உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி. பாராளுமன்ற தேர்தலில் அவர் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவார். நிதின் கட்காரிக்கு நாக்பூர் தொகுதிக்கான சீட் கொடுக்கப்பட்டு இருப்பது அதிகாரப்பூர்வமானதாகும். நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அருகே பாரதீய ஜனதா பெண்கள் பேரணி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சீனியர் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், கட்காரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். நாக்பூர் தொகுதி பாரதீய ஜனதாவுக்கு சவாலானவை ஆகும். இதை சுஷ்மா சுவராஜ் ஒப்புக்கொண்டார். 4 முறை காங்கிரஸ் கட்சியே அந்த தொகுதியில் வெற்றி பெற்றது. 1996–ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜனதா அந்த தொகுதியை வென்றது. இதனால் தற்போது நிதின் கட்காரியை நிறு…
-
- 0 replies
- 363 views
-
-
பாராளுமன்றத்தேர்தலில் ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தவும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறுகையில், ‘‘தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எனது அரசியல் குரு– அவர் பிரதமரானால் மகிழ்ச்சி’’ என கருத்து தெரிவித்து இருந்தார். இது கட்சியில் ஷிண்டேக்கு எதிராக சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஷிண்டே தான் அப்படி சொல்லவில்லை என்று மறுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நான் செய்தியாளர்களிடம் சரத்பவார் மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் எனது நண்பர் மராட்டியத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று தான் கூறினேன். சரத்பவார…
-
- 0 replies
- 272 views
-
-
வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை. வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 300-ல் 231 இடங்களைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பிரதமரான ஹசினா இன்று பிரதமராக பதிவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி அப்துல் ஹமீத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 48 பேர் கொண்ட மந்திரி சபையும் பதவி ஏற்றுக்கொண்டது. இந்த விழாவில் ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். http://www.maalaimalar…
-
- 0 replies
- 365 views
-
-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கு ஈரான் தவிர 30 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்நோக்கியிருக்கும் இப்பேச்சுவார்த்தை நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிபர் ஆசாத்தின் படைகளும், கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கிளர்ச்சியாளர்களிடமும் பிரிவினை ஏற்பட்டு அவர்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த மோதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 85 பொதுமக்கள் உள்பட சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான பொதுமக்கள் உயிருக்குப் பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். …
-
- 0 replies
- 478 views
-
-
கிறிஸ்தவப் பெரும்பான்மையினருடன் முஸ்லிம் மக்களையும் கொண்டுள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் செலேகா எனப்படும் போராளிக் குழுக்கள் பலம் பொருந்தியவர்களாக விளங்கினர். இவர்கள் ஆதரவுடன் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிபர் பதவியைக் கைப்பற்றிய மிகைல் ஜோடோடிடா, பின்னர் அந்த இயக்கத்தை அதிகாரபூர்வமாக கலைப்பதாக அறிவித்தார். ஆனால் இதனை மறுத்த போராளிக் குழுக்கள் தொடர்ந்து இன வன்முறைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த வன்முறைகளில் 1,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஐ.நா.வின் 4,000 அமைதிப்படை வீரர்களும், பிரான்ஸ் நாட்டிலிருந்து 1,600 வீரர்களும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அண்டை நாடான சாடிலிருந்து வந்த செலேகா போராளிகளுக்கு உ…
-
- 0 replies
- 482 views
-
-
சோமாலியாவில் இருந்து செயல்படும் அல்ஷபாப் போராளிகள் ஷரியா சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இந்த அல்ஷபாப் போராளிகளுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு படை சோமாலியாவிற்கு உதவி வருகிறது. இதில் கென்ய ராணுவத்தினர் 7 ஆயிரம் பேரும் போராளிகளுக்கு எதிராக அங்கு சண்டையிட்டு வருகின்றனர். இதனால் பக்கத்து நாடான கென்யாவிலும் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கென்யா மற்றும் எத்தியோப்பா எல்லையோரம் சோமாலியாவின் கார்பராஹே என்னுமிடத்தில் அவர்கள் அமைத்திருந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கென்யா விமானப்படை விமானம் அந்த போராளிகளின் முகாமை தாக்கி அழித்தது. அப்போது முகாமிலிருந்த 30 போராளிகள் கொல்ல…
-
- 0 replies
- 330 views
-
-
கடந்த 2011 ஆம் ஆண்டில்தான் சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடு அந்தஸ்தினைப் பெற்றது. உள்நாட்டுக் கலவரங்கள் அங்கு இன்னும் ஓயாத நிலையில், சென்ற மாதம் முன்னாள் துணைப்பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். போர், பென்டியு ஆகிய நகரங்களைக் கைப்பற்றிய இந்தப் பிரிவினர் அங்குள்ள யூனிட்டி எண்ணெய் வயல்களையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த இரு பிரிவினருக்குமிடையே அமைதியை ஏற்படுத்த பிற ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும், ஐ.நா.வும் முயன்றன. எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இதனிடையில் உள்நாட்டில் தொடர்ந்து வரும் இரு தரப்பினரின் சண்டையில் மலக்கல் பகுதியில் தங்கள் …
-
- 0 replies
- 376 views
-
-
Pakistan தற்கொலை தீவிரவாதியை தடுத்த 14 வயது பள்ளி சிறுவன்: குண்டு வெடித்ததில் 2 பேரும் பலி Tributes were paid Thursday to a high school student who officials say foiled a suicide bomb attack in an act of “bravery” that cost him his life. Aitazaz Hassan, 17, was killed instantly - but police and school officials said the lives of up to 1,500 other students at the school in Pakistan had been saved. "My son did a heroic job and I am proud of his bravery,” said the boy’s grieving father, Mujahid Ali. பெஷாவர், ஜன. 10– பாகிஸ்தானில் கைபர்– பக்துன்கவா மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தீவிரவாத…
-
- 3 replies
- 556 views
-
-
இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85. அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில், திடீரென்று தாக்கிய மூளை ரத்தக்கசிவு- ரத்த உறைவினால் ஏற்பட்ட பக்கவாதத்தால் 2006-ம் ஆண்டிலிருந்து ஏரியல் ஷரோன் கோமா நிலையிலேயே இருந்துவந்தார். சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த நிலையில் அண்மைய நாட்களாக அவரது நிலை மோசமடைந்தது. இஸ்ரேலிய வரலாற்றில் ஏரியல் ஷரோனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இராணுவ ஜெனரலாக இருந்தவர், பின்னர் ஓர் அரசியல்வாதியாகவும் மாறினார். எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஏரியல் ஷரோன் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140111_arialsharon.shtml
-
- 1 reply
- 258 views
-
-
10 January 2014 லஞ்சம் மற்றும ஊழல் பற்றி புகார் தெரிவிக்க அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு இலக்கத்தில் இலவச தொலைப்பேசி எண் அறிவிக்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், ஊழல் புகார்களை 1031 என்ற எண்ணில் மக்கள் தொடர்புகொள்ளலாம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/article1993586.ece
-
- 0 replies
- 385 views
-
-
பால் தாக்கரேவின் பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதி சிவ சேனா கட்சி தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. மத்திய மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய பரிசோதனையாக இருக்கும். மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார். மக்களவைத் தேர்தலில் சிவ சேனா-பா.ஜ…
-
- 0 replies
- 239 views
-
-
அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் அமைப்பிலிருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கி டெல்லி ஆட்சியின் அரியணையில் அமர்ந்திருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று அவரும் அவரது மந்திரிகளும் மக்கள் சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டனர். தங்கள் குறைகளை கூற ஆயிரக்கணக்கானோர் கூடிய இந்த சந்திப்பில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து கெஜ்ரிவாலின் முன்னாள் கூட்டாளியும், அன்னா ஹசாரேவின் முக்கிய உதவியாளருமான கிரண் பேடி கூறியதாவது:- அனைத்து நல்ல நிர்வாகமும், பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. அநேக முக்கிய போலீஸ் அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களை சந்திக்கின்றனர். அங்கே ஒரு முறையான திட்டம் வகுக்கப்படுகிறது. அங்கே ஒரு வெளிப்படைத் தன்மை இருக்கிறது. அது தெருக்களில…
-
- 3 replies
- 461 views
-
-
2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா நாடெங்கும் சூறாவளி பிரசாரம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்கோளாறு காரணமாக அவர் கட்சிப் பணிகளை குறைத்துக் கொண்டார். இந்த தடவை சோனியா முன்பு போல் தீவிர பிரசாரம் செய்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவி வந்தது. ஆனால் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். சோனியா சுற்றுப் பயணத் திட்டத்தை பிரியங்கா வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் கடந்த 7–ந்தேதி கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு ஏற்ப சோனியா எந்தெந்த நகரங்களில் பேசுவது என்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது வட மாநிலங்களில் காங்கி…
-
- 1 reply
- 306 views
-
-
டெல்லியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், மக்கள் குறைகளை தீர்க்க புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி சனிக்கிழமை தோறும் தலைமை செயலகம் முன்பு உள்ள மைதானத்தில் முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து (மக்கள் சபை கூட்டம்) மனுக்களைப் பெற்று குறைகளை தீர்த்து வைப்பார்கள் என்ற அறிவிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் காலை 7 மணி முதலே மக்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். இதனால் டெல்லி தலைமை செயலகம் நோக்கி வரும் சாலைகள் மூடப்பட்டன. என்றாலும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் நடந்தே வந்து சேர்ந்தனர். 9.30 மணிக்கு கெஜ்ரிவாலும், அவரது மந்திரிகளும் வந…
-
- 2 replies
- 395 views
-
-
ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் கமார் விஸ்வாஸ் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில், அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் சுவரெட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களை தேச விரோத சக்திகள் என்று ராஷ்ட்ரீய ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.dinamani.com/latest_news/2014/01/11/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 256 views
-
-
வரும் மக்களவைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை தேசியக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து, பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. இதேபோல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள உயர்மட்டக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ஷிண்டே இன்று சோலாப்பூரில் மராட்டி பத்திரிகை ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது:- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவர் எனது அரசியல் குரு. அவரால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும். அதேபோல் சரத…
-
- 0 replies
- 365 views
-
-
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால், பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் 17–ந்தேதி டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதன் பிறகு இரு கட்சிகளும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த ஆண்டே பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எல்லா பணிகளையும் தொடங்கியது. இதனால் நாடெங்கும் ‘‘மோடி அலை’’ வீசுகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் நரேந்திர மோடியே பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். ஆனால் டெல்லி மாநிலத்தில் கெஜ்ரிவால் தலை…
-
- 0 replies
- 431 views
-
-
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற குழு நேற்று கூடி விவாதித்தது. கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதா பொதுச் செயலாளர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற உறுதியுடன் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தலை எதிர்கொள்வது, மோடியே பிரதமர் என்ற கோஷத்தை கடை கோடி கிராமங்கள் வரை கொண்டு செல்வது, அனைவரையும் வாக்களிக்க செய்வது போன்ற பணிகளில் கட்சியினருக்கு இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செயற்குழு கூட்டத்தில் லஞ்ச…
-
- 0 replies
- 290 views
-
-
நரேந்திர மோடிக்கே நான் வாக்களிப்பேன் என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நேற்று அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கு நல்ல, வலுவான தலைவர் தேவை. இப்போதைக்கு மோடியே அதற்கு தகுதியான தலைவர்’’ என்று கூறி இருந்தார். கிரண்பேடியின் கருத்துக்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்தது. பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி ஒருபடி மேலே சென்று ‘‘கிரண் பேடியை பா.ஜ.க.வில் சேர்க்க அழைப்பு விடுக்க வேண்டும்’’ என்றார். பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் கிரண்பேடி முக்கியப் பங்கு வகித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள கருத்தால் நாடெங்கும் உள்ள அன்னாஹசாரே ஆதரவாளர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளத…
-
- 0 replies
- 680 views
-
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஊழல் ஒழிப்பு கோஷம் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆம்ஆத்மி கட்சி நாடெங்கும் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. அது மக்களிடம் ஆதரவு பெற்றால் ஆம்ஆத்மி கட்சி நாடெங்கும் கணிசமான வாக்குகளை பெற்று விடும் என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி எடுத்து வரும் இந்த விசுவ ரூபத்தை தடுக்கவே மத்திய அரசு சமீபத்தில் முடிந்த பாராளு மன்றக் கூட்டத் தொடரில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதா உடனடியாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து விட்டது. என்றாலும் மக்களுக்கு ஆம்ஆத்மி மீது ஏற்பட்டு வரும் மோகத்தை தடுக்க மேலும் ஊழல் எதிர்ப்பு சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று ராகுல்காந்தி வி…
-
- 0 replies
- 272 views
-
-
டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்படுத்தியுள்ள எளிமைக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் மற்ற மாநில முதல்– மந்திரிகளும் கெஜ்ரிவால் பாணியை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். டெல்லியில் கெஜ்ரிவால் செயல்படுத்தும் அனைத்து விதமான நடவடிக்கை களையும் அப்படியே ராஜஸ்தான் பா.ஜ.க. முதல்– மந்திரி வசுந்தரராஜே சிந்தியா செயல்படுத்தி வருகிறார். கெஜ்ரிவால் போலவே அவரும் அரசு வீட்டில் குடியேற மறுத்துவிட்டார். தற்போது தன் கட்சி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் எளிமையாக இருக்க வேண்டும். மக்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வசுந்தரா விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 100 ப…
-
- 0 replies
- 286 views
-
-
ஊழலுக்கு எதிராக நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்து எட்டப்படாததால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நிலுவை ஊழல் மசோதாக்கள்: தில்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷீல் குமார் ஷிண்டே, சிதம்பரம், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உயர்நிலைக் குழுவில் இடம்பெ…
-
- 0 replies
- 351 views
-
-
மாநில அரசு முடிவு எடுப்பதில் கால தாமதமானால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கூட்டணியை விட்டு வெளியேறுவோம் மராட்டியத்தில் நேற்றுமுன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் பேசிய துணை முதல்–மந்திரி அஜித் பவார், மாநில அரசு முடிவு எடுப்பதில் காலதாமதமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதே நிலைமை நீடித்தால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் வெளியேறிவிடும் என்றும் அவர் எச்சரித்தார். அஜித் பவாரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப் மாலிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவத…
-
- 1 reply
- 434 views
-
-
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப்பகுதியில் நேட்டோ படையின் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. அதில் 2 ராணுவ வீரர்கள், ஒரு ஊழியரும் பலியானார்கள். விபத்து குறித்த மற்ற விவரம், பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை தாக்குதலில் நேட்டோ படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்போது விமான விபத்தில் 2 பேர் இறந்திருக்கிறார்கள் http://www.maalaimalar.com/2014/01/11032533/3-Americans-Killed-in-US-Milit.html
-
- 0 replies
- 327 views
-
-
புதுடெல்லி ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும், மந்திரிகளும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே உள்ள தெருக்களில் அமர்ந்து மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்போம் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கான உதவி மையத்தை (ஹெல்ப்லைன்) டெல்லியில் நேற்று முன்தினம் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக கெஜ்ரிவால் நேற்று அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:– மக்களிடம் க…
-
- 0 replies
- 995 views
-