Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க, ஒரு மில்லியன் டாலர்கள் தொகையை பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்ட பிலிப்பைன்ஸ் அரசு மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியான ஜோசெலிடொ ஸப்பனட்டா, சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் சவுதி அரேபியாவின் சட்டப்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அவர்கள் கேட்கும் தொகையை தந்துவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார். இது வரை சுமார் 130,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது. சௌதி அரேபிய அரசு இந்தத் தொகையை தருவதற்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை…

  2. பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்து, அவரை கைது செய்யும்படி நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்த முஷாரப் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். நீதிபதிகள் தம்மை கைது செய்யும் உத்தரவு பிறப்பித்ததும் நீதிமன்றத்திலிருந்த முஷாரப், தனது பாதுகாவலர்கள் புடைசூழ அங்கிருந்து வெளியேறினார். அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய முஷாரப், தனது குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறி இஸ்லாமாபாத்துக்கு வெளியில் இருக்கும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த தனது பண்ணைவீட்டுக்கு சென்றார். முஷாரப்பை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்க…

  3. 17 ஏப்ரல், 2013 ஆப்ரிக்காவிலேயே மிகப் பெரிய பணக்காரரானான நைஜீரிய நாட்டின் அலிக்கோ டாங்கோட்டே தமது நாட்டில் ஒரு பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்கப் போவதாகக் கூறியுள்ளார். அந்தத் தொழிற்சாலை 2016 ஆம் ஆண்டு வாக்கில் நாளொன்றுக்கு 4,50,000 பீப்பாய்கள் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தச் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்க எட்டு பில்லியன் டாலர்கள் ஆகும் என்கிறார் அலிக்கோ டாங்கோட்டே. ஆப்ரிக்காவிலேயே கச்சா எண்ணெயை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக நைஜீரியா இருந்தாலும், அதை முழுமையாக சுத்திகரிக்க முடியாமல், பெரும்பாலும் இறக்குமதிகளையே அந்நாடு நம்பியுள்ளது. அவ்வகையில் இறக்குமதி செய்யப்…

  4. அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தின் வோகோ பகுதியில் அமைந்திருக்கும் உர ஆலை ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிப்பையடுத்து ஆலையின் கட்டிடங்கள் மற்றும் அருகிலுள்ள குடியிப்புப் பகுதிகளில் தீ பரவியுள்ளது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர் மேலும் பலர் தீ பரவியுள்ள கட்டடங்களில் சிக்குண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போஸ்டன் குண்டு வெடிப்பை தொடர்ந்து இடம்பெற்றுள்ள இந்த உர ஆலை வெடிப்பிற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.

  5. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது. மசோதாவிற்கு ஆதரவாக 44 ஓட்டுகளும் எதிராக 33 ஓட்டுகளும் கிடைத்ததால் இந்த மசோதா தங்குதடையின்றி நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற பெரிதும் முயற்சியெடுத்த Labour MP Louisa Wall என்ற பெண்ணை நியூசிலாந்து எம்.பி.க்கள் பெரிதும் பாராட்டினர். இவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். ஆனாலும் இந்த மசோதா நிறைவேறியது நாட்டின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேறியவுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்க்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களது சந்தோஷத்தை கைதட்டி வரவேற்று தங்கள் மகிழ்ச்ச…

    • 10 replies
    • 506 views
  6. சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சட்டத் திருத்தங்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. எனினும், இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சில கட்சிகள் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றைக் கோரியுள்ளன. இடதுசாரிகட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், புகலிடக் கோரிக்கையாளர்களை பிரத்தியேகமாக தடுத்து வைத்து, அவர்களின் விண்ணப்பங்கள் விசாரிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் …

    • 0 replies
    • 393 views
  7. அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சுவாரசியமான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பு சொல்வது என்னவென்றால், பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டிலும் இல்லாத பிராந்தியக் கட்சிகளே, மத்திய அரசை தீர்மானிக்கப் போகின்றன. அதற்காக, அனைத்து பிராந்தியக் கட்சிகளும் அல்ல. அ.தி.மு.க. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்ட…

  8. இடிந்தகரையில் இன்று (18-4-2013) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் புல்லருக்கு அளித்திருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், புல்லர் படத்தை உயர்த்திப் பிடித்து “இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்..” என்று குழந்தைகள் முழக்கமிட்டனர். -சி.என்.இராமகிருஷ்ணன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=97307

  9. டொரண்டோவில் பள்ளிக்குழதைகளை ஏற்றிச்சென்ற ஒரு மினிவேன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் வேன் உரிமையாளரும், தீயணைப்புத்துறையினரும் திகைத்து உள்ளனர். இன்று காலை டொரண்டோவின் Elvina Bujari என்பவர் தன்னுடைய மகளையும், பக்கத்து வீட்டு குழந்தைகளையும் தன்னுடைய காரில் அருகில் உள்ள பள்ளிக்கு செல்வதற்காக தனது மினிவேன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வேன் சிறிது தூரம் சென்றதும் திடீரென வேனின் பின் புறத்தில் இருந்து புகை வருவது கண்டு திடுக்கிட்டார். பின்னர் உடனே குழந்தைகளை கீழே இறக்கி பாதுகாப்பாக தள்ளி நின்றார். சிறிது நேரத்தில் மினிவேன் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் Elvina Bujari, 911 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.…

    • 0 replies
    • 432 views
  10. கனடாவின் பிரபல பாடகி Rita MacNeil, காலமானார். அவருக்கு வயது 68. இவர் கனடா நாட்டு மக்களை தன்னுடைய இனிய குரலின் மூலம் கவர்ந்து, பல விருதுகளை வாங்கி குவித்தவர். இவர் சிறிது காலம் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும் அவருடைய உடல்நிலை சீரடையாத காரணத்தால் அவர் ஏப்ரல் 16ஆம் தேதி மாலையில் காலமானார். இவர் பாடிய 10 ஆல்பங்கள் தங்கம், மற்றும் பிளாட்டினம் விருதுகளை பெற்றுள்ளது. Neil and Catherine என்ற தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த Rita MacNeil,சிறுவயதில் மிகுந்த வறுமையில் வாடியவர். தன்னுடைய சுயவரலாறு புத்தகத்தில் தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து மிகவும் நெகிழ்வோடு எழுதியுள்ளார். தன்னுடைய 17வது வயதில்…

    • 0 replies
    • 355 views
  11. முதன் முறையாக இந்தியாவில் ஐநா விசாரணைக் குழு இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவை சிறப்புத் தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கேள்வி எழும்பியுள்ளதையே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஏப்ரல் 22-ம் திகதி இந்தியா செல்லும் ஐ.நா. சிறப்புத் தூதர் ரஷிதா மான்ஜோ, 10 நாள்கள் தங்கியிருந்து தில்லியில் உயரதிகாரிகள், சமூக அமைப்பினரை சந்தித்து இந்தியாவில் நிகழ்ந்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விவரங்களை கேட்டறிகிறார். தமிழகம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர் செல்ல இருக்கிறார். ஐ.நா.…

    • 0 replies
    • 467 views
  12. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றில் ரிசின் என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ´செனட்´ உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு வந்த ஒரு மர்ம கடிதத்திலும், இவ்வாறு விஷம் தடவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-…

  13. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருவர் சிங்கப்பூரில் நான்கு அழகிகளை விபச்சாரத்திற்காக விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக அதிரடியாக சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் பல அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து கொண்டு வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தற்போது விலைக்கு வாங்கிய நான்கு அழகிகளும் சுமார் 20 முதல் 30 வயதை உடையவர்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தமிழ்ச் செல்வன் (வயது 28), கண்ணையா ஆனந்தபிரபு (25). இருவரும் 4 அழகிகளை விலைக்கு வாங்கி, சிங்கப்பூரில் விபசாரத் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இவர்கள் மீதான குற்றம் நிரூபிக…

    • 0 replies
    • 963 views
  14. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறுதிச்சடங்கு நேற்று லண்டன் மாநகரில் நடந்தது. தங்களுடைய பிரியமான முன்னாள் பிரதமரை லண்டன் மாநகர மக்கள் மிகுந்த கவலையோடு சுமார் 50000 பேர் சாலையில் வரிசையில் நின்று இறுதிஅஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர். அவருடைய சவப்பெட்டி சாலையில் சென்றபோது வெள்ளை ரோஜாக்களை எறிந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் தனது குடும்பத்துடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு பிரிட்டிஷின் இரும்பு பெண்மணிக்கு தன்னுடைய ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தினார். ராணி எலிசபெத் அவர்களும் தனது குடும்பத்தினர்களுடன் நேரில் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார். மார்கரெட் தாட்சரின் ஒரே பேத்தி அமெண்டா அவர்கள் இறுதிச்சடங்கில் பைபிள் வாசித்து, த…

    • 1 reply
    • 1.2k views
  15. பொஸ்டன் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க காங்கிரஸ்காரருக்கும் அதிபர் ஒபாமாவுக்கும் ரிசின் எனப்படும் நஞ்சை தபால் உறைகளுக்குள் போட்டு அனுப்பிவந்த சந்தேக நபர் இன்று கைதனார். இன்றைய பொஸ்ரன் விசாரணைகள் அமெரிக்க ஊடகங்களுக்கு பலத்த குழப்பங்களை கொடுத்திருந்தது. காலை நேரம் அளவில் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதல் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் சில மணி நேரத்தில் அது பிழை என்று அறிவித்தார்கள். இப்போது ரிசின் அனுப்பிய சந்தேகநபர் கைதாகியிருப்பதாக அறிவிக்கிறார்கள். இது அதி பயங்கர எழு கொடிய நஞ்சுகளில் ஒன்றாகக் கருதப்படுவது. 9/11 பின்னர் அந்திராக்ஸ் என்ற விசக்கிருமிகளை ஒருவர் அனுப்பி வந்தார். அதைப் போல இ…

  16. பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர் தேவை என்ற விளம்பரத்தை ஃபேஸ்புக மற்றும் முன்னணி இணையதளங்கள் தடை செய்ய பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர்கள் தேவை என்ற விளம்பரம் Mate1.com மற்றும் ஃபேஸ்புக போன்ற இணையதளங்களில் நேற்று வெளிவந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த விளம்பரத்தை உடனே நிறுத்த இணையதளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான விளம்பரங்கள் பள்ளி செல்லும் மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் நிலையை உருவாக்கும் என்பதால் பிரிட்டன் அரசு இதுபோன்ற விளம்பரங்களை தடை செய்து வருகிறது. பள்ளிச்சீருடையில் உள்ள டேட்டிங் விளம்பரப்படம்...

    • 0 replies
    • 508 views
  17. நேற்று முன் தினம் பாஸ்டன் நகரில் நடந்த வெடிகுண்டு வெடிப்பிற்கு காரணமான குற்றவாளியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை FBI கைப்பற்றியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தின் அருகிலுள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் உள்ள கேமராவில் பதிவான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் இருந்து அவர்கள் இதை பெற்றதாக தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. FBI கைப்பற்றியுள்ள வீடியோ மற்றும் படங்களில் இருந்து குற்றவாளி டார்க கறுப்பு நிற உடையணிந்தவன் என்றும் கறுப்பு நிற மனிதன் தான் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் எனவும் தெரிய வருகிறது. அருகிலுள்ள தபால்பெட்டியில் குண்டுகள் அடங்கிய பார்சலை போட்டுவிட்டு, அங்கிருந்து வேக வேகமாக வெளியேறி சென்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. முதலில் …

    • 0 replies
    • 547 views
  18. டொரண்டோவை சேர்ந்த ஹாக்கி நடுவர் சிறுவர்களிடம் தகாத முறையில் பாலியல் உறவு கொண்டதாகவும், அவர்களிடம் அருவருக்கத்தக்க முறையில் பாலியல் குறித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் 1968 முதல் 1978 வரையிலான பத்து வருடங்களில் Michael Dimmick என்ற ஹாக்கி நடுவராக பணிபுரிந்த இவர், இவரிடம் பயிற்சி பெற வந்த 6 முதல் 12 வரையிலான சிறுவர், மற்றும் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு தற்போது வயது 71 ஆகும். இவர் கிட்டத்தட்ட 1000 முறை இவ்வாறாக தவறான உறவில் ஈடுபட்டதாக அதிர்ச்சியான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவர் மீது 12 விதமான பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவர் இதுவரை திருமணமே செய்…

  19. தென்கொரியாவில் எங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால், எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முன்னாள் அதிபர்கள் கிம் ஜாங் இல், கிம் இல் சங் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக, வடகொரிய முன்னாள் அதிபர் கிம் இல் சங்கின் 101-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட திங்கள்கிழமை, இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால், ஆத்திர…

  20. சீனா, உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ளது. சீன மக்கள் விடுதலை ராணுவம் என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டாலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந…

  21. லண்டனில் உள்ள flat in Tooting, south London என்ற இடத்தில் Vanessa Barrows என்ற பெண், தனது நண்பர்களுக்கு மதுவிருந்து நடத்தியுள்ளார். சுமார் 10 மணிநேரம் நடந்த இந்த மதுவிருந்தில் அவருடன் ஆண், மற்றும் பெண் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மதுவிருந்தில் Thomas Evans என்ற 32 வயது நண்பரும் கலந்து கொண்டார். மதுவிருந்து முடிந்த பின்னர் மிகுந்த போதை காரணமாக அங்கேயே சிலர் தங்கிவிட்டனர். இதில் Thomas Evans என்பவரும் ஒருவர். நடு இரவில் கண்விழித்த ஒரு பெண் நண்பர், Thomas Evans நெற்றியில் விளையாட்டிற்காக ஆண் உறுப்பு படத்தை Thomas Evans தனது லிப்ஸ்டிக்கால் வரைந்து விட்டு சென்றுவிட்டார். காலையில் கண்விழித்து பார்த்த Thomas Evans, தனது நெற்றியில் ஆணுறுப்பு படத்தை பார்த்து அதி…

  22. மும்பை: பிரதமர் யார் என்பதை இப்பொழுதுதே அறிவிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளக் கட்சியை தொடர்ந்து சிவசேனா கட்சியும் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கூறப்பட்டிருப்பதாவது: " தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை விரைவாக கூட்டி, பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக அறிவித்தால், பா. ஜனதா கூடுதலாக 5ல் இருந்து 10 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பழைய நட்பு கட்சிகள் விலகினால் 25 தொகுதிகளை இழக்க வேண்டியது இருக்கும். பா.ஜனதாவின் ப…

  23. இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள் ஆட்டம் இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது.எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண ஆளுநரை ஆதாரம் காட்டி செய்திகள் கூறுகின்றன.ஆனால், 40 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசாங்க தொலைக்கட்சி கூறியுள்ளது. எல்லையில் தமது பக்கமாக 13 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரமும், தொடர்பும் த…

    • 0 replies
    • 322 views
  24. முஷாரஃபின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.நாட்டின் வடமேற்கே தொலைதூரத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதை தேர்தல் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.முன்னதாக வேறு மூன்று தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானின் அதிபராக இருந்த இந்த முன்ன…

    • 0 replies
    • 292 views
  25. மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் நகரின் அருகில் உள்ள கோலார் டேம் என்ற இடத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை ஏழு பேர் சேர்ந்த கும்பல் கடத்தி சென்று அடித்து உதைத்ததோடு அல்லாமல் பாலியல் வன்புணர்வும் கொண்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் கோலார் டேம் பகுதியை சேர்ந்த மகேஷ் வயது 19 மற்றும் அமர் வயது 25 ஆகிய இரண்டு இளைஞர்களும் மீன்பிடிக்க சென்றனர். அவர்களுடன் அவர்களுடைய நண்பர்கள் கைலாஷ் மற்றும் விக்ரம் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். நான்கு பேர்களும் டேமில் மீன்பிடித்து சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மீன்களை பிடிப்பதற்கு குத்தகை எடுத்துள்ள நபர்களில் ஏழு பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து மீன்களை சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர்களை விரட்டிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.