உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா உடனான கைச்சாத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ஒன்றுமில்லாததும் வலுவற்றதாகியுள்ளதாக தனது நிர்வாகம் கருதுவதாக பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் நேற்று அறிவித்ததாக பலஸ்தீன உள்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பகுதிகளை இணைத்துக் கொள்ளப் போவதாக இஸ்ரேல் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்தே மேற்குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பலஸ்தீனத் தலைநகர் றமல்லாவில் நடைபெற்ற அவசர சந்திப்பொன்றின்போதே மேற்குறித்த அறிவிப்பை ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் விடுத்ததாக பலஸ்தீன செய்தி முகவரகம் வஃபா செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க, இஸ்ரேலிய அரசாங்கங்களுடனான அனைத்து ஒப்பந்தங்கள், புர…
-
- 0 replies
- 714 views
-
-
இரகசிய அணு ஆயுத சோதனைகள் ; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு Published By: Digital Desk 3 10 Feb, 2026 | 02:30 PM இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அமெரிக்கா தனது சொந்த அணு ஆயுதச் சோதனைகளைத் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சாக்குப்போக்குகளை கூறிவருவதாக சீனா விமர்சித்துள்ளது. ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நடந்த சோதனைகள் உட்பட, சீனா இந்த சோதனைகளை நடத்தியதாகவும், மேலும் அதிக வினைத்திறன் மிக்க சோதனைகளை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க ஆயுதக் …
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் - 5 ) மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான், அரபு நாடுகள், இந்தியா போன்ற நாடுகளும், இசுலாத்தின் பெயரால் புனிதப்போர் நடத்தும் அல்கய்தாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களாக இருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்காதான் மும்பைத் தாக்குதலை நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்தை பெற்றெடுத்து வளர்த்தது என்று அறுதியிடலாம். முதலில் இந்தியாவின் பங்கைப் பார்ப்போம். தீவிரவாதம்தான் முசுலீம்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்பதான…
-
- 0 replies
- 748 views
-
-
முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன். முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சிய…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஹாங்காங்கில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அறிவிப்பு ஹாங்காங், சீனாவை தொடர்ந்து அதன் அண்டை நாடான ஹாங்காங்கிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. இதனையடுத்து சீனாவுடனான எல்லையை மூடிய ஹாங்காங் அரசு, ஊரடங்கு விதிமுறைகளையும் கடுமையாக அமல்படுத்தியது. மேலும் வைரஸ் பரவலால் அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இந்த துரித நடவடிக்கை காரணமாக ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. அத்துடன் ஹாங்காங்கில் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு வைரஸ் தொற்று மீண…
-
- 0 replies
- 400 views
-
-
வந்துவிட்டது பேராபத்து .! பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலினால் அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 110 உள்நாட்டு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டின் பிரபலமான டோயோட்டா கார் நிறுவனம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஷின்கான்சென் நகரின் வழியாக செல்லும் புல்லட் ரெயில்…
-
- 0 replies
- 673 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற சட்ட விதிகளை திருத்த திட்டம். 1 ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரிக்கும் குடியேறிகளின் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு அடைக்கலக் கோரிக்கை தொடர்பான சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதான தெற்கு ஐரோப்பிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கடையேயான அடைக்கலம் கோருவது தொடர்பான சட்ட விதிகளை மாற்றியமைப்பது ஒன்றியத்தின் முன்னரங்க நாடுகள் குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நிபுணத்துவ ஆலோசனையை பெறுதல் தந்திரோபாய நடவடிக்கைகளுக்கான முதலீட்டை இரட்டிப்பாக்குதல் ஆகிய அம்சங்களில் இணங்குவதாக பிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் கிறீஸ் போத்துக்கல் மோல்ற்றா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகள் …
-
- 0 replies
- 412 views
-
-
ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின் ட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் என ஒசாமா பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மூத்த சகோதரர் யெஸ்லாம் பின்லேடினின் மகள் நூர் பின்லேடின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உலகில் ஒரே ஒரு மனிதனால் மட்டுமே ஒசாமா பின்லேடன் கும்பலிடமிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் மட்டுமே, அமெரிக்காவை காப்பாற்ற முடியும். அவரை எதிர்த்து போட்டியிடும் பைடன், அ…
-
- 0 replies
- 356 views
-
-
உலகிலேயே உயரமான கட்டடம் - கராச்சியில் கட்டுகிறார் பாகிஸ்தான் தொழிலதிபர்! [sunday, 2013-02-17 18:21:00] துபாயில் உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடம் உள்ளது. அதை மிஞ்சும் வகையில் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதை பாகிஸ்தானின் கட்டுமான தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கட்டுகிறார். இதற்காக 45 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. 16 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில், 1 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவை தவிர ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், கல்வித்துறை வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். இக்கட்டிடம் கராச்சியில் எங்கு கட்டப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. அநேகமாக கராச்சி அருகே 3 முதல் 4 கி.மீட்டர் தொலைவில் அரபிக…
-
- 1 reply
- 342 views
-
-
மூன்றுவாகனங்களை இரயில் வரும் பாதையில் நிறுத்திவிட்டு, ஹாக்கி விளையாட்டை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென வந்த ரெயில் மோதியதால் மூன்று வாகனங்களும் சுக்குநூறாக நொறுங்கிய சம்பவம் ஒன்று கனடாவில் பரபரப்பாக்கி உள்ளது. கனடாவின் ஒண்டோரியோவில் உள்ள Sudbury என்ற இடத்தில் Sudbury Wolves என்ற அணியினர் விளையாடிய ஹாக்கி போட்டியை பார்ப்பதற்காக மூன்று வாகனங்களில் வந்தவர்கள் விளையாட்டை பார்க்கும் ஆர்வத்தில் இரயில் வரும் பாதையில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, விளையாட்டை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த CP இரயில் ஒன்று மூன்று வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியதால் அந்த வாகனங்கள் சுக்குநூறாக நொறுங்கிப்போயின. இந்த விபத்து காரணமாக அந்த பகு…
-
- 4 replies
- 509 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக சக் ஹேகல் புதன்கிழமை பதவியேற்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள லியோன் பனெட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, சக் ஹேகல் புதிய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, இப்பதவிக்கு, சக் ஹேகலின் பெயரை ஒபாமா பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரை மீதான வாக்கெடுப்பு செனட் சபையில் நடைபெற்றது. இதில், ஹேகலுக்கு ஆதரவு தெரிவித்து 58 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின. ஹேகல், வியத்நாம் போரில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. "நமது நாட்டுக்கு ஹேகல் போன்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்கள்தான் தேவை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, எந்த நேரத்திலும் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் விதத்த…
-
- 0 replies
- 464 views
-
-
புலியை... நேருக்கு நேர் சந்தித்து, போட்டோ எடுத்த பிரதமர் மோடி! ராய்ப்பூர்: ராய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் புலியை பிரதமர் மோடி எடுப்பது போன்ற புகைப்படம் டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு விழா "ராஜ்யோத்சவம்' என்ற பெயரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அம்மாநிலத்தில் உள்ள நந்தன் வனவிலங்குகள் பூங்காவைப் பார்வையிட்டார். பூங்காவில் இருந்த விலங்குகளைப் பார்வையிட்ட அவர், வேலி அருகே நிற்கும் புலியைத் தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பிரதமர் கேமராவில் படம் பிடிப்பது போன்ற…
-
- 2 replies
- 792 views
-
-
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. http://athavannews.…
-
- 0 replies
- 341 views
-
-
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு! மீனவர் படுகாயம்.[PHOTO ] இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2.03.2013 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 06.03.2013 அன்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மரு…
-
- 0 replies
- 477 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஒருவரான கில்லாரி கிளின்டன் ஆறு லட்சத்து ஐம்பதினாயிரம் மின்னஞ்சல் சம்பந்தமாக கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சியிலும் சரி வானெலிகளிலும் சரி புரட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.அந்த முறை எப்படியும் தப்ப வாய்ப்பே இல்லை தேர்தலுக்கு முன்னமேயே பிடித்துவிடுவார்கள்.இது ஓரு தேசிய குற்றம் என்றெல்லாம் ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்க வெற்றி நிச்சயம் என்று ஏற்கனவே கணித்த முடிவுகளிலும் நிறையவே மாற்றங்கள்.12-14 வரை டொனால்ட் ரம்பை முன்னணியில் நின்ற கில்லாரி திடீரென்று பல புள்ளிகளால் கீழிறங்கி 4-5 வீதம் தான் முன்னணி சில சமயம் இருவரும் சமம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க குடியரசுக்கட்சியில் உள;ளவர்கள் கில்லாரி எப:போது கைது செய்யப்படுவார் என்றெல்லாம் பார்த்துக் கொண்…
-
- 2 replies
- 769 views
-
-
இத்தாலி தூதர் Daniele Mancin இந்தியாவை விட்டு வெளியேறத் உச்சநீதி மன்றம் தடை. கிருஸ்தவ விடுமுறை களிற்க்காக இத்தாலி சென்ற, கேரளா மீனவர்களை சுட்டு கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 2 இத்தாலியர்கள், அவர்கள் நாட்டிற்கு சென்றதும் இந்தியா திரும்ப முடியாது என்று சொல்லி உள்ளனர். இதற்க்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆட்சேபனையை , இந்திய வெளியுறவு துறை அலுவலர் ரஞ்சன் மதாய் (India's foreign secretary Ranjan Mathai) மூலம் இத்தாலி தூதர்,டானிலி மன்சினி ( Italian Ambassador to India Daniele Mancini)என்பவருக்கு சம்மனாக, நேரில் நேற்று கொடுக்கப்பட்டாது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டானிலி மன்…
-
- 1 reply
- 494 views
-
-
ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. அந்நாட்டில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 757 views
-
-
அச்சமூட்டும் தருணங்கள் : ரஷ்ய தூதுவர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் காணொளி வெளியானது துருக்கி நாட்டின் ரஷ்ய தூதுவர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட அவரை மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்நிலையில் தூதுவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது குறித்த மர்ம நபர் அங்கும் இங்குமாக நடப்பதும் பின்னர் தனது துப்பாக்கி இருக்கிறதா என இரு முறை உறுதி செய்து கொள்வதும் பின்னர் தூதுவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதுமான காணொளி தற்போது வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் ரஷ்ய தூதர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஒரு கண்கா…
-
- 0 replies
- 291 views
-
-
ஏமன் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்துகிறது அமெரிக்கா - பைடன் முடிவு பட மூலாதாரம், REUTERS ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏமனில் கடந்த ஆறு வருடங்களாக நடந்து வரும் போரில் கிட்டதட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. "ஏமன் போர் நிறுத்தப்படவேண்டும்" என அமெரிக்க அதிபர் பைடன் தனது முதல் வெளிநாட்டு கொள்ளைகள் குறித்த உரையில் தெரிவித்தார். இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிரம்பிற்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ஒப…
-
- 0 replies
- 545 views
-
-
அமெரிக்க அதிபருக்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ஆலோசனை வழங்கும் முக்கிய பதவிக்கு சூசன் ரைசை ஒபாமா கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தேர்ந்தெடுத்தார். இன்று சூசன் ரைஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுக் கொண்டார். ‘கடந்த 4.5 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதராக இருந்து அதிபருக்கு சேவை செய்தது பெருமையாக உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வெள்ளை மாளிகையில் பணியை தொடங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்‘, என்று ரைஸ் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். இவர் அமெரிக்கா, இந்தியாவுடன் உறுதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள பெரும் பங்காற்றினார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த போது, இந்தியாவின் தேசிய பாதுக…
-
- 0 replies
- 430 views
-
-
இந்தோனேஷியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது. தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில் 47பேர் உயிரிழந்தனர் மற்றும் 22பேர் காணவில்லை. கத்தோலிக்க பெரும்பான்மை கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை இடமாற்றம் செய்வதாக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உறுதியளித்துள்ளார். மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டு பகுதிகளான லெம்படா மற்றும் அடோனாரா தீவுகளுக்கு விஜயம் செய்தபோது விடோடோ இந்த உறுதிமொழியை அளித்தார். இரண்டு தீவுகளில் பா…
-
- 0 replies
- 283 views
-
-
தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தனது தொடர்புகளை இழந்த நிலையில், தற்போது விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என ஏர் இந்தியாவின் ஜெட் விமானம் ஒன்று சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது. ஹங்கேரி வான் பகுதியில…
-
- 0 replies
- 288 views
-
-
பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்! பிரேஸிலில் போதைப்பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும். ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர். ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்பு…
-
- 1 reply
- 501 views
-
-
1967க்கு பின்னர்... ஒரு மில்லியன், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது! 1967 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய கிழக்குப் போருக்குப் பின்னர் சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 17,000 பெண்கள் என்றும் 50,000 பேர் சிறுவர்கள் என்றும் கைதிகள் விவகாரங்களுக்கான ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1967 முதல் 54,000 க்கும் மேற்பட்ட நிர்வாக தடுப்பு உத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை 1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய சிறைகளுக்குள் மொத்தம் 226 பாலஸ்தீன் கைதிகள் இறந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் மேலும் க…
-
- 0 replies
- 490 views
-
-
அகமதாபாத்: நமது நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை கேட்கவே முடியவில்லை என்று காட்டமாக சாடியிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. தொடரும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒருகாலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு பலத்த சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. இப்போது அது தன் குரல் வலிமையை இழந்துவிட்டது. அதைப்போலத்தான் நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சும் கூட.. ரூபாய் மதிப்பைப் போல அவரது பேச்சும் வலிமையை இழந்து ஊமையாகிப் போய்விட்டது அவரது பேச்சையெல்லாம் இப்போது கேட்க முடிவதில்லை என்றார். அண்மையில் சுதந்திர தின நிகழ்ச்சியின் போதும் கூட பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாகவே மன்மோகன்சிங் தாக்கிப் பேசியிருந்தத…
-
- 2 replies
- 627 views
-