Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கெல்லி Ng பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர். விமானப் பணியாளர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் தங்கள் பொருட்களை கைவிட்டு தப்பி ஓடியதே விமானத்திலிருந்த 379 பேரும் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தான் தூக்கிலிடப்பட மாட்டோம் என்று சதாம் உசேன் நம்பினாராம். கட்டுரை தகவல் எழுதியவர், சனா ஆசிப் தர் பதவி, பிபிசி உருது 31 டிசம்பர் 2023 “டிசம்பர் 30,2006 அன்று காலை 3 மணிக்கு எழுந்த சதாம் உசேனிடம் இன்னும் சில மணி நேரத்தில் தூக்கிலிடப்பட போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பின் அமைதியாக சென்று குளித்துவிட்டு, தூக்குமேடைக்கு தயாரானார்.” இந்த குறிப்புகளை சதாம் உசேனின் கடைசி நாட்கள் குறித்து தான் எழுதிய “தி ப்ரைஸன் இன் இஸ் பேலஸ்” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் வில் பார்டன்வெர்பர். சதாம் உசேனின் காவலுக்காக நியமிக்கப்பட்டிரு…

  3. 01 JAN, 2024 | 09:32 PM காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவில் வளர்ந்து வரும் உலகின் முக்கியமான சுற்றுலாப் பிராந்தியமான NEOM இல், ‘Epicon’ என்ற மக்கள் குடியிருப்புகளுடன் கூடிய நவீன ஆடம்பர கடலோர சுற்றுலாத்தலம் ஒன்று அமையக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகபா வளைகுடாவில் அமைந்துள்ள ‘Epicon’ ஆனது, உயர் கட்டிடக்கலை மற்றும் ஆடம்பர வசதிகள் ஆகிய இரண்டிலும் உச்சம் தொடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத்தலத்தில், 225 மீட்டர் உயரமும் 275 மீட்டரை எட்டும் அளவு உயரமும் கொண்ட இரு கண்கவர் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 41 முக்கிய ஹோட்டல்கள், 14 அறைத்தொகுதிகள் மற்றும் அதி சொகுசு குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளன. …

  4. 31 DEC, 2023 | 10:51 AM புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் லண்டா (34) தீவிரவாதி என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிக்கையில், “மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு, காலிஸ்தான் புலிப்படை உள்ளிட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் லண்டா தொடர்பு வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட…

  5. Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 09:53 AM 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்ய…

  6. நேபாள விமான விபத்து 32 பேர் பலி ;16 உடல்கள் மீட்பு நேபாளத்தின் பொகாராவில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளனது. தினத்தந்தி காத்மாண்டு, நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்ததாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்த…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பார்பரா பிளெட் அஷர், அந்தோனி ஸர்ச்சர், வட அமெரிக்கா நிருபர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா போர் குறித்து அமெரிக்கா ஒரு புதிய ராஜதந்திர முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. வரவிருக்கும் வாரங்களில் இஸ்ரேலை சமாதானப்படுத்துவது தான் அது. இது பைடன் நிர்வாகத்தின் ஒரு முக்கியத்துவம் மிக்க நடவடிக்கையாகும். மேலும் இந்த நடவடிக்கை வெற்றி பெறுமா என்பது போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க உதவும் - அத்துடன் அமெரிக்காவில் அதிபரின் சொந்த அரசியல் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும் வாய்ப்பும் உள்ளது. வெளிப்படையாகப் பேசினால், இஸ்ரேலின் போரைக் கட்டுப்படுத்துவதற்கான அமெ…

  8. பட மூலாதாரம்,DEAGOSTINI/GETTY IMAGES படக்குறிப்பு, நெப்போலியன் புரட்சி, போர் என்ற பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால் ஒரு அறிவியல் அறிஞராக உருவாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி உலகச் செய்தி 28 டிசம்பர் 2023 வரலாற்றில் மிகப் பெரிய ராணுவ ஜெனரல், பல வல்லுநர்கள் அங்கீகரித்துள்ளபடி, தீவிர எண்ணங்களைக் கொண்ட ஒரு மனிதர். அவருடைய அந்த எண்ணங்களில் ஒன்று அறிவியல். இது அவ்வளவு நன்றாக யாருக்கும் தெரியவில்லை. "நான் ஒரு பொதுத் தலைவன் என்பதுடன் ஒரு பெரிய அளவிலான மக்கள் தலைவராக இல்லாமல் இருந்திருந்தால் அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு படித்…

  9. ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன். நட்பு நாடுகளிடம் இருந்து குறைந்தளவிலான ஆயுதங்களே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு மிக மோசமாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் இருந்து ஒரு மாதத்திற்கு 5 இலட்சம் குண்டுகளை உக்ரைன் கோரிய நிலையில் அது கிடைக்காததால் ஒரு மாதத்திற்கு வெறும் 110,000 குண்டுகளையாவது வழங்குமாறு கோரியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் குண்டுகளை உறுதியளித்த நிலையில் ஐரோப்பிய படைகளின் கையிருப்பில் இருந்து நவம்பர் இறுதிக்குள் 300,000 குண்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்…

  10. பாலஸ்தீன ஆண்களுடன் இரண்டு சிறுவர்களையும் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ள இஸ்ரேல் இராணுவத்தினர்- வெளியாகியுள்ளது புதிய வீடியோ Published By: RAJEEBAN 28 DEC, 2023 | 11:15 AM இரண்டு சிறுவர்கள் உட்பட பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்து வைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டு சிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி நடந்துசெல்வதை வீடியோ காண்பிப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. அதே சிறுவர்கள் நிர்வாணமான நிலையில் கைகளை உயர்த்திபடி காணப்படுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பிப்பதாக தெரிவித்துள்ள சிஎன்என் ஏனையை ஆண்களும்…

  11. பிரித்தானியாவில் அடுத்தாண்டு முதல் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு ! 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியாவில் சில இடங்களில் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு வரக்கூடும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அந்த ஆண்டின் இறுதிக்குள் வாகனங்களின் உரிமையாளர்கள் பயணங்களை மேற்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மார்க் ஹார்பர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தானியங்கி கார்களை கொண்டுவருவதற்கான புதிய சட்டத்தை அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது. இருப்பினும் தொழில்நுட்ப பிரச்சினை மற்றும் விபத்துகள் ஏற்படும் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கலிபோர்னியாவில் குறித்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை …

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் சர்வதேச ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று நிதி திரட்டும் நிகழ்வில் அவரது பேச்சு, இஸ்ரேல் தலைமை மீதான அவரது வலுவான விமர்சனத்தை வெளிப்படுத்தியது. அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஜோ பைடன் வழங்கியுள்ளார். அமெரிக்க ஆதரவை இஸ்ரேல் நம்பலாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், அவர் அதன் அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கையை விடுத்தார். "இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவிடம் இருந்திருக்கலாம். ஆனால்…

  13. கடந்த 2014, மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ரோயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் ப…

  14. 23 DEC, 2023 | 03:55 PM துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கரகுவா நாட்டிற்கு 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, விமான நிலைய…

  15. பட மூலாதாரம்,THINKSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், தாரீஃப் காலிதி பதவி, பிபிசி செய்திகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாத்தின் கடைசி நபி முஹம்மது, மெக்காவைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது நீண்ட கால கனவை கி.பி 630இல் நிறைவேற்றிக் கொண்டார். இதற்குப் பிறகு, மெக்கா நகரத்திலிருந்த உருவ வழிபாட்டின் ஒவ்வொரு தடயத்தையும் அழிக்க உத்தரவு பிறப்பித்தார். மெக்கா மீதான முகமது சாஹேப்பின் இந்த மத வெற்றியில், ஆழமான அரசியல் குறியீடுகளும் மறைந்திருந்தன. மெக்கா புதிய மதத்தின் மையமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மெக்கா வெற்றி என்பது அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது போல் இருந்தது. காபாவுக்குள் நுழை…

  16. Published By: VISHNU 26 DEC, 2023 | 02:38 PM பிரிட்னி மார்டில் நாகோர்னோ-கராபாக் மீதான அஜர்பைஜான் - ஆர்மீனியா போரின் விரிவான மதிப்பீடு காகசஸ் பகுதியில் ஓர் சிக்கலான மற்றும் ஆழமான புவிசார் அரசியல் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. முதலாம் உலகப் போருக்குப் பின்னரும் ரஷ்ய பேரரசின் வீழ்ச்சியின் விளைவாகவும் உருவான அதிகார வெற்றிடம் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தும் வாய்ப்பை வழங்கியது. சோவியத் யூனியனின் "பிளவு மற்றும் ஆட்சி" கொள்கையை மூலோபாயமாக ஏற்றுக்கொண்டமை குறிப்பாக ஆர்மேனியர்கள் மற்றும் துருக்கிய அஜர்பைஜானியர்களின் பன்முகத்தன்மை கொண்ட நாகோர்னோ-கராபாக் பகுதியில் பதட்டங்களை மேலும் அதிகரித்தது. சோவியத்…

  17. பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாட்டின் டோர்செட்டில் உள்ள ஜுராசிக் கடற்கரையின் பாறைகளிலிருந்து பிரமாண்டமான கடல் அசுரனின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்களை பயமுறுத்திய ஒரு மூர்க்கமான கடல் ஊர்வனவாக விளங்கிய ப்ளியோசருக்கு சொந்தமானது. 2 மீட்டர் நீளமுள்ள இந்தப் புதைபடிவம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்ற படிவங்களிலேயே முழு வடிவத்தில் கிடைத்த மாதிரிகளில் இதுவும் ஒன்று. மேலும் இந்த பழங்கால வேட்டையாடும் விலங்கு குறித்த புதிய பல தகவல்களை இது அளிக்கிறது. புத்தாண்டு தினத்தன்று ‘பிபிசி ஒன்’னில் நடைபெறும் சிறப்பு ‘டேவிட் அட்டன்பரோ’ நிகழ்ச்சியி…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES 25 டிசம்பர் 2023 புவியியலின் மிகப்பெரிய புதிர் இப்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. 15.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி, பின்னர் காணாமல் போன ‘ஆர்கோலாண்ட்’ (Argoland) கண்டத்திற்கு என்ன ஆனது என்ற புதிர்தான் அது. நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக் கழகத்தின் புவியியலாளர்கள், பல ஆண்டுகளாக விஞ்ஞான சமூகத்தைக் குழப்பிக் கொண்டிருந்த இந்த ‘தொலைந்துபோன கண்டத்தைக்’ கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்தக் கண்டம், கோண்ட்வானா எனப்படும் பெரும் கண்டத்திலிருந்து (supercontinent) பிரிந்து வந்தது. ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் அண்டார்டிகா ஆகிய இன்றைய கண்டங்கள் கோண்ட்வானாவின் பகுதிகள…

  19. பெத்லகேமில் நிறுத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள் கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரமான பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெத்லகேம் ஒரு பாலஸ்தீனிய நகரமாக ஆளப்படுவதே இதற்குக் காரணம். நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சமீபகால வரலாற்றில் பெத்லகேம் நகரில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். நத்தார் பண்டிகையை முன்னிட்டு வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில், பாப்பரசர் பிரான்சிஸ் அவர…

  20. Published By: DIGITAL DESK 3 25 DEC, 2023 | 01:34 PM நத்தார் தினம் இன்று திங்கட்கிழமை (25) கொண்டாடப்படும் நிலையில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "போரினால் அவதிப்படும் நம் சகோதர, சகோதரிகளுடன் நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம். நாங்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல், உக்ரைன் பற்றி யோசித்து வருகிறோம். துன்பம், பசி, அடிமைத்தனம் போன்றவற்றால் அவதிப்படுபவர்களைப் பற்றியும் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்தவர்கள் ஜெபத்திலும், அன்பின் அரவணைப்பிலும், நிதானத்த…

  21. 21 DEC, 2023 | 09:49 PM செக் குடியரசின் சென்ட்ரல் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜோன் பலாச் சதுக்கத்தில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/172247

  22. அமெரிக்க பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்! அமெரிக்காவில், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிஸார் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மானுவல் எல்லிஸ் (Manuel Ellis) என்ற 33 வயதான நபர் வொஷிங்டன் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த நபர் பொலிஸார் தாக்கியதினாலேயே உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகளையும் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. …

  23. Published By: VISHNU 18 DEC, 2023 | 08:22 PM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தமது கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கனேடிய எதிர்க்கட்சித்தலைவர் பியெர் பொலியெவ்ர் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அடுத்த தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே கனேடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ்ர் மேற்கண்டவ…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யா - இரான் இடையிலான உறவு 26 நிமிடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. இரானை 'ரஷ்யாவின் சிறந்த ராணுவ கூட்டாளி' என்று அமெரிக்கா கருதுகிறது. இரான் மாஸ்கோவிற்கு பீரங்கி மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) உட்படப் பல்வேறு ஆயுதங்களை வழங்குகிறது. இரானுடனான ராணுவ உறவுகள் 'நேர்மறை' திசையில் வளர்ந்து வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இரு நாட்டு உறவுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை அன…

  25. புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தம்: பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்பு! புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தத்தை, ‘நாட்டிற்கான கவசம்’ என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். பிரான்ஸ் 5 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த, நாட்டில் குடியேற்றப் பிரச்சனை இருப்பதனை ஒப்புக்கொண்ட மக்ரோன், இது எங்களுக்குத் தேவையான ஒரு கவசம் என்று அவர் புதிய சட்டத்தைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு தனது அரசாங்கம் பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சுகாதார அமைச்சர் ஆரேலியன் ர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.