Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சில்வாஸா: இந்தியாவைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேச பகுதியில் நேற்று நடந்த விழாவில் நை டாமன் மற்றும் மோடி டாமனை இணைக்கும் பாலத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைத்தார். இப்பாலத்துக்கு ராஜீவ்காந்தி சேது என பெயரிடப்பட்டுள்ளது. அப்போது அவர் பேசுகையில், இந்தியாவை பலவீனப்படுத்த நினைப்பவர்களின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது. பல்வேறு மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்கள் இணக்கமாக வாழும் நாடு என்பது இந்தியாவின் அடையாளம். இந்த அடையாளத்தை அழித்து ஒற்றுமையை குலைக்க அருகிலிருக்கும் சில நாடுகள் ம…

    • 14 replies
    • 3k views
  2. பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்! சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை. ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை …

  3. பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீஃப்புக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது... "பாகிஸ்தான் அரசுடன் இணைந்து, இணக்கமாக செயல்பட தயாராக உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேலும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கராச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த கடிதத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீஃப், தனது இந்தியப் பயணம் திருப்திகரமாக இருந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இரு நாடுகளுக்கு இட…

  4. பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல் பயங்கரவாதத்துக்கு குழந்தைகளை பலிகொடுத்த அண்டை நாடான பாகிஸ்தானின் மக்களுக்கு, ட்விட்டர் மூலம் இந்தியர்கள் தெரிவித்த ஆறுதல் நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியாகினர். தாக்குதல் தொடங்கியது முதலே ட்விட்டரில் #PeshawarAttack என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. இந்தக் கொடூரத் தாக்குதலின் தன்மை தொடர்பாக செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், ட்விட்டரில் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் இட்ட …

  5. புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தானும் சீனாவும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கின்றன என்று இராணுவத் தளபதி வி.கே.சிங் கூறினார். இந்திய இராணுவம் பங்கும் பணியும் என்ற கருத்தரங்கை டில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்து வி.கே.சிங் பேசியதாவது; இந்தியாவுக்கு இரண்டு பெரிய தொல்லைகள் இருக்கின்றன. பாகிஸ்தானில் ஆட்சி நடத்துவதில் பிரச்சினை இருக்கிறது.அங்குள்ள உள்நாட்டு நிலைவரம் நன்றாக இல்லை.ஆனால், தீவிரவாத அமைப்புகள் இப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கின்றன. இது நமக்கு கவலை அளிக்கிறது. பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் சீனாவும் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. அந்த நாட்டின் உடனான எல்லைகள் ஸ்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் எல்லைப் ப…

    • 2 replies
    • 810 views
  6. தென்மேற்கு பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தை இன்று புதன்கிழமை தாக்கிய 6.4 ரிச்டர் பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 160 பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 160 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் பலோசிஸ்தான் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந் நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வட குவேதாவிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மேற்படி பூமியதிர்ச்சி மையங்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பூமியதிர்ச்சியாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மண்சரிவுகளினாலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்…

  7. பாகிஸ்தானை தாக்குவது சீனத்தை தாக்குவதற்கு ஒப்பானது: யு.எஸ்.இடம் சீனா கண்டிப்பு அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது. கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று…

    • 2 replies
    • 850 views
  8. பாகிஸ்தானை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்! பிரித்தானியாவில் நடைபெற்ற ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சரின் உரையை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்துள்ளன. லண்டனில் ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரித்தானியா, கனடா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கோஷம் எழுப்பினார். மேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனா…

  9. பாகிஸ்தானை விட்டு வெளியேற லஸ்கர் இயக்க தலைவனுக்கு தடை இஸ்லாமாபாத், ஜுலை.8- பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு லஸ்கர் இ தொய்பா இயக்க தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எதிரி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், அதன் தலைவரான ஹபீஸ் சயீத், ஜமாத் உத் தவா என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினான். பள்ளிக்கூடங்களை நடத்தி வரும் இந்த அமைப்பு, ஏழை முஸ்லிம்களுக்கு உதவி செய்வது என்று நல்ல பெயர் எடுக்க என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் அவன் பாகிஸ்தானில் செய்தாலும் அவன் நோக்கம் முழுவதும் இந்தியாவில் வன்முறைகளை நடத்தி, இந்திய அமைதியை கெடுப்பதும், முன்னேற்றத்தை தடுப்பதும் தான். இந்தியாவின் எதிரி…

    • 0 replies
    • 377 views
  10. பாகிஸ்தான் - சீனாவுடன் இந்தியா போருக்கு தயாரகிறது: சீன சிந்தனையாளர்கள் குழு தகவல் சீனா அரசுக்கு அறிவுரைகள் வழங்கி வரும் சிந்தனையாளர்கள் வெளியிட்டுள்ள புளூ புக்கில் இந்தியா குறித்து எழுதியுள்ளனர். அதில் இந்தியா பற்றி கூறியிருப்பதாவது:- நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவுள்ள பாகிஸ்தானை கண்காணிக்கவும், ஆயத்தமாக இருக்கவும் இந்தியா அதிகபட்ச அக்கறை எடுத்துகொள்கிறது. மேலும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து, அதி நவீன ஆயுதங்களையும் தளவாடங்களையும் மேம்படுத்தி படைகளை வலுவூட்டி ஒரு வரையறுக்கப்பட்ட போருக்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு மிரட்டல் விடுத்து வருகிறது.மேலும் சமீப காலமாக இந்தியா கப்பற்படையை விரிவுபடுத்தி, சீனாவிற்கு மிகப்பெரிய கவலையை கொடுக்கிறது. இந்தியாவின் பக்கத்து …

  11. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பஜாவோர் மாகாணம் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இது தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. அங்குள்ள ஹார் என்ற இடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வினியோக மையம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை உணவு பொருள் வினியோகம் நடந்தது. அவற்றை பெறுவதற்காக ஏராளமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி அதிர்ந்து தீப்பிடித்து எரிந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கு மிங்கும் ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அங்கு கூடியிருந்த 45 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர். …

  12. பாகிஸ்தான் அணு ஆயுதங்களை காக்க 25,000 வீரர்கள் கொண்ட சிறப்புப் படை பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை பாதுகாப்பதற்கென 25,000 வீரர்கள் கொண்ட சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான விவாதத்தை நிறைவு செய்து நிதி அமைச்சர் இஷாக் தர் கூறியதாவது: சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட, அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய 25,000 வீரர்கள் கொண்ட சிறப்பு படை அணு ஆயுதங்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காக்க சிறப்புப் படை, சிறப்பு கடலோர காவல்படை, உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு உளவுப் பிரிவு அதிகாரிக…

    • 0 replies
    • 471 views
  13. 700 கி.மீட்டர் தூரம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஹாப்ட்-7 என்ற ஏவுகணையை பா‌கி‌ஸ்தா‌ன் இன்று வெ‌ற்‌றிகரமாக சோதனை நட‌த்‌தியது. ஹாப்ட்-7 என்கிற பாபர் ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. மிகவும் துள்ளியமாக நிலம் மற்றும் கடல் பகுதியில் பறந்து சென்று தாக்க வலுமிக்க இதன் இலக்கு இந்தியாவை தாக்குவது தான். ஆனால் இந்த ஏவுகணை சோதனை பாகிஸ்தானின் ‌‌ஸ்தர‌த்தை பாதுகா‌க்கவு‌ம், பலப்படுத்தவும் உதவும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்த சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவை பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர் www.ilanakai.net

  14. பாகிஸ்தான் அணுசக்தி ஆணையக உத்தியோகஸ்தர்கள் மர்ம நபர்களால் கடத்தல் 2/12/2008 6:42:10 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானின் அணுசக்தி பிரிவின் அதிகாரிகள் இருவர் முகமூடியணிந்து வந்த மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள டெரா இஸ்மாயில் கான் நகரிலுள்ள ஷெய்க் பாடினில், வாகனமொன்றில் வந்த மர்ம நபர்கள், பாகிஸ்தான் அணுசக்தி ஆணையகத்தின் அதிகாரிகளையும் அவர்களது சாரதியையும் கடத்திச் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் மலைப்பகுதியில் கனிப்பொருள் தொடர்பான பூகர்பவியல் ஆய்வை மேற்கொள்ள மேற்படி உத்தியோகஸ்தர்கள் சென்ற வேளையிலேயே இக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்த அணுசக்தி உத்தியோகஸ்தர்களை கடத்திச் சென்…

    • 1 reply
    • 790 views
  15. பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் ஊழல் புகாரை விசாரிக்க சுவிஸ் அரசு மறுப்பு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் முதலீடு செய்தது தொடர்பாக ஊழல் புகார் இருந்தது. இதை முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் கடந்த 2007-ம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இது போன்று ஆயிரக்கணக்கான ஊழல் புகார்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் பதவி விலகி 2 ஆண்டுகள் கழித்து இப்புகாரை நீக்கியது தவறு.எனவே, இவற்றை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அதிபர் சர்தாரியின் ஊழல் பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் முதலீடு செய்தது குறித்து அந்நாட்டு அரசிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும் என பிரதமருக்கும் உத்தரவிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த முன்னாள்…

  16. ஞாயிற்றுக்கிழமை, 8, ஆகஸ்ட் 2010 (10:21 IST) பாகிஸ்தான் அதிபர் மீது ஷூ வீச்சு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஷூ வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், ‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது’என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் பயங்கர எதிர்ப்பு அலைகள் கிளம்பியிருந்தது. இந்த எதிர்ப்புகளுக்கிடையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அவரின் இந்தப்பயணம் பாகிஸ்தானில் மட்டும் அல்ல பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டன் வாழ் பாகிஸ்…

  17. ஸ்ரீநகர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் காணப்படுவது, பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. ஜம்மு காஷ்மீரின் லாடக் பகுதியில் அவ்வபோது ஊடுருவி அத்துமீறல்களில் ஈடுபட்ட வந்த சீன ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படுவது பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. வடக்கு காஷ்மீரின் நவ்காம் செக்டார் பகுதிக்குல் எதிர்முனையில் சீன ராணுவ அதிகாரிகளின் நடமாட்டத்தை ராணுவம் கண்டுபிடித்து உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு…

  18. பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட ஷாகித் ககான் அப்பாஸி. - படம். | ராய்ட்டர்ஸ். பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். அவரது இடத்தில் தற்போது ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். பிரிந்திருந்த எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர். அந்நாட்டு அரசியல் சாசன முறைப்படி ரகசிய வாக்கெ…

  19. காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்களை கொன்றது. அதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே உறவுகளில் பெரிதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை, காஷ்மீர் பிரச்சினையால் இந்திய பாகிஸ்தான் இடையே நான்காவது யுத்தம் நடக்கலாம் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக நேற்று செய்தி வெளியிட்டது. உடனே பிரதமர் நவாஸ் ஷெரிப் அலுவலகம், தீய நோக்கத்துடன் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தையடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், எனது வாழ்நாளில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல…

  20. பாகிஸ்தானின் தென் மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறுகிறார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பாகிஸ்தானின் உள்துறைச் செயலர் அக்பர் துரானி கூறுகிறார். அந்நகரில் ஜனசந்தடி நிறைந்த ஒரு ஸ்னூக்கர் விளையாட்டு விடுதியில் முதலில் ஒரு குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அது நடந்து வந்த ஒரு தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புவதாக ஹமீத் ஷகீல் எனும் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அதில் தமது பல அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளனர். முதல் தா…

  21. பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! பாகிஸ்தான் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது தார் என்ற தீவிரவாதி மேற்கொண்ட, தற்கொலைத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானிலும் அரங்கேறியுள்ளதாக ‘தி பலுசிஸ்தான் போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவ தொடரணியை இலக்கு வைத்தே இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…

  22. பாகிஸ்தான் இராணுவத்தின் ஆறு உயரதிகாரிகள் பதவி நீக்கம் பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தினர் அவரிகளில் ஒரு லெப்டினண்ட் ஜெனரல், ஒரு மேஜர் ஜெனரல் ஆகியோரும் அடங்குவர். எனினும் குறிப்பாக என்னென்ன குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் பதவி நீக்கப்பட்டனர் என்பது வெளியிடப்படவில்லை. பதவி நீக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் பலோச்சிஸ்தானில், துணைஇராணுவப்படையின் முன்னரங்கு பிரிவுகளில் பணியாற்றி வந்தனர். பாகிஸ்தானில் ஊழலை முற்றாக ஒழிக்கும்வரை தீவிரவாதத்துக்கு எதிரானப் போரை வெல்ல முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தெரிவித்து இர…

  23. பாகிஸ்தான் இராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக முதல் பெண் நியமனம் பாகிஸ்தான் இராணுவம் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை லெப்டினன்ட் ஜெனரலாக நியமித்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஊடக பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தில் ஏற்கனவே மேஜர் ஜெனரலாக பதவிவகித்த பெண் அதிகாரியான நிகர் ஜோஹர் நேற்றைய தினம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, மூன்று நட்சத்திர ஜெனரலின் பதவியைப் பெற்ற மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர், பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் பெண் அறுவை சிகிச்சை தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை மற்றும் கணவர் என இருவரும் இராணுவத்தில் பணியாற்றியுள்ள நிலையில், ஜோஹர் 1985 ஆம் ஆண்டில் ராவல்பிண்டியில் உள்ள இராணு…

  24. பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்! பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் க…

    • 4 replies
    • 441 views
  25. பாகிஸ்தான் ஊடகவியலாளரால் ட்ரம்ப் – இம்ரான்கான் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு! காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் கூட்டாக பங்கு பற்றிய செய்தியாளர் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு பல முக்கிய சந்திப்புகளையும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இருவரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதன்போது, ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.