உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஒரு முதியவரின் புகையிலைப் பை சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திலிருந்து 800 பேரை காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் கடந்த சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10,500 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அதே சமயம், சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியூஜியாயிங் கிராமத்தைச் சேர்ந்த 800 பேர், முதியவர் ஒருவரின் புகையிலைப் பையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லீ சியாங்கே என்ற அந்த 68 வயது முதியவர் புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் தன்னுடைய புகையிலைப் பையை எப்போதும் தன்னுடைய கையில் கட்டியிருப்பது வழக்கம்.சம்ப…
-
- 3 replies
- 507 views
-
-
டெல்லி: பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது. இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன…
-
- 0 replies
- 375 views
-
-
தூக்கு தண்டனை விதிப்பதால் நியாயம் கிடைத்து விடப் போவதில்லை. எனவே அதை கைவிடும்படி இந்தியாவிடம் ஜெர்மனி தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் மைக்கேல் ஸ்டெயினர் கூறினார். தூக்கு தண்டனை விதிப்பதை கொள்கை அளவில் ஜெர்மனி ஏற்கவில்லை. இதுதான் எங்கள் நாட்டின் நிலைப்பாடு. இந்த நிலையை வேறு நாடுகளும் பின்பற்றுகின்றன என்பதை இந்தியாவும் அறியும். காலிஸ்தான் விடுதலை இயக்க பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லர் உள்ளிட்ட எந்த தூக்கு தண்டனை கைதிகளுக்கும் இந்தியா அதை நிறைவேற்றக்கூடாது என்பதே எங்களின் நிலை. எனினும் தனிப்பட்ட முறையில் இந்தியாவிடம் இதுபோன்ற கோரிக்கை ஜெர்மனி தரப்பில் வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=81363&category=…
-
- 1 reply
- 313 views
-
-
சுவிட்சர்லாந்து வங்கிகள் இனி பாதுகாத்து வருகின்ற வாடிக்கையாளர்களின் ரகசியக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்று நிதி ஆலோசகர் லுக் தெவெனோஸ் (Luc Thevenoz) கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வரி ஏய்ப்புக்கு எதிராகப் பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இனி வங்கிகள் ரகசியத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியம். தற்பொழுது காலச்சூழ்நிலை மாறிவிட்டதால் வங்கிகள் தாமாகவே தமது வாடிக்கையாளர் பெயர் மற்றும் வங்கியின் இருப்பு பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருபது நாடுகள் ஒரு குழுவாக இணைந்து, வரி ஏய்ப்பைத் தடுக்க வங்கியிருப்பு குறித்து பரிமாறிக் கொள்ள கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டம் நடந்த மறுநாள் தெவனோஸ் இன…
-
- 0 replies
- 256 views
-
-
பாகிஸ்தானில், கராச்சி நகரில் தேர்தல் கூட்டங்களின் போது நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்தனர். முத்தாகிதா கியுமி இயக்க கட்சியின் தேர்தல் அலுவலகத்தின் அருகே இரண்டு குண்டுகள் வெடித்தன. அதில் 2 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். இதே போல பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது 2 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். கராச்சி நகரில் தொடர்ந்து 3 வது நாளாக தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்து வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு எல்லாம் தெஹ்ரீக் ஈ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. http://puthiyathalaimurai.tv/bomb-blast-in-pakistan-4-dead
-
- 0 replies
- 235 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது நடந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை இலக்குவைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் பெரும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, தாக்குதல், வன்முறை பாஸ்டனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரொன்றை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாஸ்டன் மராத்தன் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள படங்களில், வெள்ளைநிற பேஸ்பால் தொப்பியொன்றை அணிந்தவாறு காணப்படும் சந்த…
-
- 22 replies
- 1.2k views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இதன் எதிரொலியாகத்தான் 2ஜி அலைக்கற்றை ஜேபிசி குழப்பமும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமாரின் தன்னிச்சையான செயல்பாடும் காங்கிரஸ் மேலிடத்துக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ஆட்சியைத் தக்க வைக்க உத்திகளைக் கையாளுவதா? அல்லது கட்சிக்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதா? என்ற தடுமாற்றத்தில் சோனியா காந்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது முதல் கடந்த 26-ஆம் தேதி …
-
- 0 replies
- 397 views
-
-
கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, 'கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சி, ஊழலில் உலக சாதனை படைத்துவிட்டது' என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிக்கானில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:- பா.ஜ.க.வைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னதாக ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீது படிந்துள்ள கறைகளை சுத்தப்படுத்த வேண்டும். 'ஏழை மக்களோடு இருப்போம்' என்ற வாக்குறுதியுடன் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, இதுவரை ஏழைகளின் நல்வாழ்வுக்காக எந்த நடவடிக்கை…
-
- 0 replies
- 322 views
-
-
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிகம் சக்தி வாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்ட 27 நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. டில்லியில் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பாதுகாப்பு வலிமை, மக்கள்தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா 2வது இடத்திலும், அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளன. வலிமையும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நகரங்களில் பீஜிங்கிற்கு அடித்தபடியாகவே டில்லி உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீன…
-
- 2 replies
- 2.2k views
-
-
போபாலில் பாரத் மிகுமின் நிலையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டட இடிபாடுகளுக்கிடையே 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாரத் மிகு மின் நிலையம் (பெல்) நகர் உள்ளது. இங்கு பெல் சார்பில் கஸ்தூரிபா காந்தி என்ற பெயரில், மருத்துவமனை ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. 350 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையில் பெண்கள் வார்டின் ஒருபகுதி மேற்கூரை, இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டுள்ளனர். மேலும், குழந்தைகள் உட்பட 7 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்…
-
- 0 replies
- 299 views
-
-
டெல்லியில் கடந்த ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை தொடர்கிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் கூட பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தெற்கு டெல்லியில் உள்ள பதர்பூரில் உள்ள பொது கழிவறையில் நேற்று மாலை 6 வயது சிறுமி கறுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அந்த சிறுமியை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபரேசனுக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் அபாய கட்டத்தை தாண்டுவார் என்ற டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூச…
-
- 1 reply
- 455 views
-
-
கீழே உள்ளது முக நூலில் இன்று படித்த ஒரு பதிவு. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. -தமிழர்களின் பணத்தை சுரண்டி அந்தப் பணத்தை வைத்தே தமிழர்களுக்கு துரோகம் இழைக்கு...ம் சண் கும்பலின் அடிவருடிகளினால் பரப்பப்படும் பொய்யான செய்தியே இது. இதைப் படித்து விட்டு இந்த பவுத்த சிங்கள சங்கக்காரா நல்லவன், நேர்மையானவன் என்று நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இறுகக முடியாது. முதலில் அந்தப் பதிவினை படியுங்கள் "யார் இந்த குமார் சங்கக்கார? ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன். 83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங…
-
- 1 reply
- 560 views
-
-
பாஸ்டன் நகரில் தாக்குதல் நடத்திய சகோதரர்கள் நியூ யார்க்கை தகர்க்கவும் திட்டமிட்டிருந்தனர் பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2 சக்தி வாய்ந்த குக்கர் குண்டுகள் வெடித்தன.இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். சுமார் 180 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் கை, கால்களை அகற்றிய பின்னரே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.குண்டு வெடித்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகத்திற்குரிய இரு நபர்களை போலீசார் தேடி வந்தனர். இவர்களில் ஒருவன் போலீசாரின் தேடுதல் வேட்டையின்போது பலியானான். அவனது தம்பி என்பவனை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் கண்டையில் படு…
-
- 0 replies
- 353 views
-
-
2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம் மூலம்: T.S.R. சுப்ரமணியன் (தி நீயூ சண்டே எக்ஸ்பிரஸ், 31/3/13) தமிழாக்கம்: எஸ். ராமன் 2G-அலைக்கற்றைப் பங்கீட்டில் நடந்த ஊழலை விசாரிக்க அமைத்த பாராளுமன்றக் கூட்டுக் குழு (JPC) தனது இகழத்தக்கத் தன்மையைத் தொடர்ந்துகொண்டு இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது இருக்கும் பாராளுமன்றம் அதற்குள் கலைக்கப்படவில்லை என்றால் இரண்டாகப் பிளவு கண்ட, உப்புச் சப்பில்லாத, எதற்கும் உதவாத ஓர் அறிக்கை அந்தக் குழுவிடமிருந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த இரண்டு சம்பவங்களை நாம் கவனிக்கவேண்டும். அந்த JPC முன்பாகத் தான் நேரில் வந்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள …
-
- 0 replies
- 437 views
-
-
எல்லையில் நடப்பது என்ன? சீனா ஏன் இந்தியாவை கைபற்ற வேண்டும் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளே வந்து முகாமிட்டுள்ள அக்கிரமம் வர ஒரு வாரம் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடக்கு எல்லையாக இமயமலை கிடைத்தது இயற்கையின் வரம் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள். வரமா சாபமா என்று புரியாமல் இப்போது விழிக்கிறோம். அந்த அளவுக்கு சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் ஆன நமது எல்லை கண்காணிப்பு வளையத்துக்கு அப்பாற்பட்டதாக விளங்குகிறது. மனித நடமாட்டமோ மேய்ச்சல் வெளிகளோ இல்லாத பனிமலை பிராந்தியத்தில் நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகள் மாதிரி ஆங்காங்கே அமைத்து வீரர்கள் கையில் தொலைநோக்கிகள் கொடுத்து கண்காணிப்பது சாத்தியமில்லைதான். நமது நண…
-
- 0 replies
- 717 views
-
-
April 23, 2013 செவவாய்கிழமை காலை லிபியாவின் திரிப்போலியிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் மேல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய தூதரகம் அங்கு காவற் கடமையில் ஈடுப்ட்டிருந்த Gendarme ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளானதோடு மற்றவர் சிறு காயங்களிறகு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது. அதிகாலை 7 மணியளவில் தூதரகத்தின் முன்னால் குண்டு வெடித்துள்ளது. லிபியக் காவற்துறையினர் இது மகிழுந்து ஒன்றினுள் வைத்து வெடிக்கப்பட்ட குண்டு என்று தெரிவித்துள்ளனர். தூதரகத்தின் முக்கிய பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளானதோடு ஒரு பகுதி சுவர் தீககிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தூதரக ஊழியர்களும் அதிகாரிகளும் அச் சமயத்தில் தூதரகத்தினுள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவி…
-
- 0 replies
- 311 views
-
-
25 ஏப்ரல் 2013 அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரிக் ஓ’டெல் ஸ்மித் என்ற நபரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என இலினாய்ஸ் மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நபரை காவல்துறையினர் துரத்திச் சென்று, சுட்டுக் கொன்றதாகவும் அவர் கூறினார். எதற்காக அந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தினார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மான்செஸ்டர் பகுதியில் உள்ள…
-
- 4 replies
- 494 views
-
-
மலேஷியாவில் நடைபெறும், உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில், செவி திறனற்ற நெகால் பங்கேற்க உள்ளார். பிரிட்டனில் லீசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நெகால் போகெய்தா, 20. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், "மிஸ் இந்தியா யு.கே.,' பட்டத்தை வென்றார். கேட்கும் திறன் இல்லாத நெகால், தங்கை ஜெய்ஷா மூலம் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். மலேசியாவின், கோலாலம்பூர் நகரில், வரும், 27ம் தேதி, "உலகளாவிய மிஸ் இந்தியா' போட்டி நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 40 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியில் நெகால், பங்கேற்கிறார். ""இந்திய பாரம்பரிய உடை போட்டி, அறிவு திறன் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுவேன். ஊனமுற்ற பெண்கள் பெரிய அள…
-
- 0 replies
- 433 views
-
-
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மைவந்த் மாவட்டத்தின் கந்தகர் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று டாங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள் என்றும் அந்நாட்டு அரசு தரப்பு தகவல் தெரிவத்துள்ளது. இன்று காலை சுமார் 4 மணி அளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலான ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/26/1130426040_1.htm
-
- 0 replies
- 370 views
-
-
25 ஏப்ரல், 2013 வடமேற்கு பர்மாவில் சீனாவின் உதவியுடன் இயங்கும் தாமிரச் சுரங்கத்துக்கு அருகே உள்ள ஒரு சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது, நடந்த வன்செயல்களில் 10 பேயர் காயமடைந்தனர். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனிவா பிரதேசத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களின்போது, உள்ளூர் மக்கள் , நிலத்தை உழுவதைத் தடுக்க போலிசார் தலையிட்ட பின்னர், ஒருவர் காலில் சுடப்பட்டார். இந்த நிலத்தை , பர்மிய சீன கூட்டு நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் இந்த சுரங்க நிறுவனம், ஒரு சில உள்ளூர் விவசாயிகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, கையெடுத்துக்கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தினை சில விவசாயிகள் நிராகரித்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் போலிசார் இந்த சுரங்கத்தை மறிக…
-
- 0 replies
- 318 views
-
-
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான க்ளைவ் பால்மர், நாட்டின் பிரதமராகும் கனவோடு அரசியல் கட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். மூழ்கிய டைட்டானிக் கப்பலை போன்ற ஒரு கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ளதாக அறிவித்த க்ளைவ் பால்மர், சுரங்கத் தொழிற்துறையைச் சேர்ந்த பெரும் பணமுதலை. அவர் அண்மைக் கால செய்திகளில் பெருமளவில் பேசப்பட்டு வந்திருக்கிறார். எதிர்வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 1945-இல் கலைக்கப்பட்ட ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சிக்கு மீள உயிர்க்கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டு மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்குமாக பிரிந்துவிட்டதால் இந்தக் கட்சி க…
-
- 0 replies
- 289 views
-
-
சிரியா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக கிடைத்துவரும் ஆதாரங்களின்படி, அந்நாடு போர்க்குற்றம் புரிவதாக கருதப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆயுதங்களின் பயன்பாடு, சிரியாவில் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு சர்வதேச சமூகத்தை தள்ளிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் பிரிட்டிஷ் படைகள் செல்வதை தான் விரும்பவில்லை என்றும் பிரதமர் கேமரன் தெரிவித்துள்ளார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக வெளிவருகின்ற தகவல்களைக் கொண்டு, அங்கு ஐநா முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டுமென்று முன்னதாக அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. சிரிய அரச படைகளால், ஸாரீன் நச்சுவாயு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க புல…
-
- 0 replies
- 251 views
-
-
ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் வடக்கே ராமன்ஸ்கீ என்ற கிராமத்தில், மனநல சிகிச்சை மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 36 நோயாளிகளும் 2 மருத்துவப் பணியாளர்களும் எரிந்து உயிரிழந்துள்ளனர். 1950கள் காலப்பகுதியைச் சேர்ந்த, மரப் பலகைகளாலான இந்த மருத்துவமனைக் கட்டடத்தில் பரவிய தீயில் மூன்று பேர் மட்டும் தான் உயிருடன் தப்பியுள்ளனர். அதிகாலைப் பொழுதில் இந்த தீ ஏற்பட்டுள்ளது. பலர் தீயிலிருந்து தப்பமுயன்ற போது கொல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அவர்களின் படுக்கையிலேயே எரிந்துபோயுள்ளனர். யன்னல்களில் போடப்பட்டிருந்த கம்பிகளே எவரையும் காப்பாற்றி வெளியேற்றமுடியாத அளவுக்குத் தடையாக இருந்துள்ளன. மின்கசிவே தீ ஏற்படக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தீ வைக்…
-
- 0 replies
- 240 views
-
-
அமெரிக்காவில் அண்மையில் ஏற்பட்ட பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனில்திரிபாதி (22) பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ரோட் ஜலேண்ட் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் சுனில்திரிபாதி (22). இவர் பாஸ்டனில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். பாஸ்டனில் நடந்த மராத்தான் ஓட்ட பந்தயத்தில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்துக்கு பிறகு, சுனில்திரிபாதி திடீரென்று மாயமானார். இதனால். பாஸ்டன் குண்டு வெடிப்பில் இவருக்கு சம்பந்தம் உள்ளது போன்ற என அவதூறு செய்திகள் வெளியாகின. உண்மையான குற்றவாளிககளை அமெரிக்க போலீசார் கண்டறிந்த பின்னர், குண்டு வெடிப்பில் சுனிலுக்கு எந்தவித…
-
- 0 replies
- 246 views
-
-
புதுடெல்லி: நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமாரும் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினரின் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், இது தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை, பிரதமர் அலுவலகம் மற்றும் 2 மத்திய அமைச்சர்களுடன் பகிர்ந்துகொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை காப்பாற்ற சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார், தனது பதவியை தவறாக பயன்படுத…
-
- 0 replies
- 272 views
-