Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவின் பிரபல பாடகி Rita MacNeil, காலமானார். அவருக்கு வயது 68. இவர் கனடா நாட்டு மக்களை தன்னுடைய இனிய குரலின் மூலம் கவர்ந்து, பல விருதுகளை வாங்கி குவித்தவர். இவர் சிறிது காலம் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும் அவருடைய உடல்நிலை சீரடையாத காரணத்தால் அவர் ஏப்ரல் 16ஆம் தேதி மாலையில் காலமானார். இவர் பாடிய 10 ஆல்பங்கள் தங்கம், மற்றும் பிளாட்டினம் விருதுகளை பெற்றுள்ளது. Neil and Catherine என்ற தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த Rita MacNeil,சிறுவயதில் மிகுந்த வறுமையில் வாடியவர். தன்னுடைய சுயவரலாறு புத்தகத்தில் தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து மிகவும் நெகிழ்வோடு எழுதியுள்ளார். தன்னுடைய 17வது வயதில்…

    • 0 replies
    • 355 views
  2. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் நகரில் திங்களன்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்டார். * பல்லாயிரக்கணக்கான பார்வை இழந்தவர்களுக்கு ஒளி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இயந்திரக் கண்கள். * கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களால் பிரிட்டனின் அஞ்சல் சேவையில் வேலைப்பளு அதிகரித்துள்ளது.

  3. கொறோணாவைரஸின் மூலத்தை அறியச் சென்ற உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு கொறோணாவைரஸின் மூலத்தைத் தேடி ஆராய்ச்சிக்காக வூஹானுக்குப் பயணம் செய்யவிருந்த உலக சுகாதார நிறுவன நிபுணர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. சீனாவின் இந் நடவடிக்கை தனக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக அவ்வமைப்பின் தலைவர் ரெட்றோஸ் அடனோம் கெப்றியேசுஸ் தெரிவித்துள்ளார். கொறோணாவைரஸ் எங்கிருந்து உருக்கொண்டது என்பதனை அறிவதற்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவைச் சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக இக்குழுவிலுள்ள இருவர் முதலில் சீனாவிற்குச் செல்வதற்காக சீனா, உலக சுகாதார நிறுவனம், இடைத் தரிப்பு நாடுகள் ஆகியவற்றிடையே போக்குவர…

  4. கினியாவில் எபோலா தொற்றினால் 2016 க்கு பின்னர் மரணம் பதிவு கினியாவில் எபோலா தொற்றினால் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கினியாவில் தொடங்கிய மேற்கு ஆபிரிக்காவில் பரவிய எபோலா தொற்றுநோயால் 2013 மற்றும் 2016 க்கு இடையில் 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிம்பன்சிகள், பழ வௌவால்கள் மற்றும் வன மான் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு மூலம் மனிதர்களுக்கு எபோலா தொற்று பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கினியாவில்-எபோலா-தொற்…

  5. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மகளிர்களுக்கு உரிமைகள் வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்புகள் அரைநிர்வாண போராட்டங்கள் நடப்பது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால் பெரும் கட்டுப்பாடுகள் உள்ள அரபுநாடுகளில் ஒன்றான துனிஷியாவில் முதல்முறையாக அரைநிர்வாண போராட்டத்தை பெண்கள் அமைப்பு ஒன்று நடத்தியதால் அரபுநாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்துளளன. துனிஷியா தலைநகரில் நேற்று மேலாடைகள் இன்றி திடீரென போராட்டம் நடத்திய மூன்று பெண்கள் பிடிபட்டனர். அவர்களில் இரண்டு பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜெர்மனியை சேர்ந்தவர் ஆவார். இவர்களின் அரைநிர்வாண போராட்டத்தால் துனிஷியா தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது http://www.thedipaar.com/new/news/news.php?id=6137…

  6. விசா தடை பட்டியலில் பாக். சேர்க்கப்படலாம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வருங்காலத்தில் பாகிஸ்தானியர் சேர்க்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை உயரதிகாரி ரீன்ஸ் ப்ரிபஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் கூறும்போது, “7 நாடு களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக முந்தைய ஒபாமா நிர்வாகமும் நாடாளு மன்றமும் கண்டறிந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு எதிராக முதற்கட்டமாக சோதனை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வருங் காலத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள…

  7. பொறுக்கிகளுக்கு மாணவிகளை விற்பனை செய்யும் ஸ்பான்சர் ஸ்காலர் இணையதளம்! ”உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள், எவ்வளவு அதிகமாக செயல்படத் தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகப் பணம் கல்விக் கட்டணமாக கொடுக்கப்படும்” என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம். அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்களை கொடுத்து மேற்படிப்புக்கு போக சிரமப்படும் மாணவியரை குறி வைத்து, படிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தை இலக்காக வைத்து அவர்களைச் சீரழிக்கும் இந்த மோசடி நடந்தது கனவான்களின் நாடான, முன்னாள் காலனிகளின் ஜமீன்தாரான இங்கிலாந்தில். இங்கிலாந்தின் இண்டிபெண்டன்ட் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகை…

  8. 'கருணாநிதி 90': சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஆஸ்திரிய அரசு. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி ஆஸ்திரிய அரசு அவரது உருவப்படமுள்ள தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது 90வது பிறந்தநாளை கடந்த மாதம் 3ம் தேதி கொண்டாடினார். இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடுமாறு ஆஸ்திரிய அரசுக்கு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டது ஆஸ்திரிய நாட்டு தபால் துறையின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து கருணாநிதியை கௌரவிக்கும் விதமாக சிறப்பு தபால்தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதில் கருண…

  9. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கைது..! ரஷ்ய பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 போராட்டக்காரர்களை, அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவில் ஊழல் பெருகி விட்டதாக கூறி, பிரதமர் பதவியிலிருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 800 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் ரஷ்யா முழுவதும் 99 நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட…

  10. ஸ்நோடனுக்கு தஞ்சம் வழங்கியது ரஷ்யா எட்வர்ட் ஸ்நோடனின் கடவுச் சீட்டு அமெரிக்காவிலிருந்து தலைமறைவான அந்நாட்டின் உளவுத்துறையின் செயல்திட்டத்தை அம்பலப்படுத்தியதாக கூறப்படும் எட்வர்ட் ஸ்நோடனுக்கு ரஷ்யாவில் தஞ்சம் கிடைத்துள்ளது. அவரது தஞ்சக் கோரிக்கைக்கான ரஷ்ய அரசின் ஆவணங்களைப் பெற்றபிறகு, இதுவரை மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருந்த ஸ்நோடன் அங்கிருந்து வெளியேறினார். ஊடகங்களின் பார்வையில் படாமல், ஸ்நோடன் விமான நிலயத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறிச் சென்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். அவர் எவ்வளவு நாட்கள் ரஷ்யாவில் இருப்பார் என்பது குறித்தோ, எங்கு சென்றார் என்பது குறித்தோ தகவல்களில்லை. ஆனால் அவர் பாதுகாப்பான இடத்திற்கு செல்கிறார் என்று அவரது வழக்கறிஞர் க…

  11. பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டதால், பதவியை இழந்த இங்கிலாந்து அமைச்சர்..! முழு உலகையுமே கொரோனா தொற்று ஆக்கிரமித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும், பின்பற்றப்பட்டுர் வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்திலும், சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். குறித்த சம்பவம், அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுகாதார விதிமுறைகள் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், மாட் ஹான்க் தனது உதவ…

  12. ஜெர்மனி – முனிச் நகர புகையிரதநிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் ஜெர்மனியின் முனிச் நகர் புகையிரதநிலையத்தில்; அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாதக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென புகையிரதநிலையத்தினுள் சென்ற குறித்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை புகையிரத நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு…

  13. ஐ.எஸ். அமைப்பின் மறைந்த தலைவர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரி கைது - ஈராக் பிரதமர் தெரிவிப்பு 2021-10-11 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரியை கைதுசெய்துள்ளதாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி திங்களன்று தெரிவித்துள்ளார். அபு பக்கர் அல்-பாக்தாதி 2019 இல் சிரியாவில் நடந்த சிறப்பு அமெரிக்க நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இறுதியில் அல் பாக்தாதியின் மரணத்தை இஸ்லாமிய அரசான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுதிபடுத்தியது. இந் நிலையில் தற்சமயம் கைதுசெய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள சாமி ஜாசிம் முஹம்மது அல்-ஜபுரி என்று நம்பப்படும் நபர், முன்பு இஸ்லாமிய அரசின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தமை தெரியவந்துள்ளது. …

  14. கண்காட்சிகள் நடத்தப்படும் கொடிசியா அரங்கில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்திருக்கிறது என பரவியுள்ள தகவல்,கோவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 9ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, கோவை மாவட்ட மக்களைப் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியது. அதேநேரத்தில், மிகக்குறுகிய கால இடைவெளியில் மாநாட்டை நடத்த திட்டமிட்டதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. வழக்கமாக, உலகத் தமிழ் மாநாடு நடக்கும் ஊர்களில் புதிய குடியிருப்புகள், வீதிகள், பாலங்கள் என அனைத்து விதமான கட்டமைப்பு வசதியும் செய்து தரப்படும். இதனால், அந்த நகரத்துக்கும், நகர மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.ஆனால், 4 மாத இடைவெளி…

  15. "மிஸ் ஆசியா" பசிபிக், அழகியின் மகுடம் மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல். மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்ற ஷ்ரிஷ்டி ராணாவுக்கு அளிக்கப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட மகுடம் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கொரியாவில் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரிஷ்டி ராணா(21) பட்டத்தை வென்றார். அவருக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட மகுடம் சூட்டப்பட்டது. அவர் கொரியாவில் இருந்து கிளம்பி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். ராணா தன்னுடைய மகுடத்திற்கு சுங்க வரி செலுத்தவில்லை என்று கூறி அதிகாரிகள் அந்த மகுடத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற பரிசுகளுக்கு வரி விலக்கு பெற மத்திய கலால் மற்றும் சுங்க வரி…

  16. பாரிஸ் RER B யின் தொடருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதால் இன்று திங்கட்கிழமை மாலை தொடருந்துப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ROBINSON தொடருந்து நிலையத்தில் தரித்து நின்ற Sceaux (Hauts-deSeine) இன் இறுதித் தரிப்பிடமாகக் கொண்ட தொடருந்து அனைவரும் இறங்கிய பின்னரே தீப்பிடித்துக் கொண்டது. இத்தீயானது 17h00 மணியளவில் பற்றிக் கொண்டது. தீப்பிடித்து ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்தின் இறுதியில் தீயை அணைத்தனர். அரை மணி நேரத்தின் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் 18h10 அளவில் இருந்து மெதுவாகப் போக்குவரத்து சகஜநிலைக்குத் திரும்பியது. இத் தீக்கான காரணம் குற்றச் செயல்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்தனர். ஒரு இளைஞர்…

  17. மெக்ஸிகோவில் கோர விபத்து: குறைந்தது 53பேர் உயிரிழப்பு- 20க்கும் மேற்பட்டோர் காயம்! மெக்ஸிகோவில் நெடுஞ்சாலையில் சரக்கு லொறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 53பேர் உயிரிழந்துள்ளனர். சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவிக்கும் போது லொறியில் 107 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது. சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ, காயமடைந்தவர்களில் சுமார் 21பேர் பலத்த காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெடரல் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து எடுக்க…

  18. கேரள தமிழர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழர்கள் சென்று அங்கு தரிசாக கிடந்த நிலங்களை எல்லாம் விளை நிலங்களாக மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக உழைத்தார்கள். அதன் விளைவாக கேரளாவின் எல்லைப் பகுதியில் கொங்கு நாட்டு மக்கள் அதிகளவில் குடியேறி விவசாயம் செய்தனர். கேரளாவின் விவசாயம் வளர்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் காரணமாக உள்ளனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நொண்டி காரணங்களை கூறி கொங்கு தமிழர்களை கேரளாவில் இருந்து துரத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில…

  19. ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு! ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். சிரியாவில் அமெரிக்க ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை இரவு சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், வடமேற்கு …

    • 5 replies
    • 430 views
  20. தமிழர்களுக்கு தமிழ் ஈன தலைவரின் மரியாதை.. செங்கல்பட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் நேற்று முன் தினம் இரவு 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வெளியான செய்தி ‘உண்மைக்கு புறம்பானது’ என்று கூறி தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குனர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார். தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக முதன் முதலாக பொறுப்பேற்ற ஒரு பெண் காவல் அதிகாரி என்ற பெருமை பெற்ற லத்திகா சரண் விடுத்துள்ள அறிக்கையின் கடைசி பத்தி இதுதான்: “காவல் துறையினர் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இச்சம்பவத்தில் இலங்கைத் தமிழர்கள் எவரும் கடு…

  21. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச எல்லையை திறக்கும் அவுஸ்ரேலியா! அவுஸ்ரேலியா தனது சர்வதேச எல்லையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் திறந்துள்ளது. இந்த செய்தி மகிழ்ச்சியான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது. கொவிட் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், உலகின் கடுமையான பயணத் தடைகளை அவுஸ்ரேலியா விதித்தது. எனினும், அவுஸ்ரேலியர்கள் மற்றும் சிலர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) சிட்னி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் விமானங்களில் வரத் தொடங்கினர். …

  22. “அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்” - ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஜோ பைடன் முழுமையான படை பலத்துடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்கப்படும் என்பதுடன் உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ரஷ்யாவின் அனைத்து விமானங்களும் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடைவிதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று செனட் சபையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், ‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய நட்பு நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு …

  23. ஆம் ஆத்மி கட்சியின் வித்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் செயல்படாது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கோபிநாத் முண்டே தெரிவித்துள்ளார். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெற்ற ஆதரவை பெறாது என்று அவர் கூறியுள்ளார். தானேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முண்டே செய்தியாளர்களிடம் பேசிய போது “ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெற்ற வெற்றி மற்றும் மக்களின் ஆதரவை நாட்டில் வேறு எந்த பகுதியிலும் பெற முடியாது” என்று கூறியுள்ளார். “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை. பாரதீய ஜனதா கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்துள்ளது”. பாரதீய ஜனதா கட்சி நாட்டின் மற்ற க…

  24. உக்ரேனின் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவர்கள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் வைத்தியசாலையின் கட்டிம் முழுமையாக சேதடைந்துள்ளதுள்ள நிலையில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் ரஷ்ய தாக்குதலின் விளைவாக, தாய்மார்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக டொனெட்ஸ்க் பிராந்திய பொஸார் கூறியுள்ளனர். இந் நிலையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மரியுபோலில் உள்ள வைத்தியசாலை மீதான வான்வழித் தாக்குதலைக் கண்டித்துள்ளார். https://www.virakesari.lk/ar…

  25. மன்மோகன்சிங்கிற்கு ஒபாமா அளித்த காஸ்ட்லி விருந்து! - செலவு 9.3 கோடி ரூபாவாம். [Thursday, 2014-02-13 18:47:35] இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 2009ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை கௌரவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா நவம்பர் 24ம் தேதி பெரும் செலவில் விருந்து ஒன்றை அளித்துள்ளார். இதற்கு செலவிடப்பட்ட தொகை இந்திய மதிப்பில் ரூ.9.3 கோடியாகும். இரவு உணவிற்காக மட்டும் ரூ.3.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்களுக்கு ஒபாமா அளித்த விருந்துகளில் இதுதான் காஸ்ட்லியான விருந்தாகும். இதன் பின்னர் 2010ல் மெக்சிகன் அதிபருக்கு ரூ.3.3 கோடிக்கும், 2011ல் சீன அதிபருக்கு ரூ.2.4 கோடிக்கும் ஒபாமா விருந்து அளித்துள்ளது தெரியவந்துள்ளது. htt…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.