உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26723 topics in this forum
-
ா மலேசியாவைச் சேர்ந்தவர் என்ஜினியர் கருணாநிதி, 43. அவர் தனது மனைவியை அடித்தது தொடர்பான வழக்கில் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தாம்பின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சனியன்று அவர் மர்மமான முறையில் சிறையில் மயங்கி கிடந்தார். பின்னர் கைதி கருணாநிதி இறந்து போனார். இதனால் அவரை போலீசார் சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர் என்று புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறைச்சாலை பகுதி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கருணாநிதியை சித்ரவதை செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. மேலும் முழுமையான பிரேத பரிசோதனை முடிந்த பிறகே உள்காயங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து தெரியவரும்” என்றார். மலேசியா…
-
- 1 reply
- 450 views
-
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா பிரிவு: இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசு காங்கிரஸ் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என கூறி அங்கு உள்ள 39 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வது என முடிவு எடுத்து உள்ளனர். இது கூறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்து உள்ளனர் அவர் அனுமதி அளித்ததும் ராஜினாமா தங்கள் கடிதங்களை சபாநாயகரிடம் கொடுப்பார்கள். என சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார் http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15181:9-congress-mlas-in-th…
-
- 2 replies
- 574 views
-
-
சீனாவின் வடகிழக்கே கோழி இறைச்சி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது ஐம்பது பேர் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது. இச்சம்பவத்தில் வேறு டஜன்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவில் பணியிடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் பல…
-
- 0 replies
- 458 views
-
-
வடகிழக்கு டெல்லியில் இரவு நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற இளம் பெண் 3 பேரால் காரில் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இதன்போது அவரை 3 பேர் சேர்ந்து கடத்தி ஓடும் காரில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். அதன் பிறகு அவரை நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர் நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனே பொலிஸில்முறைப்பாடு செய்துள்ளனர். அவர்களின் முறைப்பாடின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அன்வர்(30), சந்தீப்(32) மற்றும் அனீஷ்(35) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்துள்ளனர். தன்னை வல்லுறவுக…
-
- 4 replies
- 652 views
-
-
நைஜீரியாவில் இருந்து இளம்பெண்களை கடத்திவந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பெனின் நகர சாலையோரங்களில் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு பெண் உள்பட 6 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்துள்ளனர். வறுமை நிலையில் இருக்கும் இளம்பெண்களை நைஜீரியாவில் இருந்து கடத்திவரும் விபசார தரகர்கள், மொரக்கோ நாட்டிற்கு அழைத்து வருகின்றனர். பின்னர், கள்ளத் தோணியில் ஏற்றி ஸ்பெயின் நாட்டுக்குள் கடத்தி வந்து மாட்ரிட், பார்செலோனா, மலாகா போன்ற முக்கிய நகரங்களின் சாலையோரங்களில் அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். இதற்கு உடன்படாத பெண்களை அடித்தும், கடித்தும், இரும்பு கம்பியால் சூடு போட்டும் சித்ரவதைபடுத்தி இந்த தரகர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுள்ளனர். நைஜீரியாவில் இருந்து இந்த பெண்களை அழைத்து வருவதற…
-
- 0 replies
- 445 views
-
-
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி (28), இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார். இவரை கொலை செய்து விடுவேன் என ஒரு வாலிபர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவரது பெயர் அஷ்ரப் இஸ்லாம் (30). மிகவும் பரபரப்பான லண்டனில் உள்ள போலீஸ் நிலையம் சென்ற இவர் தனக்கு குடியிருக்க வீடு இல்லை என புகார் செய்தார். அதற்காக இளவரசர் ஹாரியை கொலை செய்வேன் என்றும் மிரட்டினார். உடனே, அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது அஸ்பிரிட்ஷ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து தண்டனைக்காக இவர் காத்திருக்கிறார். குற்றவாளி அஷ்ரப் இஸ்லாம் மார்க் டவுன்லி பகுதியை சேர்ந்தவர். கொலை மிரட்டல் விடுத்த இவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்…
-
- 0 replies
- 396 views
-
-
இங்கிலாந்து நாட்டில் 21 வயதான மகனுக்கு பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதற்காக அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. கார்ரி ஜான்சன்(46) தன்னுடைய மனைவியை 8 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்துள்ளார். இதனால் அவர் தனது இரண்டு மகன்களையும் எதிர்காலத்தில் அவர்களின் திருமண நிச்சயதார்த்ததின்போதோ, திருமணத்தின்போதோ மற்ற எதற்காகவும் அவர் வாழ்த்தக்கூடாது என்ற அறிவிப்பு உள்ளூர் பத்திரிகையில் வந்தது. இது அவரது வாழ்நாள் முழுவதற்குமான தடை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை மீறி, அவர் தற்போது தன்னுடைய மகனுக்கு பேஸ்புக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து அறிவித்ததால், விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் இசை அமைப்…
-
- 0 replies
- 464 views
-
-
அமெரிக்கா மீது விஷவாயு தாக்குதல் நடத்த திட்டம் அமெரிக்கா மீது விஷவாயு தாக்குதல் நடத்த அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளது அம்பலமாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல் கய்தா தீவிரவாதிகளின் 2 விஷ வாயு தொழிற்சாலைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த சில மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. ஈராக் அதிபர் நூர் அல் மாலிக் பதவி விலக கோரி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் அல் கய்தா தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு, ராணுவ வீரர்களை கடத்தி கொலை செய்வது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாக்தாத்தில் நேற்று பாதுகாப்பு படை…
-
- 0 replies
- 448 views
-
-
காலியாக உள்ள 14 அமைச்சர்கள் பணியிடம்: விரைவில் நிரப்ப மன்மோகன் சிங் முடிவு புதுடில்லி:மத்திய அமைச்சரவையில் காலியாக உள்ள, 14 அமைச்சர் பணியிடங்களை, பிரதமர், மன்மோகன் சிங் விரைவில் நிரப்ப உள்ளார்.ஜப்பான், தாய்லாந்து நாடுகளுக்கு ற்றுப்பயணம் மேற்கொண்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய பிரதமர், மன்மோகன் சிங், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என, கூறியிருந்தார். அதன்படி பார்த்தால், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், இப்போதே அமைச்சரவை மாற்றம் இருக் கும் என, கூறப்படுகிறது. தற்போது காலியாக உள்ள, 14அமைச்சர்கள் பொறுப்பை, பிற கேபினட் அமைச்சர் களும், இணை அமைச்சர்களும், கூடுதலாக கவனித்து வருகின்றனர். நீதித்துறை:அந்த வகையில், …
-
- 0 replies
- 440 views
-
-
ஜூன் 01, 2013 கூகுள் இணையதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ (F.B.I.) கேட்கும் தகவல்களை அந்த நிறுவனம் தரவேண்டும் என்று சான் ஃப்ரான்சிஸ்கோ (San Francisco) மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதள சேவை வழங்குவோர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளிடம் தகவல்களை கேட்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூகுள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அந்நாட்டு உளவுத்துறையின் தீவிரவாதத் தடுப்பு அதிகாரிகள் நீதிபதியின் ஒப்புதல் இல்லாமலேயே உத்த…
-
- 2 replies
- 405 views
-
-
தமிழக அரசின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான தற்காலிக கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் எந்த வித முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. இதன் அடுத்த கூட்டம் வரும் ஜூன் 12ல் மீண்டும் நடைபெற உள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிட வேண்டும். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசின் இதழில் வெளியிடப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த காவிரி நதிநீர் ஆணையம…
-
- 0 replies
- 348 views
-
-
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு டெல்லியில் இன்று கூடி ஆலோசனை நடத்தியது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஆந்திராவில் நிலவும் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே , குலாம் நபி ஆசாத் , உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். தனித் தெலங்கானா கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சியில் இணையப் போவதாகவும் சிலர் மிரட்டி வருகின்றனர். ஆந்திர மாநில சட்ட…
-
- 0 replies
- 393 views
-
-
1st June 2013 தமிழக அரசின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான தற்காலிக கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் எஸ்.கே.சர்க்கார் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் கூடும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிட வேண்டும். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு,…
-
- 0 replies
- 373 views
-
-
மலேசியாவில் போலீஸ் துன்புறுத்தலின் காரணமாகத்தான் காவலில் வைக்கப்பட்டிருந்த என்.தமீந்திரன் (32) உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமீந்திரன் கடந்த 21-ம் தேதி கோலாலம்பூரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸார் அடித்து துன்புறுத்தியதால்தான் தமீந்திரன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அவரது மனைவி எம்.மேரி கூறுகையில், எனது கணவரின் மரணம் குறித்து விசாரிக்காமல், போலீஸார் எங்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். எங்கள் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை ஒரு போலீஸார் கூட கைது செய்…
-
- 0 replies
- 279 views
-
-
நைல் நதியில் அணை கட்டும் எத்தியோப்பியா! எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாயை மூடும் எகிப்து! கெய்ரோ: உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியா நாடு அணை கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாய் வழியே போக்குவரத்தை தடை செய்ய முடிவெடுத்திருக்கிறது எகிப்து. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் சர்வதேச நதியான நைல், 11 நாடுகளுக்கு பயனளிக்கிறது. குறிப்பாக எகிப்தும் சூடானும் நைல் நதியால் பெரும் பயனடைகின்றன. அதே நேரத்தில் எத்தியோப்பியாவோ மின் உற்பத்திக்காக புதிய அணை ஒன்றை கட்டப் போவதாக அறிவித்து நீரின் போக்கை திசை திருப்பவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எகிப்தும் சூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இத்தாலி மற…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் : 01 ஜூன் 2013 அல்-குவைதா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஒசாமா பின் லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில், பிரதான மூளைசாலியாக செயற்பட்டவர், இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம், இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இலங்கை பேராசிரியருக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான …
-
- 29 replies
- 2.6k views
-
-
தனது வருங்கால கணவன் எப்படி இருக்கவேண்டும் என கற்பனை செய்து ஓவியம் தீட்டிய ஒரு பெண்ணுக்கு அவர் கற்பனை செய்தவாறே அச்சு அசலாக கணவர் கிடைத்துள்ள அதிசயம் இங்கிலாந்து நாட்டில் உள்ள 31 வயது பெண் ஒருவரது வாழ்வில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் சூர்ரி நகரில் அசிக்கும் ஹலோயிமாயோ என்ற 31 வயது பெண், தனது வருங்கால கணவன் குறித்து கற்பனையாக ஓவியம் ஒன்றை வரைந்தார். முகத்தில் தாடி வைத்திருக்கும் அழகிய கணவருடன் தானும் நிற்பது போல ஒரு ஓவியம் வரைந்து தனது படுக்கையறையில் பாதுகாத்து வந்தார். இந்ந்நிலையில் அவருக்கு மைக்கேல் என்பவர் இணையதளத்தில் அறிமுகமாகி இருவரும் நேரில் சந்தித்தபோது அவருடைய கற்பனை கணவரையே நேரில் கண்டு அதிசயித்தார். ஓவியம் வரைந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்த ஹலோயிமாயோவுக்கு கற்…
-
- 1 reply
- 722 views
-
-
இங்கிலாந்து நாட்டில் Tunbridge Wells, Kent என்ற பகுதியை சேர்ந்த முன்னாள் பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் தனது உடலில் விதவிதமான டாட்டூஸ் வரைவதற்காக தனது தாயாரின் £20,000 மதிப்புள்ள நகைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை 23 வயது Kirsty Foord என்பவர், விதவிதமான டாட்டூஸ் வரைந்து கொள்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர். தனது உடலில் டாட்டூஸ் வரைவதற்காக தனது தாயார் பாதுகாத்து வந்த £20,000 மதிப்புள்ள நகைகளை திருடியதாக தாயாரால் புகார் கொடுக்கப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, குத்துசண்டை வீராங்கனைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவருக்கு 18 வாரங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர…
-
- 5 replies
- 447 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒரு தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள், அதாவது ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் Sharon and Julian, என்ற தம்பதிகளுக்கு பிறந்துள்ளன. இந்த நான்கு குழந்தைகளும் 11 வாரங்களுக்கு முன்பே குறைபிரசவத்தில் பிறந்ததால், மருத்துவர்களின் கண்காணிப்பில் இதுவரை பாதுகாப்பாக இருந்தனர். James,Joshua,Lauren and Emily என்று நான்கு குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நான்கு குழந்தைகளும் பூரண நலத்துடன் இருப்பதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நான்கு குழந்தைகளையும் மருத்துவமனையில் 11 வாரங்கள் கண்காணிக்க இந்த தம்பத…
-
- 0 replies
- 451 views
-
-
கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி டெல்லியில் பிசியோதெரபி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ராமன்சிங், திகார் ஜெயில் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தான். மேலும் வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்சிங் ஆகிய 3 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்சு நீதிபதி யோகேஷ் கன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகளை பெண் போலீஸ் அதிகாரி அடையாளம் காட்டி விளக்கினார். இந்த வழக்கு விசாரணை இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15105:medical-student-killed-in-delhi-the-culprit…
-
- 1 reply
- 474 views
-
-
ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமான எதிர்கட்சி தலைவர் இந்தியாவில் நடப்பதுபோல் தேர்தல் என்பது திருவிழா அல்ல மலேசியாவில். அது ஒரு நிகழ்வு. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உடனே தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும். இத்தனையும் ஒரு மாத காலத்தில் நடந்துவிடும். வாக்குப்பதிவு நடந்த அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டு சுடச்சுட முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் கடந்த வாரம் மலேசியாவில் நடந்த 13-வது பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் 133 இடங்களையும், எதிர்கட்சி கூட்டணியான பி.ஆர்., 89 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 2008 தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் கட்சிக்கு 7 இடங்கள் குறைந்து, எதிர்கட்சிக்கு 7 இடங்கள் அதிகரித்துள்ளது. ஆன…
-
- 0 replies
- 419 views
-
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது. '8 வீதமாக உயரும்': பிரதமர் மன்மோகன் நம்பிக்கை கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின…
-
- 0 replies
- 635 views
-
-
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மகளிர்களுக்கு உரிமைகள் வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்புகள் அரைநிர்வாண போராட்டங்கள் நடப்பது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால் பெரும் கட்டுப்பாடுகள் உள்ள அரபுநாடுகளில் ஒன்றான துனிஷியாவில் முதல்முறையாக அரைநிர்வாண போராட்டத்தை பெண்கள் அமைப்பு ஒன்று நடத்தியதால் அரபுநாடுகள் பெரும் அதிர்ச்சியடைந்துளளன. துனிஷியா தலைநகரில் நேற்று மேலாடைகள் இன்றி திடீரென போராட்டம் நடத்திய மூன்று பெண்கள் பிடிபட்டனர். அவர்களில் இரண்டு பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜெர்மனியை சேர்ந்தவர் ஆவார். இவர்களின் அரைநிர்வாண போராட்டத்தால் துனிஷியா தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது http://www.thedipaar.com/new/news/news.php?id=6137…
-
- 3 replies
- 767 views
-
-
ஒண்டோரியாவில் உள்ள Peel Region பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது, அந்நகரையே பரபரப்பாக்கியுள்ளது. 23 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, உயிருக்கு ஆபத்தான காயங்களை உண்டாக்கிய Peel Region பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி Abel Gomes என்பவரை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யும்போதுகூட அவர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்கார சம்பவம் டிசம்பர் 14, 2012 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு நேற்று ஒண்டோரியோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கையுடன், மீண்டும் ஜூன் 24ஆம் தே…
-
- 0 replies
- 452 views
-
-
டொரண்டோவில் 38 வயது தமிழர் ஒருவர் அவருடைய வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் டொரண்டோ தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (டொரண்டோ தமிழர் சுரேந்திரா வைத்திலிங்கம் கொலையை விசாரணை செய்யும் அதிகாரி) டொரண்டோவில் Mantis Road, in the Morningside and Finch avenues area, என்ற பகுதியில் உள்ள தன் வீட்டில் சுரேந்திர வைத்திலிங்கம் என்ற தமிழர் மாலை 3 மணியளவில் தனது வீட்டு தோட்டத்தில் நின்றுகொண்டு, இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், 4 வயது மகனும் இருக்கின்றனர். அவர் தன்னுடைய மகனின் பிறந்தநாளை நேற்றுதான் சந்தோஷம…
-
- 0 replies
- 635 views
-