உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
-
- 5 replies
- 2.5k views
-
-
அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பும் ஊழல் குற்றச்சாற்றுக்களால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நாளைக்கே தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சி 40 க்கும் அதிமான இடங்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் போர் வீரர்கள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு திட்டத்தில் ஊழல், இவை எல்லாவற்ற்றையும் தூக்கி சாப்பிடக் கூடிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழல் என அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பிய ஊழல் புகார்களால் காங்கிரஸ் கட்சியின் பெயர் அதலபாதாளத்தில் வீழ்ந்தவுடன்தான், அவசரமாக டெல்லியில் கூட்டப்…
-
- 2 replies
- 1k views
-
-
நூறு கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட அடையாறு பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் மறுத்ததற்கு ‘தானே காரணம்’ என்று புறப்பட்டிருக்கிறார் பெண் ஒருவர். நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்தப் பிரச்னை இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிவகிரி ஜமீனாக இருந்த ராமலிங்க பாண்டிய சின்ன தம்பியார் என்பவர் தன்னிடம் தோட்ட வேலை பார்த்த திருமல்லையா என்பவருக்கு சென்னை, கிரீ ன்வேஸ் சாலை-ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 2.36 ஏக்கர் (!) நிலத்தை 1912-ல் தானமாக வழங்கியிருக்கிறார். அதன்படி, திருமல்லையாவின் மகன் ஸ்ரீராமுலு, அவரது மகன் லிங்கராஜ், அவரது மகன் சுதர்சனம் என அந்த நிலத்துக்கு பரம்பரை பரம்பரையாக உரிமை கொண்டாடி வந்தனர். 1972-ல் தமிழக அரசு சுதர்சனத்துக்கு ‘செட்டில்மெண…
-
- 0 replies
- 667 views
-
-
பற்களின் இடையே உளவு பார்க்கும் கருவியுடன் அமெரிக்க பெண் ஈரானில் கைது வீரகேசரி இணையம் 1/7/2011 10:33:21 AM உளவு பார்க்கும் சிறிய இரகசிய கருவி ஒன்றினை பற்களின் இடையே பொருத்தியவாறு ஈரானுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற அமெரிக்க பெண் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரச நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 55 வயதான இப்பெண் விஸா இன்றியே ஆர்மேனிய எல்லையினூடாக ஈரானுக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார். இதன் போது ஈரானின் தென்மேற்கு நகரான நோர்டவுஸில் வைத்து இவரை எல்லையோர பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவர் தற்போது எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
-
- 2 replies
- 885 views
-
-
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்க, நெருங்க மக்களைக் கவர என்ன செய்யலாம் என அரசியல் கட்சிகள் யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆளுங்கட்சியான தி.மு.க., தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கவர்னர் உரையில் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதில் முக்கிய அம்சமாக ‘கள்’ இறக்க அனுமதி தரப்போகிறார்களாம். தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள வாக்குகளை அள்ள ‘கள்’ இறக்குவதற்கான அனுமதியை வழங்கும் அரசின் முடிவை, கவர்னர் தனது உரையில் அறிவிப்பார் என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் சொல்கிறது. தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ”தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் எங்களுக்…
-
- 0 replies
- 748 views
-
-
குடியரசு தினத்தன்று லால் சௌவ்கில் தேசிய கொடியை ஏற்றப்போவதாக பா.ஜனதா அறிவித்திருந்தது. இதற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் லால் சௌவ்கில் தேசிய கொடியை பா.ஜனதா ஏற்றப்போவதை யாராளும் தடுக்க முடியாது என்று பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் முனிஷ் ஷர்மா தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: - லால் சௌவ்கில் பா.ஜனதா தேசிய கொடியை குடியரசு தினத்தன்று ஏற்றப்போவதற்கு உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் யார் எங்களை எதிர்த்தாலும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தடுக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசே எங்கள் ரத யாத்திரையை தடுக்க முயற்சி செய்யும்போல் உள்ளது, அப்துல்லா பேசியிருப்பது. தேசிய மக்கள் அனைவருக…
-
- 0 replies
- 429 views
-
-
ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து தாங்கள் அதிர்ந்து போனோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட் வாய்ப்பே இல்லை. இதற்கான ஆதாரங்களும் இல்லை. இந்த இழப்பு கணக்கு முற்றிலும் தவறானது. சொல்லப்போனால் 2ஜியில் அரசுக்கு இழப்பே இருக்க வாய்ப்பில்லை. செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் …
-
- 0 replies
- 692 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம். தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்…
-
- 1 reply
- 958 views
-
-
போபர்ஸ் ஊழலில் இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குட்ரோச்சி லஞ்சம் பெற்றார் என்று வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் ஆவணங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போபார்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இத்தாலிய தொழிலதிபரும், சோனியா காந்தியின் உறவினருமான குட்ரோச்சி மீது குற்றம்சாற்றப்பட்டது. ஆனால் அவருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி, அவர் மீதான வழக்கை திரும்ப பெறுமாறு டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இவ்வழக்கை விசாரித்த சிபிஐ மனு தாக்கல் செய்தைத் தொடர்ந்து அவர் மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, சோனியாவின் உறவினர் என்பதாலேயே குட்ரோச்சி மீதான வழக்கு திரும்ப பெறப்பட்டதாக விமர்சனம் எ…
-
- 2 replies
- 1.2k views
-
-
. அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து விலகினார் அழகிரி. சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
கடந்த செம்ரெம்பர் மாதம் இலண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைதான மொங்கோலிய நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் Khurts (41) என்பவரை ஜெர்மன் நாட்டிடம் கையளிப்பது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை இலண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சில் வசித்து வந்த மொங்கோலிய பிரசை ஒருவரை, ஜெர்மனி ஊடாக மொங்கோலியாவுக்கு கடத்தியது தொடர்பாக இவர்மீது ஜெர்மனிய காவற்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்ததுடன் இவர்மீது சர்வதேச பிடியாணையையும் பிறப்பித்திருந்தது. கடத்திச் செல்லப்பட்டவர் மொங்கோலிய அமைச்சர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என்றும் பிரான்சிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவர் மொங்கோல…
-
- 0 replies
- 507 views
-
-
இலவச பிரசவம் பார்க்கும் தமிழக சாலைகள் - மக்கள் பணியில் நாம் தமிழர் மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்ற தேசிய தலைவரின் சிந்தனையின் வழியில், நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்றால் விழிப்புணர்வு பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்ட வேண்டும். மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற செந்தமிழன் சீமானின் அறிவுரையை ஏற்று கொண்டு , நாம் தமிழர் கட்சியினர் செயல் பட்டனர் . தமிழ் நாட்டில் தற்பொழுது பெய்து வந்த கடும் மழையால் சென்னையில் உள்ள சாலைகள் பெரிதும் சேதமடைந்தன. 1,70000 கோடி ஊழல் செய்த கருணாநிதியால் சில லட்சம் செலவு செய்து சாலையை சீர் செய்ய முடியவில்லை.இதை எதிர்த்து மக்களுக்கு விழிப்புண…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண ஆளுனர் சல்மான் தஸீர், அவரது பாதுகாவலர் ஒருவரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சல்மான் தஸீர், அதிபர் ஆஸிப் அலி சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்நிலையில் இன்று தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செல்வந்தர்கள் வந்து செல்லும் பிரபல கோஷார் வணிக மையத்திற்கு வந்தபோது, அவருடன் வந்த அவரது பாதுகாவலர்களில் ஒருவர் தஸீரை திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலின்போது தஸீரின் பாதுகாப்பு வந்த மற்ற பாதுகாவலர்கள் பதிலுக்கு சுட்டதில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், ஆளுனர் தஸீரை சுட்டுக்கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒர…
-
- 1 reply
- 900 views
-
-
பீகாரில் பிஜேபி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேஷரியை ரூபம் பதக் என்ற பெண் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை கேஷரி பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த ஆண்டு போலீஸில் புகாரளித்தவரே அந்தப் பெண் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பை அதிகரிக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. பீகாரில் பூர்னியா தொகுதியில் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ராஜ் கிஷோர் கேஷரி (வயது 51). கேஷரி தனது வீட்டில் இன்று காலை வழக்கம் போல் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, குறை கூறுவதற்காக வந…
-
- 5 replies
- 1.3k views
-
-
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப் பெண்கள் இடம்பெறும்’’ என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். ‘சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ மாநாட்டுக் கோரிக்கைகளை ஏற்று, இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். ‘‘தேர்தல் நெருங்கி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை யார் பறிப்பது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே போட்டி. இதன் அடிப்படையிலேயே இப்படியொரு அறிவிப்பை முதல்வர் …
-
- 1 reply
- 893 views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குழந்தை பிறந்தது. தங்கள் கண்முன்னே தோழிக்கு குழந்தை பிறந்ததைப் பார்த்த விடுதி மாணவிகள் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர்...’ இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும் ‘சுளீர்’ என்று இதயத்தைத் தைத்தது போன்ற உணர்வு. என்ன கொடுமை இது...? இதனை விசாரிக்க களத்தில் இறங்கியபோது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தலித் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள்தான் இந்த அரசு மாணவியர் விடுதி இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகள் சுமார் 740 பேர் இந்த விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். விடுதியில் மாணவிகளுக்கான ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
எஃப்.எம். ரேடியோக்களை விட இன்று அதிக அளவில் பொதுமக்களால் விரும்பிக் கேட்கப்படுவது தொலைபேசி உரையாடல்கள்தான். இந்திய அரசியலில் இன்று தவிர்க்கவே முடியாமல் போய்விட்ட தொலைபேசி உரையாடல்கள் அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைபேசி உரையாடல்கள்தான் முக்கிய பங்கு வகித்தது. ஆ.ராசாவின் பதவி பறிப்பு, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடங்கியது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீதான சர்ச்சை என நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பல ரகசியங்களை வெளிக் கொண்டு வந்தன. ‘நாட்டின் பாது காப்புக்கும், வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கவும் இப்படிப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு தேவைதான்’ என அண்மையில் பிரதமர் ம ன்மோகன் சிங் கருத்துத் தெ…
-
- 0 replies
- 473 views
-
-
பிரதமரை முதல்வர் கருணாநிதி சந்திப்பாரா? மாட்டாரா? என்ற பரபரப்பான கேள்விக்கிடையே, திங்களன்று காலை சென்னை ராஜ் பவனில் சந்திப்பு நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு இறுக்கமாகவே இருந்ததாகச் சொல்கிறார்கள். அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைக்க ஞாயிறன்று சென்னை வந்தார், பிரதமர் மன்மோகன் சிங். புரோட்டோக்கால்படி பிரதமரை முதல்வர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர், பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. தன்னுடைய எதிர்ப்பை முதல்வர் தெரிவிக்க நினைக்கும்போது, இது போன்ற புறக்கணிப்பைச் செய்வது வழக்கம்தான் என்கிறார்கள் தி.மு.க.வினர். ‘‘இந்திய அமைதிப்படை சென்னை திரும்பிய போது, முதல்வர் அவர்களை வரவேற்கப் போக…
-
- 1 reply
- 525 views
-
-
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றம், எதிர்க்கட்சிகள், சி.பி.ஐ. ரெய்டு என்று மும்முனைத் தாக்குதலுக்கு ஆளான ராசா, கடந்த வியாழன் அன்று பெரம்பலூருக்கு வந்தபோது, உற்சாக வரவேற்பு கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துவிட்டனர் உடன்பிறப்புகள். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுவிட்டு சொந்த ஊருக்கு வரும்போதோ அல்லது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வரும்போதோ அவருக்கு சொந்த ஊரில் வரவேற்பு அளிப்பது வழக்கம். இங்கே சற்று வித்தியாசமாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ராசாவுக்கு ‘செ ன்டிமெண்ட்’ வரவேற்பு கொடுத்து அசத்தினர் அவரது ஆதரவாளர்கள். ‘தி.மு.கழகத்திற்கும், தலைவர் கலைஞருக்கும் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மலே’ என்று ஒரு போஸ்டர் ஒட…
-
- 0 replies
- 523 views
-
-
'இந்தியா என்றால் இந்திரா! இந்திரா என்றால் இந்தியா!' எழுபதுகளில் அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த தேவகாந்த் பருவா தந்த முழக்கம் இது. இப்போதெல்லாம் காங்கிரசுக்காரர்கள் தங்கள் கொடியிலிருந்து இராட்டையை அகற்றி விட்டு சோனியா காந்தியின் தலையைப் போட்டுக் கொள்கிறார்கள். சில நேரம் சோனியா + ராகுல் காந்தி தலைகள் இடம் பெறுகின்றன. மாமியார் இந்திராவை விஞ்சிய மருமகள் சோனியா, கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பதில்! ஆனால் ஊழல் நெடுங்கணக்கு இந்திராவுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்திராவின் கணவர் பெரோசு காந்தி நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய ‘முந்திரா ஊழல்’ கூட நேரு அரசாங்கத்தின் முதல் ஊழலன்று. சரியாகச் சொன்னால், ‘சுதந்திர’ இந்தியாவோடு சேர்ந்தே ஊழலும் பிறந்து விட்டது. இந்தியா ‘வளர …
-
- 0 replies
- 522 views
-
-
தமிழகத்தின் சென்னை தவிர பிற மாவட்டங்கள் மின்பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்க,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ்த்தேசிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருப்பதாக உலக நாடுகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.போர் நடைபெறும்போதே தமிழர்களின் உணர்வை மத்திய அரசு மதிக்க வில்லை.போர் முடிந்த பிறகும் தொடர்ந்து இலங்கையுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. தமிழக மீனவர்களையும் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்கி வரும் நிலையில், ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின்சாரத்தைக் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ராகுல்காந்தியுடன் ஒரு சந்திப்பு..! 25-12-2010 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தை விரும்பிப் படிக்காததன் பலனை கடந்த 22-ம் தேதி முழுமையாக அனுபவித்தேன். முதல்முறையாக முழுமையான ஆங்கில அறிவு இல்லையே என்கிற பெரும் ஏக்கத்தை அன்றைய ராகுல்காந்தியுடனான சந்திப்பு நிகழ்ச்சி எனக்குள் ஏற்படுத்தியது..! பத்திரிகையாளர் கவிதா முரளிதரனின் சிபாரிசில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜோதிமணி, கடந்த திங்கள்கிழமையன்று உலகத் திரைப்பட விழாவில் படம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு போன் செய்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார். முதலிலேயே அவரிடம், “நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவன். அங்கு வந…
-
- 2 replies
- 855 views
-
-
மேற்கு ஆபிரிக்க நாடான ஐவறி கோஸ்ட்டில், தேர்தலுக்குப் பின்னதான வன்முறைகள் தொடர்கின்றன. இதுவரை ஆட்சியிலிருந்த அதிபர் லோறன்ற் கபாக்போவை எதிர்த்துப் போட்டியிட்ட அலசன் ஒட்டாரா, அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொண்டு, தனது பதவியிலிருந்து விலக கபாக்போ முன்வரவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமும், ஆபிரிக்க ஒன்றியமும் கோரிக்கை விடுத்திருந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், கபாக்போவை பதவி விலகுமாறு கேட்டுள்ளார். இந்தக் கோரிக்கைகளை கபாக்போ நிராகரித்துள்ள நிலையில், ஐ.நா. சமாதானப் படையினர் ஐவறி கோஸ்டிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென கபாக்போ உத்தரவிட்டுள்ளதுடன், தேர்தலில் தனக்கே வெற்றி கிடைத்திருப்பதாகவ…
-
- 2 replies
- 596 views
-
-
பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சி ஒன்று கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார். MQM என அழைக்கப்படும் முட்டாஹிடா குவாமி மூவ்மென்ட் கட்சி, அரசில் இருந்து விலகப் போவதாக நேற்று அறிவித்தது. ஊழல் மற்றும் பொருளாதார விடயங்களில் அரசின் செயற்பாடு திறமையான இருக்கவில்லையென அது குற்றம் சாட்டியது. ஆஞஆ கட்சியின் 25 உறுப்பினர்கள் ஆதரவை விலக்கியமையால், பாகிஸ்தான் மக்கள் கட்சி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. அரசின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இடம்பெறுவதைத் தடுக்கும் முயற்சியாக, பிரதம மந்திரி கிலானி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார். நெருக்கடி ஏற்படவி…
-
- 0 replies
- 839 views
-