உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை க்யூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி மரியாதையை வழிநடத்திச் சென்றார். அந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் தனது 90 ஆவது வயதில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவால் முன்னஎடுக்கப்பட்ட புரட்சியின் சோஷிலிச கொள்கைகளுக்கு மரியாதை வழங்கப்போவதாக ராவுல் காஸ்ட்ரோ சூளுரைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க புராதனச் சின்னங்கள் மற்றும் சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டுவதை க்யூபா தடை செய்யும் எனவும் அவர் அறிவித்தார். மே…
-
- 0 replies
- 301 views
-
-
பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிலுள்ள வடக்கு - மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சஹாரா பலைவனத்திலிருந்து பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்படும் மணல் தூசுகள் பிரித்தானியாவில் படிக்கின்றன. சஹாரா பாலைவனத்தில் கடந்த வார இறுதியிலிருந்து கடுமையான காற்று வீசுகின்றது. இதனால் சுமார் 3,220 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள பிரித்தானியாவின் ஹேர்ட்ஸ் மற்றும் எஸெக்ஸ் நகரங்களில் படிகின்றன. நேற்றும் நேற்று முன்தினமும் அதிகளவான மணல் தூசுகள் சிறிய படையாக கார் மற்றும் ஜன்னல்களில் படிந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அவதானமாக செயற்படுமாறும் மணல் சூறாவளி ஆடைகளுடன் தாயாராக இருக்குமாறும் நெரிசல்நேர சாரதிகள், பாடசாலை சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஹேர்ட்போர்ட்ஷயர் மற்றும் எஸெக்ஸ் நகர சபை…
-
- 13 replies
- 1.3k views
-
-
பள்ளத்தாக்கில் பயணம் உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது. ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் …
-
- 1 reply
- 546 views
-
-
பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் திரிபோலி பகுதியில் கடலில் குளிக்க சென்ற ஒரு தொகுதியினர் லொறி ஒன்றில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில். அந்த லொறியில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதன்போது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து. விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்க…
-
- 0 replies
- 453 views
-
-
பள்ளத்தில் குப்புற விழுந்த கார்! பெண் பலியான பரிதாபம்..! அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரில் சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் சாலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள ஒரு முக்கிய சாலை ஒன்று மழை வெள்ளத்தால் பாதிப்படைந்து உடைந்ததில் 12 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே போகும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மிக கவனமாக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக Dora Linda Nishihara (69) என்ற பெண் தன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கார் அந்த 12 அடி பள்ளத்தில் குப்புற விழுந்தது. பின்னாடியே வந்த இன்னொரு காரும் அதே பள்ளத…
-
- 0 replies
- 456 views
-
-
பள்ளி புத்தகத்தில் ரஜினி பாடமா ? கச்சை கட்டும் புதிய சர்ச்சை. வாழும் போதே வரலாறு ஆனவர்' என்று சிலரைப் பற்றிச் சொல்வார்கள். அதுபோல வாழும்போதே பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாடமாக இடம்பெறும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்துவிடும்? அப்படி யொரு வாய்ப்பு இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது. அதையொட்டி சர்ச்சைகளும் சரமாரியாக வீசத் தொடங்கியிருக்கின்றன. மத்திய அரசுக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து மேல்நிலை வகுப்பு வரை அடக்கம். மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் என்.சி.இ.டி. அம…
-
- 2 replies
- 1.2k views
-
-
சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள். சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
தென்னாப்பிரிக்க அமைச்சர் Aaron Motsoaledi இன்று வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சி அறிக்கையில் நாட்டில் இந்த ஆண்டு மட்டும் நான்கு சதவிகித பள்ளி மாணவ மாணவியர்களுக்கு HIV என்னும் எய்ட்ஸ் வைரஸ் பாதித்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் 28% மாணவர்கள் இந்த நோயின் பிடியில் உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையால் தென்னாப்பிரிக்க பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் இந்த வேளையில் Sowetan newspaper என்ற செய்தித்தாள், எய்ட்ஸ் கிருமிகள் பரவுவதற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் காரணமில்லை, சில சமூக விரோத பெரியோர்களும் காரணம் என்ற அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்னம் பள்ளி ஆசிர்யர்களும் பெற்ற…
-
- 0 replies
- 2.9k views
-
-
"தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்: பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன. "மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார் கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி 27 ஜூன் 2025, 04:23 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு நாள் இசபெல்லா பள்ளி முடிந்து வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் அவர் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை திணித்தார். "உன் அழகைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது. கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் தனது பகுதியில் உள்ள டீனேஜ் மாணவிகளை குறிவைத்து ஒரு ஸ்டுடியோ செயல்படுவதாக இசபெல்லா கூறுகிறார். இந்த ஸ்டுடியோ, மாடல்களாக செயல்பட மாணவிகளை ஊக்குவிக்கிறத…
-
- 0 replies
- 450 views
- 1 follower
-
-
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 குழந்தைகள் காயமடைந்தனர். திருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும். திங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்பு உடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன. இதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமி…
-
- 0 replies
- 901 views
-
-
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் தனியார் பள்ளிகளில் நடத்திய அதிரடிசோதனையில் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணப் பணம் கட்டுக் கட்டாக சிக்கியது. நெல்லை, பாளை பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடப்பதாக கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜ்குமார், தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் செந்தட்டி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் நெல்லை, பாளை பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 4 பள்ளிகளில் வசூல் வேட்டை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. க…
-
- 0 replies
- 834 views
-
-
பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: கோபிநாத் (காங்கிரஸ்) (தெலுங்கிலும், கன்னடத்திலும் அவர் பேசியதாவது): தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என உள்ளது. இதனால் வேறுமொழி பேசும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம்: சிறுபான்மை மாணவர்கள் 6ம் வகுப்பில் இருந்துதான் தமிழ…
-
- 15 replies
- 1.5k views
-
-
பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பலியான 14வயது சிறுமி. ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளிலேயே டிரக் ஒன்று மோதியதால் விபத்தில் பலியான 14 வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான டிரக் டிரைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்ற செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கோடை விடுமுறை திறந்து டொரண்டோவில் பள்ளி திறக்கப்பட்டது. மிகவும் சந்தோஷமாகவும் புத்துணர்ச்சியோடும் பள்ளி மாணவர்கள் முதல் நாள் பள்ளிக்கு சென்றனர். C.W. Jefferys Collegiate Institute என்றா பள்ளியில் படிக்கும் Violet Liang என்ற 14 வயது சிறுமியும் மிகவும் ஆசையோடு பள்ளிக்கு சென்றார். ஆனால் பள்ளிக்கு செல்லும் வழியில் டிரக் ஒன்றின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த சிறுமி பர…
-
- 0 replies
- 408 views
-
-
டொரண்டோவில் பள்ளிக்குழதைகளை ஏற்றிச்சென்ற ஒரு மினிவேன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் வேன் உரிமையாளரும், தீயணைப்புத்துறையினரும் திகைத்து உள்ளனர். இன்று காலை டொரண்டோவின் Elvina Bujari என்பவர் தன்னுடைய மகளையும், பக்கத்து வீட்டு குழந்தைகளையும் தன்னுடைய காரில் அருகில் உள்ள பள்ளிக்கு செல்வதற்காக தனது மினிவேன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வேன் சிறிது தூரம் சென்றதும் திடீரென வேனின் பின் புறத்தில் இருந்து புகை வருவது கண்டு திடுக்கிட்டார். பின்னர் உடனே குழந்தைகளை கீழே இறக்கி பாதுகாப்பாக தள்ளி நின்றார். சிறிது நேரத்தில் மினிவேன் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் Elvina Bujari, 911 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.…
-
- 0 replies
- 434 views
-
-
பள்ளிச் சிறுமி ஸ்ருதி பரிதாப பலி- தாம்பரத்தில் கடையடைப்பு- மக்கள் கண்ணீர் அஞ்சலி-உடல் இன்று தகனம் 26 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்ததது- குழந்தையை ஏற்றிச் சென்ற ஓட்டை பஸ் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமாக தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடல் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வீடு வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை மக்களை பெரிய அளவில் உலுக்கி விட்டது ஸ்ருதியின் பரிதாபச் சாவு. ச…
-
- 11 replies
- 1.7k views
-
-
பாரீஸ்: லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சிறுமிகளை அவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும் Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூல் கூறுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்... தனது கண்ணில் எ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்! மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார். ஃபிரோஷா பேகத்தின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் ஃபாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்துகொண்ட…
-
- 0 replies
- 287 views
-
-
பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர் தேவை என்ற விளம்பரத்தை ஃபேஸ்புக மற்றும் முன்னணி இணையதளங்கள் தடை செய்ய பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர்கள் தேவை என்ற விளம்பரம் Mate1.com மற்றும் ஃபேஸ்புக போன்ற இணையதளங்களில் நேற்று வெளிவந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த விளம்பரத்தை உடனே நிறுத்த இணையதளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான விளம்பரங்கள் பள்ளி செல்லும் மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் நிலையை உருவாக்கும் என்பதால் பிரிட்டன் அரசு இதுபோன்ற விளம்பரங்களை தடை செய்து வருகிறது. பள்ளிச்சீருடையில் உள்ள டேட்டிங் விளம்பரப்படம்...
-
- 0 replies
- 512 views
-
-
சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5). புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீட…
-
- 0 replies
- 687 views
-
-
பள்ளிவாசல்களில் ஜெர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை ஜெர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார். கொலோன் பெரிய பள்ளிவாசல் அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார். அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உள்ளூர் இமாம்கள் உள்நாட்டிலேயே பயிற்சிபெற வேண்டும் எனவும் …
-
- 8 replies
- 946 views
-
-
உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 85 பேருக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. பெரும் சர்ச்சைக்கிடையே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் கடந்த 8ஆம் திகதி திறக்கப்பட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் சுவர் இடிக்கப்பட்டது. அதேவேளையில், விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 85பேர் மீது க…
-
- 0 replies
- 379 views
-
-
பழ. நெடுமாறன் மீது கலைஞர் வழக்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன். இவர் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முதல் அமைச்சர் கலைஞர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கலைஞர் சார்பில் சென்னை நகர குற்றவியல் வக்கீல் ஷாஜகான் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது: பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்த செய்தி கடந்த 17 ந்தேதி காலை நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அந்த செய்தியில், தேர்தல் ஆணையத்தை முதல்வர் தொடர்ந்து வசைபாடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணைய நடவடிக்கையை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதால், தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாத கோபத்தில் முதல்வர் வசை பாடுகிறார் என்று கூறி உள்ளார். பழ.நெடுமாறனின் இந்த குற்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சென்னை: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக தாக்கி முதல்வர் கருணாநிதி கவிதை எழுதியுள்ளார். சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி. இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. நெடுமாறன் எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்குப் பதிலடியாக இந்தக் கவிதையைப் புணை…
-
- 13 replies
- 3.8k views
-
-
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னவர்களே அதை பின்பு மறுத்து விட்ட பிற்பாடும், தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நம்புபவர்கள் குறிப்பிடத்தக்களவு இருக்கின்றார்கள். தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு "தேசியத் தலைவர் வருவார்" என்று காத்து நிற்கிறார்கள் அதே வேளை ஈழத் த…
-
- 28 replies
- 8.2k views
-