உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
ரஷ்யாவின் அதிபராக 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் விலாடிமிர் புடின். ஏற்கனவே இரண்டு முறை தொடர்ச்சியாக அதிபராக இருந்த அவர், பின்னர் சட்ட விதிப்படி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவிக்கு வர முடியாது என்பதால் இடையில் சில காலம் பிரதமராக இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின் நேற்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். கிரம்ளின் நகரில் உள்ள புனித ஆண்ட்ரூ அரங்கில் பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்தி அதில் புடின் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் பேசிய புடின் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்…
-
- 0 replies
- 525 views
-
-
அணு மின் நிலையத்துக்கு எதிரான கூடங்குளம் மக்களின் தொடர் போராட்டத்தின் ஒரு கட்டமாக, அவர்கள் தங்களது 15 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை போராட்டக்குழு ஒருங்கிணைப்பளர் உதயகுமாரிடம் மீள் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், அணுமின் நிலையத்தை எங்கள் மீது திணிக்கின்றனர். அணுமின் நிலையம் வேண்டாம் என்று 60 கிராம மக்கள் நோட்டில் எழுதி எங்களிடம் கொடுத்துள்ளனர். இதை உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் எடுத்துச் செல்ல இருக்கிறோம். வாக்களிக்க மட்டும்தான் நாங்கள் இந்திய அரசுக்கு தேவைப்படுகிறோம். மற்றபடி எங்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மத்திய அரசு மதிக்கவில்லை. இதனால் நாங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்…
-
- 0 replies
- 897 views
-
-
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு இன்று காலை ரவா உப்புமா, இட்லி, மெது வடை வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் சந்திப்பு சற்று நேரத்திற்கு முன்பு தான் துவங்கியது. காலை உணவாக தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. முந்திரி பருப்பு போட்ட ரவா உப்புமா, மெது வடை, பொடி, நெய், கேசரி பாத், ஊத்தாப்பம், தோசை, இட்லி, முருங்கைக்காய் சாம்பார், தேங்காய் மற்றும் தக்காளி சட்னி ஆகியவை வழங்கப்படுகிறது என்று அதிக…
-
- 3 replies
- 953 views
-
-
மே 8, 2012 தோழர், அமைச்சர் றோய் படையாட்சிக்கு எமது கண்ணீர் வணக்கம் தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர்.…
-
- 9 replies
- 984 views
-
-
அணு குண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் - அப்துல் கலாம்..! அப்பத்தானே பல லட்சம் கோடிகளை ஆட்டையப் போடலாம் - ஈழதேசம்..! காரைக்குடியில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பில் தான் இவ்வாறு கூறியுள்ளார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். நாட்டை வலிமைப்படுத்த, பாதுகாக்க அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் மிக அவசியம் என்றார். அப்படியெனில், அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் இல்லாத நாடுகள் அனைத்தும் வலிமையற்ற பாதுகாப்பு அற்ற நாடுகள் என்று கொள்ள முடியுமா..? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அணுகுண்டு தயாரிக்கும் அணு மின் நிலையங்கள் நிறுவியதின் மூலம் பல லட்சம் கோடிகள் பணத்தை கொட்டி இருக்கிறார்கள், இந்த பல லட்சம் கோடிகளுக்கு முறையான கணக்கு வழக்குகள் கிடையாது. பிரதமரை தவிர வேறு எந்த கொம்பனும் கணக்கு க…
-
- 5 replies
- 3.3k views
-
-
முல்லைப் பெரியாறு விவகாரத்தை அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்திலும் கேரள அரசு தமிழ்நாட்டுடன் மோதலுக்குக் கிளம்பியுள்ளது. "கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தங்கள் மாநிலத்திற்கு தர வேண்டும்' என, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் மின் தடையால் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் துவங்கும் போது, அதில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 25ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். "முதல்வரின் இந்த கோரிக்கை குறித்து ப…
-
- 5 replies
- 2.6k views
-
-
கேரளாவில் 100 சதவீத கல்வியறிவு உள்ளது. ஆனால் எத்தனை படித்த பெண்கள் வேலையில் இருக்கிறார்கள், வேலை பார்க்கும் தகுதியுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் இல்லை என்பதே வியப்புக்குரிய பதிலாக உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு. கொச்சிக்கு வந்திருந்த குஷ்பு, அங்கு நிர்வாகவியல் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கோருவதற்கு முன்பு, தங்களைத் தாங்களே முதலில் சக்தி பெற்றவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். கேரளா இன்று 100 சதவீத கல்வியறிவுடன் உள்ளது. ஆனால், எத்தனை பெண்களுக்கு இங்கு வேலை உள்ளது, எத்தனை பேர் வேலை பார்க்கும் திறனுடன் உள்ளனர். பெரும்பாலானோர் இல்லை என்பதே ஆச…
-
- 0 replies
- 902 views
-
-
நவநீதம்பிள்ளைக்கு எதிராக இலங்கை போர்க்கோடி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் நவநீதம்பிள்ளையும் அவரது அலுவலக அதிகாரிகளும் உதவியதாக குற்றம்சாட்டி, அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டில் வெளிவரும் டெய்லி மிர்ரர் என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நவநீதப்பிள்ளையின் இத்தகைய செயலால் இலங்கை அரசின் நியாயங்களை எடுத்துரைக்க முடியாமல் போய்விட்டதாகவும், இதற்கு காரணமான நவநீதப் பிள்ளை மற்றும் அவரது ஊழியர்களின் பங்கை அடிப்படையாக கொண்டு போராட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் …
-
- 0 replies
- 877 views
-
-
மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்ப…
-
- 1 reply
- 636 views
-
-
பிரான்ஸ் தேர்தல் 2012 ஒரு பேப்பரிற்காக சாத்திரி 28.5 27 18.1 பிரான்ஸ் மக்களும் உலக நாடுகளும் ஆவலுடன் பரப்பரப்பாக எதிர் பார்த்துக்கொண்டிருந்த பிரான்சின் தேர்தல் முதல் சுற்று நடைபெற்று முடிந்து விட்டது. ஊடகங்கள் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படியே பிரான்சின் சோசலிசக் கட்சி வேட்பாளர் François holland 28.5 வாக்குகளை பெற்று முதலாமிடத்திலும். வலதுசாரி கட்சியான ( U.M.P ) வேட்பாளர் nicola sarkozy 27 சதவீத வாக்குகளை பெற்று இடண்டாமிடத்திலும் தீவிர வலதுசாரிக் கட்சியான (F.N ) கட்சி வேட்பாளர் marin le pen அவர்கள் 18.1 வீத வாக்குகளை பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்திருக்கின்றார்கள். இனிவரும் 6 ந்திகதி மேமாதம் இரண்டாவது சுற்றில் முறையே மு…
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ்.மாவட்டம் உட்பட தமிழர்; தாயகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் இழந்த பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப்பெறுவதற்கு வழி தெரியாமல் சிறீலங்கா பொலிஸ் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் நாடிச்செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பட்டப்படிப்பு என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் இவ்விடயத்தில் இளைஞர்கள் அவதானமாக இருக்கவேண…
-
- 0 replies
- 462 views
-
-
பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபராக பதவி வகிக்கும் நிகோலஸ் சர்கோஸி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் சோஸலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் அதிகளவு ஓட்டுக்கள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதியானவர்களாக அறிவிப்பர். இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 17 replies
- 1.4k views
-
-
'பண்டோரா' என்ற கிரகத்தில் 'யுனப்டேனியம்' என்ற கனிமத்தை சுரண்டுவதற்காக அந்த கிரகத்து மக்களையே அழித்து ஒழிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அட்டகாசமான 'அவதார்' படத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாம் மறப்பது சாத்தியமில்லை. இது கதையல்ல நிஜம் என்கிற மாதிரி ஒரு சமாச்சாரம் நடக்கப் போகிறது. பிளாட்டினம் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை வெட்டி எடுத்து வர விண்கற்களுக்கு (asteroids) 'புல்டோசர்களை' அனுப்பப் போகிறது Planetary Resources Inc என்ற அமெரிக்க நிறுவனம். இந்தத் திட்டமே சயின்ஸ் பிக்சன் சினிமா மாதிரி இருந்தாலும், இதற்கு நிதியுதவி செய்ய கூகுள் நிறுவன அதிபர்களான லேரி பேஜ், எரிக் ஸுமிட் உள்ளிட்ட பல பெரும் தலைகள் முன் வந்துள்ளனர். முதல்கட்டமாக பூமிக்கு அருகாமையில் சுற்றி…
-
- 7 replies
- 1.2k views
-
-
வெளிநாட்டு குற்றவாளிகளையும், பயங்கரவாத சந்தேக நபர்களையும் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தும் ஏறத்தாழ 900 சந்தர்ப்பங்களை பிரான்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதிகள் தடுத்துள்ளதாக பிரிட்டிஷ் ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் மத தீவிரவாதியான அபு கட்டாடா பிரிட்டனிலிருந்து ஜோர்டானுக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் “சர்ச்சைக்குரிய 39ஆவது சட்டத்தைப் பாவித்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்ற நீதிபதிகள் இத்திட்டத்தை இடைநிறுத்தினர். இச்சட்டத்தை பாவித்து சோமாலிய குற்றவாளிகளும் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழரும் பிரிட்டனில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 417 views
-
-
ஜப்பானில் இயங்கிவந்த கடைசி அணு உலையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அணு சக்தி இல்லாத ஜப்பானை வரவேற்கும் பேரணியில் 5000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹொக்கொய்டோ நிர்வாக எல்லையில் அமைந்துள்ள டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலைதான் பழுதுபார்க்கும் பணிக்காக இப்போது மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணு மின்சாரமின்றி இயங்குகின்றது. கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்…
-
- 11 replies
- 1.1k views
-
-
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்காவின் சீல் கடற்படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லாடன் பலியானார். பாகிஸ்தானின் அபோதாபாத்தில் நடந்த இந்த தாக்குதலுக்குப்பின், ஒசாமாவின் உடலை கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பில் வாரன் என்பவர் அமெரிக்கா கடலில் வீசிய ஒசாமாவின் உடல் அடங்கிய பை எங்குள்ளது என தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கும் கப்பல்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியில் நிப…
-
- 3 replies
- 998 views
-
-
திருவண்ணாமலை ஆரணி கைலாசநாதர் கோவில் தேர்த்திருவிழாவின் போது, திடீரெனெ தேர் நிலைசாய்ந்து சரிந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 அடி உயரம் கொண்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த குறித்த தேர், சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வீதியில் வலம்வந்து கொண்டிருந்தது. அப்போது ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது தேரின் முன்பக்க அச்சு முறிந்து தேரின் முன் சக்கரம் தனியாக பிரிந்து கொண்டதால் தேர் நிலை சாய்ந்துள்ளது. இவ்விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 6 பேர் கவலைக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவற்த…
-
- 8 replies
- 1.5k views
-
-
மாஸ்கோ: ரசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான ஜோசப் ஸ்டாலின்தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக புதுகதை ஒன்று கிளம்பி உள்ளது. கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் புரட்சியை உருவாக்கியவர் விளாடிமிர் லெனின். ரசியாவில் வீரஞ்செறிந்த புரட்சியை நடத்தியவர். ரசிய அதிபராக லெனின் இருந்த காலத்தில் அவருக்குப் பின் அதிபர் பொறுப்பேற்கக் கூடிய வகையில் செல்வாக்குமிக்க மனிதர்களாக இருந்தவர்கள் ஸ்டாலின் மற்றும் டிராட்ஸ்கி. தொடக்க காலத்தில் லெனின், ஸ்டாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்ஸ்கிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்டாலினின் சர்வாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்ச…
-
- 0 replies
- 703 views
-
-
ஐரோப்பிய தொழிற்சாலைகளில் அரைப்பங்கு றோபோக்கள் பணிக்கு வரப்போகின்றன.. வரும் பத்து வருடங்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் உதவியாளனும் நண்பனாகவும் மாறப்போவது ரோபோக்களே.. குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவோருடைய இடங்களை இனி இந்த றோபோக்களே நிரப்பப் போகின்றன. இதற்காக எஸ்.எம்.ஈ இரக றோபோக்களை கொள்வனவு செய்யும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. எஸ்.எம்.ஈ றோபோக்கள் மனிதனுடன் சேர்ந்து வேலை செய்வதற்காக புரோகிராம் செய்யப்பட்ட சிறிய ரோபோக்கள். 2005 – 2009 காலப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த ரோபோக்கள் சிறியவை ஆனால் ஓர் உதவியாளரின் பணியை செப்பமாக செய்யக்கூடியவை. விலை ஓர் இலட்சம் அமெரிக்க டாலர்கள், இரண்டு சாதாரண பற்றரியில் இயங்கும், வேலைத்தல ம…
-
- 0 replies
- 424 views
-
-
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி பலியானார்.இதனையடுத்து வரும் ஜூன் 12 ம் தேதி நடக்கவிருக்கும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தரப்பில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இத்தேர்தலில் தி.மு.க.,போட்டியிடாது என அதன் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்த தேர்தலில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.இங்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமும்,தமிழக அரசும் இணைந்து முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீ…
-
- 2 replies
- 604 views
-
-
மாஸ்கோ: கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நேட்டோ உடனடியாக நிறுத்தாவிட்டால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. போலந்து, செக், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, பல்கேரியா, சரயேவோ, லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ், துருக்கி, கிரீஸ் உள்ளிட்டவை கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள சில நாடுகளாகும். இதில் லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்டவை முன்னாள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த நாடுகளாகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் சில சேர்ந்து விட்டன. இதனால் ரஷ்யா ஏற்கனவே 'காண்டாகி…
-
- 4 replies
- 1.2k views
-
-
:சத்தீஸ்கர் மாநிலத்தில்,மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால்,சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்;மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும்; பழங்குடியினர் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு தரப்புக்கும்,மாவோயிஸ்டுகள் தரப்புக்கும் இடையே நடைபெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து மேனன் மே 3ம் தேதியன்று, அதாவது இன்று விடுவிப்பதாக ஊடகங்களுக்கு அனுப்பிய…
-
- 1 reply
- 536 views
-
-
ஆப்பிரிக்க நாடான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் கடந்த ஆண்டு உதயமானது. அதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இரு நாட்டின் எல்லையில் ஹெக்லிக் என்ற பகுதி உள்ளது. இங்கு ஏராளமான எண்ணைக் கிணறுகள் உள்ளன. இவற்றுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால்மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹெக்லிக் பகுதியை தெற்கு சூடான் ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. அங்கிருந்து வெளியேறுமாறு சூடான் எச்சரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக் கொள்ளாததால் தெற்கு சூடான் மீது சூடான் விமானம் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது இரு தரப்பு ராணுவமும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. சண்டையில் இருந்து விலகி இரு ராணுவமும் தங்கள் நாட்டு உள்பகுதி…
-
- 0 replies
- 558 views
-
-
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக அதிகரித்துள்ளது. இது அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதமாகும். இந்த நாடுகள் அனைத்திலும் ஒற்றை நாணயமாக யூரோவின் பயன்பாடு தொடங்கிய பிறகு, இப்போது தான் இந்த அளவுக்கு அந்த நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.இந்த நாடுகளில் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்று தொழில்துறை வல்லுநர்கள் வெளியிட்டுள்ள, தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒரு முக்கிய ஆய்வறிக்கை வந்துள்ள நிலையில், வேலையின்மை தொடர்பிலான இந்தத் தகவலும் வந்துள்ளது. யூரோ நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறும் பிபிசியின் பொருளாதாரச் செய்தியாளர், இது ச…
-
- 0 replies
- 514 views
-
-
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த கலவரத்தில், 20 பேர் பலியாகியுள்ளனர். எகிப்தில் ஹொஸ்னி முபாரக் ஆட்சி, மக்கள் புரட்சி மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இராணுவ உயர்மட்டக் குழு தலைமையில் இடைக்கால ஆட்சி நடக்கின்றது. இம்மாதம், 23 மற்றும் 24ம் திகதிகளில் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற உள்ளது. ஏழு பிரதான கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் ஆணையகமும், இடைக்கால இராணுவ உயர்மட்ட குழுவும் தேர்தலை முறைப்படி நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சில கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன. இதற்கிடையே தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை கண்டித்து, சில கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒர…
-
- 0 replies
- 424 views
-