Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு: 45,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம் 1.8 தொன் எடையுள்ள இந்த குண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். ரைன் நதியில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் கடந்தவாரம் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மழைவீழ்ச்சியின்மையால் அந்நதியின் நீர்மட்டம் குறைவடைந்தத்தை தொடர்ந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குண்டு 2 கிலோமீற்றர் சுற்றுளவிற்குள் வசிக்கும் மக்களை அனைவரையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். இரு வைத்தியசாலைகள், 7 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், ஒரு சிறைச்சாலை ஆகியவற்றிலுள்ளவர்களும் வெளியேற்றப்படுக…

    • 4 replies
    • 950 views
  2. வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட தமிழன் சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும்,அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துறையின் உதாசீனப் போக்கையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ‘’சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது. …

  3. பாரிஸ் : தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பயந்து அகதிகளாக ஐரோப்பாவிற்கு சென்ற சிரியா நாட்டு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறு குழந்தை அய்லான் கடலில் மூழ்கி பலியான சம்பவத்தை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோ கேலிசித்திரம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடலோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அய்லானின் புகைப்படம், உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இச்சம்பவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு இதழான 'சார்லி ஹெப்டோ' கேலிசித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கார்ட்டூனில், ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய படமும் வரையப்பட்டுள்ளது. மேலும…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போகன்சீ வில்லா 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு அழகிய ஏரிக் கரையில் 17 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட பிரமாண்ட பாரம்பரிய மாளிகை ஒன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த மாளிகை துரதிர்ஷ்டவசமாக வரலாற்றில் மிகவும் கொடூரமான நபராக கருதப்பட்ட ஒருவருடையது. அவர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ். 2000ஆம் ஆண்டு முதல் இந்த வீடு கைவிடப்பட்ட சொத்தாகி விட்டது. அதை பராமரிக்க அரசுக்கு பெரும் தொகை செலவாகும், யாரும் அதை வாங்க விரும்பவில்லை. இருக்கும் ஒரே வழி, அதை யாருக்காவது கொடுப்பது மட்டும் தான்! ஜோசப் கோயபல்ஸின் கோடைகால ஓய்வு இல்லமாக இருந்த இந்த வீட…

  5. திருவிழா நம்ம தெரு விழா என்ற வாசகத்துடன் 2வது முறையாக சென்னையை கலகலப்பாக்க வருகிறது சென்னை சங்கமம் கலை விழா. முதல்வரின் மகள் கனிமொழியின் முயற்சியாலும், தமிழ் மையத்தின் உதவியாலும், கடந்த ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு விழா சென்னையில் ஒரு வார காலம் நடந்தது. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை சென்னை நகர மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் உருவானதுதான் இந்த சென்னை சங்கமம். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து சென்னை சங்கமம் ஒருங்கிணைப்பாள…

  6. சிரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்த பெண் பத்திரிக்கையாளர் எடித்போவீரைப் பற்றிய உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. சிரியாவின் பாபா ஆம்ர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட பிரெஞ்சு நாட்டுப் பெண் பத்திரிகையாளர் எடித்போவீர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால் இவருடன் பணியாற்றிய புகைப்பட பத்திரிக்கையாளர் பால் கான்ராய் சில மனித உரிமை ஆர்வலர்களின் உதவியால் சிரியாவிலிருந்து லெபனானுக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய மாண்ட் பெல்லியருக்கு வந்திருந்த தற்போதைய ஜனாதிபதி சர்கோசி, எடித் போவீர் லெபனானுக்குத் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் அவரது அலுவலகத்தினர் இ…

  7. பஹ்ரைனில் 47 தீவிரவாதிகள் கைது: ஈரான் ஏவிவிட்டதாக குற்றச்சாட்டு நாசவேலையில் ஈடுபடும் நோக்கத் துடன் தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த, ஈரானின் தீவிரவாத முகாமை அழித்துவிட்டதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. தீவிரவாத முகாமில் இருந்த 47 தீவிரவாதி களையும் கைது செய்திருப் பதாக அறிவித்துள்ளது. பஹ்ரைன் நாட்டின் உள்வி வகாரத்தில், அண்டை நாடான ஈரான் தலையிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பஹ்ரை னுக்குள், பயிற்சி பெற்ற தீவிர வாதிகளை அனுப்பி, அந்நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் ஈரான் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வந்தது. இந்த சூழலில், தலைநகர் மனாமா மற்றும் அதைச் சுற்றி யுள்ள புறநகர் பகுதிகளில், நேற்று பஹ்ரைன் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுப…

  8. அமெரிக்கா-இலினாய்ஸ் பல்கலையில் துப்பாக்கி சூடு-4 மாணவிகள், 1 மாணவன் பலி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008 இலினாய்ஸ்: அமெரிக்காவின் வடக்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 5 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 22 மாணவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளனர். ஜியாலஜி வகுப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் 3 துப்பாக்கிகளுடன் ஒருவன் அங்கு வந்தான். ஆசிரியரின் அருகே போய் நின்ற அவன், வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 4 மாணவிகளும் ஒரு மாணவனும் அங்கேயே குண்டு பாய்ந்து பலியாயினர். மற்ற மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் 22 பே…

  9. பாரிஸ் தாக்குதல்:மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படம் வெளியீடு பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். பாரிஸில் தொடர்ந்தும் கடுமையான ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் அந்த தற்கொலை குண்டுதாரி பாரிஸின் தேசிய கால்பந்து விளையாட்டு அரங்கில் தாக்குதலை நடத்தியவர் என பிரெஞ்ச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வெளியிட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் படம் எம் அல் மஹ்மூத் எனும் நபருடையது என பிபிசி அறிகிறது. இப்போது படம் வெளியாகியுள்ள நிலையில், அத்தாக்குதல் தொடர்பிலான சாட்சிகளை முன்வருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். அந்த நபர் சிரியாவிலிருந்து துருக்க…

  10. சிரியாவில் பிரிட்டிஷ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமா என்று கோருகின்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. ஐஎஸ்-ஐ பிரிட்டனுக்கு ஓர் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள பிரதமர் டேவிட் கேமரன், இராக்கைப் போல சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டுவருகின்றார். https://www.facebook.com/bbctamil/videos/vb.186742265162/10153127385760163/?type=2&theater

    • 8 replies
    • 1.1k views
  11. தாதா பதவிக்கு தாவூத் முழுக்கு? மும்பை : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தாதா பதவிக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளான். பாகிஸ்தானில் இன்று நடக்கும், தன், 60வது பிறந்த நாள் விழாவில், புதிய தாதா யார் என்பதை அறிவிக்க, அவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிழல் உலக தாதா : மும்பையில், நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராகிம், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளான். இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில், அந்த நாட்டு உளவு அமைப்பின் கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் அவன் வசித்து வருகிறான். …

  12. கரை ஒதுங்கிய சிறுவன் அவமதிப்பு; சார்லி ஹெப்டோ மீண்டும் சர்ச்சை! சர்ச்சைக்குப் பேர்போன ஃபிரெஞ்சுப் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ, இறைத்தூதர் சர்ச்சையிலிருந்து வெளிவந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை; அதற்குள் ஒரு புத்தம்புது சர்ச்சையை உருவாக்கி உள்ளது இந்த வாரப்பத்திரிக்கை. சில மாதங்களுக்கு முன்னால், சிரியக் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மூன்று வயதுச் சிறுவனான ’ஆலன் குர்தி’யின் நிழற்படம் காண்பவர் அனைவரையையும் கடும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. அந்தக் குழந்தை ஒருவேளை வளர்ந்து பெரியவனாகி இருந்தால், நிச்சயம் பெண்களுக்கெதிராக வன்கொடுமை இழைக்கும் ஒரு குற்றவாளியாகத்தான் வளர்ந்திருப்பான் என்று பொருள்படும்படி ஒரு கேலிச்சித்திரத்தைத் தீட்டி வெளியிட்டிருக்கிறது சார்…

  13. இதுவும் போட்டோ ஷாப் வேலைதானாம்! கடந்த 2014ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது, பொதுக் கூட்ட மேடை ஒன்றை பிரதமர் மோடி துடைப்பத்தால் பெருக்குவது போன்ற படம் சமூக வலைதளங்களில் உலாவியது. கடந்த 1988-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக நரேந்திர மோடி இருந்த போது,இத்தகைய பணியில் அவர் ஈடுபட்டது போல, அந்த படத்தின் கீழ் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இருப்பது மோடியா? அல்லது சித்து வேலையா? எனற அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையில், ''அந்தப் படத்தில் இருப்பது மோடி அல்ல. ஃபோட்டோஷாப்பில் சில மாற்றம் செய்யப்பட்டு வேறு ஒரு உடலுடன் மோடியின் முகம் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிம…

  14. 31 MAR, 2025 | 05:00 PM எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 14 வயதுக்குட்பட்ட சிறுமி உட்பட பல பெண் நோயாளர்களை கையடக்கத் தொலைபேசி மூலம் படம்பிடித்தும், வீடியோ எடுத்தும் உள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யபட்டுள்ளார். வட மேற்கு ஜேர்மனியில் வசித்துவரும் 43 வயதுடைய ஹனோ என்னும் அறுவை சிகிச்சை நிபுணர் 190 சந்தர்ப்பங்களில் இப்படி பெண்களை படம் பிடித்துள்ளதுடன், பலரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஜேர்மன் செய்தித்தாளான பைல்ட் (BILD) செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அறுவை சிகிச்சை நபுணரிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் அளவிலான பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவர் பல ஆண்டுகாலமாக பெண்களை படம் பிடித்ததாகவும், பலரை துஷ்பிரயோகம் செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …

  15. கிரேக்க எல்லையில் சிக்கியுள்ள குடியேறிகள் மஸிடோனியாவுடனான கிரேக்கத்தின் எல்லையில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் சிக்கியுள்ள நிலையில், அங்கு அவசரகால நிலை ஒன்றை அறிவிக்குமாறு, கிரேக்கத்தின் வடக்கு பகுதியின் ஆளுனர் ஒருவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். ஐடோமினி எல்லைக்கு அருகில் உள்ள குடியேறிகளின் கூடாரங்கள் அங்குள்ள நிலைமையை, ஒரு மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி எனவும் அவர் வர்ணித்துள்ளார். கிரேக்கத்திலிருந்து மஸிடோனியாவிற்குள் செல்ல தினந்தோறும் அனுமதிக்கப்படும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது எல்லையை கடந்து செல்வதற்கு, மிக சிறிய அளவிலான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களே அனுமதிக்கப்படுகின…

  16. [size=4]கேரள மாநில கடையொன்றில் விற்கப்பட்ட, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை, போலீசார் மீட்டனர்.[/size] [size=4]கேரளா, மலப்புரம் மாவட்டம், மஞ்சேரி பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த இரு சிறுவர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி,14, மற்றும் கோபி,15, என, தெரியவந்தது. சிறுவர்கள் இருவரையும், அவர்களின் பெற்றோர், மஞ்சேரி, வேங்கரா பகுதியில், சிப்ஸ் கடை நடத்தி வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த வைரமணியிடம், 30 ஆயிரம் ரூபாய்க்கு, ஒரு வருட ஒப்பந்தத்திற்கு விற்றுள்ளனர். சிறுவர்களை வாங்கிய வைரமணி, அவர்களை தன், சிப்ஸ் கடையில் பணி அமர்த்தியுள்ளார். [/size] [size=4]அத்துடன், அதிகாலை 4 மணி முதல் இ…

    • 0 replies
    • 580 views
  17. காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி 25 JUN, 2025 | 10:57 AM காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவத்தினரின் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கவசவாகனம் தீப்பிடித்து எரிந்தது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட இஸ்ரேலிய படையினரின் பெயர் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது அவர்கள் 19 முதல் 21 வயதிற்குட்பட்டவர்கள். https://www.virakesari.lk/article/218395

  18. அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தை அடுத்தடுத்து தாக்கிய இரு பலத்த சூறாவளிகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசியின் மிகப்பெரிய நகரான நஷ்வில்லேவில் வீடுகள் மற்றும் ஏனைய கட்டடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சூறாவளிகள் தாக்கி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்த 150 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு யுத்த வலயம் போல் அந்த நகர் காணப்படுவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். இதனால் 44,000 இற்கும் அதிகமானவர்கள…

    • 0 replies
    • 287 views
  19. [size=4]சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே எண்ணெய் வளம் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் நெடுங்காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1931-ம் ஆண்டு ஜப்பான் ஆக்கிரமிப்பை நினைவுகூறும் நாளை சீனா கடந்த செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தது.[/size] [size=4]இதுதொடர்பாக சீன நகரங்களில் ஜப்பானுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. இதே போன்று கடல் பகுதியில் சீன படகுகளும், ஜப்பான் படகுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. கிழக்கு சீன கடல் தீவு பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்றன. சீனாவின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பதிலடி தருகிற வகையிலும் சீன நகரங்களில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஜப்பான் வர்த்தக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும்…

  20. 18 Sep, 2025 | 04:07 PM இணையதளச் செய்திப் பிரிவு சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தவறியதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட ஐந்து நாடுகளை அ…

  21. ட்ரம்ப்பை வெறுப்பதால் 'குடியரசுக் கட்சியினர் என்னை அணுகுகின்றனர்' அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தெரிவாகுவார் எனக் கருதப்படும் ஹிலாரி கிளின்டன், தனது எதிரணியினரான குடியரசுக் கட்சியினரால் அணுகப்படுவதாக தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது கட்சிக்குள் அவருக்குக் காணப்படும் எதிர்ப்புக் காரணமாக, அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர், அவருக்கு ஆதரவு வழங்க முடியாது எனத் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, ஜனநாயகக் கட்சியினதும் குடியரசுக் கட்சியினதும் ஆதரவாளர்களைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ள ஹில…

  22. சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும், மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு வருகின்றன. பிங்காயோ பண்டைய நகரம், புத்தர்களின் புனித தலமாக கருதப்படும் வுடாய் மலை, உலகின் எட்டாவது அதிசயம் என்று புகழப்படும் முதல் கின் பேரரசரின் கல்லறை, பாண்டா ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெற வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்ல வேண்டும், பாதுகாப்பு கவசங்கள்அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/104986/சீனா…

    • 0 replies
    • 501 views
  23. [size=4]மத்திய அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, கட்சி நிர்வாக அமைப்பிலும், அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. சோனியாவுக்கு அடுத்ததாக, கட்சியின் முக்கிய பொறுப்புக்கு, ராகுலை நியமனம் செய்யும் அறிவிப்பு, அடுத்த சில நாட்களில், வெளியாகவுள்ளது. வரும், 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை சந்திக்கும் வகையில், முழுக்க முழுக்க ராகுலுக்கு வசதியான வகையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.மத்திய அமைச்சரவை, கடந்த ஞாயிறன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியிலும், மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற செய்திகள், சமீப நாட்களாக வெளியாகி வருகின்றன.லோக்சபா தேர்தல், 2014ல் நடக்கவுள்ளதாலும், அதற்குமுன், ஒன்பது சட்டசபை தேர்தல்களை சந்திக்க வேண்டியு…

    • 0 replies
    • 593 views
  24. நாடு முழுக்க நடந்து வரும் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற குடிமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தனது அரசு எந்த விதமான நடவடிக்கைளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். வங்கதேச போலீசார் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழன் நள்ளிரவின் போது தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதன் சமீபத்திய எண்ணிக்கையில் சாதாரண குற்றவாளிகளும் இடம் பெற்றிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெர…

    • 0 replies
    • 206 views
  25. மாயமான விமானம் - 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தேடல் General03 December 2025 காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கு பின்னர், மலேசிய வானூர்தியை தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் போயிங் 777 என்ற மலேசிய வானூர்தி 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் காணாமல் போனது. அதன் பின்னர் குறித்த வானூர்தியை தேடி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அனைத்தும் பலனளிக்கவில்லை. இந்தநிலையில், 2025, டிசம்பர் 30 ஆம் திகதியன்று, குறித்த வானூர்தியை தேடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என மலேசிய போக்குவரத்து அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தநிலையிலேயே, வானூர்தியை கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவு இருப்பதாக மதிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.