உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
புதுடெல்லி: ஆப்ஸ் ( app's) சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது. வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற விவரம் தெரியவில்லை. இவ்வாறு வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தியவர்களுக்கு ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் போன்ற வெவ்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம், " தேர்…
-
- 0 replies
- 281 views
-
-
திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி வடக்கு சிரியாவில் குர்திஷ் மீதான எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவதற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். பென்ஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்கு இடையே அங்காராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும், துருக்கியின் எல்லையில் இருந்து குர்திஷ் போராளிகள் பின்வாங்க வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. இந்த நிலையில் குர்திஷ் தலைமையிலான போராளிகளை பின்வாங்கச் செய்வதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவிக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்! கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது வாக்காளர்களின் மனதில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, லிபரல் கட்சியைச் சேர்ந்த கார்னி, கனடாவின் பிரதமராகப் பதவியேற்ற ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இந்த தேர்தல் அழைப்பு வந்துள்ளது. கார்னி இப்போது கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை எதிர்கொள்ள வேண்டும், அ…
-
- 2 replies
- 299 views
- 1 follower
-
-
திடீர் மின் தடையால் கியூபா இருளில் மூழ்கியது ஹவானா, கியூபாவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின. கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு கியூபா உள்பட நாட்டின் பல மாகாணங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இது தேசிய மின்சாரத் துறையின் தோல்வி. இதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என கியூபா எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மின் தடையைத் தொடர்ந்து ஹவானா உள்பட பல மாகாணங்களில் ஜெனரேட்டர்கள் உள்ள இடங்கள் அன்றி மற்ற இடங்கள் இருளாக உள்ளன. இணைய சேவையும் நாடு முழுக்க பாதிப்படைந…
-
- 1 reply
- 240 views
-
-
புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக தினமலர் நாளிதழ் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள ராஜீவ் சிலையில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட இலங்கை அதிபரின் உருவ பொம்மையை சிலர் கடந்த 19ம் தேதி கட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். ராஜீவ் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் புதுவையை அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த ராமசாமி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.…
-
- 6 replies
- 4.6k views
-
-
திடுக்கிடும் ரகசியங்களை அம்பலமாக்கிய புடின்: மிரளவைக்கும் ஆவணப்படம் (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:31.24 பி.ப GMT ] கிரிமியாவை கைப்பற்றியது தொடர்பான ரகசியங்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் தற்போது வெளியிட்டுள்ளார். உக்ரைனிடமிருந்து கிரிமியா மாகாணத்தை பிரித்து தங்களுடன் இணைத்துக் கொள்ள கடந்தாண்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் போரை நடத்தி வந்தார். இதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில் கிரிமியாவை கைப்பற்றியது குறித்து தற்போது புடின் ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, கிரிமியாவை தங்கள் வசம் கொண்டு வருவதற்காக தான், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் பாதுகாப்பு …
-
- 1 reply
- 420 views
-
-
சேதுக்கால்வாய் உருவாக்கப்படும் கடற்பகுதி சேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று சில இந்து மத அமைப்புக்களாலும் அழைக்கப்படும் மணல்திட்டுக்களை குறுக்குவெட்டாக கடந்து செல்கிறது. இப்படி சேதுக்கால்வாய் செல்லும் வழியில் தடையாக இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றுவது, ராமர் பாலத்தை அகற்றி அழிப்பதாகவும், இது இந்துக்களின் மத உணர்வுகளை புண…
-
- 0 replies
- 612 views
-
-
திட்டமிட்டப்படி டிரம்ப்- புதின் பேச்சுவார்த்தை நடைபெறும்: அமெரிக்கா பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இந்த பேச்சுவார்த்தை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்களன்று நடைபெறும். "பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்" என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக வெள்ளியன்று அமெரிக்…
-
- 0 replies
- 363 views
-
-
திண்டுக்கல் ‘திடுக்’ சாதி வெறியில் பாதிரியார்? ‘‘தலித் கிறிஸ்தவர்கள் மீது சாதி வெறியைக் காட்டுகிறார், தேவாலய தலித் ஊழியரை சாதியைச் சொல்லி திட்டுகிறார்...”-----& பாதிரியார் பீட்டர் ராஜ் என்பவர் மீது இப்படியரு அதிர்ச்சிப் புகாரை அள்ளிவீசுகிறார்கள், திண்டுக்கல் நகர்ப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில தலித் கிறிஸ்தவர்கள். திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் 80 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத் துடன் வீற்றிருக்கிறது, தூய வளனார் பேராலயம். பீட்டர் ராஜ் இந்தப் பேராலயத்தின் பங்கு பாதிரியார். இவருக்கெதிராக கச்சைகட்டி நிற்கும் தலித் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், கடந்த 18ம் தேதி பேராலயத்தின் திருப்பலி பூசையை நிறுத்தவும், தேவாலய கதவுகளை மூடவும் எத்தனித்திருக்கிறார்கள். மற்ற …
-
- 0 replies
- 1.2k views
-
-
திண்டுக்கல் அகதிகள் முகாமில் காவல்துறையினர் கொலைவெறித்தாக்குதல் தமிழ்னாட்டின் மத்திய மாவட்டமான திண்டுக்கல்லில் இருந்து 5 கிலோ மிற்றர் தொலைவில் உள்ளது தோட்டனூத்து இலங்கை(!) அகதிகள் முகாம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஓFFஏற் என்கிற இந்திய கைக்கூலிகளின் காங்காணி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒருவர் ( இவரின் வேலையே ஒவ்வொருவரை பற்றியும் உளவுப்பிரிவு போலிசாரிடம் போட்டுக்குடுப்பதுதானாம்) முகாமில் தனியே இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து தகாத முறையில் நடவ முயற்சித்துள்ளார். அப்பெண்ணின் குரல் கேட்டு முகாமிலிருந்த இளைஞர்கள் அவருக்கு ' நல்ல விருந்து' குடுத்து விரட்டி அடித்துள்ளனர்.இந்நிலையில் தங்களின் இம்பார்மென்ட் ஒருவர் தாக்கபட்டது குறித்து கடும்கோபத்திலிருந்த உளவுப்பிரிவு …
-
- 17 replies
- 2.6k views
-
-
திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு இந்த வெங்காயங்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்க! லண்டன்: கெட்ட மனசுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அந்த மனசுக்கு யாருமே நினைக்க முடியாத அளவுக்கு வில்லத்தனமா யோசிக்கத் தோன்றும். அவர்களை ஊர் பக்கத்தில் வினயம் பிடித்தவர்கள் என்று "செல்லமாக" கூப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.. இதோ லண்டனில் கூட உள்ளனர். இந்த உலகமே நமக்குச் சொந்தம்தான். ஆனால் மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை குரோதம், சின்னப்புத்தி, துரோகம், போட்டி, பொறாமை. லண்டனில் வீடு இல்லாதவர்கள் வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக தங்களது வீட்டின் முன்பு காலியாக உள்ள இடங்களை வினோதமான முறையில் டிசைன் செய்து மாற்றி நம்பியார்த்தனமாக நடந்து கொள்கிறார்கள…
-
- 11 replies
- 1.3k views
-
-
லுங்கியால் கட்டி அகதி சித்ரவதை சலுகைகளில் கைவைக்கும் அதிகாரிகள்* நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு? தமிழகத்துக்கு வரும் இலங்கை அகதிகளிடம் நடக்கும்மனித உரிமை மீறல் அவலங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1983 க்கு பிறகு இலங்கையில் மீண்டும் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் சண்டை துவங்கும் என்பதால் உயிரை பாதுகாத்துக்கொள்ள அகதிகளாக தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகம் வரும் இவர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்திக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். தனுஷ்கோடி வந்த அகதிகளிடம் கடற்படை வீரர் ஒருவர் வரம்பு மீறி நடந்ததோடு அமெரிக்க டாலர்களையும் பறித்து கொண்டார். அகதி ,புலனாய்வுதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்த கடற்…
-
- 13 replies
- 3.4k views
-
-
தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்! 20 ரூம்கள்... 21 எம்.எல்.ஏ-க்கள் ‘முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு புதுச்சேரி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டுக்குக் குடிபெயர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஏறிக் கொண்டிருந்தது; இந்த வாரம் இறங்க ஆரம்பித்திருக்கிறது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு அ.தி.மு.க-வுக்குள் கலகலப்பைப் கூட்டினாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கலகத்தை ஏற்படுத்தினார்கள். துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொண்டு ‘தர்மயுத்தத்தை’ முடிவுக்குக் கொண்டு வந்தார் பன்னீர். ஆனால், ஆட்சியே ஆட்டம் காண ஆரம்பித்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தினர். ஆளுநரைச் சந்தித்த அவர்கள், …
-
- 0 replies
- 421 views
-
-
தினத்தந்தியில் ஒரு செய்தி வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மை தெரியாத படியால் இணைக்கவில்லை
-
- 3 replies
- 1.7k views
-
-
ஒரு பக்கம் தமிழனத்துக்கு ஆதரவான கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடும் தினமணியின் இரட்டை வேடம்... http://www.tamilanexpress.com/cover/cover.asp
-
- 8 replies
- 1.9k views
-
-
தினமலரின் காசுவெறி – காமவெறி! ஓரிரு நாட்களாக தமிழ் ஊடகங்களுக்கு கிடைத்த சென்சேஷன் ஜாக்பாட்டாக அந்த கேரளத்துப் பெண் மாறிவிட்டார். செய்திகளை நீங்களும் படித்திருக்கலாம். கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன. இது குறித்த அனைத்து செய்திகளையும் படித்துப் பார்க்கும் போது தெரிய வருவது என்ன? நம்பிக்கை மோசடி, பணத் திருட்டு, ஜேப்படி என்ற வகையினங்களுக்குள் மட்டும் வரும் இது ஒரு குற்றச் செய்தி மட்டுமே. அந்தப் பெண் சிலரையோ இல்லை பலரையோ – எண்ணிக்கை ஊகங்களாகவும் கிளுகிளுப்புக்காகவும் பெரிது படுத்தப்படலாம் – திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி பணம், நகைகளை அபகரித்துக் கொண்…
-
- 1 reply
- 2.3k views
-
-
தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என…
-
- 3 replies
- 2.1k views
-
-
இங்கிலாந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர், வித்தியாசமான நியுரோலாஜிக்கல் நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குகிறார். வாழ்க்கையின் பெரும்பாகத்திலேயே தூக்கத்திலேயே கழிப்பதால், அவருடைய தந்தை மிகுந்த கவலை கொண்டுள்ளார். Shannon Magee என்ற 17 வயது பெண், இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மிகவும் அரிதான நோயான நியூரோலாஜிக்கல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை தூக்கத்திலேயே கழிக்கிறார். இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குவதாகவும் சில சமயங்களில் அதைவிட அதிகமாகவும் தூங்குவதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். தூக்கத்தின்போது, அவர் மிகவும் உரத்த குரலில் பாப் பாடல்களை பாடுவதாகவும், சில சமயங்களில் நிர்…
-
- 0 replies
- 464 views
-
-
இந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால். இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிஷால் 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவனது தந்தை முதன் முதலாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்து அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து அவன் தினமும் 2 பாக்கெட் சிகரெட் பிடிக்க தொடங்கினான். அதிலும், அவனுக்கு திருப்தி ஏற்படாததால் தினமும் 40 சிகரெட் வரை பிடித்து வந்தான். இந்த செய்தி வெளி யானதும் இந்தோனேஷியாவில் புகையிலையை பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகம் என தெரிய வந்தது. சிகரெட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரிஷாலை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க இந…
-
- 0 replies
- 588 views
-
-
திபிலிசியில் வௌ்ளம்: 14 பேர் பலி, தப்பிச்சென்ற சிங்கம் ஒருவரைக் கொன்றுள்ளது ஜோர்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் உள்ள வெர் ஆற்றில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் வரையில் காணாமற்போயுள்ளனர். இந்நிலையில், திபிலிசியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றிலிருந்த மிருகங்கள் பலவும் வௌ்ளம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அங்கிருந்த சில மிருகங்கள் தப்பித்து நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளன. அவ்வாறு தப்பித்த சிங்கம் ஒன்று ஒருவரைக் கொன்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 விலங்குகளில் பாதிக்கும் மேலான பறவைகளும் மீன்களும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சிங்கம், புலி மற்றும் நீர்யானை போன்ற …
-
- 0 replies
- 464 views
-
-
சீனாவின் தென்பகுதியில் இரு திபெத்திய பிக்குமார் தமக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்ததாக திபெத்திய செயற்பாட்டு அமைப்பு ஒன்று கூறியுள்ளது. திபெத்திய பீடபூமிக்கு அருகே சிச்சுவான் மாகாணத்தில் தமது மடாலயத்தில் உள்ள மண்டபத்தில் அவர்கள் இதனைச் செய்ததாக லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும், திபெத்திய விடுதலைக்கான அமைப்பு கூறியுள்ளது. அண்மைய வருடங்களில் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளின் குவியமாக இந்த மடாலயம் திகழ்ந்துவருகிறது. அந்தப் பிராந்தியத்தில் சீனா ஒரு பெரும் பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டது. சீனாவின் அடக்கு முறை ஆட்சிக்கு எதிரான தமது போராட்டமாக 2011 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கும் அதிகமான திபெத்திய பிக்குகள் தீக்குளித்துள்ளார்கள். http://www.bbc.co.uk/tamil/global/201…
-
- 3 replies
- 325 views
-
-
திபெத் அருகே உலகிலேயே மிகவும் உயரமான விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இமயமலைப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக டாவ்செங் யாடிங் என்ற இந்த விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கார்ஜி திபெத் தன்னாட்சி பகுதியின் அதிகார எல்லையில் 4411 மீட்டர் உயர விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது. இது திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் காம்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள பாங்டா விமான நிலையத்தை விட உயரமானதாகும். அந்த விமான நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 4 334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் இதுவரை கோங்க்கார் லாஸ பாங்டா ஸிக…
-
- 1 reply
- 510 views
-
-
திபெத் பகுதியில் நவீன ஆயுதங்கள் சோதிக்கும் சீன இராணுவம்! சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் சீன இராணுவம் முன்னெடுத்துவரும் பயிற்சியின்போது, நவீன ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீன இராணுவத்தின் திபெத் படைப் பிரிவானது, புத்தாண்டு பயிற்சியைத் தொடங்கியது. இதில், ஹெலிகொப்டர்கள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திபெத் பீடபூமியில் செயற்படக் கூடிய வகையிலான நவீன பீரங்கிகளும் பயிற்சியின்போது சோதித்துப் பார்க்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 541 views
-
-
பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு திபெத். திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு என்பது திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள், இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு என உலக இனவரைவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமயத்தின் தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமா ஆவார். ஆனால் பேராசை கொண்ட சீனா, இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் இருந்ததால், அதனை தனதாக்கிக் கொள்வதன் மூலம், இந்தியாவை,…
-
- 0 replies
- 3.8k views
-
-
"An interesting discussion with the newly elected priminister of govt in exile of Tibet" http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/tibet-a-forgotten-cause/217266?hp Tibet: A forgotten cause?www.ndtv.com At a time when there has been an increase in friction between India and China over the issue of the Dalai Lama addressing a Buddhist conference in New Delhi - friction that even led to the postponement of scheduled boundary talks between the two countries - we ask Lobsang Sangay, the Tibetan Prime Minister.
-
- 0 replies
- 756 views
-