உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
ஒரு மாபெரும் வெற்றிச் செய்தி! “தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்! தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. “இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது. அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண…
-
- 4 replies
- 1.1k views
-
-
திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிமொழி வருமான வரி செலுத்துபவர் என்பதால் அவருக்கு சிறை அறையில் மின்விசிறி, டிவி, கட்டில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நேற்று சிபிஐ நீதிபதி ஷைனி, கனிமொழியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவிட்டபோது கனிமொழி அழுது விட்டார். அருகில் இருந்த தனது கணவர் அரவிந்தனின் தோள் மீது சாய்ந்து அவர் அழுதார். இதைப் பார்த்த…
-
- 0 replies
- 733 views
-
-
தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! (வீடியோ) சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கியது. அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 222 பயணிகளும் 19 ஊழியர்களும் இருந்தனர். வானத்தில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விமான நிலையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். தொடர்ந்து விமானம் மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்கு திரும்பியது.…
-
- 0 replies
- 669 views
-
-
தீ விபத்தில் 52 பேர் பலி : பலர் காயம் - பங்களாதேஷில் சம்பவம் ! பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளுது. தீ விபத்து இடம்பெற்ற தொழிற்சாலையில், இரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீயையடுத்து குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களில் 44 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்த 18 தீயணைப்பு இயந்…
-
- 0 replies
- 591 views
-
-
தீக்குளிக்கத் தூண்டியதாக திபெத் புத்த துறவிக்கு சீனாவில் மரணதண்டனை! [Friday, 2013-02-01 08:11:33] சீனாவில் திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது உறவினருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வரும் திபெத்தில் இளைஞர்களை தீக்குளிக்க தூண்டியதான குற்றச்சாட்டில் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சிச்சுவான் மாகாண நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 8 பேரை தீக்குளிக்கத் தூண்டியுள்ளனர். அதில் 3 பேர் இறந்துவிட்டனர். 5 பேர் காப்பாற்றப்பட்டனர். எனவே முக்கியக் குற்றவாளியான புத்தத் துறவி லோராங்க் கோன்சோக்குக்கு …
-
- 0 replies
- 240 views
-
-
தீக்குழம்பை வெளியிட்டுவரும் எட்னா எரிமலை! ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா எரிமலையில் தொடர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டு தற்போது அதிலிருந்து தீக்குழம்பு வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் இரவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு பள்ளத்தாக்கில் சிவப்பு நிறத்தில் எரிமலை குழம்பு வெளியாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. எரிமலை வெடிப்பு காரணமாக எட்னாவின் தென்கிழக்கு பள்ளத்தாக்கில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதன் எதிரொலியாக திங்கட்கிழமை சுமார் 130 நில அதிர்வுகள் பதிவாகியதாகவும், அதில் மிகவும் சக்திவாய்ந்ததாக 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாகவும் இத்தாலியின் வானிலை மற்றும் எரிமலை ஆய்வு மையம் தெரிவித்தது. எரிமல…
-
- 0 replies
- 752 views
-
-
‘தினமணி’க்கு பதிலடி! தீட்சதப் பார்ப்பனர்கள் சுத்தத் தமிழர்களா?விடுதலை இராசேந்திரன் இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: “தமிழின் பெயரால் - தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லை வாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு” என்கிறது அக்கட்டுரை! அதாவது - தில்லை வாழ் அந்தணர்களை தனிமைப்படுத்திவிடாமல், அவர்களுக்குப் பின்னால், இறை நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அணி திரட்ட முயற்சிக்கி…
-
- 1 reply
- 1.9k views
-
-
மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் 15 அடியை இன்று காலை அதிகாரிகள் இடித்தனர். அப்பகுதியில் தலித் மக்களுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தபுரம், உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் 21வது நூற்றாண்டில் பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கிராமம் மட்டும் கற்காலத்தை நோக்கி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 1989ம் ஆண்டு இந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், இன்னொரு வகுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிக் கலவரத்தில் 8 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டன. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது பகுதிக்குள் வருவதைத் தடுக்க இன்னொரு சமூகத்தினர் ஊரில் சுவர் எழுப்பி, தங்களது ப…
-
- 5 replies
- 2.3k views
-
-
நாஞ்சில் நாடன் ஈழத்தமிழ் மக்கள் பற்றி 'தீதும் நன்றும்' எனும் பக்கத்தில் விகடனில் எழுதிய குறிப்பு 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!' என்றான் பாரதி-தாசன். 'சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்!' என்றான் வேறொரு கவிஞன். காரணம் என்னவெனில், தமிழ் தொன்மையான மொழி, ஈடு இணை-அற்ற இலக்கியங்களைக்கொண்ட மொழி. எல்லாவற்றுக்கும் ஆதாரமான அது நமது தாய்மொழி. ஆனால், தாய்மொழியாம் தமிழ் பேசுபவன் பாடு, இன்று 'தாளம் படுமோ, தறி படுமோ' என்றிருக்-கிறது. நமது தாய்மொழி பேசும் ஈழத்துத் தமிழர் இன்று அனுபவிக்கும், மனித இனம் இதுவரை காணாத வன்கொடுமைகள், நினைத்துப் பார்க்கவே அச்சம் ஏற்படுத்துவது. நமது தாய்மொழிக்கு, தமிழ்நாட்டைச் ச…
-
- 0 replies
- 1.5k views
-
-
தீபாவளியை முன்னிட்டு 42 இந்திய மீனவர்களுக்கு விடுதலை.! தீபாவளியை முன்னிட்டு கைது செய்யப்பட்ட 42 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கின்றது. இந்தியா-, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சுமுகமான பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களைச்சேர்ந்த மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரு நாடுகளுக்கிடையிலுள்ள நல்லுறவை முன்னிட்டு எதிர்வரும் தீபா வளிக்கு முன்பத…
-
- 0 replies
- 260 views
-
-
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், வழக்கமான தனது அதிகாரபூர்வ தீபாவளி விருந்தை அளித்து, தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தில், தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிய டேவிட் கேமரூன், இங்கிலாந்தில் வாழும் 8 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை நல்கியுள்ள ஹிந்துக்களுக்கு தீபங்களின் விழாவான இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், நமது நாட்டின் வளர்ச்சியில் தோள்கொடுத்துள்ள ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=119129&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 390 views
-
-
சன்னை: பெரியார் சிலைகளையும், ஆன்மீக தலைவர்கள், கடவுள் சிலைகளையும் சேதப்படுத்துவோரை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் வள்ளுவர் விருது க.ப.அறவாணனுக்கும், பாரதியார் விருது தமிழருவி மணியனுக்கும், பாரதிதாசன் விருது கா.செல்லப்பனுக்கும், திரு.வி.க. விருது க.திருநாவுக்கரசுக்கும், அம்பேத்கர் விருது தொல். திருமாவளவனுக்கும், பெரியார் விருது நடிகர் சத்யராஜுக்கும், காமராஜர் விருது ஏ.எஸ். பொன்னம்மாளுக்கும், அண்ணா விருது ஆர்.எம்.வீரப்பனுக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசுகையில், வசை பாடியவர்களுக்கு விருது…
-
- 0 replies
- 782 views
-
-
லண்டன்: தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளுக்கு தேசிய விடுமுறை அளிக்க முடியாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகை தினங்களுக்கு இங்கிலாந்தில் அரசு விடுமுறை வழங்க வேண்டும் என இந்து, இஸ்லாம் மதத்தை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 843 பேர் கையெழுத்திட்டு ஆன் லைன் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். நீண்ட காலமாகவே இங்கிலாந்தில் வசித்து வரும் இந்து மற்றும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி, ரம்ஜானுக்கு தேசிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு அனுப்பும் கோரிக்கைகளை பரிசீலிக்க இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனி கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி கோரிக்கை மனுவை அரசுக்கு…
-
- 4 replies
- 712 views
-
-
தீபாவளி பட்டாசு, வெடி கொண்டாட்டங்கள் காரணமாக நேற்று மட்டும் 150 சென்னையில் 150 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது அதற்கு முதல் நாள் சுமார் 70 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதில் பெரும்பாலும் ராக்கெட் வெடி வெடித்ததில் தான் நிறைய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கோபுரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த ஓலைக் கீற்று மீது ராக்கெட் வெடி விழுந்ததால் தீப்பற்றி எரிந்தது. இதே போல் தி. நகர் அயோத்தியா மண்டபம் காளி கோவில் மண்டபம் மேலே போடப்பட்டிருந்த கீற்று கொட்டகை, ஓட்டேரி ஏ.பி. ரோடு ஆன்ட்ரூ சர்…
-
- 0 replies
- 497 views
-
-
தீபிகா பல்லிகலை இந்து, கிறுஸ்தவ முறைப்படி திருமணம் செய்கிறார் தினேஷ் கார்த்திக்! கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலுக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளால் திருமணம் தள்ளிப் போய் கொண்டு வந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் இவர்களது திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தீபிகா பல்லிகல் கிறுஸ்துவர் என்பதால், முதலில் ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னையில் கிறுஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெறுடிகிறது. தொடர்ந்து 20ஆம் தேதி தினேஷ் கார்த்திக் இந்து முறைப்படி தீபிகா பல்லிகல் கழுத்தில் தாலி கட்டுகிறார். இருவருமே விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என…
-
- 4 replies
- 3k views
-
-
தீபெத் மக்களுக்காக உங்கள் கையெழுத்தை இடுங்கள் இப் பகுதியில் சென்று கையெழுத்திடலாம். http://www.avaaz.org/en/tibet_end_the_viol...p/?cl_tf_sign=1 7 நாட்களில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 904 views
-
-
வட லண்டனின் டொட்டென் ஹாம் பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த காரொன்றிலிருந்து குழந்தையுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பொதுமக்கள் துணிகரமாக செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். தீ அனர்த்தம் ஏற்பட்டபோது அந்தக் காரிலிருந்த வயோதிபர் ஒருவர் ஆசனப்பட்டியிலிருந்து விடுவிக்க முடியாது போராடிய அதேசமயம், குழந்தையும் காரின் ஆசனத்தில் பிணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற இருவர் மீட்புப் பணியாளர்கள் வருவதன் முன் துரிதமாக செயற்பட்டு அனைவரையும் காரிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் இறுதியாக குழந்தையை மீட்பதற்கு ஒருசில செக்கன்களில் கார் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்துள்ளது. மேற்படி துணிகர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உள்ளூர்வா…
-
- 0 replies
- 187 views
-
-
பாரிஸ் RER B யின் தொடருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதால் இன்று திங்கட்கிழமை மாலை தொடருந்துப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ROBINSON தொடருந்து நிலையத்தில் தரித்து நின்ற Sceaux (Hauts-deSeine) இன் இறுதித் தரிப்பிடமாகக் கொண்ட தொடருந்து அனைவரும் இறங்கிய பின்னரே தீப்பிடித்துக் கொண்டது. இத்தீயானது 17h00 மணியளவில் பற்றிக் கொண்டது. தீப்பிடித்து ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்தின் இறுதியில் தீயை அணைத்தனர். அரை மணி நேரத்தின் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் 18h10 அளவில் இருந்து மெதுவாகப் போக்குவரத்து சகஜநிலைக்குத் திரும்பியது. இத் தீக்கான காரணம் குற்றச் செயல்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்தனர். ஒரு இளைஞர்…
-
- 2 replies
- 485 views
-
-
தீப்பிடித்த கப்பலில் இருந்து கடலில் குதித்து உயிர்தப்பும் பயணிகள்... வீடியோ பயணிகளை லைப் ஜாக்கெட்டுகள் அணிய வைத்து கடலில் குதிக்க வைத்து பின்னர் உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர். ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று சிறிய கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த கப்பல் திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகளிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த பயணிகளை காப்பாற்றும…
-
- 1 reply
- 618 views
-
-
தீப்பிடித்து விழுந்த சூடான காற்று பலூன்: 16 பேர் கதி என்ன? அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 நபர்களை கொண்ட சூடான காற்றடைத்த பலூன் 16 பேருடன் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் ஷெரீப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், அந்த பலூன், ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது.. பலூனில் இருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. http://www.bbc.com/tamil/global/2016/07/160730_america_texas
-
- 0 replies
- 283 views
-
-
ஹைதராபாத்: ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், போராட்டக்குழுவினரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் சட்டசபை கட்டடத்திலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க வேண்டும் என்பது போராட்டக்குழுவினரின் கோரிக்கை. பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா கோரி இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்த போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.ஆனால் போராட்டக்காரர்கள் போர்வையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நகரில்ஊடுருவி வன்முறையில் ஈடுபடக் கூடும் என்…
-
- 0 replies
- 376 views
-
-
தீயினால் பாதிக்கப்பட்ட St. Jacobs Market-ல் உள்ள ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்ற வாரம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மார்கெட் பகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. St. Jacobs Market என்ற பகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான கடைகள் பெரும் பாதிப்படைந்தன. பின்னர் பாதிக்கப்பட்ட கடைகள் மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று நேற்று வியாழக்கிழமை ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒண்டோரியோ பிரிமியர் Kathleen Wynne இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 2200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் மிக வேகமாக மராமத்து பண…
-
- 0 replies
- 279 views
-
-
தீராத நோய் தாக்கியவர்கள் தங்கள் உயிரை சட்டப்பூர்வமாக மாய்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவின் மீது உணர்ச்சிப்பூர்வமான விவாதம் நடந்தது. அதன் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 14 பேரும் ஓட்டு போட்டனர். இதையடுத்து மசோதா நிறைவேறியது. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயாளிகள், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அதற்கான மருந்தினை மருத்துவர்கள் எழுதித்தரலாம். ஆனால் இந்த சட்டத்துக்கு எதிரானவர்கள், இதன் மூலம் பலர் உரிய காலத்துக்கு முன்பாகவே தற்கொலை செய்துகொள்வர் என கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஆரிகான், வாஷிங்டன், வெர்மாண்ட், மான்டனா மாகாணங்களில் ஏற…
-
- 2 replies
- 481 views
-
-
தீர்ப்பதற்கு மிகவும் கடினமான சைப்பிரஸ் சிக்கல் – ஒரு புதிய திருப்பம் 82 Views மத்தியதரைப் பிரதேசத்தில் இம் மாதத் தொடக்கத்தில் நிலவிய கடும் பதற்ற நிலையின் நடுவில், வட சைப்பிரஸ், தனது அதிபருக்கான தேர்தலை நடத்தியிருக்கிறது. ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி தேசிய ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த (National Unity Party) ஏர்சின் டட்டார் (Ersin Tatar) பதவியில் இருக்கின்ற அதிபர் முஸ்ரபா அக்கிஞ்சிக்கு (Mustafa Akinici) எதிராகப் போட்டியிட்டு 51.74 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறார். நீண்ட காலமாகத் தொடர்கின்ற பல பிணக்குகளை உள்ளடக்கிச் ‘சைப்பிரஸ் பிரச்சினை’ என்ற பெயரில் அறியப்படுகின்ற சிக்கல் தொடர்பாக, கிரேக்க மக்களைக் கொண்ட…
-
- 0 replies
- 924 views
-