Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தென் சீனக் கடலில் பெரும்பாலான கடற்பரப்பை சீனா தனக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடுவதற்கு எதிராக போராட முயன்ற டஜன்கணக்கான வியட்நாம் செயற்பாட்டாளர்கள் தலைநகர் ஹனோயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனா உரிமை கோருவதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என்று சர்வதேச நடுவர் நீதிமன்றம் கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருப்பதை தொடர்ந்து இந்த செயற்பாட்டாளர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.சீனாவின் எல்லை கோரிக்கையை வியட்நாம் அரசு எதிர்த்தாலும், உள்நாட்டில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குமென அஞ்சி, இத்தகைய பொது போராட்டங்களை வழக்கமாக அடக்கி வருகிறது என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். த ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசத் தீர்பாயத்திற்கு எல்லை எதுவும் இல்லை எ…

  2. இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன்னர் டேட்டிங் சென்ற திருமணமாகாத ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி கொடுக்கப்பட்டுள்ளது.இந்தோனேஷியாவில் உள்ள Aceh மாகாணம், தொன்றுதொட்டு இஸ்லாமிய முறைகளை பின்பற்றி வரும் மாகாணம் ஆகும்.இந்த மாகாணத்தில், ஓரினச்சேர்க்கை உறவு, திருமணத்திற்கு முன்னர் உறவு கொள்வது, காதலர்களாக வெளியில் சுற்றுவது என்பது மிகவும் தவறானது மட்டுமல்லாமல் அதனை இஸ்லாமிய சட்டமும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று, அதனையும் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சட்டத்தின் தண்டனையில் இருந்து இவர்கள் தப்பவே முடியாது. இந்நிலையில், இந்த மாகாணத்தை சேர்ந்த ஜோடிகள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து ஜாலியாக டேட்டிங் சென்றுள்ளனர்.இவர்களது…

  3. தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்டு வழங்க பரிசீலனை தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள், ஒரு சிறப்பு சிம் கார்டை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் அதிகாரிகள் வெளிநாட்டு பயணிகளின் அலைபேசி, இயக்கத்தில் இல்லாத நேரத்திலும் அதை கண்காணிக்க முடியும். கோப்புப்படம் தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுத் துறை, இந்த நடவடிக்கையை கொள்கையளவில் அங்கீகரித்துள்ளது. இது தனிநபர்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்ற கூற்றை அது மறுத்துள்ளது. தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த திட்டம் குற்ற நடவடிக்கையை தடுக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தாய்…

  4. சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அடித்த பெரும் சிரிப்பலை ஏற்படுத்தியது. தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதியிடம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறான், கலைஞர் டி.வி. அமிர்தம், கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு ஆகியோர் குடும்பத்தோடு சந்தித்து ஆசி பெற்றனர். அதே போல, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன். திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல முக்கிய வி.வி.ஐ.பிக்கள் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் நூற்றுக்கான கட்சியினரும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்தித்து ஆசி பெற்றனர். வழக்கமாக எ…

  5. சீனாவின் ஹாங்சௌவில் ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்காக சீனாவின் ஹாங்சௌ நகரில் குழுமியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் முக்கியமானதாக இருக்கும். நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதில் ஏற்படும் மந்தமான போக்கு சிறிய நாடுகளை அச்சுறுத்துவதாக அமையும் என்று ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூன் எச்சரித்துள்ளார். இந்த உச்சி மாநாட்டை முன்னிட்டு பருவகால மாற்றம் பற்றிய பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள அமெரிக்காவையும், சீனாவையும் பாராட்டிய அவர், ஜி 20 நாடுகள் இந்த நாடுகளின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். …

  6. நாளை `தெலுங்கானா' அறிவிப்பு வெளியாகுமா?: பதற்றத்தில் ஹைதராபாத் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்த மத்திய அரசின் முடிவு நாளை அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பினால் ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அனேகமாக தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகிவிடும் என்றே கூறப்படுகிறது. அப்படி தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகுமானால் ாராயலசீமாா என்ற தனி மாநிலத்துக்கான கோரிக்கையும் வலுப்பெறும். அத்துடன் ஹைதராபாத் எந்த பகுதிக்கு தலைநகர் என்ற குழப்பமும் உருவாகும். இத்தகைய பதற்றமான சூழலில் 36 மணி நேர போராட்டத்தை தெலுங்கான…

    • 2 replies
    • 484 views
  7. 1996 ஆம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியுடன் உடற்பருமன் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மோதல் 2016-09-29 14:57:56 1996 ஆம் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ரா­ணி­யாக (பிர­பஞ்ச அழ­கு­ராணி) தெரி­வா­கி­யி­ருந்த யுவ­தியை அவரின் உடற்­ப­ருமன் கார­ண­மாக திட்­டிய டொனால்ட் ட்ரம்ப், 20 வரு­டங்­களின் பின்னர் இப்­போது பதி­ல­டியை எதிர்­கொண்­டுள்ளார். அமெ­ரிக்கக் குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்ப்­புக்கும் ஒரு முன்னாள் அழ­கு­ரா­ணிக்கும் ஏன் மோதல் ஏற்­பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். மிஸ் யூனிவர்ஸ் மற்றும் மிஸ் யூ.எஸ்.ஏ. அழ­கு­ராணி போட்­டி­களை நடத்­திய மிஸ் யூனிவர்ஸ் இன்­கோர்…

  8. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயியக் கிளர்ச்சிக்காரர்கள் அரசு அதிகாரிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுடைய அழைப்பை மாநில அரசு வரவேற்றுள்ளது. பேச்சுவாரத்தைகள் நடப்பதற்கு முன்பு அதற்கு ஏதுவான சூழலை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என்று கிளர்ச்சிக்காரர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். உள்ளூர் பழங்குடியின மக்களை ஒடுக்கப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறி அது நடந்தால்தான் ஏதுவான சூழல் உருவாகும் என்று அவர்கள் கூறினர். இந்தியாவின் கிழக்கு மத்திய மற்றும் தென் மாநிலங்களில் குறிப்பிட்ட வட்டாரங்களில் மாவோயிய கிளர்ச்சிக்கார்கள் செயல்பட்டுவருகிறார்கள். ஏழைகள் மற்றும் நிலமற்றவர்களுக்காக தாங்கள் போராடுவதாக அவர்கள்…

  9. சனிக்கிழமை, 9, மார்ச் 2013 (10:32 IST) புதிய போப் ஆண்டவர்! மார்ச் 12ம் தேதி தேர்வு! புதிய போப் ஆண்டவரை தேர்ந்து எடுபபதற்கான நடைமுறைகள் வரும் 12ஆம் தேதி தொடங்குகின்றன. வாடிகன் நகரில் கடந்த ஆறு நாட்களாக ஆலோசனை செய்து வந்த கத்தோலிக்க மத கார்டினல்கள், தற்போது தேர்வு தேதியை அறிவித்துள்ளனர். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் 115 கார்டினல்களும் வாடிகன் நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர். தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய போப் ஆண்டவர் யார் என்ற எதிர்பார்ப்பு, கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93749

  10. (CNN)Thousands of protesters targeted Trump buildings in New York and Chicago on Wednesday, chanting anti-Trump slogans as protests against President-elect Donald Trump popped up throughout the United States. In Austin, Texas, protesters blocked a highway. Students burned a flag on the campus of American University in Washington, and they walked out of class in high schools and colleges across the country the day after the presidential election. http://www.cnn.com/2016/11/09/politics/election-results-reaction-streets/index.html நியூயோர்க் சிக்காக்கோ உட்பட பல மாநிலங்களில் வீதிகளை மறித்து ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்

  11. வியட்நாமைத் தாக்கிய சூறாவளி- பல இலட்சம் மக்கள் பாதிப்பு 48 Views வியட்நாமைத் தாக்கிய சூறாவளியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சூறாவளியின் காரணமாக 174 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை காலை, உள்ளுர் நேரம் 11.00 மணிக்கு வியட்நாமில் வீசிய ஷமொலாவேஷ என்றழைக்கப்படும் சூறாவளி கடந்த இருபது வருடங்களில் தென்கிழக்கு ஆசியாவில் வீசிய சூறாவளிகளுள் மிகவும் பலமானது எனக் கருதப்படுகின்றது. இந்த சூறாவளியின் காரணமாக ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான மழைவீழ்ச்சி எதிர்வரும் நாட்களுக்குத் தொடரக்கூடும் என்றும் ஏற்கனவே பல இடர்களை அனுபவிக்கின்ற குடும்பங்களின் நிலைமை…

  12. சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் குறித்தும் எங்களது கொள்கை, லட்சியம், பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரு மகிழ்வையும், பெருமையையும் தருவதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்தான் நீடிக்கும் என முதல்வர் கருணாநிதி நேற்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும் அவர்களது லட்சியத்தையும், பணியையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் பற்றி கூறியுள்ள கருத்து எமக்கு பெருமகிழ்வையும், பெருமையையும் அளிக்கிறது.…

  13. 5 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. அவர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ராஜினாமா செய்ய அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் நீரஜ்குமார் கூறுகையில், ‘‘எனது ராஜினாமா சமுதாயத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உதவுமானால், நான் ஆயிரம் முறை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், இதனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை’’ என்று தெரிவித்தார். மேலும், சிறுமி பாலியல் வல்லுறவு சம்பவம் உளவியல் சம்பந்தப்பட்டது என்றும், யாரும் ராஜினாமா செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என்றும் கமிஷனர்…

    • 0 replies
    • 389 views
  14. என்ன நண்பர்களே தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா ? நான் எப்பொழுதுதாவதுதான் இணையத்துக்கு வர இயலும். நான் மட்டுமல்ல இங்குள்ள பல தமிழுணர்வாளர்களும் அப்படிதான். ஆனால் எந்நேரமும் தமிழ்மணத்தில் நாம் CPIML SOC அய்யர்வாள்களைக்காணலாம். கோவில்களில் பூணூல் போட்ட அய்யர்வாள் என்றால் வலைப்பூக்களில் பூணூலின் மேல் செஞ்சட்டை போட்ட CPI ML SOC மக இக அய்யர்வாள்களைக்காணலாம். புரட்சி மார்க்சியம் என்று எந்நேரமும் வலைபூக்களில் எழுதிக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக வினருக்கு வேலையே குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு எழுதுவதுதான் போலும் இல்லையென்றால் பி.இரயாகரனிடம் இருந்து தடசணை வராது அல்லவா. கோவிலில் தட்டிலே காணிக்கை , இவர்களுக்கு தமிழர்களை குழப்பினால் பிரான்ஸ் …

    • 2 replies
    • 1.5k views
  15. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது. '8 வீதமாக உயரும்': பிரதமர் மன்மோகன் நம்பிக்கை கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின…

  16. முஸ்லீம் நாடுகளில் ஒன்றான துனிஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் முன் Femen அமைப்பை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் திடீரென டாப்லெஸ்ஸாக தோன்றி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முஸ்லீம் மத வழக்கின்படி அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. கைது செய்யப்பட்ட மூன்று இளம்பெண்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என Femen அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அரைநிர்வாணத்தோடு நேற்று பாரீஸ் நகரில் வழிபாடு நடத்தினர். மேலும் அவர்கள் பாரீஸிலுள்ள துனிஷியா தூதரகம் முன் மேலாடையின்றி நின்று போராட்டம் செய்தனர். அவர்களுடைய திறந்த மார்பில் Allah made me free மற்றும் 'woman spring is coming' போன்ற வாசகக்களை…

  17. வானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை வானொலி நேரலை நிகழ்ச்சியொன்றின்போது ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டொமினிக்கன் குடியரசு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்கொலையுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். மற்றையவர் அதை முகநூல் பக்கம் மூலம் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒலிபரப்பு அறைக்குள் புகுந்த மூவர் தொகுப்பாளரைச் சுடத் தொடங்கினர். திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், முகநூலில் நேரலை ஒளிபரப்புச் செய்தவர் பயந்து அலறத் தொடங்கினார். இதனால், தாக்குதல்தாரிகள் அவர் பக்கம் திரும்பி …

  18. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் ம…

  19. தமிழருவி வானொலியின் நேயர்களுக்கு வணக்கம். நாம் உங்களுக்காக தாயகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கொடுமையானதும், அநீதியானதுமான நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியமையால் இலங்கை அரசாங்கத்தினதும், அதனோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். அத்தோடு அவர்கள் எமது வனொலியின் சேவையை முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதனால் எமது ஒலிபரப்புகளில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதனை உங்களுக்கு பணிவுடன் அறியத்தருகின்றோம். நன்றி நிர்வாகம் தமிழருவி வானொலி www.tamilaruvifm.com தமிழருவி வானொலியின் நேரடி

    • 0 replies
    • 1.4k views
  20. இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என்பதை யூகிப்ப…

  21. ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள் பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, 2001 முதல் சுமார் 2400 அமெரிக்க படையினர் ஆஃப்கன் மண்ணில் உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்) அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ளன. ஆகஸ்டு 31க்குள் வெளியேற்ற நடவடிக்கைளை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வைத்திருந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்…

  22. 8 U.S. soldiers killed in bold militant attack 04/10/2009 8:14:09 PM CTV.ca News Staff Hundreds of insurgents raided a pair of remote military outposts in Afghanistan, killing eight U.S. soldiers and capturing at least 20 Afghan security troops in the deadliest attack on U.S. forces in more than a year. U.S. media are referring to the incident as the "Black Hawk Down" of Afghanistan, as 48 U.S. troops and 25 Afghan soldiers were outnumbered at least three to one in a fierce gunbattle. The battle broke out at dawn Saturday in Nuristan province, near the Pakistan border, and went on throughout the day. The heavy loss of life comes at the sa…

    • 0 replies
    • 502 views
  23. ஜெருசலேம்: காசாவிலிருந்து இஸ்ரேல் வரைத் தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றினை இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டில்,இதேபோல் தோண்டப்பட்ட சுரங்கப்பாதை வழியே இஸ்ரேலிய ராணுவ வீரரான கிலா ஸ்காலிட் என்பவரைக் ஹமாஸ் ராணுவத்தினர் கடத்திச் சென்று ஐந்து வருடம் காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றின் நுழைவு வாயிலை இஸ்ரேல்-காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் இஸ்ரேலிய ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதையானது இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டுபிடிக்கும் வரை…

  24. சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில ட்ரக் ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது. சீனாவில் தற்போது நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அடிவாங்கியிருக்கும் சர்வதேச விநியோக சங்கிலி இந்த சமீபத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.