உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
27 வருடங்களின் பின்னர் 3000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் இராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு, அமெரிக்காவிடமிருந்து, வெளிநாட்டு இராணுவ விற்பனை திட்டம் மூலம், எம்777 பி.ஏ., பீரங்கிகளை இராணுவத்துக்கு வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்777 ரக பீரங்கிகள் 4218 கி.கிராம் எடை உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 5 சுற்றுக்கள் வரை சுட முடியும். இந்த துப்பாக்கிகள் மூலம் 30 கி.மீ தூரம் வரை சுடலாம். இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் தொடர்பாக இராணுவ தளபதி விகே சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்ய ஒப்புத…
-
- 0 replies
- 732 views
-
-
தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன்,சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 1985-இல் கருணாநிதி, வீரமணி மற்றும் பழ நெடுமாறன் இணைந்து ரெசோ என்கிற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும், Tamil Eelam Supporters Organization (TESO) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டு குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறுகிய…
-
- 0 replies
- 314 views
-
-
9/11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை உலகளவில் தொடக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் என்பது பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உலகளவில் ஏற்படுத்தி இருந்தபோதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஒரு தலைப்பட்சமாகவே அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்பது மேற்கின் நவகாலனிய வடிவமோ என சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அது எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 9/11 தாக்குதலின் சூத்திரதாரி என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டும் அல்-கைதா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை பிடிப்பதை காரணமாக கூறியே அமெரிக்கா 2001 ல் ஆப்கானை ஆகிகிரமித்ததை நாம் அறிவோம். (இதுவே அமெரிக்காவின் பயங்கரவாத்துக்கெதிரான? முதலாவது யுத்தம…
-
- 0 replies
- 645 views
-
-
தென்சீனக் கடலில் ஹூவாங்யன் தீவுக்கு யாருக்கு உரிமையானது என்ற பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் போருக்கு தயாராகிவருவதாக வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது. தென்சீனக் கடலில் பல நூறு சிறு சிறு தீவுகள் உள்ளன. எண்ணெய்வளமிக்க பகுதி என்பதால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. ஆனால் சீனாவோ ஒட்டுமொத்த தென்சீனக் கடலுமே தங்களுக்கு மட்டுமே சொந்தம் என அடம்பிடித்து வருகிறது. அண்மையில் இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்தது. ஹூவாங்யன் தீவு அருகே சீனாவின் படகுகளை பிலிப்பைன்ஸ் தடுப்பதும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் படகில் சீனா சோதனையிடுவதும் என விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது. மேலும் …
-
- 0 replies
- 525 views
-
-
இந்தியா வருகை தந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது வஹீத் டெல்லியில் பிரதமர் மன்மோகனை இன்று சந்தித்துப் பேசினார். மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் வெளியேற்றப்பட்ட நிலையில் முகமது வஹீத் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார். இது தொடர்பாக ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை இந்தியா தீர்த்து வைத்தது. அந்நாட்டின் அதிபரான பின்னர் முதல் முறையாக வஹீத் இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடந்த சந்திப்பின் போது மாலத்தீவில் நஷீத் ஆதரவாளர்கள் கோருவது போல முன்கூட்டியே தேர்தலை நடத்துவது பற்றி வஹீத் ஆலோசனை நடத்தினார். ஐந்து நாள் பயணமாக வந்துள்ள வஹீத் மே 15-ந் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு நஷீத், இந்தியாவுக்கு வருகை தந…
-
- 0 replies
- 487 views
-
-
நேற்று காலையில் மொன்றியல் நகர தொடருந்து பாதைகளில் திடிரென ஒன்றன் பின் ஒன்றாக பல குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. இதனால் நகரின் தொடருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. சுறுசுறுப்பான காலை வேளையில் மக்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பனால் மாநகர முதல்வர் ஜெரால்ட் டிறேம்பிலேவிற்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்களுக்கு காரணமா யார் என உறுதியாகக் கூற முடியாத நிலையில் மொன்றியல் மாணவர் கலவரங்களுடன் இத்தனை தொடர்புபடுத்தும் வகையில் மாநகர முதல்வர் பேசியுள்ளதால் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசும், மாணவர்களும் கலந்து பேசி கல்விக் கட்டணம் தொடர்பான விடயங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வ…
-
- 2 replies
- 688 views
-
-
ரஷ்ய நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேஷிய மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 50 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து பரீட்சார்த்த ஓட்டமாக ரஸ்யாவை நோக்கி நேற்று இவ்விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்தன. இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாப் பகுதியில் உள்ள சலாக் மலைப்பகுதியில் குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷிய இராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனி…
-
- 2 replies
- 1.2k views
-
-
என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களே, மற்ற அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கேமராக்களை வைக்க அவர்கள் தயாரா...? நான் வைக்கத் தயார். அப்படிச் செய்தால் எத்தனை ஆதீனங்கள் சிக்குவார்கள் தெரியுமா என்று கேட்டுள்ளார் நித்தியானந்தா. மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் சேர்ந்து பேட்டியளித்தனர். அப்போது நித்தியானந்தா பேசுகையில், உலகில் இந்து அமைப்பில் மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளனர். இதில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிராக உள்ளனர். இந்து அமைப்பினர் என்ற பெயரில் உள்ள கயவர்கள், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். என்னுடைய உருவ பொம்மையையும் சிலர் எரித்து உள்ளனர். நான் `ம்...' என்று சொன்னால் போதும் என் பக்தர்கள் அவர்கள் உருவ பொம்மையை எர…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஜோர்ஜ் புஸ் காலத்தில் அமெரிக்காவுக்காக அவரால் எடுக்கப்பட்ட பல முடிவுகள் அமெரிக்காவின், பொருளாதாரம், சரவதேச உறவு, ஜனநாயத்தின் தலைமைத்துவம், உள்நாட்டு கல்வி, கலை,கலாச்சாரம் என்பவற்றை மிகவும் பாதித்து, அமெரிக்கா கண்ட நான்காவது தாழ்நிலை அதிபர் என்ற பெயருடன் புஸ் பதவிக்காலத்தை முடித்தார். இதில், இதுவரையில் எந்த பிரபல புத்தகத்தில் எழுதப்பட்டிருக்காவிட்டாலும், ஈழத்தமிழரின் சிதைவும் உள்ளடங்கும். அதை ஈழத்தமிழர் மட்டும்தான் அறிவார்கள். Colin Powell with vial he said could contain anthrax, at the United Nations in 2003. WASHINGTON -- In his new book, former Secretary of State Colin Powell provides what may be the most authoritative confirmation yet that there w…
-
- 0 replies
- 595 views
-
-
விமானம் ஒட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னையும் அறியாமல் சிறு தூக்கத்திற்குப் பின் விழித்த ஏயர் கனடா விமான ஓட்டி ஒருவர் எப்படி விமானத்தைக் கட்டுப்படுத்துவது என்ற குழப்பத்தில் திடிரென தலைகீழாக செங்குத்தாக ஓட்டியுள்ளார். இது அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Jan. 13, 2011 அன்று ரொறொன்ரோவிலிருந்து சுவிட்சர்லாந்து சென்ற AC 878என்ற விமானத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த விமான சம்பவத்திற்கு பொறுப்பேற்று $20 மில்லியன் இழப்பீட்டுத் தொகையாக ஏயர் கனடா அளிக்க வேண்டும் எனக் கோரி பயணிகள் இருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எதிர்பாராத சூழ்நிலைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்தவே விமான ஓட்டி அவ்வாறு ஓட்டியதாக முதலில் ஏயர் கனடா விளக்கமளித்தது. ஆனால் சிறு …
-
- 6 replies
- 922 views
-
-
உள்ளாடைக்குள் வெடிகுண்டை மறைத்துவைத்திருந்த போது பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட குண்டுதாரி உண்மையில் அமெரிக்க உளவுபிரிவினரின் ஆள்தான் என்று என்று அமெரிக்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா நோக்கிச் செல்லும் விமானமொன்றை வெடிக்க வைப்பதற்காக யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல்-கய்தா இயக்கத்தினரால் அனுப்பப்பட்ட குண்டுதாரி, அந்த இயக்கத்தக்குள் ஏற்கனவே ஊடுருவச் செய்யப்பட்டவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டபடி, இவர் யேமனிலிருந்து வெளியேறி வெடிபொருளை சிஐஏ- உளவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளார். இதேவேளை, யேமனில் அல்-கைதாவினருக்கு எதிரான நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இராணுவ பயிற்சியாளர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக அம…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரதவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானங்களை தகர்க்க அல் கொய்தா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரவாதிகளின் சதி திட்டத்தை அமெரிக்க மற்றும் பிற உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர். மேலும் விமானத்தில் இருந்து உலோகம் கலக்கப்படாத வெடிகுண்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வகை குண்டு விமான நிலையங்களில் உள்ள மெட்டல் டிரெக்டரில் இருந்து தப்பிவிடும். இந்த சதிக்குப் பின்னால் ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா அமைப்பு உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2009ம் ஆண்டு டெட்ராய்ட் செல்லும் விமானத்தில் இருந்து இதுபோன்ற உலோகமில்லா வெடிகுண்ட…
-
- 0 replies
- 579 views
-
-
ரஷ்யாவின் அதிபராக 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் விலாடிமிர் புடின். ஏற்கனவே இரண்டு முறை தொடர்ச்சியாக அதிபராக இருந்த அவர், பின்னர் சட்ட விதிப்படி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவிக்கு வர முடியாது என்பதால் இடையில் சில காலம் பிரதமராக இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின் நேற்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். கிரம்ளின் நகரில் உள்ள புனித ஆண்ட்ரூ அரங்கில் பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்தி அதில் புடின் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவருக்கு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதிபர் பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் பேசிய புடின் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்…
-
- 0 replies
- 525 views
-
-
அணு மின் நிலையத்துக்கு எதிரான கூடங்குளம் மக்களின் தொடர் போராட்டத்தின் ஒரு கட்டமாக, அவர்கள் தங்களது 15 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளை போராட்டக்குழு ஒருங்கிணைப்பளர் உதயகுமாரிடம் மீள் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், அணுமின் நிலையத்தை எங்கள் மீது திணிக்கின்றனர். அணுமின் நிலையம் வேண்டாம் என்று 60 கிராம மக்கள் நோட்டில் எழுதி எங்களிடம் கொடுத்துள்ளனர். இதை உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் எடுத்துச் செல்ல இருக்கிறோம். வாக்களிக்க மட்டும்தான் நாங்கள் இந்திய அரசுக்கு தேவைப்படுகிறோம். மற்றபடி எங்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மத்திய அரசு மதிக்கவில்லை. இதனால் நாங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்…
-
- 0 replies
- 898 views
-
-
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு இன்று காலை ரவா உப்புமா, இட்லி, மெது வடை வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் சந்திப்பு சற்று நேரத்திற்கு முன்பு தான் துவங்கியது. காலை உணவாக தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. முந்திரி பருப்பு போட்ட ரவா உப்புமா, மெது வடை, பொடி, நெய், கேசரி பாத், ஊத்தாப்பம், தோசை, இட்லி, முருங்கைக்காய் சாம்பார், தேங்காய் மற்றும் தக்காளி சட்னி ஆகியவை வழங்கப்படுகிறது என்று அதிக…
-
- 3 replies
- 953 views
-
-
மே 8, 2012 தோழர், அமைச்சர் றோய் படையாட்சிக்கு எமது கண்ணீர் வணக்கம் தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர்.…
-
- 9 replies
- 985 views
-
-
அணு குண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் - அப்துல் கலாம்..! அப்பத்தானே பல லட்சம் கோடிகளை ஆட்டையப் போடலாம் - ஈழதேசம்..! காரைக்குடியில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பில் தான் இவ்வாறு கூறியுள்ளார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். நாட்டை வலிமைப்படுத்த, பாதுகாக்க அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் மிக அவசியம் என்றார். அப்படியெனில், அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் இல்லாத நாடுகள் அனைத்தும் வலிமையற்ற பாதுகாப்பு அற்ற நாடுகள் என்று கொள்ள முடியுமா..? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அணுகுண்டு தயாரிக்கும் அணு மின் நிலையங்கள் நிறுவியதின் மூலம் பல லட்சம் கோடிகள் பணத்தை கொட்டி இருக்கிறார்கள், இந்த பல லட்சம் கோடிகளுக்கு முறையான கணக்கு வழக்குகள் கிடையாது. பிரதமரை தவிர வேறு எந்த கொம்பனும் கணக்கு க…
-
- 5 replies
- 3.3k views
-
-
முல்லைப் பெரியாறு விவகாரத்தை அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்திலும் கேரள அரசு தமிழ்நாட்டுடன் மோதலுக்குக் கிளம்பியுள்ளது. "கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தங்கள் மாநிலத்திற்கு தர வேண்டும்' என, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் மின் தடையால் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் துவங்கும் போது, அதில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 25ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார். "முதல்வரின் இந்த கோரிக்கை குறித்து ப…
-
- 5 replies
- 2.6k views
-
-
கேரளாவில் 100 சதவீத கல்வியறிவு உள்ளது. ஆனால் எத்தனை படித்த பெண்கள் வேலையில் இருக்கிறார்கள், வேலை பார்க்கும் தகுதியுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் இல்லை என்பதே வியப்புக்குரிய பதிலாக உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு. கொச்சிக்கு வந்திருந்த குஷ்பு, அங்கு நிர்வாகவியல் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கோருவதற்கு முன்பு, தங்களைத் தாங்களே முதலில் சக்தி பெற்றவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். கேரளா இன்று 100 சதவீத கல்வியறிவுடன் உள்ளது. ஆனால், எத்தனை பெண்களுக்கு இங்கு வேலை உள்ளது, எத்தனை பேர் வேலை பார்க்கும் திறனுடன் உள்ளனர். பெரும்பாலானோர் இல்லை என்பதே ஆச…
-
- 0 replies
- 903 views
-
-
நவநீதம்பிள்ளைக்கு எதிராக இலங்கை போர்க்கோடி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் நவநீதம்பிள்ளையும் அவரது அலுவலக அதிகாரிகளும் உதவியதாக குற்றம்சாட்டி, அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டில் வெளிவரும் டெய்லி மிர்ரர் என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நவநீதப்பிள்ளையின் இத்தகைய செயலால் இலங்கை அரசின் நியாயங்களை எடுத்துரைக்க முடியாமல் போய்விட்டதாகவும், இதற்கு காரணமான நவநீதப் பிள்ளை மற்றும் அவரது ஊழியர்களின் பங்கை அடிப்படையாக கொண்டு போராட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் …
-
- 0 replies
- 878 views
-
-
மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்ப…
-
- 1 reply
- 637 views
-
-
பிரான்ஸ் தேர்தல் 2012 ஒரு பேப்பரிற்காக சாத்திரி 28.5 27 18.1 பிரான்ஸ் மக்களும் உலக நாடுகளும் ஆவலுடன் பரப்பரப்பாக எதிர் பார்த்துக்கொண்டிருந்த பிரான்சின் தேர்தல் முதல் சுற்று நடைபெற்று முடிந்து விட்டது. ஊடகங்கள் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படியே பிரான்சின் சோசலிசக் கட்சி வேட்பாளர் François holland 28.5 வாக்குகளை பெற்று முதலாமிடத்திலும். வலதுசாரி கட்சியான ( U.M.P ) வேட்பாளர் nicola sarkozy 27 சதவீத வாக்குகளை பெற்று இடண்டாமிடத்திலும் தீவிர வலதுசாரிக் கட்சியான (F.N ) கட்சி வேட்பாளர் marin le pen அவர்கள் 18.1 வீத வாக்குகளை பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்திருக்கின்றார்கள். இனிவரும் 6 ந்திகதி மேமாதம் இரண்டாவது சுற்றில் முறையே மு…
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ்.மாவட்டம் உட்பட தமிழர்; தாயகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் இழந்த பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப்பெறுவதற்கு வழி தெரியாமல் சிறீலங்கா பொலிஸ் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் நாடிச்செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பட்டப்படிப்பு என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் இவ்விடயத்தில் இளைஞர்கள் அவதானமாக இருக்கவேண…
-
- 0 replies
- 463 views
-
-
பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபராக பதவி வகிக்கும் நிகோலஸ் சர்கோஸி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் சோஸலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் அதிகளவு ஓட்டுக்கள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதியானவர்களாக அறிவிப்பர். இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 17 replies
- 1.4k views
-
-
'பண்டோரா' என்ற கிரகத்தில் 'யுனப்டேனியம்' என்ற கனிமத்தை சுரண்டுவதற்காக அந்த கிரகத்து மக்களையே அழித்து ஒழிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அட்டகாசமான 'அவதார்' படத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாம் மறப்பது சாத்தியமில்லை. இது கதையல்ல நிஜம் என்கிற மாதிரி ஒரு சமாச்சாரம் நடக்கப் போகிறது. பிளாட்டினம் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை வெட்டி எடுத்து வர விண்கற்களுக்கு (asteroids) 'புல்டோசர்களை' அனுப்பப் போகிறது Planetary Resources Inc என்ற அமெரிக்க நிறுவனம். இந்தத் திட்டமே சயின்ஸ் பிக்சன் சினிமா மாதிரி இருந்தாலும், இதற்கு நிதியுதவி செய்ய கூகுள் நிறுவன அதிபர்களான லேரி பேஜ், எரிக் ஸுமிட் உள்ளிட்ட பல பெரும் தலைகள் முன் வந்துள்ளனர். முதல்கட்டமாக பூமிக்கு அருகாமையில் சுற்றி…
-
- 7 replies
- 1.2k views
-