Jump to content

மிகத்துல்லியமாக படம் பிடிக்கவல்ல நவீன செய்மதியை சீனா ஏவியது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
china-longe-190814-saterlite-300-world.j

பூமியை மிகத்துல்லியமாக கலர் மற்றும் கிளாரிட்டியுடன் படம் பிடிக்கும் அதி நவீன துல்லியம் மிக்க செயற்கைக்கோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. காவோபெஃன்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வடக்கு சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள தையூன் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் உள்ள சிறிய பாகத்தை கூட மிகத் தெளிவாக துல்லியமான வண்ணத்துடன் படம் பிடித்து அனுப்பும் திறன் வாய்ந்தது இந்த செயற்கைகோள். இதற்காகவே தனியாக லாங் மார்ச்-4பி என்ற ராக்கெட் கேரியரும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து மிக அருகில் அதாவது வெறும் 1 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையும் கூட அதே வண்ணத்துடன் வி்ண்ணில் இருந்தே படம் பிடிக்கும்.

  

புதிதாக விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைகோளை புவியியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றம், விவசாய கணிப்புகள், பேரழிவு மேலாண்மை திட்டங்களுக்காக உபயோகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அறிவியல் மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைகோள்தான் சீனாவிலேயே மிகவும் அதி நவீன ஹை-டெபனீஷன் எர்த் அப்சர்வேஷன் சாட்டிலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115266&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.