உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27029 topics in this forum
-
நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ளது. எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் பட்ஜெட் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத் தொடர் வரும் திங்கட் கிழமை துவங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகிய விவகாரங்களை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன எனத் தெரிகிறது. டெல்லியில் நேற்று கூடிய இடது சாரி கட்சிகள் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளன. இந்த நிலையில் எதிர்க் கட்சிகளை நாளை மறுநாள் கூட உள்ள நாடாளுமன்றத்தில் எப்படி சமாளிப்பது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முக்கியத் …
-
- 0 replies
- 438 views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் இருவரில் ஒருவன் சுடப்பட்டு இறக்க மற்றொருவன் தப்பினான். தப்பியவனை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குவீட்டுக்கு பின்புறம் படகினுள் பதுங்கியிருந்தவனை பிடித்தனர். சகோதரர்கள் இருவரும் 2002 முதல் அமெரிக்காவில் வசித்துவருகிறார்கள். தீவிரவாதி தங்கியிருந்த இடம் பிடிப்பட்ட தீவிரவாதி http://thavaru.blogspot.co.uk/2013/04/blog-post_20.html
-
- 0 replies
- 707 views
-
-
‘உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா’ என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஏழைகள் குறித்த உலக வங்கியின் அளவீடு விவாதத்திற்கு உரியது என்பதற்கு அப்பால் வறுமையின் குறியீடு என வர்ணிக்கப்படும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போதுகூட இந்தியாவே உலகில் வறிய நாடு. 1.2 பில்லியன் ஏழைகள் உலகில் வாழ்வதாகவும் இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி ‘வல்லரசு’ இந்தியாவில் வாழ்வதாகவும் உலக சாதனைத் தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது உலகம் முழுவதும் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார் என்பதே அத் தகவல். அதுவும் நாளொன்றுக்கு 65 இந்திய ரூபாய்கும் குறைவாவ வருமானத்தைக் கொண்டவர்களே எழைகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முன்னேற்றமடைந்து அன்னிய முதலீடுகளாலும் பல்தேசி…
-
- 5 replies
- 584 views
- 1 follower
-
-
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்தபிட்சு ஒருவர் இலங்கை செல்வதற்கு வழிதெரியாமல் வியாழக்கிழமை ராமேசுவரம் வந்தவரை மத்திய,மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய்லாந்து நாட்டினை சேர்ந்த புத்த பிட்சு பி.ஜெ.எமுராய்.இவர் அவரது நாட்டிலிருந்து இலங்கை செல்ல சென்னை சென்றிருந்த போது அங்கிருந்த சிலர் ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சுலபமாக செல்ல முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். இவரது வருகையை அறிந்த ராமேசுவரம் ரயில்வே போலீஸார் மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸாரிடம் இவரை ஒப்படைத்தனர்.அவர்கள் விசாரணை செய்து பத்திரமாக மீண்டும் சென்னைக்க…
-
- 5 replies
- 579 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் செனட்டருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றவாளியை வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளது FBI. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் பாஸ்டன் குண்டுவெடிப்பிற்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ரகசியமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பெயர் , Paul Kevin Curtis என்பதாகும். 45 வயதை சேர்ந்த இவர் ரைசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதங்களை ஒபாமா, அமெரிக்க செனட்டர் Roger Wicker மற்றும் ஒரு அரசு அதிகாரி ஆகிய மூன்று பேர்களுக்கு அனுப்பியதை விசாரணையில் ஒத்துக்கொண்டார். அவரிடம் மேலும் தீவிரமாக விசாரணை செய்து அமெரிக்க FBI அவருக்கு துணையாக வேறு யாராவது இருந்தார்களா, விஷம் எங்கு வாங்கப்பட்டது போன்ற தகவல்களை பெறும் கோணத்தில் வி…
-
- 1 reply
- 468 views
-
-
“ஹிந்து” என்றால் திருடன் :கருணாநிதிக்கு வந்த சிக்கல் Written by tharsan // April 19, 2013 // Comments Off ”ஹிந்து” என்றால் திருடன் என்று பொருள் இருக்கிறது எனப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஹிந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியிருந்தார். இது ஹிந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் படி இருக்கிறது.இதற்கு தகுந்த நடவடிக்கை கோரி மறுநாள் 25.10.2002 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது முதல் தகவல் அறிக்கை …
-
- 0 replies
- 564 views
-
-
ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாதி மிர்சா ஹிமாயத் பெய்க்குக்கு, புனே விசாரணை நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி என்ற கடையில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 வெளிநாட்டினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பீட் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த மிர்சா ஹிமாயத் பெய்க் என்பவரை 2010 செப்டம்பர் மாதம் 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து 1200 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேக்கரியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது, குண்டு வைத்தது ஆகிய குற்றங்களுக்காக பெய்க் மீது புனே செஷன்ஸ் கோர்ட்டில…
-
- 0 replies
- 279 views
-
-
நீதிபதிகளை சிறைபிடித்த வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது- நீதிமன்ற காவலில் வைப்பு. இஸ்லாமாபாத்: நீதிபதிகளை கூட்டாக சிறை வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது தாய்நாட்டில் நடக்கும் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பியுள்ளார். தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் முஷாரப் அதிபராக இருக்கையில் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி நா…
-
- 1 reply
- 544 views
-
-
திங்கட்கிழமை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப் போட்டியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் மூவர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய இரண்டு நபரகளின் படங்கள் புலனாய்வுத் துறையினரிடம் சிக்கியுள்ளன. இதில் அவர்கள் ஓட்டப் போட்டி வீரர்கள் போலவே உடை அணிந்து கையில் சந்தேகத்துக்குரிய பைகளுடன் மாரத்தான் போட்டி முடிவுக் கோட்டில் இருப்பது தென்பட்டுள்ளது. எனினும் FBI இனர் இந்த புகைப்பட ஆதாரங்களை வெளிப்படுத்த மறுத்து விட்டனர். இந்த முக்கிய ஆதாரம் லோர்ட் மற்றும் டேய்லர் திணைக்களக் கடையின் பாதுகாப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது. யுத்தக் களத்தில் பாவிக்கப் படுவது போல கறுப்பு நிறப் பைகளில் ப்ரஷர் குக்கரில் இடப்பட்டிருந்த குண்டுகள் கிளைம…
-
- 4 replies
- 2.5k views
-
-
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக அவரது சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார். பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் இவராவார். இவர் காலத்தில்தான் ஃபோக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன் பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றது. 1979 ஆம் ஆண்டு தான் பதவி ஏற்றதை அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார். சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய பிரிட்…
-
- 20 replies
- 1.6k views
-
-
இறுதிச் சடங்குகளுக்கு பிறது தாட்சரின் உடல் தகனம் செய்ப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஏப்ரல், 2013 - 16:39 ஜிஎம்டி புனத பால்ஸ் பேராலயத்தில் இறுதி பிரார்த்தனை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரட் தாட்சரின் இறுதிச்சடங்குகள் இன்று லண்டனின் செண்ட் பால்ஸ் பேராலயத்தில் நடந்தன. பிரிட்டிஷ் அரசி எலிசபத் உட்பட 2000க்கும் மேற்பட்ட அழைப்பு விடுக்கப்பட்டவர்கள், உலகெங்கிலிருந்தும் வந்து, இந்த அஞ்சலிப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் டோனி பிளேர், கார்டன் பிரவுன் மற்றும் ஜான் மேஜர், லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் உட்பட பல பிரமுக…
-
- 1 reply
- 465 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க, ஒரு மில்லியன் டாலர்கள் தொகையை பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்ட பிலிப்பைன்ஸ் அரசு மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியான ஜோசெலிடொ ஸப்பனட்டா, சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் சவுதி அரேபியாவின் சட்டப்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அவர்கள் கேட்கும் தொகையை தந்துவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார். இது வரை சுமார் 130,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது. சௌதி அரேபிய அரசு இந்தத் தொகையை தருவதற்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை…
-
- 0 replies
- 307 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்து, அவரை கைது செய்யும்படி நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்த முஷாரப் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். நீதிபதிகள் தம்மை கைது செய்யும் உத்தரவு பிறப்பித்ததும் நீதிமன்றத்திலிருந்த முஷாரப், தனது பாதுகாவலர்கள் புடைசூழ அங்கிருந்து வெளியேறினார். அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய முஷாரப், தனது குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறி இஸ்லாமாபாத்துக்கு வெளியில் இருக்கும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த தனது பண்ணைவீட்டுக்கு சென்றார். முஷாரப்பை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்க…
-
- 0 replies
- 405 views
-
-
17 ஏப்ரல், 2013 ஆப்ரிக்காவிலேயே மிகப் பெரிய பணக்காரரானான நைஜீரிய நாட்டின் அலிக்கோ டாங்கோட்டே தமது நாட்டில் ஒரு பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்கப் போவதாகக் கூறியுள்ளார். அந்தத் தொழிற்சாலை 2016 ஆம் ஆண்டு வாக்கில் நாளொன்றுக்கு 4,50,000 பீப்பாய்கள் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தச் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்க எட்டு பில்லியன் டாலர்கள் ஆகும் என்கிறார் அலிக்கோ டாங்கோட்டே. ஆப்ரிக்காவிலேயே கச்சா எண்ணெயை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக நைஜீரியா இருந்தாலும், அதை முழுமையாக சுத்திகரிக்க முடியாமல், பெரும்பாலும் இறக்குமதிகளையே அந்நாடு நம்பியுள்ளது. அவ்வகையில் இறக்குமதி செய்யப்…
-
- 0 replies
- 505 views
-
-
அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தின் வோகோ பகுதியில் அமைந்திருக்கும் உர ஆலை ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிப்பையடுத்து ஆலையின் கட்டிடங்கள் மற்றும் அருகிலுள்ள குடியிப்புப் பகுதிகளில் தீ பரவியுள்ளது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர் மேலும் பலர் தீ பரவியுள்ள கட்டடங்களில் சிக்குண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போஸ்டன் குண்டு வெடிப்பை தொடர்ந்து இடம்பெற்றுள்ள இந்த உர ஆலை வெடிப்பிற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
-
- 7 replies
- 586 views
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது. மசோதாவிற்கு ஆதரவாக 44 ஓட்டுகளும் எதிராக 33 ஓட்டுகளும் கிடைத்ததால் இந்த மசோதா தங்குதடையின்றி நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற பெரிதும் முயற்சியெடுத்த Labour MP Louisa Wall என்ற பெண்ணை நியூசிலாந்து எம்.பி.க்கள் பெரிதும் பாராட்டினர். இவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். ஆனாலும் இந்த மசோதா நிறைவேறியது நாட்டின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேறியவுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்க்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களது சந்தோஷத்தை கைதட்டி வரவேற்று தங்கள் மகிழ்ச்ச…
-
- 10 replies
- 510 views
-
-
சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சட்டத் திருத்தங்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. எனினும், இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சில கட்சிகள் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றைக் கோரியுள்ளன. இடதுசாரிகட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், புகலிடக் கோரிக்கையாளர்களை பிரத்தியேகமாக தடுத்து வைத்து, அவர்களின் விண்ணப்பங்கள் விசாரிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 396 views
-
-
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சுவாரசியமான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பு சொல்வது என்னவென்றால், பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டிலும் இல்லாத பிராந்தியக் கட்சிகளே, மத்திய அரசை தீர்மானிக்கப் போகின்றன. அதற்காக, அனைத்து பிராந்தியக் கட்சிகளும் அல்ல. அ.தி.மு.க. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்ட…
-
- 6 replies
- 1k views
-
-
இடிந்தகரையில் இன்று (18-4-2013) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் புல்லருக்கு அளித்திருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், புல்லர் படத்தை உயர்த்திப் பிடித்து “இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்..” என்று குழந்தைகள் முழக்கமிட்டனர். -சி.என்.இராமகிருஷ்ணன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=97307
-
- 0 replies
- 485 views
-
-
டொரண்டோவில் பள்ளிக்குழதைகளை ஏற்றிச்சென்ற ஒரு மினிவேன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் வேன் உரிமையாளரும், தீயணைப்புத்துறையினரும் திகைத்து உள்ளனர். இன்று காலை டொரண்டோவின் Elvina Bujari என்பவர் தன்னுடைய மகளையும், பக்கத்து வீட்டு குழந்தைகளையும் தன்னுடைய காரில் அருகில் உள்ள பள்ளிக்கு செல்வதற்காக தனது மினிவேன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வேன் சிறிது தூரம் சென்றதும் திடீரென வேனின் பின் புறத்தில் இருந்து புகை வருவது கண்டு திடுக்கிட்டார். பின்னர் உடனே குழந்தைகளை கீழே இறக்கி பாதுகாப்பாக தள்ளி நின்றார். சிறிது நேரத்தில் மினிவேன் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் Elvina Bujari, 911 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.…
-
- 0 replies
- 436 views
-
-
கனடாவின் பிரபல பாடகி Rita MacNeil, காலமானார். அவருக்கு வயது 68. இவர் கனடா நாட்டு மக்களை தன்னுடைய இனிய குரலின் மூலம் கவர்ந்து, பல விருதுகளை வாங்கி குவித்தவர். இவர் சிறிது காலம் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும் அவருடைய உடல்நிலை சீரடையாத காரணத்தால் அவர் ஏப்ரல் 16ஆம் தேதி மாலையில் காலமானார். இவர் பாடிய 10 ஆல்பங்கள் தங்கம், மற்றும் பிளாட்டினம் விருதுகளை பெற்றுள்ளது. Neil and Catherine என்ற தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த Rita MacNeil,சிறுவயதில் மிகுந்த வறுமையில் வாடியவர். தன்னுடைய சுயவரலாறு புத்தகத்தில் தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து மிகவும் நெகிழ்வோடு எழுதியுள்ளார். தன்னுடைய 17வது வயதில்…
-
- 0 replies
- 358 views
-
-
முதன் முறையாக இந்தியாவில் ஐநா விசாரணைக் குழு இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவை சிறப்புத் தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கேள்வி எழும்பியுள்ளதையே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஏப்ரல் 22-ம் திகதி இந்தியா செல்லும் ஐ.நா. சிறப்புத் தூதர் ரஷிதா மான்ஜோ, 10 நாள்கள் தங்கியிருந்து தில்லியில் உயரதிகாரிகள், சமூக அமைப்பினரை சந்தித்து இந்தியாவில் நிகழ்ந்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விவரங்களை கேட்டறிகிறார். தமிழகம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர் செல்ல இருக்கிறார். ஐ.நா.…
-
- 0 replies
- 471 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றில் ரிசின் என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ´செனட்´ உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு வந்த ஒரு மர்ம கடிதத்திலும், இவ்வாறு விஷம் தடவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருவர் சிங்கப்பூரில் நான்கு அழகிகளை விபச்சாரத்திற்காக விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக அதிரடியாக சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் பல அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து கொண்டு வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தற்போது விலைக்கு வாங்கிய நான்கு அழகிகளும் சுமார் 20 முதல் 30 வயதை உடையவர்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தமிழ்ச் செல்வன் (வயது 28), கண்ணையா ஆனந்தபிரபு (25). இருவரும் 4 அழகிகளை விலைக்கு வாங்கி, சிங்கப்பூரில் விபசாரத் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இவர்கள் மீதான குற்றம் நிரூபிக…
-
- 0 replies
- 968 views
-
-
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அவர்களின் இறுதிச்சடங்கு நேற்று லண்டன் மாநகரில் நடந்தது. தங்களுடைய பிரியமான முன்னாள் பிரதமரை லண்டன் மாநகர மக்கள் மிகுந்த கவலையோடு சுமார் 50000 பேர் சாலையில் வரிசையில் நின்று இறுதிஅஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர். அவருடைய சவப்பெட்டி சாலையில் சென்றபோது வெள்ளை ரோஜாக்களை எறிந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் தனது குடும்பத்துடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு பிரிட்டிஷின் இரும்பு பெண்மணிக்கு தன்னுடைய ஆழ்ந்த அஞ்சலியை செலுத்தினார். ராணி எலிசபெத் அவர்களும் தனது குடும்பத்தினர்களுடன் நேரில் இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார். மார்கரெட் தாட்சரின் ஒரே பேத்தி அமெண்டா அவர்கள் இறுதிச்சடங்கில் பைபிள் வாசித்து, த…
-
- 1 reply
- 1.2k views
-