உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26887 topics in this forum
-
அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்.இது குறித்து தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே இருந்ததால், போலீசார் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அப்போது அந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ் அதிகார…
-
- 0 replies
- 364 views
-
-
கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது சிறிலங்காவில் உள்ள கனடா தூதரவாலயம் இன்று, புதன்கிழமை, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரிப்பதாகவும், கனடா பயங்கரவாதிகள் நிறைந்த நாடு என்றும் கோஷமிட்டபடியே தூதரவாலயச் சுவர்கள் மற்றும் வளாகமானது காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.
-
- 20 replies
- 3.7k views
-
-
112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். கோவை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கோவை விமான நிலையத்திலிருந்து ஒரே ஹெலிகொப்டரில் பிரதமர், ஆளுநர், முதல்வர் மூவரும் விழாவிற்கு சென்றனர். ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடி பிராத்தனை செய்தார். பின்னர் அங்குள்ள தியான லிங்கத்திற்கு பிரதமர் மோடி சிறப்…
-
- 13 replies
- 2k views
-
-
பெருநகர ரொறென்ரோவில்... கொவிட் தடுப்பூசி செலுத்தும், மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்! பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள் பொதுத் தடுப்பூசித் தளங்களை மூடுகின்றன. பதிவை இரத்து செய்கின்றன அல்லது நியமனங்களை ஒத்திவைக்கின்றன. ஸ்கார்பாரோவில் சுமார் 10,000 நியமனங்கள் இரத்து செய்யப்படும். ஏப்ரல் 14ஆம் திகதி இரண்டு மருத்துவமனை மருந்தகங்கள் வழங்கல் சிக்கல்களால் மூடப்படுகின்றன. அவை எப்போது திறக்கப்படும் என்பதற்கான காலக்கெடு தெரியவில்லை.. இதே காரணத்திற்காக நோர்த் யோர்க் பொது மருத்துவமனை ஏப்ரல் 1…
-
- 0 replies
- 242 views
-
-
தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல் அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 75 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களிடமும் மற்றவர்களைப் போலவே தடுப்பூசிகள் செயற்பட்டன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆகியவையும் இரு வயதினரிடமிருந்தும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு பதிலைக் கண்டறிந்தன. இதுவரை ஆய்வு செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத இரண்டு ஆய்வுகளில் அடங்கியுள்ள இந்த ஆய்வு…
-
- 1 reply
- 355 views
- 1 follower
-
-
ரஷ்யாவில்... 29 பேருடன், பயணித்த விமானம் மாயம்: தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்! ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் குறித்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 28 பேருடன் ரஷ்ய ஏ.என்-26 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. தேடல் மற்றும் மீட்பு குழுக்கள், தியா ரியாவுக்கு சென்று கொண்டிருப்பதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் 22 பயணிகள் மற்றும் …
-
- 0 replies
- 330 views
-
-
ஜகர்தா: இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற…
-
- 1 reply
- 555 views
-
-
சமூகத் தலைவர் சிலை தகர்ப்பு,பெண் ஆளுநர் கடத்தல், தலிபான்கள் வெறியாட்டம்! ஹசாரா சமூகத் தலைவர் மஸாரியின் சிலை தகர்ப்பு பெண் ஆளுநரும் கடத்தல் தலிபான்கள் வெறியாட்டம். ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்துள்ளனர். கடந்த முறை ஆப்கானைக் கைப்பற்றியபோது, பாமியானில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த, நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்து அழித்தனர். இந்த முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஹசாரா இனத்தின் தலைவரின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் வாழும் இனத்தவர்கள் ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைக்கப்படுகின்றனர். 13ஆம்…
-
- 1 reply
- 589 views
-
-
கென்யாவின் தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் பலரை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அங்காடி வளாகத்தில், முற்றுகையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கென்யாவின் பாதுகாப்பு படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். கடுமையான துப்பாகிச் சத்தம் கேட்டுவருவதாக சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். வர்த்தக வளாகத்தில் இருந்து புகை கிளம்புகிறது கென்யாவின் விமான நிலையம் ஒன்றில் பயணிகள் சிலரை விசாரணைக்காக தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.கட்டிடத்திலிருந்து புகை கிளம்புவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன. கென்யத் துருப்பினர் டஜன் கணக்கில் இந்த வர்த்தக வளாகத்தில் நுழைந்திருந்தனர். பணயக் கைதிகளைக் கா…
-
- 0 replies
- 387 views
-
-
பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் - அம்பலப்படுத்தும் புலனாய்வு பேண்டோரா பேப்பர்ஸ் செய்திக் குழு பிபிசி பனோரமா 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் வரி ஏய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு ரகசிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது…
-
- 2 replies
- 474 views
- 1 follower
-
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அளவுக்கு அதிகமான குடியேறிகளை ஏற்றிவந்த நிலையில் கப்பல் மூழ்கி நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவத்தை அடுத்து, மத்திய தரைக்கடலின் தென்பகுதியில் இத்தாலி தனது கடல் ரோந்தை மும்மடங்காக்கியுள்ளது. அப்பகுதியில் விமான ரோந்தும் அதிகரிக்கப்படும். சிசிலி, மால்டா மற்றும் லிபியா ஆகியவற்றின் கடற்கரைகளுக்கு இடைப்பட்ட பகுதில், இந்த மாதம் கப்பல் மூழ்கி பல நூற்றுக்கணக்கானோர் இறந்த இடத்திலேயே இந்த ரோந்துகள் நடைபெறும். அதேவேளை லம்பெதுசா தீவுகளுக்கு 137 குடியேறிகள் இரவு பாதுகாப்பாக படகில் வந்து சேர்ந்துள்ளனர். அடுத்த மாதம் இது குறித்து நடக்கவிருக்கும் மாநாடு ஒன்றில், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் உதவுமாறு கேட்கப் போவதாக இத்தாலியும் மால்டாவும் கேட்கவுள்ளன. அகதிகள…
-
- 0 replies
- 420 views
-
-
ஜெர்மனியின் முன்னாள் ஆட்சியாளர் அடோல்ஃப் ஹிட்லருக்கு அந்நாட்டின் நகரசபையொன்று, 78 ஆண்டுகளுக்கு முன்னர் அளித்திருந்த கௌரவ குடிமகன் அந்தஸ்த்தை தற்போது மீளப் பறித்துக் கொண்டுள்ளது. ஹிட்லர் உயிரிழந்ததன் பின்னர், அவருக்கான கௌரவ அந்தஸ்தும் காலாவதியாகி விட்டது என்பதால் இப்போது அதனை மீளப்பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் சிலர் முன்னர் வாதிட்டிருந்தனர். எனினும், கோஸ்லார் நகரசபையில் ஹிட்லரின் விருதைப் பறிக்கும் இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நகரசபை தனது கடந்தகால கறைபடிந்த வரலாற்றை மறைக்கப் பார்ப்பதாக அதன் எதிர்க்கட்சித் தலைவர் வாதிட்டிருந்தார்.ஆனால் கோஸ்லார் நகரசபைக்கு அந்த கௌரவ பதவியை பறிப்பதற்கு சட்டரீதியான, விழுமிய ரீதியான கடமை இருப்பதா…
-
- 1 reply
- 485 views
-
-
சுனாமிக்கு இலக்கான டோங்காவின் நிலை என்ன? சேதத்தை மதிப்பிட விமானங்களை அனுப்பியுள்ள நியூஸிலாந்து- அவுஸ்ரேலியா! எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. தாழ்வான தீவுகளின் பாதிப்பை மதிப்பிடுவதற்காக ஒரு விமானம் புறப்பட்டது என நியூஸிலாந்து பாதுகாப்புப் படை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன், சுனாமி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார். தூசி காரணமாக குடிநீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெசிந்தா கூறியுள்ளார். டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்ற…
-
- 2 replies
- 542 views
-
-
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை. லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது. அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்…
-
- 6 replies
- 1.5k views
-
-
பிரதமர் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு ஒப்புதல் கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்! கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்டத் தளத்தை ப…
-
- 0 replies
- 176 views
-
-
ரஷ்யாவிற்கு.... கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்! உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், மூன்றாவது நாளாக நேற்று (புதன்கிழமை) பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்தி, அங்கிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா தாக்குதலுக்கு இந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை அரசி…
-
- 0 replies
- 182 views
-
-
சுவாமி சார்பாக பிரமச்சாரிகள் நாடத்திய ஊடகவியலாளர் மாநாடு. http://www.youtube.com/watch?v=w62Ttcpvovs சுவாமி நித்தியானந்த நிரபராதி என்கின்றார் http://www.youtube.com/watch?v=GE_Y5AHotyg ILANKAINET.COM
-
- 4 replies
- 1.1k views
-
-
துருக்கி சென்ற விமானத்தை ரஷ்யாவுக்கு கடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு! [saturday, 2014-02-08 19:14:58] உக்ரைனில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 110 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 45 வயது மதிக்கதக்க பயணி ஒருவர் எழுந்தார். அவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விமானத்தை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரஷியாவின் சோஷி நகருக்கு ஓட்டும் படியும் மிரட்டல் விடுத்தான்.இந்த தகவலை காக் பிட் பகுதிக்கு சென்று விமானிகளிடம் கூறினான். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக அந்த கடத்தல்காரனிடம் தந்திரமாக நைசாக…
-
- 0 replies
- 527 views
-
-
குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்பு குர்திஷ் படைகள் வசம் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இராக் அரசப் படைகள் கூறியுள்ளன. படத்தின் காப்புரிமைAFP Image captionகடந்த செப்டம்பர் 25 அன்று நடந்த சுதந்திர வாக்கெடுப்பின் முடிவுகளை குர்திஷ் தலைவர்…
-
- 0 replies
- 484 views
-
-
சாமியார் நித்தியானந்தாவை விடுதலை செய்யக் கோரி அவரது சீடர்கள், சாமியார் அடைக்கப்பட்டுள்ள ராம்நகர் மத்திய சிறை முன்பு பேனர் கட்டி உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா கிட்டத்தட்ட ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் ஹிமாச்சல் பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரை தற்போது ராம்நகர் சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர். 40 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் நித்தியானந்தா ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் ராம் நகர் சிறைக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் திரண்டு வந்தனர். நூற்றுக்க…
-
- 0 replies
- 542 views
-
-
நூறு பில்லியன் டாலர் ஊழல்: சிக்கலில் செளதி இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசெளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக ஊழல் எதிர்ப்பு உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது கடந்த சில ஆண்டுகளாக, திட்டமிடப்பட்ட ஊழல் மற்றும் கையாடல் செய்ததன் மூலம் குறைந்தது 100 பில்லியன் டாலர் ந…
-
- 0 replies
- 378 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதா ஏதாவது ஒரு அறிக்கை தன் பெயரில் வரவேண்டும் என்பதற்காக எதை எதையோ எழுதச் சொல்கிறார், அதை அறிக்கையாக தன் பெயரில் வெளியிடச் செய்கிறார். முதல் நாள் விலைவாசி என்றார், அடுத்த நாள் மின்வெட்டு என்கிறார். அடுத்த நாள் இலங்கைத் தமிழர்கள் என்கிறார். அதற்கு, முதல்வர் கருணாநிதி ஆணித்தரமாக கொடுக்கின்ற விளக்கங்களைப் படிப்பதும் இல்லை. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அன்னை சோனியா காந்திக்கும், பிர…
-
- 0 replies
- 408 views
-
-
புதுடெல்லி: ஆபாச இணையதளங்களை முடக்கினால் மருத்துவம் தொடர்பான தகவல்கள் முடக்கப்பட்டு விடும் என்றும், எனவே ஆபாச இணைய தளங்களை முடக்கும் சாப்ட்வேரை நிறுவிய பின்னரே கம்யூட்டரை விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஆபாச இணையதளங்களை முடக்கக் கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த கமலேஷ் பஞ்ச்வானி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல. பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் இன்டர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இராக்கில் அமெரிக்காவுக்கு உதவியவர்களையே நட்டாற்றில் விட்டுவிட்டது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸன் ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கரின் காதில் இப்படிக் கிசுகிசுத்தார்: “நாம் இதைப் பற்றியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.” என்ன செய்தாலும் தெற்கு வியட்நாம் தேறவே போவதில்லை என்பதே அவருடைய கிசுகிசுப்புக்குப் பொருள். அது 1972 ஆகஸ்ட் மாதம். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தெற்கு வியட்நாம் நொறுங்கிவிடும் என்பதே நிக்ஸனின் கவலை. “இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு இந்த நாடு எப்படியாவது தாக்குப்பிடிக்கும் வழியை நாம் கண்டாக வேண்டும்; வரும் அக்டோபருக்குள் நாம் அதைச் செய்துவிட்டால் 1974 ஜனவரிக்குப் பிறகு யாரும் இதை எதுவும் செய்துவிட முடியாது” என்று ஆமோதித்தார் கிஸ்ஸிங்…
-
- 3 replies
- 2.6k views
-
-
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமானை, தமிழ் திரைப்படத்துறையினர் சந்தித்துப் பேசினர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்தியராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜ், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சத்தியராஜ், நண்பர் மற்றும் இன உணர்வாளர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் சீமானை சந்தித்தோம்…
-
- 0 replies
- 506 views
-