Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வரும் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக ஷனான் கெஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெக்சாஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, விஷத்தை வைத்ததாக ஒப்புக்கொண்ட நடிகை, ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்றும் வாதிட்ட…

  2. பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீஃப்புக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது... "பாகிஸ்தான் அரசுடன் இணைந்து, இணக்கமாக செயல்பட தயாராக உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேலும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கராச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த கடிதத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீஃப், தனது இந்தியப் பயணம் திருப்திகரமாக இருந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இரு நாடுகளுக்கு இட…

  3. காஸா மீது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் முற்றியுள்ளது. காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், காஸாவில் 208-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்போரை நிறுத்துவதற்காக எகிப்து மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனான் மற்றும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகின்றனர்…

  4. நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என, அவருக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விசாரித்து வரும் கர்நாடக பொலிசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையேற்ற ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நித்யானந்தா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ஆண்மை பரிசோதனை செய்யக்கூடாது என்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்ம் கேட்டுக்கொண்டார். எனவே செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் இதுகுறித…

  5. ஜெய்ப்பூர் :ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், 'அட்சய பாத்திரா' என்ற அரசு சார்பற்ற அமைப்பால் நடத்தப்படும், பிரமாண்ட சமையலறைக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், நேற்று வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, எப்படி உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன். இவர், 'கிளின்டன் அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் கிளைகள், பல நாடுகளில் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளை கண்டறிவதற்காக, ஆசிய, பசிபிக் நாடுகளுக்கு, தற்போது பில் கிளின்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தற்போது, இந்தியா வந்துள்ளார். பின், வியட்நாம், இந்தோனேச…

    • 0 replies
    • 327 views
  6. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சர்வதேச விமானம் நிலையம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரொக்கெட் உந்து கணைகள் மற்றும் தன்னியக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடொன்றை ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனைத்து ஆயுததாரிகளும் வேறு நகரங்களை நோக்கி துரத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் குறிப்பிடுகின்றன. எனினும் இந்தத் தாக்குதலில் விமான நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என ஆப்கான் உள்விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுhttp://www.pathivu.com/news/32499/57//d,article_full.aspx

    • 0 replies
    • 229 views
  7. மெக்ஸிக்கோவின் மிசோகன் மாநிலத்தில் சமோரா நகரிலுள்ள சிறுவர்கள் பராமரிப்பு நிலையமொன்றில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 க்கு மேற்பட்ட சிறுவர்களை அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேற்படி, பிக் பமிலி சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளரான ரோஸா டெல்கார்மென் வொர்டுஸ்கோவும் 8 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 271 சிறுவர்களும் 174 சிறுமிகளும் 3 வயதுக்கு கீழ்ப்பட்ட 6 பாலகர்களும் உள்ளடங்குகின்றனர். அதேசமயம் மேற்படி பிராந்தியத்தில் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட 138 வயது வந்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி, இல்லத்திலுள்ள தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் சினமடைந்த பெற்றோ…

  8. காஸாவில் இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இனப்படுகொலை நிகழ்த்தி வரும் இஸ்ரேலை கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் காஸா மீதான இஸ்ரேல் கொடுந்தாக்குதலை நடத்தி இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் விவகாரம் இன்று எதிரொலித்தது. காஸா பகுதி மீதான இஸ்ரேலின் கொடுந்தாக்குதலை கண்டித்தும் ஐ.நா. சபையில் காஸா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல், மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், மஜ்லிஸ்…

  9. லிபி­யாவின் தலை­நகர் திரி­போ­லி­யி­லுள்ள பிர­தான சர்­வ­தேச விமான நிலை­யத்தின் மீது திங்­கட்­கி­ழமை மாலை புதிய ஏவு­கணைத் தாக்­கு­த­லொன்று நடத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி விமான நிலையம் மூடப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த மோதல்கள் இடம்­பெற்­ற­மைக்கு மறு­நாளே இந்த ஏவு­கணைத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. இந்த தாக்­கு­தலில் குறைந்­தது ஒருவர் உயி­ரி­ழந்து 6 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் 12 விமா­னங்கள் சேத­ம­டைந்­துள்­ளன. இந்­நி­லையில்இ நாட்டின் பாது­காப்பை மீள நிலை­நி­றுத்­து­வ­தற்கு சர்­வ­தேச படை­களின் உத­வியை நாடு­வ­தற்கு லிபிய அர­சாங்கம் எதிர்­பார்த்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்கப் பேச்­சாளர் ஒருவர் கூறினார். வெளி உல­கத்­திற்­கான லிபி­யாவின் பிர­தான போக்­கு­வ­ரத்த…

  10. இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி போர்ட்டலேசா, ஜூலை 16- ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இதே எண்ணம் இருந்து வந்த நிலையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க இன்று முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும…

  11. காஸா நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம் பலஸ்தீன தலைவருடன் ஜனாதிபதி தொலைபேசியில் உரையாடல் பலஸ்தீனில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு ள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, பலஸ்தீனின் பிந்திய நிலவரங்கள் குறித்து அறிந்துகொண்டதுடன், உயிரிழந்த மக்களுக்குத் தனது ஆழ்ந்த கவலையையும் வெளியி ட்டார். காஸா பகுதியில் பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழ ப்புகள் குறித்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விளக்கமளித்தார். உயிரிழந்த மக்களுக்கு அனுதாபங்களைத் தெரி விப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறினார். காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களா…

    • 1 reply
    • 290 views
  12. இங்கிலாந்து தேவாலயங்ளில் பெண்கள் பிஷப் ஆக அனுமதி! [Tuesday 2014-07-15 09:00] இங்கிலாந்து தேவாலயங்ளில் இதுவரை பெண்கள் பிஷப்களாக நியமிக்கப்பட்டதில்லை. ஆனால், பெண் களை பிஷப்களாக நியமிக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடப் பட்டு வந்தது. இது தொடர்பாக, 'சர்ச் ஆப் இங்கிலாந்து' என அழைக்கப்படும் திருச்சபைகளில் கடந்த 2012ல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பெண் பிஷப் நியமனம் தொடர்பாக, சர்ச் ஆப் இங்கிலாந்தின் 3 திருச்சபைகளில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. யோர்க் நகரில் நடந்த திருச்சபைகளின் பொது குழு கூட்டத்தில், 'பெண்கள் பிஷப் ஆக தடையில்லை' என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிஷப்கள் சபையில், தீர்மானத்துக்கு ஆதரவாக 37 ஓட்டுக…

  13. பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். [Tuesday 2014-07-15 09:00] அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலையொட்டி பிரதமர் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளார். இதன் எதிரொலியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஹேக் விலகியுள்ளார். இது குறித்து ஹேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹேக்கின் விலகலையடுத்து தற்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் பிலிப் ஹம்மோன்ட் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=113162&category=WorldNews&language=tamil

  14. உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – கறுப்பின் நிறம் சாய் ராம் அந்தக் குடும்பத்திற்கு அது ஒரு விசேஷ சந்திப்பு. கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள், தம்பதியரின் தாய் தந்தையர் என எல்லாரும் மதிய விருந்திற்காக குழமியிருந்தார்கள். வெளியே மதிய வெயில் பழுக்க தொடங்கியிருந்தது. சிரிப்பும் சந்தோஷமுமாய் மதிய விருந்து தொடங்கியது. என்ன விசேஷம்? அந்தக் கணவன் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பது தான் விசேஷம். இரண்டாம் உலகப் போரிலே ராணுவ வீரராய் பணியாற்றி விட்டு போர் முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறார் அவர். பெயர் வெயின் மில்லர். வயது 27. இரண்டாம் உலகப் போரில் இருந்து திரும்பியிருப்பது மட்டும் விசேஷமல்ல, அந்தப் போரிலே வெயின் மில்லர் எடுத்த புகைப்படங்கள் பெரும் புகழைப் …

  15. கோட்சே கோல் போட்டார்! - காதலி முத்தமிட்டார்! கோட்சேவை விட அவரது காதலியை தேடுகிறது உலகம்! [Tuesday 2014-07-15 00:00] ஜெர்மனிக்கு 4வது உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள அந்த அணியின் ஸ்டார் வீரர் மரியோ கோட்சே, போட்டியின் முடிவில் தனது காதலிக்கு நன்றி தெரிவித்திருந்தார். சும்மா சொல்லக் கூடாது, கோட்சேவின் முழு எனர்ஜிக்கும் அவரது காதலி ஆன் காத்ரின் பிரோமல் விடா 100 சதவீதம் பொருத்தமானவராகவே இருக்கிறார். இப்போது எல்லோரும் கோட்சேவை விட்டு விட்டு அவரது காதலி பற்றித்தான் தேடித் தேடிப் படிக்கிறார்கள்.. படம் பார்க்கிறார்கள்! கோட்சேவின் காதலியான ஆன், ஒரு மாடல் அழகி ஆவார். சாதாரண மாடல் அழகி அல்ல, கவர்ச்சிகரமான மாடல் அழகி. இவரும் கோட்ச…

    • 3 replies
    • 642 views
  16. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார் நாடின் கார்டிமர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது இல்லத்தில், தூங்கிக் கொண்டிருந்த போது கார்டிமர் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கார்டிமர் 1991-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கவுரவிக் கப்பட்டார். கார்டிமர் 15 புதினங்களையும், ஏராளமான சிறுகதைகள், புனைவுகளற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. இனவெறிக்கு எதிரான போராளி தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவை சார்ந்தே அவர் அதிகம் எழ…

  17. 'ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா' என்று இவ்வம்மையாரையும், அவர் பின்னில் இருக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கையும் ஆவேசமாகச் சாடும் இவ்வேளையில், இந்நிகழ்வில் வெறித்தனமான பற்றோடு பங்கேற்று, வரலாறுக் காணாத வகையில் விழாவைச் சிறப்பாக அரங்கேற்றிய இப்பாழும் மக்களின் மீதும் கொஞ்சம் சாடல்களை வீசுவது தவறாகிவிடுமா? வாழ்க நம் மக்கள்! வளர்க நம் கல்விக்கலாச்சாரம்! fb.

    • 0 replies
    • 512 views
  18. அமெரிக்க ராணுவ வீரர்களின் சுகபோக வாழ்க்கைக்காக தென் கொரிய அரசால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், தங்களுக்கு உரிய நஷ்ட ஈடும், இறுதிவரை அரசின் அரவணைப்பும் தேவை என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். 1960-களில், அப்பா அடிக்கிறார் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே இளம் பெண்ணாக வந்த சோ மியுங் ஜா (76), பாலியல் தொழில் தரகர்களிடம் சிக்கினார். அமெரிக்க வீரர்களுக்காக நடத்தப்பட்ட பாலியல் தொழில் விடுதியில் விற்கப்பட்டார். இரண்டாவது உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட தென் கொரிய மகளிரைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதற்காக தங்கள் நாட்டுக்கு உரிய நஷ்டஈட்டைத் தர வேண்டும் என்று தென் கொரிய அரசு ஜப்பான் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில், தென் கொரிய அரசு மீதே முன்னாள்…

  19. நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜுலை 13 ஆம் தேதி மாலை நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா 144 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இடது புற என்ஜினில் தீ பற்றியதாக விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் நியூ ஜெர்சி விமானநிலையத்தை வந்தடைந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்டதாக வெளிவந்த…

  20. 7-வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல். | படம்: ஏ.பி. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. ஏழாவது நாளை எட்டியுள்ள வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து காஸா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தெற்கு காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தந்தை, மகன் உள்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ரஃபான், கான் யூனிஸ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள…

    • 0 replies
    • 463 views
  21. "நமக்­கான விடிவு காலம் நெருங்­கு­கி­றது. இறைத்­தூ­தரின் தீர்க்­க­த­ரி­சனம் நிஜ­மா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இஸ்­லா­மிய கிலா­பத்­துக்கள் உலகம் முழு­வதும் நிலை­நாட்டச் செய்யும் கறுப்புப் படை உத­ய­மா­கி­விட்­டது. ஜிஹாதில் பங்­கெ­டுக்கும் தருணம் இதுவே" என சில நாடு­க­ளி­லுள்ள சில இஸ்­லா­மி­யர்கள் தமது உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­து­விட்­டனர். இந்த திடீர் உணர்ச்­சி­வ­சத்­துக்கு காரணம் என்­ன­வென்றால் உல­கமே தற்­போது பேசிக்­கொண்­டி­ருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் இஸ்­லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் சிரியா அல்­லது இஸ்­லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் லெவன்ட் (ஐ.எஸ்.ஐ.எல்) எனும் இஸ்­லா­மிய கிளர்ச்சி இயக்­கமே. கடந்த மாதம் தான் கைப்­பற்­றிய ஈராக் படை­யினர் பலரை ஐ.எஸ்.ஐ.எஸ். அ…

    • 3 replies
    • 1.8k views
  22. வேட்டி' விவகாரம்: தமிழக அரசு தலையிட தலைவர்கள் வலியுறுத்தல் வேட்டி அணிந்து சென்ற நீதிபதி, வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் தலைவர்கள், பொது நிகழ்ச்சிகளில் ஆடை கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.எஸ்.அருணாசலம் எழுதிய நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் சிவப்பு விளக்கு பொருத்திய தனது அலுவலக காரில் சென்றுள்ளார். வேட்டி அணிந்து சென்றிருந்த அவரை விழா அரங்கு…

  23. இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது. மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மி…

  24. புலி அருகிவரும் உயிரினங்களில் ஒன்று புலித்தோல் விற்பனையை அனுமதிக்கின்றமைமைய சீனா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் புலிகளின் தோல்களை வணிக நோக்கத்திற்காக விற்கும் நடவடிக்கையை சீனா அனுமதிப்பதாக குற்றம்சாட்டும் முக்கிய அறிக்கையொன்று ஜெனீவாவில் நடந்துவரும் இந்த சந்திப்பின்போது வெளியிடப்பட்டுள்ளது. சைட்ஸ் என்ற 'அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்பாடு' தொடர்பான சீனாவின் தூதுக்குழுவினர், இந்த புலித்தோல் விற்பனை நடந்துவருவதை ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூறுகின்றனர். அதேநேரம், புலிகளின் எலும்புகளின் விற்பனை தடைசெ…

    • 0 replies
    • 331 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.