உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
மலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடங்கிய தமிழர்! மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் இன்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது. மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது மனைவி கார்த்தியானி கோவிந்தன் ஆகியோர் இந்த விமான நிறுவனத்தை தோற்றுவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 150 பயணிகளுடன் லங்காவி நகருக் முதல் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பணிப் பெண்கள் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவார்கள். முக்கியமாக ஹலால் வகை உணவுதான் பரிமாறப்படும். மத…
-
- 3 replies
- 1.1k views
-
-
விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது. சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை. அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது. அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே. அதே போல தான். …
-
- 1 reply
- 652 views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் அமகத் நகரைச் சேர்ந்தவர் மஸ்தான். டிரைவர். இவருக்கு மனைவியும், 3 வயதில் நசீனா என்ற மகளும் இருந்தனர். 10 நாட்களுக்கு முன் மனைவி இறந்துவிட்டார். இதனால் 3 வயது குழந்தை அனாதையானது. இதையடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு மஸ்தான் ரோட்டுக்கு வந்தார். என் குழந்தையை யாராவது விலைக்கு வாங்கி கொள்ளுங்கள் என்று கூவி கூவி விற்றார். கடைசியாக ஒருவர் வந்து ரூ.7 ஆயிரத்துக்கு குழந்தையை விலை பேசினார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மஸ்தானை கைது செய்து குழந்தையை மீட்டனர். இது பற்றி மஸ்தான் கூறுகையில், நான் கார் ஓட்ட வெளியில் சென்று விடுவேன். அந்த நேரத்தில் குழந்தை தனியாக இருக்கும். எனவே குழந்தையை யாருக்காவது விற்று ஒப்படைத்…
-
- 0 replies
- 548 views
-
-
பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம் பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது. தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்தனை இணையத்தளம் மூலமாகவும், செல்போன் app கள் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் பண அட்டைகள் மூலமாக பணத்தை செலுத்தும் முறையினால், 2009 ஆம் ஆண்டு முதல் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பண தாள்களே…
-
- 0 replies
- 448 views
-
-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழினத்திற்கே ஆச்சரிய படுத்திய முடிவாக அமைந்தள்ளது . இந்தியாவே எதிர்பார்த்த தமிழக தேர்தலில் தமிழன் பணத்திற்காக இன மானத்தை விலை பேசியதன் விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள் . திருமங்கலம் தொகுதியில் துவங்கிய பண விநியோகம் இன்று நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது என்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமே . எட்டி கால் வைக்கும் தூரத்தில் சிங்கள இனவெறியர்களால் தினம் தினம் தமிழர்கள் இன படுகொலை செய்து கொண்டிருக்கிறேன் . அதற்கு மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் உதவி செய்கிறது . சிங்கள ராணுவத்தால் நம் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்ட போதும் இந்த ஆட்சிகள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வில்லை . இதற்கு மாற்று அணி வந்தால் தான் தமிழன் மானம் ரோசம் கொ…
-
- 0 replies
- 1.7k views
-
-
[size=1][/size] [size=1][size=4]1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக் கூடாது. அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால், அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் [/size]மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் [size=4]பக்…
-
- 0 replies
- 804 views
-
-
ஜப்பானியப் பிணைக் கைதிகள் சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது பிரஜைகள் இருவரில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறும் வீடியோ காட்சிகளைத் தாம் சரிபார்த்து வருவதாக ஜப்பான் கூறியுள்ளது. இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இவர்களை பிடித்து வைத்துள்ளனர். ஹருணா யாக்காவா என்ற பணயக் கைதி கொல்லப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு பணயக் கைதியான கென்ஜி கோடோ இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய பிரதமர் ஷின்ஸோ அபே தலைமையில் அமைச்சரவை அவசரமாகக் கூட்டப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஜப்பான் பணியாது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டுள்ள கொலையை மன்னிக்க முடியாதது என்று தலைமை…
-
- 2 replies
- 383 views
-
-
பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ் 25 JAN, 2025 | 05:34 PM ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர். காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலைசெய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204874
-
-
- 1 reply
- 216 views
-
-
பணயக் கைதிகளை விடுவிக்க ட்ரம்ப் காலக்கெடு! 2025 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப், காசா போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முட்டுக்கட்டையான முயற்சிகள் குறித்து திங்களன்று (02) வெளியான ட்ரம்பின் அறிக்கை மிகவும் வலுவாக இருந்தது. மேலும் அவர் தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கும் முன் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில் வந்துள்ளது. இஸ்ரேல் மீதான 2023 ஆம் ஆண்டு கொடிய தாக்குதலின் போது, ஹமாஸ் தலைம…
-
- 0 replies
- 575 views
-
-
பணயக் கைதிகளை விடுவிக்கக் காலக்கெடு விதித்த ட்ரம்ப் - இல்லையேல் போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து? காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார். காசாவில் இருந்து புலம்பெயர்ந்த…
-
- 3 replies
- 348 views
- 1 follower
-
-
பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு ! பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக இன்று சனிக்கிழமை விடுவிக்க இருக்கும் மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதாக கூறி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அமைப்பு முன்னதாக கூறியிருந்தது. ஆனால் கெயிரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அதனை கடைபிடிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின்படி இஸ்ரேலிய ரஸ்யரான தாஷா ட்ருபுனோ, இஸ்ரேலிய அமெரிக்கரான சாகுள் ஜெகல்ஜேன் மற்றும் இஸ்ரேலிய ஆர்ஜன்டினரான யார் ஹான் ஆகிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தனர் . காசாவின் எதிர்காலம் குறித்து அரபு நாடுகளின் புதிய முன்மொழிவுகளை வரவேற்பதாக…
-
- 2 replies
- 340 views
- 1 follower
-
-
பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்! காசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் கைக்குழந்தை உட்பட அவரது மகன்களான ஏரியல் மற்றும் கஃபிர் காசாவில் பணயக்கைதிகளான சிறைபிடிக்கப்பட்டிருந்த போது இறந்து விட்டனர் என்று செய்தி இஸ்ரேலில் சோகத்தில் ஆழ்த்தியது. தடயவியல் சான்றுகள், உளவுத்துறை தகவலின்படி, இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2023 இல் பயங்கரவாதிகளால் “கொடூரமாக கொல்லப்பட்டனர்” இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது. அவர்கள் கொல்லப்படும் போது ஏரியலு 4 வயது, கஃபி…
-
- 0 replies
- 281 views
-
-
பணயக்கைதிகளான 29 பாகிஸ்தான் படையினரையும் கொலைசெய்யப் போவதாக தலிபான்கள் மிரட்டல் [14 - July - 2008] தம்மிடம் பணயக் கைதிகளாகவுள்ள 29 பாகிஸ்தான் படையினரையும் கொலை செய்யப் போவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்குப் பிராந்தியத்தில் முன்னரங்க நிலைகளில் பணியாற்றிய பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் 29 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை சிறைப் பிடித்தனர். அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசும் இராணுவமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் மௌலி ஓமர் அரசுக்கு புதிய கோரிக்கையை விடுத்துள்ளார். பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை உடனடியாக விடுவிக்க…
-
- 0 replies
- 550 views
-
-
பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்! ஹமாஸ், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டியுள்ளார். இதேவேளை, காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5 இலட்சம் பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.…
-
- 0 replies
- 261 views
-
-
04 Aug, 2025 | 11:20 AM இஸ்ரேல் விமானதாக்குதல்களை நிறுத்தி காசாவிற்கான மனிதாபிமான விநியோக பாதையொன்றை நிரந்தரமாக திறந்துவிடுவதற்கு இணங்கினால் தன்னிடமுள்ள பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைக்க தயார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாசிடம் சிக்குண்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் பட்டினியால் வாடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்வதேச கண்டனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு முதல் ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள எவ்யட்டார் டேவிட்டின் வீடியோவே வெளியாகியுள்ளது. 24வயது டேவிட் எலும்பும்தோலுமாக காணப்படுகின்றார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார தலைவர் இந்த…
-
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல். ”காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் பலரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பயணக் கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் படையினரின் பிடியில் சி…
-
- 1 reply
- 229 views
-
-
பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை October 5, 2025 10:36 am காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான வழி, ஆனால் அது அடையப்படும்,” என்று நெதன்யாகு அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாளை (06) எகிப்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்…
-
- 0 replies
- 138 views
-
-
பணி உரிமை ரத்து குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு: ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் எதிர்ப்பு கோப்புப் படம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குழந்தையாக இருக்கும்போது அமெரிக்காவில் குடியேறியவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இந்த முடிவுக்கு ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் வளர்ந்த பிறகும் குடியுரிமை பெறாமலேயே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் ஆப்பிள், மைக…
-
- 0 replies
- 215 views
-
-
விமானம் ஒட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னையும் அறியாமல் சிறு தூக்கத்திற்குப் பின் விழித்த ஏயர் கனடா விமான ஓட்டி ஒருவர் எப்படி விமானத்தைக் கட்டுப்படுத்துவது என்ற குழப்பத்தில் திடிரென தலைகீழாக செங்குத்தாக ஓட்டியுள்ளார். இது அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Jan. 13, 2011 அன்று ரொறொன்ரோவிலிருந்து சுவிட்சர்லாந்து சென்ற AC 878என்ற விமானத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விமான சம்பவத்திற்கு பொறுப்பேற்று $20 மில்லியன் இழப்பீட்டுத் தொகையாக ஏயர் கனடா அளிக்க வேண்டும் எனக் கோரி பயணிகள் இருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எதிர்பாராத சூழ்நிலைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்தவே விமான ஓட்டி அவ்வாறு ஓட்டியதாக முதலில் ஏயர் கனடா விளக்கமளித்தது. ஆனால் சிறு …
-
- 6 replies
- 924 views
-
-
டேவ் லீ பிபிசி படத்தின் காப்புரிமை Reuters பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள…
-
- 0 replies
- 422 views
-
-
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், இந்த வருட மத்திக்குள் 4,500 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.புதிய விமானங்களுக்கான ஆர்டர்கள் குறைந்திருப்பதால் போயிங் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.இதில் 1,600 பணியிடங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் பிற இடங்கள் நீக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.வாடிக்கையாளர்கள் விமானங்களை வாங்குவதைக் குறைத்துக்கொண்டிருப்பதால், வணிக ரீதியான விமான தயாரிப்புப் பிரிவிலேயே பெரும் பணி இழப்புகள் இருக்கும்.நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இதன் மூலம் பணியை இழப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் போயிங் நிறுவனத்தில் 1,61,000…
-
- 0 replies
- 370 views
-
-
'பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வோம்' என்று கூறி, ஹைத்தி பெண்களிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளது. வட அமெரிக்க நாடான ஹைத்தியில் வாழும் ஏழை மக்களுக்கான உதவிகளை கடந்த 2004-லிருந்து ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் அளித்த வந்தனர். இந்த நிலையில், தங்களது அமைதிக் குழு வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுப்பட்டதை ஐ.நா. கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாகவும், அதன் விவரம் தங்களுக்கு தெரியவந்ததாகவும் 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் உலகெங்கும் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர்.…
-
- 0 replies
- 371 views
-
-
அம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது. ஆனால் ஹொங்கொங் நகரில் நேற்று புதன்கிழமை சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் அந்தக் கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் புதுவித தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். அவர்கள் தீப்பந்தமாக கொழுந்து விட்டு எரியச்செய்யப்பட்ட அம்புகளை வில்லுகள் மூலம் ஏவி அந்நகரிலிருந்த சீனப் பல்கலைக்கழகமொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அருகி லிருந்த புகையிரதமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. https://www.virakesari.lk/article/68945
-
- 0 replies
- 469 views
-
-
பண்டைய அரச மம்மிகளை... தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றியது எகிப்து- கண்கவர் விழா! எகிப்து, தனது 22 பண்டைய அரச மம்மிகளை தலைநகர் கெய்ரோ வழியாக எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள புதிய தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. இதன்போது, எகிப்தில் மம்மிகள் கொண்டு செல்வதைக் கொண்டாடும் வகையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த மம்மிகள் நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், பல மில்லியன் டொலர் பெறுமதியான 18 மன்னர்கள் மற்றும் நான்கு இராணிகளின் மம்மிகளே இடம்மாற்றப்பட்டுள்ளன. கடும் பாதுகாப்புக்கு மத்தியில், பழைய எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ள முந்தைய வீட்டிலிருந்து ஒரு மணி நேர பயணத்தை மேற்கொண்டு மம்மிகள் கொண்டுசெல்லப்பட்டன. …
-
- 0 replies
- 395 views
-
-
பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் - அம்பலப்படுத்தும் புலனாய்வு பேண்டோரா பேப்பர்ஸ் செய்திக் குழு பிபிசி பனோரமா 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது…
-
- 2 replies
- 474 views
- 1 follower
-