உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26875 topics in this forum
-
அமெரிக்காவில் கடும் பனிப்புயல், அவசரநிலை அறிவிப்பு பெரிய அளவில் குளிர்காலப் புயல் மற்றும் அச்சுறுத்தும் விதமான பனிப்புயல் காரணமாக, அமெரிக்காவின் வட- கிழக்கு பகுதியில் உள்ள நியூயார்க் மற்றும் நியூஜெர்சி ஆகிய மாநிலங்களில் அவரசகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP பென்சில்வேனியா மற்றும் கனெக்டிகட் மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் பனிப்புயல் வீசுவதற்கான அபாயம் உள்ளதாக தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று பின்னேரத்தில், சில இடங்களில் 60 சென்டிமீட்டர் அளவு வரை பனி பதிவாகும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்…
-
- 0 replies
- 323 views
-
-
சிரிய அரசின் விமானப்படைத்தளத்தின் மீது அமெரிக்கா ஏவுகணைத்தாக்குதல். சிரிய அரச எதிர்ப்பாளர்களின் வசமுள்ள நகர்மீதான ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியே இது என்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதை மறுக்கின்றன சிரியாவும் ரஷ்யாவும்; பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கை இதுவென குற்றச்சாட்டு. சிரியாவில் முற்றிவரும் மோதல் குறித்த முழுமையான தகவல்கள் இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 218 views
-
-
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே திடீர் பொதுத்தேர்தலை அறிவித்திருப்பது குறித்த செய்தி; வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரிக்கும் மோதல் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம், லண்டனில் உருவாகும் பிரம்மாண்ட பாதாள சாக்கடைத்திட்டம் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டுமா? என்பது குறித்த நேரடி செய்தி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லப்பிராணிகளை கொண்டுவரும் போக்கு அதிகரிப்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 314 views
-
-
ஈராக் - சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க பணியாளர்கள் மற்றும் நிலையங்களுக்கு எதிராக போராளிகள் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க இராணுவம் சிரியாவில் இரு இடங்களிலும், ஈராக்கில் ஒரு இடத்திலும் செயற்பட்டு வந்த போராளிகளின் ஆயுத சேமிப்பு நிலையங்கள் குறிவைத்ததாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. எனினும் தாக்குதல் காரணமாக யாரா…
-
- 0 replies
- 485 views
-
-
ஏர்-இந்தியா நிறுவன ஒப்பந்தத்தைப் பெற, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கனடாவைச் சேர்ந்த இந்தியர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கனடா வாழ் இந்தியரான நஸிர் கரிகார் (65) என்பவரை, கனடா போலீஸார் 2010, மே மாதம் கைதுசெய்தனர். லாபம் தரக்கூடிய ஒப்பந்தத்தைப் பெற, ஏர்- இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு 2005 முதல் 2007 வரை, ஆயிரக்கணக்கான அமெரிக்க டொலர்களை லஞ்சமாக கொடுக்க முயன்றார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஒட்டாவாவில் உள்ள விசாரணை நீதிமன்றம், நஸிர் கரிகார் குற்றவாளி எனவெள்ளிக்கிழமை அறிவித்தது. இதற்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக…
-
- 1 reply
- 352 views
-
-
வர்த்தக மோதல் : அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது சீனா !! அமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்கு பதிலளிக்கும்…
-
- 0 replies
- 338 views
-
-
டுபாய் காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவுத் தலைமையகத்தை வெடிக்கச் செய்யப் போவதாக பெண் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உடலில் வெடிபொருட்களை கட்டியிருப்பதாகவும், கட்டடத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறித்த பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆறு வயது சிறுமி ஒருவரையும் குறித்த பெண் அருகில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ரஸ்ய மொழியில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. டுபாய் ஆட்சியாளரை சந்தித்து தமது பிரச்சினைகளை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்காவிட்டால், குண்டை வெடிக்கச் செய்ய நேரிடும் என பெண் அச்சுறுத்தியுள்ளார். இதனால் குறித்த கட்டடத்தில் இருந்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். கட்டடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குடும்பப் பிரச்சினை காரணமா…
-
- 0 replies
- 359 views
-
-
ஆப்கானிஸ்தானின்... மூன்று முக்கிய நகரங்களில், தலிபான்கள் உக்கிர தாக்குதல்! ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அரசப் படைகளால் எவ்வளவு நேரம் தலிபான்களின் தாக்குதல்களுக்கு தாக்குபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காந்தஹார் மாகாணம் தலிபான்களின் பிடியில் செல்லும் அபாயம் இருப்பதாக, அம்மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இந்நகரத்தை தங்களின் தற்கால…
-
- 1 reply
- 445 views
-
-
லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய லண்டனில் குவிக்கப்படும் இராணுவத்தினர். நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய லண்டனின் சாலைகளில் இராணுவத்தினர் ரோந்துவர ஆரம்பித்துள்ளது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எமது செயதியாளர் கூறகிறார் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 388 views
-
-
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் தொடர் இல்லை! : இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அதிரடி! பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இருதரப்பு கிரிக்கெட் தொடரை முன்னெடுக்கப் போவதில்லையென இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையில் தொடரொன்ரை நடத்துவது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் இன்று டுபாயில் பேச்சுவார்த்தை நடத்துவதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கருத்து தெரிவிக்கையில் "பாகிஸ்…
-
- 0 replies
- 243 views
-
-
கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ? டாம் கீட்டிங்நிதி, குற்றம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம் கத்தாரை , சௌதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகள் தனிமைப்படுத்திய சர்ச்சை, அந்த எரிவாயு வளமிக்க நாடு , மத்தியக்கிழக்கு பகுதியின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து வருகிறது. படத்தின் காப்புரிமைREUTERS கத்தாரின் `தன்வழி சார்ந்த` வெளியுறவுக் கொள்கை பற்றி கத்தாரின் அண்டை நாடுகள் அதிருப்தி தெரிவித்திருப்பது இது முதல் முறை அல்ல - கத்தாருடன் அந்த நாடுகள் தங்கள் ராஜீய உறவுகளை 2014ல்கூட ஒன்பது மாதங்களுக்குத் துண்டித்திருந்தன. இஸ்லாமியவாத …
-
- 0 replies
- 414 views
-
-
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 வெவ்வேறு இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அண்மைக்காலமாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் உச்சமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 25 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்தத் தாக்குதல் இரவு முழுவதும் நீடித்தது. இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இம்மோதலில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதலை பயன்படுத்தி ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். http:/…
-
- 4 replies
- 504 views
-
-
சோவியத் நாட்டின் சாதனை 100 ஆண்டு காலத்திற்கு மேலாக பேசப்பட்டு வரும் கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று இந்தியாவில் கைவிடப்பட்ட வேளையில் அதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான திட்டத்தினை சோவியத் நாட்டில் நிறைவேற்றி மாபெரும் சாதனை புரிந்திருக்கிறார்கள். சோவியத் நாட்டில் உள்ள துர்க்மேனிய குடியரசில் 3,5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மாபெரும் பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது. இதற்கு அடுத்த குடியரசில் ஓடும் அமுதாரிய என்னும் ஆற்று நீரின் ஒரு பகுதியை இப்பாலைவனப் பகுதிக்குத் திரும்பிக் கொண்டுவந்து பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றியிருக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டில் துர்க்மேனிய நாடோடி மக்கள் அப்போது ரஷ்யாவை ஆண்ட மகாபீட்டர் சக்கரவர்த்தியைக் கண்டு …
-
- 0 replies
- 1.8k views
-
-
நடுவானில் ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி! வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா நேற்று நடுவானில் ஏவுகணைகளை எதிர்த்து அழிக்கக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. அதில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா. சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதி…
-
- 0 replies
- 491 views
-
-
உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது. இரண்டாவது நபராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மூன்றாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை தான் பாப்பரசர் பிரான்சிஸ் பிடித்திருக்கிறார். அமெரிக்காவிலோ ஒபாமாவை விட இரண்டு மடங்கு ஆதரவுபெற்று, பாப்பரசர் பிரான்சிஸ் தான் முதலிடம் பெற்றார். சீனாவில் அதிபர் க்ஷி ஜின்பிங்-ஐவிட இரண்டு மடங்கு விருப்பு வாக்கு பில் கேட்ஸுக்கு கிடைத்திருக்கிறது. டைம்ஸ் செய்திப் பத்திரிகைக்காக ஆய்வு நிறுவனமொன்றினால் 13 நாடுகளில் சுமார் 14 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 930 views
-
-
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திடீர் மாற்றம் உக்ரைன் ( Ukraine ) அரசியலில் நேற்றைய சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஜனுகோவிற்ச் ( Janukowitsch ) தன் அரசியல் எதிரிகளுக்கு அரசாங்கத்தில் பல உயர் பதவிகள் தர முன் வந்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகாரச் செயலரான அர்செனி ஜசென்யுக்கிற்கு ( Arseni Jazenjuk) முதன் மந்திரிப் பதவியும், குத்துச்சண்டை வீரரான விற்றலி கிலிற்ச்கோ விற்கு உதவிப் பிரதமர் பதவியும் தர முன்வந்துள்ளார். நாட்டில் சட்டதிருத்த மசோதா கொண்டு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.. தற்போதைய பிரதமர் நிக்கோலை அசரோவ் ( Nikolai Asarov ) ராஜினாமா செய்ய வேண்டும் எனும் நிபந்தனை ஏற்கனவே பாராளுமன்ற அவசரகால இருப்பின் போது சென்ற நாட்களில் முடிவெடுக்கப்பட்டதாகும். புதிய முதன்…
-
- 1 reply
- 359 views
-
-
சாமியார்களைத் தேடி ஓடும் சாமானியர்களே..! சுகி சிவம் கடவுள் வேறு... மனிதன் வேறு என்று நினைப்பது வழிபாட்டில் ஆரம்ப நிலை. கடவுளும் நானும் வேறு வேறாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுதல் ஆத்ம நிலை. இந்தப் புரிதல் நிகழ்ந்தவர்களை 'ஸ்வாமி' என்று கொண்டாடுவது நமது பண்பு. பகவான் ரமணர், ராமகிருஷ்ணர், சிவானந்தர், வள்ளலார், மணிவாசகர், நூற்றாண்டு கண்ட காஞ்சி மகா ஸ்வாமிகள் ஆகியோர் நமது மரியாதைக்குரிய முன்னோடிகள். இந்த உயர்நிலை தொடமுடியாத ஞானக் குட்டைகள், எந்த உழைப்பும் இன்றி வசதி, மரியாதை, சுகபோகங்களை அடைய சாமியார்களாக வேஷம் போட்டனர். ஜோதிடர், அருள்வாக்கு, தாயத்து, தகடு, மருத்துவம், ஏவல், பில்லி சூனியம், தனவசியம், ஆவி யுலகத் தொடர்பு என்று பலப்பல தலைகளுடன் பவ…
-
- 0 replies
- 953 views
-
-
உக்ரைனின்... வான் பாதுகாப்பு அமைப்புகளை, அழித்துள்ளதாக... ரஷ்யா அறிவிப்பு! உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தங்களது தரைப் படையினருக்கு வான்வழியாகப் பாதுகாப்பு கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு ஸ்லோவேகியா அளித்ததாகத் தெரியவந்துள்ள நிலையில், அந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது. டினிப்ரோ என்ற இடத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகோலாய், கார்கிவ் பிராந்தியங்களிலும் அழித…
-
- 0 replies
- 182 views
-
-
உக்ரைனில்... விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 26 ஆக உயர்வு ரிவ்னே பகுதியில் நெடுஞ்சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது. இரண்டு சாரதிகள் உட்பட மொத்தம், 26 பேர் விபத்தில் உயிரிழந்ததோடு 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து போலந்து நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அதில் 34 பயணிகளும் இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280104
-
- 0 replies
- 263 views
-
-
முதல்வர் கருணாநிதிக்கு வெடிகுண்டு மிரட்டல் திகதி: 23.07.2010 // தமிழீழம் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர். இது பற்றி தெரியவருவதாவது: நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். அந்த நபர் கூறுகையில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார். இதேபோல 108 அம்புலன்ஸ் சேவை மையத்தையும் தொடர்பு கொண்டு இதேபோல கூறியுள்ளார். இதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டனர். விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் எங்குமே க…
-
- 1 reply
- 485 views
-
-
எல் சால்வடோர்: பிட்காயின் மூலம் அன்றாட தேவைகளை வாங்கும் உலகின் முதல் நாடு ஜோ டைடி பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பிட்காயின் மூலம் இந்த நாட்டில் எதையும் வாங்கலாம் நொறுக்குத்தீனிகள் முதல் பெட் ரோல்,டீசல் உட்பட வீடுகள் வரை என அனைத்தையும் எல் சால்வடோரில் நீங்கள் பிட்காயின்கள் மூலம் வாங்க முடியும். எல் சாண்டே கடற்கரை நகரம் சுமார் 3,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை பெற்று பிட்காயின் பீச் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்த அரசு எப்போது, எந்தப் பணத்தைக் கொண்டு பிட்காயின்களை வாங்கினார்கள் என்பதே எங்களுக்குத் தெர…
-
- 1 reply
- 390 views
- 1 follower
-
-
மோடி பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் முதலாவது ஒன்றிணைந்த அமர்வு நேற்று ஆரம்பமாகியது. இந்த அமர்வு எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இல்லாத நிலையில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். இந்தியாவின் அரசியலமைப்பின் படி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக இருப்பதற்கு கட்சியொன்று 10 சதவீத ஆசனங்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது குறைந்த 55 ஆசனங்களை கொண்டிருக்க வேண்டும். எனினும், பிரதான கட்சியாக இந்திய காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் 44 ஆசனங்களையே பெற்றுள்ளதாள் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒன்றிணைந்த நாடாளுமன்ற அமர்வு எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இன்றி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்க முடியாது என, லோக்சபா சபாநாயகர் ச…
-
- 0 replies
- 412 views
-
-
மகிந்தவுக்கு போதனை செய்த தமிழன். ஏழாவது நிமிடத்திலிருந்து அவரது உரை ஆரம்பமாகிறது. யாரும் மொழி பெயரக்க்க கூடியவரகள் இருந்தால் அவரது உரையை தமிழாக்கம் செய்யவும்.
-
- 1 reply
- 905 views
-
-
தென் கொரியா சென்றடைந்தார் வட கொரிய தலைவரின் தங்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பியோங்சாங் சென்றடைந்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP Image captionகிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ-ஜங் சகோதருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கர…
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களை பெற முயற்சி- அவுஸ்திரேலியாவில் இருவர் கைது By RAJEEBAN 11 OCT, 2022 | 10:46 AM இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களிற்கான ஒப்பந்தங்களை பெற முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பலநாடுகளை அடிப்படையாக கொண்டு ஒரு தசாப்தகாலமாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தென்னாசியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தை சேர்ந்த இருவரையே அவுஸ்திரேலிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 14 மில்லியன் அவுஸ்திரே…
-
- 1 reply
- 280 views
- 1 follower
-