உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான டெரிக்-இ-இன்சாப் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாகாணத்தின் மர்தான் மாவட்டம் ஷெர்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி அப்துல்லா. பெட்ரோல் பங்க் அதிபர் ஆவார். அவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஹாஜி அப்துல்லாவின் இறுதி ஊர்வலம், ஷெர்கார் பகுதியில் நடைபெற்றது அப்போது, வெடிகுண்டு உடை அணிந்த ஒரு தீவிரவாதி, வெடிகுண்டுகளை இயக்கி வெடித்துச் சிதறினான். இதில், இம்ரான்கான் மொகமந்த் உள்பட 27 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16055…
-
- 1 reply
- 834 views
-
-
வடமாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக 55 பேர் பலியாயினர், 50 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதில் 200 வீடுகள் தரைமட்டமாயின. உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா ஆகிய வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. உத்ரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 164 வீடுகள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் 30 பேர் பலியாயினர். அப்பகுதியில் 50 பேரை காணவில்லை. கங்கை நதியின் துணை நதிகளான மந்தாகினி, அலக்நந்தா ஆகியவற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிச் செல்கிறது. டேராடூன் அருகேயுள்ள ஹேம்குந்த் சாகிப் குருதுவாராவுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நிலச்சரிவு காரணமாக வீடு திரும்ப …
-
- 0 replies
- 590 views
-
-
அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். இரகசிய சைபர் நெட்வேர்க்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தொலைபேசி மற்றும் இணையப்பாவணை தொடர்பில் பல லட்சக்கணக்கில் பிரத்தியேக தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை திரட்டி வைத்திருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வார்ட் ஸ்னோவ்டென். இவர் முன்னர் அமெரிக்காவின் இரகசிய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர் ஆவார். தற்சமயம் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வருகிறார். சுவிற்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் தைரியமாக முன்வந்து வெளிப்படுத்திய தகவல்க…
-
- 6 replies
- 705 views
-
-
Print this ஹசன் ருஹானி ஈரானின் புதிய ஜனாதிபதியானார் ஈரான் ஜனாதிபதி தேர்தல் நிறைவடை நிலையில், ஈரானின் மறுசீரமைப்பு கட்சியின் வேட்பாளர் ஹசன் ருஹானி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ஹசன் ருஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பதிவான வாக்குகளில் 51 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகளை ருஹானி பெறுவதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது இம்முறை அதிபர் தேர்தலில் அதிகமான அளவில் மக்கள் திரண்டு வாக்களித்தனர் என்றும் ஓட்டுப்போட பதிவுசெய்திருந்த மக்களில் 71 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. இரண்டாவது இடத்தில் வந்த தெஹ்ரான் நகர மேயர்…
-
- 0 replies
- 657 views
-
-
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் - மரபணுப் பரிசோதனையில் உறுதி! [saturday, 2013-06-15 07:31:37] பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் இளவரசர் வில்லியம்மின் தாய் வழி மூதாதையர் இந்தியர் என மரபணுப் பரிசோதனைகள் காட்டியுள்ளதாக, பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் வில்லியமின் தாய் டயானா வழியில் சுமார் ஏழு தலைமுறைகள் முந்திச் சென்றால், வில்லியம்மின் மூதாதையராக அமைந்திருக்கும் எலீஸா கிவார்க் என்ற பெண் பாதியளவிலாவது இந்தியர் என்று எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வில்லியமின் ஏழாம் தலைமுறை மூதாதையரான எலைஸா கீவர்க் இந்தியாவின் சூரத் நகரில் வாழ்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.இந்தப் பெண் ஆர்…
-
- 0 replies
- 668 views
-
-
ஹைதராபாத்: ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், போராட்டக்குழுவினரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் சட்டசபை கட்டடத்திலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க வேண்டும் என்பது போராட்டக்குழுவினரின் கோரிக்கை. பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா கோரி இன்று சட்டசபை நோக்கி பேரணி நடத்த போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.ஆனால் போராட்டக்காரர்கள் போர்வையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நகரில்ஊடுருவி வன்முறையில் ஈடுபடக் கூடும் என்…
-
- 0 replies
- 376 views
-
-
இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும் காலகட்டங்களில், இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனைகள் அங்குள்ள கட்சிகளுக்கு அதிகரிக்கத் தொடங்கிவிடும். ஆரம்பத்தில் மாநிலக் கட்சிகளுக்கே இருந்த இந்தக் கரிசனைக் கவலை, 2009 தமிழினப் படுகொலையின் பின்னர் தற்போது மத்தியில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கும் எழத்தொடங்கிவிட்டது. இந்த வகைக்குள்தான் கடந்தவாரம் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினரின் ஐந்துநாள் இலங்கைச் சுற்றுலாப் பயணத்தையும் கருதமுடியும். பா.ஜ.கவின் அதிகாரபூர்வ கட்சிப் பயணமாக இது இல்லை எனவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட பயணம் என்று இலங்கை செல்வதற்கு முன்பாக ரவிசங்கர் பிரசாத் இந்திய ஊடகங்களு…
-
- 0 replies
- 539 views
-
-
இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது. உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.இது நாள் …
-
- 13 replies
- 1.5k views
-
-
சிரியாவில் நடந்துவருகின்ற உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்துக்குள் இது இட்டுச்சென்றுள்ளது. நரம்பு மண்டலத்தை பாதிக்கவல்ல சரின் வாயுவைக் கொண்டு சில தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றைம்பது பேர் வரை இறந்திருக்கிறார்கள் என தமக்கு இதுவரை கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலக அறிக்கை கூறுகிறது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு இராணுவ உதவிகளை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தீர்மானித்துள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் எந்த வடிவ…
-
- 2 replies
- 346 views
-
-
அமெரிக்க ரகசிய கண்காணிப்பு திட்டத்தின் நன்மைகள்: செனெட்டுக்கு விளக்கம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு உளவு நிறுவனமான என் எஸ் ஏ வின் தலைவர் ஜெனரல் கீத் அலெக்ஸாண்டர் அமெரிக்க செனெட் உறுப்பினர்களுடன் ரகசிய விளக்கக்கூட்டம் ஒன்றை வியாழனன்று நடத்துகிறார்.இணையத்திலும் தொலைபேசி வலயமைப்பிலும் ரகசிய கண்காணிப்பு பணிகளை செய்ததன் மூலம் அமெரிக்காவில் டஜன் கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்கள் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகக் கூறும் அவர் அது பற்றி செனெட் உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளார்.மிகவும் அரிதாகவே நடத்தப்படுகின்ற ஒரு கூட்டம் இது. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு உளவுத்துறையின் கண்காணிப்பு திட்டங்கள் பற்றி உளவுத்துறை முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் அண்மையில் வெளியில் தகவல் கசியவி…
-
- 0 replies
- 345 views
-
-
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுகலி காலனியில் வியாபாரி ஒருவர் வளர்த்து வந்த வாத்து தெருவில் செல்பவரை கொத்தியதால் போலிசார் வாத்தினை கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சுகிலி காலனியை சேர்ந்த ஒரு பெண் நுன்னா போலிஸ் நிலையத்துக்கு சென்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தன் தெருவில் சுற்றும் வாத்து தன் 5 வயது மகளை கொத்தி காயப்படுத்தி விட்டதாக கூறினார். தெருவில் நடந்து செல்லும் எல்லாரையும் அந்த வாத்து விரட்டி, விரட்டி கொத்துவதால் மிகவும் தொந்தரவாக இருக்கிறது. எனவே அந்த வாத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் தன் புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து நுன்னா போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த வாத்தை கைது செய்தனர். போலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தி…
-
- 1 reply
- 463 views
-
-
சவூதி அரேபியாவுக்குள் போதைவஸ்துகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சிரிய பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது. ஹுஸம் அல் ரஜுப் என்ற மேற்படி சிரிய பிரஜை பெருந்தொகையான போதைவஸ்து மாத்திரைகளை சவூதிக்குள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு வட ஜாப் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரண தண்டனையுடன் சவூதியில் இவ்வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அந்நாட்டில் 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதம் ஏந்திய கொள்கை, போதைவஸ்து கடத்தல் என்பன சவூதியில் மரணதண்டனைக்குரிய குற்றங்களாகும். http://w…
-
- 2 replies
- 520 views
-
-
மத்தியகிழக்கின் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் புதிதாக ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டுவதற்கான திட்டம் ஒன்று வட்டார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இட்டாமர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பாலஸ்தீன நிலங்களில் உரிமம் வாங்காமல் கட்டப்பட்டிருந்த 137 யூத வீடுகளை அங்கீகரித்து உரிமம் வழங்க வேண்டுமென்றும் அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குடியேற்றத் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் ஆரம்பகட்ட ஒப்புதலை சென்ற வருடம் வழங்கியிருந்தார். இஸ்ரேலிகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா முயன்றுவருகின்ற சூழ்நிலையில், இந்த குடியேற்றத்…
-
- 0 replies
- 357 views
-
-
ஜனவரி 21ஆம் தேதி, மலேசிய காவல் துறையினரால் விரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிடப் பட்டதாகவும் பின்னர் அடிக்கப்பட்டதாலும் மரணமடைந்ததாகக் கூறப்படும் 40 வயதான காவலாளியான சி.சுகுமாரின் நல்லுடல் 141 நாட்கள் நீடித்த போராட்டத்திற்குப் பின்னர் இன்று செராசில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் மீது இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனையை தாய்லாந்து மருத்துவ நிபுணர் போர்ன்திப் ரோஜனாசுனாந்த் மூலம் மேற்கொள்வதற்கு அவரது குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் எடுத்த முயற்சிகள் யாவும் பலனளிக்கவில்லை. பிகேஆர் உதவித் தலைவரும், சுகுமாரின் குடும்ப வழக்கறிஞருமான என்.சுரேந்திரன், உள்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள தாங்கள் எடுத்த முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்ததாகக் கு…
-
- 0 replies
- 330 views
-
-
கொல்கத்தா அருகில் உள்ள காம்தோனி என்ற இடத்தில் 20 வயது கல்லூரி மாணவி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் அவர் கல்லூரி தேர்வு முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அருகில் இருந்த காம்பவுண்டுக்குள் தூக்கிச் சென்று வன்புணர்ந்தனர் . அவர்களுடன் போராடியதால் மாணவியை தாக்கி கொலை செய்து தப்பிச் சென்று விட்டனர். வன்புணர்வு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் பொது மக்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிடச் சென்ற திரிணாமுல் காங்கிர…
-
- 0 replies
- 418 views
-
-
அவுஸ்ரேலியாவின் எதிர்க்கட்சி நிதி திரட்டுவதற்காக நடத்திய ஓர் விருந்தில் தன்னுடைய உடல் அங்கங்களை கேலி செய்யும் விதமாக உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்ததை அவுஸ்ரேலியாவின் பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கண்டித்துள்ளார். தாராளவாத தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் மால் புரோ கொடுத்த ஒரு விருந்தில் சாப்பிட வந்தவர்களுக்காக இந்த உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்தது. 'ஜூலியா கில்லார்ட் கெண்டக்கி காடை வறுவல் - சிறுத்த மார்புகள், பெருத்த தொடைகள்' என அந்த அட்டையில் ஒரு உணவுக்கு விவரணை எழுதப்பட்டிருந்தது. மலிவான ரசனையுடனும், அவமதிக்கும் விதமாகவும், பெண் பாலாரை ஏளனம் செய்யும் விதமாகவும் செய்யப்பட்ட ஒரு காரியம் இது என பிர…
-
- 0 replies
- 301 views
-
-
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரபு நாடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்த கதீஜா கமெல் என்ற அந்த பெண் துபாயில் உள்ள போலீஸ் அதிகாரியின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்தார். அவரது மனைவிக்கு எடுபிடி வேலைகளை செ…
-
- 3 replies
- 1.4k views
-
-
அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்யாவின் அதிபராக புதின் பதவியேற்றபோது, எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 27 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, அவரது மனைவி உள்பட ஏராளமான மக்கள், 'உமது விடுதலையே எமது விடுதலை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டக்காரர்களை வழிநடத்தினர். எதிர்க்கட்சி தலைவர் நவால்னி மீது, மாஸ்கோ கோர்ட்டில் ஏற்கனவே ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்…
-
- 0 replies
- 449 views
-
-
தனி தெலுங்கானா கோரி சட்டசபையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக தெலுங்கானா போராட்ட குழு அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்கள் . பேரணியில் மாவேஸ்டு தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா திட்டவட்டமாக கூறி விட்டார். தடையை மீறி போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார். ஆனாலும், தடையை மீறி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ஐதராபாத் நகரில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயிரக்கணக…
-
- 0 replies
- 370 views
-
-
ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் : 01 ஜூன் 2013 அல்-குவைதா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஒசாமா பின் லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில், பிரதான மூளைசாலியாக செயற்பட்டவர், இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம், இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இலங்கை பேராசிரியருக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான …
-
- 29 replies
- 2.6k views
-
-
வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் தன்னம்பிக்கை + முயற்சி = சாதனை வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் செவ்வி கண்டவர் : ஆதிரையன் பேராசிரியர் சிவநாதனைப் பற்றி ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் – ஓய்வுபெற்ற அதிபர் (ஊரிக்காடு, வல்வெட்டித்துறை), தாயார்: ஆசிரியர் ஆரம்பக்கல்வி: மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம் இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975) உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980) முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம…
-
- 0 replies
- 845 views
-
-
அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான, அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். 29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அமெரிக்க உளவுத்துறையினர்…
-
- 8 replies
- 2.2k views
-
-
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக ‘ஆம் ஆத்மி‘ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை தனக்கு தருமாறு நுதன் தாக்குர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். அனால் , பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. ‘இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்…
-
- 0 replies
- 450 views
-
-
உச்சாணிக்கொம்பில் சில நிமிடம்... 'ஜோ மெக்னாலி' என்ற புகைபட கலைஞர், உலகின் மிக உயரமான கட்டிடமான துபை "புர்ஜ் கலீஃபா" (Burj Khalifa - 2722' அடி) மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இடி தாங்கி கொம்பின் மேல் வரை ஏறி நின்று மயிர்கூச்செறியும் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இவர் மொத்தமுள்ள 160 மாடிகள் ஏறியபின், உச்சியில் அமைந்துள்ள உலோகத்தாலான 450 அடி உயர குழாயினுள் நுழைந்து ஏறி, கயிற்றல் இடுப்பை கட்டிகொண்டு தொங்கியவாறு படமெடுத்ததை ஓர் புதிய அனுபவமென தெரிவித்துள்ளார். http://youtu.be/30_b22TVY7s செய்தி மூலம்:http://www.dailymail.co.uk/news/article-2338050/Joe-McNally-Photographer-scales…
-
- 3 replies
- 499 views
-
-
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விரும்பாத அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இது, பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வுக்கு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. ஆனால், அத்வானியின் ராஜினாமாவை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து நேற்றிரவு பா.…
-
- 2 replies
- 563 views
-