"நமக்கான விடிவு காலம் நெருங்குகிறது. இறைத்தூதரின் தீர்க்கதரிசனம் நிஜமாகிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய கிலாபத்துக்கள் உலகம் முழுவதும் நிலைநாட்டச் செய்யும் கறுப்புப் படை உதயமாகிவிட்டது. ஜிஹாதில் பங்கெடுக்கும் தருணம் இதுவே" என சில நாடுகளிலுள்ள சில இஸ்லாமியர்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த திடீர் உணர்ச்சிவசத்துக்கு காரணம் என்னவென்றால் உலகமே தற்போது பேசிக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் சிரியா அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் லெவன்ட் (ஐ.எஸ்.ஐ.எல்) எனும் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கமே. கடந்த மாதம் தான் கைப்பற்றிய ஈராக் படையினர் பலரை ஐ.எஸ்.ஐ.எஸ். அ…
-
- 3 replies
- 1.8k views
-
-
வேட்டி' விவகாரம்: தமிழக அரசு தலையிட தலைவர்கள் வலியுறுத்தல் வேட்டி அணிந்து சென்ற நீதிபதி, வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் தலைவர்கள், பொது நிகழ்ச்சிகளில் ஆடை கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.எஸ்.அருணாசலம் எழுதிய நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் சிவப்பு விளக்கு பொருத்திய தனது அலுவலக காரில் சென்றுள்ளார். வேட்டி அணிந்து சென்றிருந்த அவரை விழா அரங்கு…
-
- 5 replies
- 480 views
-
-
இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது. மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மி…
-
- 0 replies
- 236 views
-
-
புலி அருகிவரும் உயிரினங்களில் ஒன்று புலித்தோல் விற்பனையை அனுமதிக்கின்றமைமைய சீனா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் புலிகளின் தோல்களை வணிக நோக்கத்திற்காக விற்கும் நடவடிக்கையை சீனா அனுமதிப்பதாக குற்றம்சாட்டும் முக்கிய அறிக்கையொன்று ஜெனீவாவில் நடந்துவரும் இந்த சந்திப்பின்போது வெளியிடப்பட்டுள்ளது. சைட்ஸ் என்ற 'அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்பாடு' தொடர்பான சீனாவின் தூதுக்குழுவினர், இந்த புலித்தோல் விற்பனை நடந்துவருவதை ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூறுகின்றனர். அதேநேரம், புலிகளின் எலும்புகளின் விற்பனை தடைசெ…
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை: ஆஸ்திரேலிய உணவு ஆய்வாளர் தகவல் கோப்புப் படம்: ஜீ.மூர்த்தி. தெருவோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் சுகாதார மற்றவை, உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்ற கருத்து தவறாகிவிடும்போல் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல உணவு வரலாற்று ஆய்வாளர் சார்மைன் ஓ பிரெய்ன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய உணவு வகைகளைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார். அதில், இந்திய சுற்றுலா விடுதி களில் வழங்கப்படும் உணவு களைக் காட்டிலும், சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை என்று அவர் கூறியிருக்கிறார். ‘தி பெங்குயின் புட் கைடு டூ இந்தியா’ என்ற புத்தகத்தை சார்மைன் ஒ பிரெய்ன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 408 views
-
-
ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை, அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.8 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோவில் இருந்து வட-கிழக்காக உள்ள நமி பகுதியில் பூமியின் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி அதிகால 4.22 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து கடலில் ஒரு மீற்றர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழலாம் என்பதால் புகுஷிமா அணு உலை அமைந்திருக்கும் கடலோரப் பகுதியில் உள்ள இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களுக்கு ‘சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவாட்டே நகர மக்களை உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ப…
-
- 0 replies
- 256 views
-
-
இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பலி காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. ராக்கெட் தாக்குதல்களில் எந்தவொரு இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை. பீய்ட் லாஹியா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று பயன்படுத்திவந்த கட்டடம் மீது நடந்துள்ள வான் தாக்குதல்களில் அங்கவீனச் சிறார்கள் இருவர் கொல்லப்…
-
- 14 replies
- 879 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்ற தமிழர்கள் தமிழகத்தில்! சுப்ரமணிய சுவாமியின் புதிய புரளி இது! [Friday 2014-07-11 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்தி போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி புதிய பரளி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது.. இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக எனக்குத் தெரியவந்…
-
- 0 replies
- 518 views
-
-
பாக்தாத்: அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. இஸ்லாமிய தேசம் சிரியா மற்றும் ஈராக்கில் தமது அமைப்பு கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து "இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாடும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக பக்தாதி அறிவிக்கப்பட்டும் இருக்கிறார். இவருக்கு கீழ்தான் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இருக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்…
-
- 1 reply
- 753 views
-
-
சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியைச் சேர்ந்த டெனிசன் உட்பட 15 பேர், 28.9.2010 முதல் கடற்கொள்ளகியர்களின் பிடியில் உள்ளனர் என்றும், அவர்களில் 8 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தின் உறுப்பினர் வெர்ஜில் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல் இவர்களை விடுவிக்க ஒன்பது கோடி இந்திய ரூபாய்கள் வரை அவர்கள் கோரியுள்ளதாக, டெனிசன் ஒரிரு தினங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடியபோ…
-
- 0 replies
- 480 views
-
-
புதுடெல்லி: 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் டி.வி., சோப், செருப்பு உள்ளிட்டவை மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய சிறப்பு அம்சங்கள் வருமாறு: * எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக அதிகரிப்பு. * வைரம், நவரத்தினக் கற்களின் விலை குறையும. * சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் உற்பத்தி வரி. * சோப்புகள் தயாரிப்புக்கான உற்பத்தி வரி குறைக்கப்படும். இதனால், …
-
- 0 replies
- 953 views
-