உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
தனிநாடாகப் பிரிகிறது ஸ்கொட்லாந்து – கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான உடன்பாடு கைச்சாத்து. சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:19 பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்கொட்லாந்து இறையாண்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐரோப்பிய சங்கத்திற்குள் தாம் தனித்து இயங்கும் அமைப்புக்கள் எனக் கருதும் கற்றலோனியா மற்றும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
மேற்கு வங்கத்தில் 1960களில் ஆசிரமம் ஒன்றில் பண்டாரி என்ற பெயரில் நேதாஜி வாழ்ந்தார் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் கடைசி காலம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. அவர் விமான விபத்தில் இறந்தார், பீகாரில் மாறு வேடத்தில் வாழ்ந்தார் என பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 27ம் தேதி சில ஆவணங்களை வெளியிட்டது. அதில் 1960களில் மேற்கு வங்கம் ஒன்றில் ஒரு ஆசிரமத்தில் பண்டாரி என்ற பெயரில் நேதாஜி வசித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த ஆவணங்களில் கடிதம் ஒன்றில் 1…
-
- 0 replies
- 370 views
-
-
மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன. அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன. எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என…
-
- 0 replies
- 295 views
-
-
''ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது'': ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில காரணங்களுக்காக ஒமர் மடீன் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது என்றார் ட்ரம்ப். முன்னர், ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், இதே போன்ற தாக்குதல்களை ந…
-
- 0 replies
- 371 views
-
-
வெள்ளைமாளிகை ஊழியருக்கு கொரோனா !: டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை ? - குழப்பத்தில் வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்ப (வேலட்) அந்தரங்க உதவியாளரும் வெள்ளை மாளிகை ஊழியருமான கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென அச்சம் எழுந்துள்ளதையடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலட் என்றவர் அமெரிக்கா இராணுவப்பிரிவில் பணியாற்றி வருபவர் மட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்காக உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமானவர்கள் என்பதுடன் டிரம்ப் உள்நாட்டு பயணம் செய்தாலும் வெளிநாட்டு பயணம் செய்தாலு…
-
- 0 replies
- 565 views
-
-
அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்கு இறுதிப் போட்டி இரு பெண்களிடையே பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது. அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் - இறுதிப் போட்டி இரு பெண்களிடையே ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைப்பதவிக்கு இரண்டு பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, நாடெங்கிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த அனுப்பிவிட்டனர். உள்துறை அமைச்சர் தெரெசா மே, தற்போதைய பிரதமர் மற்றும் கட்சித் தலைவராக உள்ள டேவிட் கேமரனுக்கு அடுத்து வரவிருக்கும் வேட்பாளர்களில் முன்னணியில் இருக்கிறார். எரிசக்தித் துறை அமைச்சர் ஆண்ட்ரியா லீட்சம் இந்தத் தேர்தலில் இரண்டாவ…
-
- 1 reply
- 263 views
-
-
பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார் தெரஸா மே மற்றும் ஆண்ட்ரியா லீட்சும் இன்னும் சில மணி நேரங்களில் அல்லது வரக்கூடிய நாட்களில் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் உள்துறை அமைச்சர் தெரஸா மே அறிவிக்கப்பட உள்ளார். தெரஸா மேவை எதிர்த்து களத்தில் நின்ற எரி சக்தி அமைச்சர் ஆண்ட்ரியா லீட்சும் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புதிய தலைவர் மிக அவசரமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற தேசிய நலனுக்காக இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக ஆண்ட்ரியா லீட்சும் தெரிவித்துள்ளார். இச்சூழலில், பிரிட்டனின் இரண்டாவது பெண் பிர…
-
- 0 replies
- 196 views
-
-
கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம் கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், ஒருவேளை தங்களது தடுப்பூசி கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்த கூடியது என்று தெரியவந்தால் உடனடியாக ஏற்படும் தேவையை எதிர்கொள்ளும் பொருட்டே தற்போது அந்த தடுப்பூசிக்கான உற்பத்தியை தொடங்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் கூறுகிறார். "நாங்கள் உடனடியாக இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணி…
-
- 0 replies
- 590 views
-
-
இதே நிலை தொடர்ந்தால் கொரோனாவை ஒழிக்க முடியாது...!! தலையில் அடித்துக் கதறும் ஐ.நா பொதுச் செயலாளர்..!! covid-19 தொற்றுநோயைக் கையாள்வதில் சர்வதேச நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதது மிகவும் கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அந்தோணி குட்ரெஸ் விமர்சித்துள்ளார். covid-19 க்கு எதிரான போரில் பல நாடுகள் தனித்தனியாக கொள்கை வகுத்துக்கொள்வதன் மூலம் அந்த வைரஸை தோற்கடிக்க முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றுக்கு எதிராக உலகளவிலான ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை உலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டிய நிலை உள்ளது. நாடுகள் தனித்தனியே செயல்படுவதன் மூலம் பொதுக் கட்டுப்பாடுகள் மீறப்படும் சூழல் உருவாகியுள்ளது என …
-
- 0 replies
- 400 views
-
-
தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை [sunday, 2012-12-30 17:51:58] திருப்பதியில் 3 நாள் நடந்த 4-வது உலக தெலுங்கு மாநாடு நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில் தமிழக கவர்னர் ரோசையா, மத்தியமந்திரி சிரஞ்சீவி, முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அள…
-
- 5 replies
- 693 views
-
-
இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 17:08 PM சிட்னி ஆஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார். கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக பெயர் பெற வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்டு வந்…
-
- 0 replies
- 509 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் சிக்கலான சூழ்நிலையில் உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏங்கெலா மெர்கெல் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் உள்ளது மற்றும் அதன் பிரச்சனைகளை ஒரே கூட்டத்தில் தீர்க்கமுடியாது என ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் தெரிவித்துள்ளார். ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான மாநாட்டில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் பங்கேற்றார். (கோப்புப்படம்) இந்தக் கருத்தை ஸ்லோவாகியாவின் தலைநகர் ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான உச்சி மாநாட்டிற்கு வந்தபோது மெர்கெல் தெரிவித்தார். ஒன்றிய தலைவர்கள் பாதுகாப்பு விவகாரங்கள், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது மற்றும் பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பது போன்றவற்றில் ம…
-
- 1 reply
- 450 views
-
-
சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி! 'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங…
-
- 0 replies
- 1.9k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொசூல் மீதான தாக்குதல் துவங்கியது; அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரிலிருந்து ஐஎஸ் அமைப்பை துரத்துவதற்கான மாபெரும் நடவடிக்கை. * மியான்மரின் வடக்கே ரக்கைன் மாநிலத்தில் மீண்டும் வன்முறை; தீவிரவாதிகளே காரணமென அரசாங்கம் குற்றஞ்சாட்ட, ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுகிறார்கள். * விண்வெளிக்கு பறந்த சீன வீரர்கள்; விண்ணிலுள்ள அந்நாட்டின் விண்ணாய்வுக் கூடத்தில் அடுத்த ஒரு மாதம் தங்கி ஆய்வு செய்வது அவர்களின் நோக்கம்.
-
- 0 replies
- 588 views
-
-
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்ய அமெரிக்கா முடிவு: சிரியா, ஈரான் எதிர்ப்பு சிரியாவின் அதிபர் பஷீர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக கடும் போராட்டங்களை கிளர்ச்சிக் குழுக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 65 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.சிரியாவின் கிளர்ச்சி குழுக்களுக்கு 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்க இருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உதவிகளை உயிரைக்கொல்லும் ஆயுதங்களாக வழங்காமல், கிளர்ச்சிக் குழுக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் மருந்துகள், உணவு பொருட்கள் போன்றவை வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.தெஹரானில் நேற்று சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாலித் அல் மௌ…
-
- 0 replies
- 355 views
-
-
சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: சிவசேனா, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம், புலித் தலை. இதுவும், பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான், சிவசேனாவுக்கு சொந்தமான புலி தலையை, கட்சி கொடிகளில் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார்.…
-
- 0 replies
- 611 views
-
-
அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஸவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்! November 21, 2020 அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஸவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டொலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா. ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஸவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/913…
-
- 0 replies
- 824 views
-
-
சிலியில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/75892-tsunami-alert-in-chile-after-76-richter-earthquake.art
-
- 0 replies
- 353 views
-
-
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில்- ’’இலங்கையில்இ போர் நடைபெறும் பகுதியில் இருந்து 58 ஆயிரத்து 600 பேர் வெளியேறி பாதுகாப்பு பகுதிக்கு வந்திருப்பதாக சற்று முன்தான் டெல்லியில் இருந்து எனக்கு ஃபேக்ஸ்' மூலம் தகவல் வந்துள்ளது. எனவே தற்காலிக போர்நிறுத்தம்' செய்யும்படி இந்திய அரசு விடுத்த கோரிக்கையை இலங்கை ஏற்கவில்லை என்று கூறுவது தவறு. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பொது மக்களை மீட்க நடவடிக்கை எடுத்ததால்தான் இவ்வளவு பேர் அரசு பகுதிக்கு வந்துள்ளனர். இலங்கையில் தீவிரவாதிகளிடம் (விடுதலைப்புலிகள்) எங்களுக்கு அனுதாபம் இல்லை. பொதுமக்கள் மீதுதான் அனுதாபம் உள்ளது. அவர்கள் பாதுகாப்பாக வெளி…
-
- 13 replies
- 2.3k views
-
-
சென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான். இதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர். பலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது. 4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த மர்ம ஆசாமி…
-
- 2 replies
- 2.2k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கான பேச்சுக்களை டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ளார். * தாய்வானில் வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள். தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து ஒரு இந்தோனேசிய பெண் பேசுகிறார். * இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் விமானம் ஒன்றை, ஒரு குடும்பம் மீள உருவாக்க முனைகிறது.
-
- 0 replies
- 391 views
-
-
சர்ச்சைக்குரிய சட்டமூலத்தினை நிறைவேற்றியது பிரான்ஸ்! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது. நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இனி, குறித்த சட்டமூலம் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. பிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவி…
-
- 2 replies
- 720 views
-
-
பாராளுமன்றத்துக்கு 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஓசையின்றி காய்களை நகர்த்தி வருகிறார். இந்த தடவை தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தனது திட்டத்தை நிறைவேற்ற அவர் கடந்த சில தினங்களாக காங்கிரஸ் முதல்-மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் தற்போது 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. 2 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த மாநிலங்களில் கூடுதல் எம்.பி.க்களை பெற்றாலே போதும் தனி மெஜாரிட்டி பெற்று விடலாம் என்று…
-
- 3 replies
- 635 views
-
-
ஒபாமாவின் நம்பிக்கையைத் தகர்த்த கைதி! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் விடுவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கைதியொருவர் மீண்டும் அதே குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1992ஆம் ஆண்டு, ரொபர்ட் எம்.கில் (68) என்பவர் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த பொதுமன்னிப்பின் பேரில் 1,385 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில், கடந்த வாரம் 500 கிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதை மருந்தை வினியோகிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ர…
-
- 2 replies
- 477 views
-
-
சூயஸ் கால்வாயில் டிராபிக் ஜாம்.. 400 மீட்டர் ராட்சத கப்பல் தரைதட்டியது.. உலகின் மிகவும் பிசியாக இருக்கும் சூயஸ் கால்வாயில் தைவான் நாட்டின் எவர்கீரின் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற 400 அடி நீளம் கொண்டு ராட்சத சரக்கு கப்பல் இக்கால்வாயின் இரு பக்கத்தின் தரையில் மோதி சிக்கிக்கொண்டு உள்ளது. இதனால் உலகக் கடல் வழி போக்குவரத்தில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.சூயஸ் கால்வாயில் சரக்குகள் தேக்கம் சுமார் 2.20 லட்சம் டன் எடை கொண்ட இந்தக் கப்பலைத் தரையில் இருந்து விடுவிக்கவும், போக்குவரத்து வழியை…
-
- 43 replies
- 3.2k views
-