Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து பாகிஸ்தான் இராணுவம் இந்திய படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் காலமானார். இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது; சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து இன்று மதியம் 2 மணியளவில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவத்தினரும் திருப்பிச் சுட்டதில் வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் உதம்பூரில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களில் இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தாண்டில் பாகிஸ்தான் எல்லை மீறுவது இது 12-வது முறையாகும் என்று அவர் கூறினார். …

  2. ராம்நகர்: கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்கள…

  3. இந்தியக் கொலையில் இலங்கைக் கொலையாளி! அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!! ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க புதிய டீம் பொறுப்பேற்ற பிறகு, விசார​ணை​யில் வேகமும், விசாரிக்கும் முறையில் கடுமையும் கூடி இருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என்ற பேனரில் இடம்பெற்ற ஏராளமானவர்களிடம் விசாரித்து முடித்து விட்டனர். ‘எலிமினேஷன் பிராசஸ்’ என்ற வகையில், ஒருசிலரைத் தவிர மற்றவர்களைக் கழற்றி விட்டனர். மிச்சம் இருக்கும் அந்த சிலரிடம் இப்போது தீவிர விசாரணை நடக்கிறது! இந்த விசாரணையின் அடிப்படையில் பொலிஸுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது… மார்ச் 28-ம் தேதி இரவு படுடென்ஷனாகக் காணப்பட்ட ராமஜெயம், தன்னை ரிலாக்ஸ் செய்து​கொள்ள விரும்பி இருக்கிறார். அப்போது, அவருக்கு ஏற்கெனவே பழக்கமான சிலரு…

    • 0 replies
    • 1.7k views
  4. ரஞ்சிதாவும் வந்ததில்லை,பஜனையும் நடக்கவில்லை-மதுரை ஆதீனம் மதுரை: மதுரை ஆதீன மடத்தில் பஜனை நடந்ததாகவும், அதில் நடிகை ரஞ்சிதா பங்கேற்று இருந்ததாகவும், புனித நீர் கொடுத்தபோது மயக்க நிலையில் ஆபாச நடனங்கள் நடந்ததாக அவர் கற்பனையான, போலியான குற்றச்சாட்டுகளை மடத்தின் மீது சுமத்தியுள்ளார் இந்து மக்கள் கட்சியின் சோலைக் கண்ணன். உண்மையில்,இதுவரை நடிகை ரஞ்சிதா மடத்திற்கு வந்ததில்லை என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம் இதுகுறித்து மாலைமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் வருந்ததக்கதாகும். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்தது முதல் அவர் மீது வேண்டுமென்றே கற்பனை குற்றச்ச…

    • 4 replies
    • 1.1k views
  5. இந்தியாவைச் சுற்றி ஒரு வலை பின்னும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கால்பதித்துள்ள சீனா, தற்போது ஆப்கானிஸ்தானுக்குள்ளும் நுழைகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியை, சீனா மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கையும், முக்கியத்துவத்தையும் உடைக்கும் வகையில், சீனா இதை செய்து வருகிறது என, இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதி வி.கே.சிங் அம்பலப்படுத்தியுள்ளார். இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் வி.கே.சிங். இவர் போபாலில் உள்ள வர்க்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மாணவராக உள்ளார். பணியில் இருந்த 20…

  6. பிரித்தானியாவிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை ஆதாரங்களுடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரசால் ஏனைய பல அரசியல் கைதிகளுடன் இலங்கைக்கு அனுப்பபட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான இவருடன் மேலும் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பின் பல மாதப் பயணத்தின் முடிவில் மீண்டும் பிரித்தானியாவிற்கு திரும்பிச் சென்றுள்ள குறித்த நபர் தன்னை ஹரி என்ற பெயரில் அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கையில் காணப்ப…

  7. சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத், பதவியை ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லரி கிளின்டன் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார். ஆனால், சிரியா பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது. அது நாடுகள் இடையே மோதலை ஏற்படுத்தும் என்று ஐ.நா.வில் இந்தியா சார்பில் நேற்று வலியுறுத்தப்பட்டது. http://www.seithy.co...&language=tamil ஸ்ரீலங்காவில் யுத்தம் நடந்தபோது இந்தியா ஏன் இவ்வாறன கருத்தை வெளியிடவில்லை ?

  8. அதிமுக தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு கூட மதிப்பதில்லை. இதையெல்லாம் மறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிமுகவை திருப்தி செய்ய வேண்டுமென்பதற்காகவே திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரனின் மரணத்தின் காரணமாகவே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அப்போது தோழமைக் கட்சியாக போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் …

  9. அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் விலாடிமிர் புதின் பெய்ஜிங் சென்றுள்ளார். அப்போது அவர் சீன தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டுகளில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்த பிராந்தியத்தில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா-சீனா கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக அதிபர் புதின் சீன தலைவர்களுடன் விவாதித்தார். …

  10. தற்போது கொண்டாடப்பட்டு வருகின்ற பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை ஒன்றையும் வெள்ளி நாணயம் ஒன்றையும் கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கனடிய அரசின் சார்பில் கனடாவின் தபால் கூட்டுத்தாபனம் மேற்படி வெளியீடுகளைச் செய்துள்ளது. இங்கே காணப்படும் படங்களில் மேற்படி பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஞாபகார்த்த முத்திரையும் வெள்ளி நாணயமும் காணப்படுகின்றன. http://www.seithy.co...&language=tamil

  11. ஊழலுக்கு எதிராக சச்சின் குரல் கொடுப்பாரா..? ஊழலுக்கு எதிராக சச்சின் குரல் கொடுக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார் இன்று. இன்று மாநிலங்களவை உறுப்பினராக அதாவது இந்திய நாடாளுமன்றத்தின் ராஜிய சபை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் பதவி ஏற்றுள்ளார். சச்சின் அவர்களை போன மாதத்தில் ஏப்ரல் இறுதியில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டார், அதற்கேற்ப சச்சின் அவர்களுக்கு இன்று ஹமித் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். என்னை எம்.பி.யாக தேர்வு செய்த சக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எம்.பி.ஆகிய நான் கிரிக்கெட் மட்டுமல்ல மற்ற விளையாட்டுத் துறைகள…

  12. மியான்மாரில் (பர்மா) முஸ்லீம் காடைக் கும்பல் ஒன்று பெளத்த பெண்ணை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த பெளத்தர்கள்.. முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தி 9 முஸ்லீம்களைக் கொன்றுள்ளனர்..! இவ்வாறு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. Muslims killed in attack in Burma's Rakhine province. Buddhist residents in western Burma have killed at least nine Muslims as sectarian tension worsens in the region, police say. http://www.bbc.co.uk...-18324614##_tab பிற்குறிப்பு: பிபிசி இச்செய்தி மூலம்.... முஸ்லீம் - பெளத்த மதக் கலவரத்தை தூண்டி.. பிராந்திய.. உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதோடு... இது ஒரு பிரிட்டிஷ் குறுந்தேசிய ஊடகத்தின் பொறுப…

  13. நைஜீரியாவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி 147 பேர் பலி. அபுஜா: நைஜீரியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள லாகோஸில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதி்ல் இருந்த 147 பேரும் பலியாகினர். நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இருந்து பயணிகள், விமானிகள் என்று 147 பேருடன் தனியார் பயணிகள் விமானம் மெக்டான்னல் டக்லஸ் எம்டி௮3 நேற்று லாகோஸுக்கு புறப்பட்டது. அந்த விமானம் பிற்பகல் 2.44 மணி அளவில் லாகோஸ் முர்தலா முகமது விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 147 பேருமே பலியாகினர். விமானம் மோதிய இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். மீட்பு பணியை மேற்கொள்ள மக்கள் இடையூறாக இருந்ததால் அவர்கள் அங்கிருந…

  14. இணைய தள தாக்குதல்களை ஒரு அரசாங்கம் நாகரிகமாகக் கொள்ள வேண்டும் எதிரிகளுக்கு எதிராக இணைய தள தாக்குதல்களை நடத்துவது பெரிய இழப்புக்களை ஏற்படுத்தாத ஒன்று என்பதால் அதனை ஒரு அரசாங்கம் ஒரு நாகரிகமான தெரிவாகக் கொள்ள முடியும் என்று பிரிட்டிஷ் இராணுவ படைகளுக்கான அமைச்சர் நிக் ஹார்வி கூறியுள்ளார். சிங்கப்பூரில் வருடாந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பேசிய அவர், எதிர்கால மோதல்களில் இத்தகைய இணையத் தாக்குதல்களின் பங்கு அதிகரிக்காலாம் என்றும், இராணுவத்துக்கு மாத்திரமல்லாமல் மொத்த சமூகத்துக்கே அதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். கனதியான பாரம்பரிய படைகளை கொண்டிருக்கும் நாடுகள் மீது இணையத் தாக்குதல்கள் மூலம் குறைந்த செலவில் தாக்குதல்களை நடத்த முட…

    • 0 replies
    • 520 views
  15. பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்கும் சீமானும் நாம் தமிழர்கட்சியும்! – அம்பலப்படுத்துகிறார் கொளத்தூர் மணி Published By பெரியார்தளம் On Sunday, June 3rd 2012. Under செய்திகள், முதன்மைச்செய்திகள் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்கும் சீமானும் நாம் தமிழர்கட்சியும்! – அம்பலப்படுத்துகிறார் கொளத்தூர் மணி நன்றி: தமிழக அரசியல் http://www.tamilveli.com/showurl.php?url=http://www.periyarthalam.com/2012/06/03/seemaan-supports-paarppaans/&type=P&itemid=231550

  16. ராணுவத்துக்கான செலவை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் நடைபெறும் பாதுகாப்புத் துறை மாநாட்டில் பங்கேற்ற அந்தோனி,அங்கு சீனாவின் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது குறித்து கூறியது: சீனா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்புத்துறை ஒதுக்கும் தொகையையும் ஆண்டுதோறும் பெரிய அளவில் உயர்த்தி வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையளிக்கிறது. இந்தியா ஒருபோதும் ஆயுதப் போட்டியில் ஈடுபட்டதும் இல்லை. அதனை விரும்பியதும் இல்லை. எனினும் தேச பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. முக்கியமாக எல்லைப் பகுதியில் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான தீவி…

  17. எகிப்திய ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக்கிற்கு இன்று ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எகிப்தினை தனது குடும்ப ஆட்சியாக ஆண்டு வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிளர்ச்சியாளர்கள் பலரை ஹொஸ்னி முபாரக் கொலை செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழங்கு விசாரணை ட்றயல் அட்பார் முறையில் கடந்த 10 மாதங்களாக நடந்து வந்த நிலையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை ஆதரரித்து மக்கள் குதூகலத்தில் குதித்தமையையும் காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹொஸ்னி முபாரக்குடன் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹபீப் அல்-அட்லிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது h…

  18. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவார் என்று முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் களம் காண்கிறார். குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொலைக்காட்சியில் பேட்டியளித்த முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் கூறியது: தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 5 முதல் 6 விஷயங்கள்தான் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன். அவை நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட தேசிய பிரச்னைகளாகவே இருக்கும். இப்போதைய நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், தேர்தல் நடைபெறும்…

  19. மாவோ தீவிரவாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய யுத்தத்தின்போது பெண்களைப் பயன்படுத்தி தாக்குதல் வியூகம் அமைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதே வழிமுறையை தற்போது மாவோ தீவிரவாதிகளும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. பெண்களை பயன்படுத்தி படையினரின் கவனத்தைத் திசை திருப்பி அண்மைக்காலமாக மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் சட்டிஸ்காரில் மாவோ தீவிராவதிகள் காட்டுப் பகுதியில் பெண்களை அழ விட்டு, அந்தக் குரலைக் கேட்டு வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றுமொரு சந்தர்ப்பத்த…

    • 3 replies
    • 735 views
  20. தமிழர்கள் கொந்தளிப்பு : நடிகை தப்பி ஓட்டம் ’ஏழாம் அறிவு’, ’காதலில் சொதப்புவது எப்படி’ உட்பட சில படங்களில், சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. பெங்களூருவைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையில், தமிழகத்துக்கு வாய்ப்பு தேடி வந்தார். சென்னையிலுள்ள தனது தோழிகளுடன் தங்கியிருந்த அவர், சினிமா வாய்ப்பு தேடி, சினிமா கம்பெனிகளில் ஏறி, ஏறி இறங்கினார். "ஏழாம் அறிவு' படத்தில் சிறிய வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார். சமீபத்தில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்திலும் சிறிய வேடம் கிடைத்தது. இதையடுத்து, ப…

  21. ஜெயலலிதாவின் எச்சரிக்கையால் பணிந்தது கேரளா! முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப்பதற்காக மத்திய ஆய்வுக் குழு வினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அணையின் பலத்தை ஆராய போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள போலீசார் தடுப்பதாகவும், எனவே அங்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழக போலீசாரை அங்கு நிறுத்தவேண்டியது வரும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார். இதன் எதிரொலியாக,முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப் பதற்காக மத்திய ஆய்வுக்குழுவினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. http://www.irukkiram...2905201204.html

  22. பிரான்சின் 19வயது வீரமங்கையான ஜோன் ஒப் ஆர்க் இன் சிலிர்பூட்டும் வீரவரலாறு இன்று எல்லாமே முடிந்து விட்டதக நினைத்து மூலையில் இடிந்துபோய் இருப்பவர்களும் பழைய சுதந்திர வாழ்வை மறந்துவிட்டு கிடைத்துள்ள இனத்தை கருவறுக்கும் இன்றைய சிங்களத்தின் சதிகார வாழ்வை ஏற்று வாழத்தலைப்பட்டுள்ளவர்களும் அறியவேண்டிய விடையமாகும். யார் இந்த ஜோன் ஒப் ஆர்க்? உலக சரித்திரத்தில் அழியாத இடம்பெற்ற ‘ஜோன் ஒப் ஆர்க்’ என்ற இளம் பெண்ணைப்பற்றி வல்லாதிக்க சக்திகளின் பக்கத்துணையுடன் சிங்களத்தால் அழிக்கப்பட்டுள்ள நாங்கள் அறிந்து கொள்வது அவசியம். அது 15ஆம் நூற்றாண்டு. இங்கிலாந்து பிரான்சு ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்து பிரான்சின் பல பகுதிகளை கைப்பற்றியது. பிரா…

  23. இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் பல இயக்கங்களின் உள்ளகத் தகவல்களை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு சுவீடன் அரசு இங்கிலாந்து அரசிடம் கோரியது. இதனை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த 7 நீதிபதிகளில், 5 பேர் ´அசாஞ்சேவை நாடு கடத்தவேண்டும்´ என்று கூறினர். இதை அடுத்து, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அசாஞ்சேவை சுவீடன் நாட்டுக்கு கடத்த ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றின் உத்தரவை எ…

    • 0 replies
    • 478 views
  24. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்லஸ் டெய்லருக்கு ஐம்பது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஆதரவு சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு முதல் 2002மாம் ஆண்டு வரையில் சியரோ லியோனில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது கிளர்ச்சியாளர்கள் இனப்படுகொலைகளை மேற்கொள்ள ஜனாதிபதி டெய்லர் உதவியாக கடந்த மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஜனாதிபதி பதவி மற்றும் மக்களுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதவான்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், 64 வயதான டெய்லர் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், தாம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.