உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் திரைப்படப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பாளராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தற்காலிமாக செம்பியன் என்பவரை சி.இ.ஓ.’வாக நியமித்தது. அவர் மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை வாரிக் குவித்தது. தற்போது வெடி என்ற படத்தையும் வெளியிட உள்ளது. இதனைத் தொடர்ந்து சக்சேனா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனை தொடர்பு கொண்டு தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்திற்கு எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் சன் குழுமத்தின் அனைத்து …
-
- 4 replies
- 1.2k views
-
-
அடுத்த மாதம் உலக ஜனத்தொகை 7.000.000.000 ஆகிறது உலக ஜனத்தொகை இந்த இலையுதிர் காலத்துடன் ஏழு பில்லியனாக உயர்ந்துவிடும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இன்று உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும் சராசரி 2.6 பிள்ளைகள் பிறக்கின்றன. இந்த வேகம் இந்த மாத முடிவில் உலக ஜனத்தொகையை 7 பில்லியனாக உயர்த்துகிறது. தற்போது 1.3 பில்லியன் ஜனத்தொகை கொண்ட சீனாவை விரைவில் இந்தியா முந்திச் சென்று உலகில் ஜனத்தொகை கூடிய முதலாவது நாடு என்ற பட்டத்தை பெற்றுவிடும் என்றும் கணிப்புக்கள் கூறுகின்றன. வரும் 2050ம் ஆண்டு உலக மொத்த ஜனத்தொகை 9 பில்லியனாக உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த நூற்றாண்டு புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் அரை முதல் ஒரு மீட்டர் உயரப்போகிறது. இதனால் …
-
- 14 replies
- 1.1k views
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஆ.ராசா, கனிமொழி மீது புதிய வழக்கு : ஆயுள் தண்டனை பிரிவில் பதிவு! [ Monday, 26-09-2011 16:27 ] 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விசாரணை தகவல்களை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அவ்வப்போது தெரிவித்து வருகிற…
-
- 2 replies
- 1.3k views
-
-
ரகுராம், ஒரு ஊடகவியலாளரின் ஓய்வு ! அவுஸ்த்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரபல தமிழ்ச் செய்தியாளர் ரகுராம் பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு செவ்வாயிரவு தோறும் வலம்வரும் செய்தியலைகள் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதைப் பிடித்தவர். பல தரமான செய்தி ஆய்வுகள், பேட்டிகள் என மக்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கி வருபவர். அந்த ரகுராம், தனது குடும்ப நலனுக்காக தான் வானொலியிலிருந்து விலகியிருக்கப்போவதாகபாறிவித்திருக்கிறார். ஆனால், அண்மையில் சிங்கள அரசின் விருந்தினராகவும், அரசின் போர்க்குற்றங்களை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன்பட்டு வரும் புலிகளின் முன்னால் ஆயுத முகவரான கே.பீ என்பவரைப் பேட்டி கண்டதன் மூலம் ரகுராம் அவர்கள் மேலான நெருக்குதல்கள் ஆரம்பித்தன என்ற…
-
- 0 replies
- 649 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சவுதி மன்னர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவுள்ளார் சவுதி மன்னர்கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பெண்களை ஒடுக்குமுறைக்குள்ளேயே இதுவரை காலமும் வைத்திருந்த சவுதி மன்னர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சவுதி நகரசபை தேர்தலில் பெண்கள் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சவுதியில் கடந்த வியாழன் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் 285 நகர சபைகளுக்கு 5000 ஆண்கள் போட்டி போட்டனர். இவர்கள் அரைப்பங்கு பதவிகளை பூர்த்தி செய்வார்கள், ஏனைய அரைப்பங்கு உறுப்பினர்கள் சவுதி மன்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் பின்தள்ளப்பட்ட காரணத்தால் 60 கல்வியியலாளர் தேர்தலில் இருந்து விலத…
-
- 4 replies
- 866 views
-
-
ஸ்பானியாவில் எருமை மாட்டு போர் முடிவடைகிறது ஸ்பானியாவில் நடைபெறும் மாடுகளை நோக்கி சிவப்புச் சீலையை காண்பித்து கூரிய ஈட்டியால் குத்தி வதைத்துக் கொல்லும் முறை இன்றுடன் முடிவடைவதாக ஸ்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஸ்பானியாவின் பார்சிலோனாவில் நடைபெற்ற இறுதி எருமைமாட்டு போர் விளையாட்டில் ஆறு எருமைகள் கொல்லப்பட்டன. எருமைக் கொலைக்கு பெயர்போன வடகிழக்கு ஸ்பானியாவின் கற்றலோவில் மேற்கொண்டு இந்தப் போட்டி நடாத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 180.000 பேர் இந்த மிருகவதை செயலை நிறுத்துங்கள் என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. அதேவேளை மற்றய பகுதிகளில் இந்த எருமை அடக்கும் விளையாட்டு தொடர்ந்து நடைபெறும் என்ற…
-
- 4 replies
- 1.5k views
-
-
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்திரம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல இன்னொரு முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஒருவரும் இதில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகன வசதிகள் உள்ளன. அதில் ஒன்று விமான பயணம். சிறிய ரக விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிக் காட்டுவார்கள். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது இது. எவரெஸ்ட் சுற்றுலா புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. அந்த சிற…
-
- 6 replies
- 935 views
-
-
Published By பெரியார்தளம் On Saturday, September 24th 2011. Under சென்னை, பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள். Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் பார்ப்பனர் சங்கம் நடத்திவரும் எஸ்.வி.சேகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று (24.09.11) விடுதலையாகி வந்த அவர்களுக்கு ராயப்பேட்டையில் பறை முழக்கத்துடன் வரவேற்பு…
-
- 0 replies
- 773 views
-
-
மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களாக உள்ள பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், ப.சிதம்பரத்தின் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி முற்றியது. . ப.சிதம்பரத்தின் மதிப்பை குறைக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அரங்கேறி உள்ளன. 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு தற்போது ப.சிதம்பரத்தின் பெயர் பலமாக அடிபடுகிறது. நிதி அமைச்சராக இருந்தபோது அவர் நினைத்திருந்தால் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய நிதி அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையை பிரதமர் அலுவலகம் ந…
-
- 6 replies
- 1.4k views
-
-
இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள், நாளை (23) பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி இந்திய ரூபா செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளிமண்டலத்தி…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும். விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஸ்ட்ராஸ…
-
- 1 reply
- 654 views
-
-
'உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ எனத் தி.மு.க-வும் காங்கிரஸும் போட்டி போட்டு அறிவித்துவிட்டன. ஈழத்தில் போர் நடந்தபோதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஃபெவிக்கால் பிணைப்பாக வலம் வந்த விடுதலைச் சிறுத்தைகளின் நிலைதான் இப்போது புதிர்! தனித்துவிடப்பட்டிருக்கும் திருமாவளவனை சந்தித்தோம். ''தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்த்தீர்களா?'' ''இது எங்களை அதிரவைத்திருக்கும் அறிவிப்பு! கூட்டணி அமைக்க பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். 'தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சி யின் ஆலோசனைக் குழுவில் ஆராய்ந்துதான் எந்த முடிவும் எடுப்போம்’ என நாங்கள் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. திடீரென இப்படி அறிவித்து இரு…
-
- 0 replies
- 484 views
-
-
அன்னா ஹசாரே இன்று இந்தியா வின் ஹீரோ என்பதில் சந்தேகம் இல்லை. அன்னாவைப் போலவே இரோம் ஷர்மிளா என்கிற 38 வயது மணிப்பூர் மாநிலப் பெண்ணின் உண்ணாவிரதப் போராட்டமும். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர் உண்ணாவிரதம் இருந்து, கோமா நிலைக்குச் சென்று, படுத்த படுக்கையாக இருக்கிறார். அன்னாவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கும் இரோம் ” டெல்லியில் இருந்து போராடுவதால் அன்னாவுக்கு தேசிய ஆதரவு கிடைத்திருக்கிறது. இதையே அவர் ஒதுக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து செய்திருந்தால் யாரும் கண்டு கொண்டி ருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். இரோம் ஷர்மிளா ஒரு சிவில் உரிமைப் போராளி, அரசியல் சூறாவளி மற்றும் உணர்ச்சிகரமான கவிஞர். …
-
- 0 replies
- 558 views
-
-
சென்னை: சட்டசபைத் தேர்தலைப் போலவே தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்து வருவதால் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக தேமுதிகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து போட்டியிடலாமா என்ற ரீதியில் அவர்கள் யோசித்து வருகிறார்களாம். சட்டசபைத் தேர்தலின்போதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் புறம் தள்ளி விட்டு தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் கூட்டணிக் கட்சிகள் கொந்தளித்தன. பின்னர் இறங்கி வந்த ஜெயலலிதா, தொகுதி உடன்பாட்டை மேற்கொண்டார். தற்போதும் அதே கதையாகியுள்ளது. அடுத்தடுத்து அவர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதனால் கூட்டணிக் கட்சிகள் க…
-
- 1 reply
- 666 views
-
-
மெல்போர்ன் நகரில் அவமதிக்கப்படுகிறார் விநாயகர். கலாசார விழாவில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி. [Tuesday, 2011-09-20 13:37:42] ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில், இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில், ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல்கள், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில், அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா நடக்க உள்ளது. இதில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக, ஆஸ்திரேலியாவின் "பேக் டு பேக் தியேட்டர்' என்ற நாடக அமைப்பு, "தி கணேஷ் …
-
- 0 replies
- 600 views
-
-
சென்னை: மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் எனது அரசு ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்புதான், கூடங்குளம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், அந்தப் பகுதி மக்களின் வாக்குகளுக்கு தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குறி வைக்க ஆரம்பித்துள்ள நிலையில், கூடங்குளம் திட்டத்துக்கு இன்று திடீரென ஜெயலலி…
-
- 3 replies
- 1k views
-
-
சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 18, 2011, 19:13 [iST] கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுக…
-
- 3 replies
- 937 views
- 1 follower
-
-
தமிழக உள்ளாட்சித் தேர்தல் - உடைந்தது அதிமுக கூட்டணி 18 செப்டம்பர் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் களை தன்னிச்சையாக அறிவித் துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே இந்தக் கூட்டணி நீடிக்குமா? உடைந்து போகுமா? என்ற குழப்பம் நீடித்த நிலையில் இப்போது கூட்டணி கட்சிகளை மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. இதனால் கூட்டணி கட்சிகள் ஒட்டு மொத்தமாக திகைத்துப் போய் விட்டன, தமிழகத்தில் உள்ள பெரும் 10 மாநாகராட்சிகளுக்குமான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த ஜெயலலிதாவின் போக்கு கண்டு அதிருப்தியடைந்துள்ள அரசியல் கட்சிகள் தாங்கள் என்ன முடிவெடுப்ப…
-
- 2 replies
- 3.1k views
-
-
வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருந்து வரும் 3 நாள் உண்ணாவிரதத்திற்கு குஜராத்தில் மட்டுமல்லாமல், குஜராத்துக்கு வெளியே அமெரிக்காவிலும் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அமெரிக்காவின் பல நகரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்குப் பெரும் ஆதரவு காணப்படுகிறது. பெரும் திரளான முஸ்லீம்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்திருப்பது வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிலும் மோடி ஆதரவாளர்கள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் என்ற அமைப்பு இந்த உண்ணாவிரதத்திற்கு ஏ…
-
- 0 replies
- 588 views
-
-
பார்வையாளர்கள் மீது வீழ்ந்து நொறுங்கிய சாகச விமானம் : 3 பேர் பலி அமெரிக்காவின் நெவேடாவில் நடைபெற்றுவந்த தேசிய விமான சாகச நிகழ்வின் போது திடீரென விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த தரை பிரதேசத்ததில் வீழ்ந்து சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் புகழ்பெற்ற ஹாலிவூட் விமான ஸ்டண்ட் ஓட்டுனரும் பலியாகியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Era- P-51 எனும் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இயந்திர கோளாறே விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரான்ஸ்டான் எனும் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது…
-
- 1 reply
- 570 views
-
-
சென்னை, செப். 17- கனிமொழிக்கு ஜாமீன் கோரும் மனு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற வழக்காகவே தெரிகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணையில் சட்ட விவகாரம் சம்மந்தமாக தொடர்புடையவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் கூட அது சம்பந்தமாக விசாரணை எதுவும் நடைபெறாமல் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாமல், அதற்கான வழக்கு நடைபெறுகின்ற நீதிமன்றத்தில் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் கடத்தி கொண்டேயிருக்கிறார்கள். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து செய்தி வெளியிட்ட ஏடுகள் கூட, இந்த வழக்கைக் காரணம் காட்…
-
- 2 replies
- 932 views
-
-
சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம் ஆந்திர மாநிலம் குண் டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார். சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் எ…
-
- 0 replies
- 426 views
-
-
அமெரிக்க நாசா விண்வெளி மையத்திற்குச் சொந்தமான ஐந்து தொன் எடையுள்ள 20 ஆண்டுகள் பழமையான செயற்கைக் கோள் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி நெருங்கி வரும் நிலையில்.. அது பூமியின் வாயு மண்டத்தில் பிரவேசிக்கும் போது.. துண்டுகளாகி.. பூமியில் மக்கள் வாழும் இடங்கள் உட்பட எங்கு வேண்டுமானாலும் விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இம்மாதம் (செப்டம்பர்).. வரும் 24ம் திகதி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக.. மக்கள் அதிகம் பரந்து வாழும்.. மத்திய கோட்டுக்கு.. வடக்குத்.. தெற்காக.. 57 பாகை விஸ்தீரணம் கொண்ட பூமியின் எப்பகுதியிலும் இது விழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாசா உலகிற்கு வழங்கியுள்ளது. இதற்கிடையே.. இந்த செயற்கை…
-
- 4 replies
- 1.6k views
-
-
சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்திற்கு எதிரான பாலியல் வழக்கொன்றின் விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றமொன்று அந்நாட்டின் பிறிதொரு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. சவூதி இளவரசரான அல் வாலிட் 2008 ஆம் ஆண்டு 20 வயது மொடல் அழகியொருவரை ஸ்பெயினின் லிபிஷா தீவுப்பகுதியில் சொகுசுப் படகொன்றினுள் வைத்து போதையூட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக ஸ்பெயின் நாட்டின் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. போதிய சாட்சிகள் இல்லையென்ற காரணத்தினால் அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கினை கடந்த வருடம் நிறைவு செய்தது. எனினும் தற்போது அந்நாட்டு நீதிமன்றமொன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படியும் இளவரச…
-
- 3 replies
- 1.2k views
-