Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலைய…

  2. மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் அதிகாரத் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்…

  3. மியன்மாரின் இராணுவ சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சுமார் 500 பேர் கைது இந்த மாத சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பல அரசாங்க அலுவலகங்களை முடக்கி, வேலைநிறுத்தங்களை ஊக்குவித்ததற்காக மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு, ஆறு பிரபலங்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதுடன் இதுவரை சுமார் 500 பேரை கைதுசெய்தும் உள்ளது. புதன்கிழமை பிற்பகுதியில், மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில்களை நிறுத்திய ரயில்வே தொழிலாளர்களை எதிர்கொண்டனர். இதன்போது ஒருவர் காயமடைந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். பெப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்பு மற்றும் தேர…

  4. [size=4]மியன்மாரிலுள்ள கரையோர மாவட்டமொன்று முற்றாக எரித்து அழிக்கப்பட்டிருக்கும் செய்மதிப் படங்களை, மனிதவுரிமை அமைப்பொன்று வெளியிட்டிருக்கின்றது. இனக்கலவரத்தின் காரணமாக, மியன்மாரின் மேற்குப் பிரதேசத்திலுள்ள றாக்கீன் மாநிலத்தின் ஒரு பகுதி முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகுpன்றது, சுமார் 800 கட்டிடங்களும், வீட்டுப் படகுகளும் எரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முஸ்லிம் மக்களைக் குறிவைத்து, முஸ்லிம் அல்லாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மனிதவுருpமைகள் அமைப்பு குறிப்பிடுகின்றது. 64 Nபுர் இந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதும், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாமென மனிதவுருpமைகள் அமைப்பு தெரிவிக்கின்றது. …

  5. மியன்மாரின் பல பகுதிகளில் இராணுவ சட்டம் அறிவிப்பு ; இதுவரை 126 பேர் பலி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களின் போது மியான்மர் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 38 பேரைக் கொலை செய்ததாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் உள்ள பல நகரங்களில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தினமும் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதால் 126 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை தன்னிச்சை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்யை தினம் ஆர்ப்பாட்டக்காரர்க…

  6. சூகிக்கு மேலும் 7 ஆண்டுகால சிறை மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகிக்கு எதிராக மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று (30) வழங்கியுள்ளது. மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்…

  7. மியன்மாரிலிருந்து மலேசியாவுக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை கடத்திய படகு விபத்து – 65 பேர் மீட்பு June 14, 2019 மியன்மாரிலிருந்து 65 ரோஹிங்கியா முஸ்லிம்களை மலேசியாவுக்கு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி, தாய்லாந்தின் தென் கடல்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 65 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு சதுன் மாகாண முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கடத்துவதில் ஈடுபட்ட சங்கோம் பப்ஹான் என்னும் தாய்லாந்து நாட்டு படகோட்டி ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை மலேசியாவுக்கு அழைத்து செல்ல மியன்மாரை சேர்ந்த ஒருவரால் படகோட்…

  8. மியன்மாரில் இதுவரை 745 போராட்டக்காரர்கள் இராணுவத்தால் படுகொலை கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளதுதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதிய நிலவரப்படி, இந்த இராணுவ ஆட்சிக்குழுவினால் 745 பேர் கொல்லப்பட்டதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர், இராணுவத்தால் இதுவரை கிட்டத்தட்ட 3,371 பேர் கைது செய்யப்பட்டடுள்ளார்கள். இதற்கிடையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சனிக்கிழமை நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டி…

  9. மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் மீது தாக்குதல்! மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மக்வேயின் வடகிழக்கில் மெய்க்டிலாவில் உள்ள நாட்டின் முக்கிய விமானத் தளத்தில் ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவ சதித் திட்டத்துக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் மேற்…

  10. மியன்மாரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகம் [13 - May - 2008] * ஐ.நா.வின் ஆய்வில் தகவல் மியன்மாரை தாக்கிய நர்கீஸ் புயலினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக ஐ.நா.வின் ஆய்வொன்று தெரிவித்துள்ளது. மியான்மாரை கடந்த 2 ஆம் திகதி இரவு நர்கீஸ் என்ற பயங்கர புயல் தாக்கியது. இதில் ஐராவதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் சமூக சேவை அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 63,290 இல் இருந்து 1,01,682 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,20,000 வரை இருக்கும் என்றும் …

    • 0 replies
    • 623 views
  11. மியன்மாரில் உள்ள ஒட்டுமொத்த ரொஹிங்கிய முஸ்லிம்களின் கிராமங்களும் அழிக்கப்பட்டு அங்கு பொலிஸ் பாசறைகள், அரச கட்டடங்கள் மற்றும் அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இது பற்றிய உண்மைகளை பி.பி.சி தொலைக்காட்சி கண்டறிந்துள்ளது. அரச சுற்றுப்பயணம் ஒன்றில் ரொஹிங்கிய குடியிருப்புகள் என செய்மதி படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நான்கு இடங்களில் பாதுகாப்பு கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டதாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது. ரகினே மாநிலத்தின் கிராமங்களில் அந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் மியன்மாரில் இருந்து தப்பிச் சென்றனர். இது ஒரு “பாடப்புத்தக…

    • 0 replies
    • 438 views
  12. மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 மாணவர்கள் பலி! 14 Sep, 2025 | 10:37 AM மியன்மார் ராணுவம் நாட்டின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என ஆயுதக் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 17 முதல் 18 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. துற்போதைய நிலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த பகுதியில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. AA என்ற சிறுபான்மை இயக்கத்தின் இராணுவப் பிரிவொன்றினால் குறித்த…

  13. மியன்மாரில் அரசாங்க படையினருக்கும் கொகாங் இன கிளர்ச்சியாளர்களுக்குமிடையே 3 நாட்களாக இடம்பெற்ற மோதலில் சுமார் 50 படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சீன எல்லையிலுள்ள ஷான் மாநிலத்திலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. அந்த பிராந்தியத்தில் இடம்பெற்ற 13க்கும் மேற்பட்ட வெவ்வேறு மோதல்களில் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேற்படி மோதல்களில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/02/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%…

  14. மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்- 12 சடலங்கள் மீட்பு, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் [size=2]Published on November 11, 2012-10:34 am · [/size][size=3] மியன்மாரில் இன்று காலை 7.40 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் இக்கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.[/size][size=3] இந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்;டர் அளவில் 6.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என மியன்மார் ஊடகங்…

  15. மத்திய மியான்மரில் உள்ள பௌத்த பகோடா ஆலயம் கடுமையான மழைவீழ்ச்சியால் வெள்ளப்பெருக்கால் நீரில் அமிழ்ந்துள்ளது . பகோடா 2009 இல் மாகவே என்ற பகுதியில் அமைக்கப்பட்டது. குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாதம் மியன்மார் வெள்ளம் இடம்பெயர்ந்துள்ளனர், http://www.bbc.co.uk/news/av/world-asia-40705792/pagoda-collapses-into-river-in-myanmar

    • 0 replies
    • 681 views
  16. மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இதுவரையில்18 பேர் உயிரிழப்பு மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடு…

  17. மியன்மாரின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பெற்றோல் ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவதுடன் அவரை எரித்த நபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மியன்மாரில் இடம்பெற்ற மதக்கலவரத்தில் 200-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக…

  18. மியன்மாரில் முஸ்லிம் அல்லாதோருக்கு ஆயுதங்கள் வழங்குவது பாதகமானது – மனித உரிமை அமைப்புக்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மியன்மாரில் முஸ்லிம் அல்லாதோருக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவது பாதகமானது என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. மியன்மாரின் ராக்கினி மாநிலத்தில் இவ்வாறு முஸ்லிம் அல்லாதோருக்கு அந்நாட்டு இராணுவத்தினர் ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.ரொஹினியா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படுவது உரிமை மீறல்களுக்கு வழியமைக்கும் என குற்றம் சுமத்தியுள்ள மனித உரிமை அமைப்புக்கள் ரொஹினியா முஸ்லிம்கள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்படலாம் எ…

  19. மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு! Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 05:16 PM மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன. வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/233199

  20. ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடிய நான்கு ஜனநாயக ஆர்வலர்களை... தூக்கிலிட்டது மியான்மார். பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜனநாயக ஆர்வலர்களை மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். பல தசாப்தங்களின் பின்னர் நாட்டின் அமுல்படுத்தப்பட்ட முதல் மரணதண்டனை இதுவென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்தை எதிர்த்துப் போராட, போராளிகளுக்கு இவர்கள் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தண்டனைகள் சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ள அதேவேளை, மக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டும் மோசமான முயற்சி என ஐ.நா நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். மரண …

    • 2 replies
    • 478 views
  21. மியன்மாருக்கான அமெரிக்காவின் மற்றொரு பலத்த அடி அமெரிக்க வணிகத் துறை வியாழக்கிழமை மியன்மாரின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களை அதன் வர்த்தக தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அதேநேரம் அமெரிக்க வர்த்தகத் துறை மியான்மருக்கு எதிரான அதிக ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளுக்கு உட்பட்ட பொருட்களை பர்மிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பர்மிய உள்துறை அமைச்சகம், ஆட்சி மாற்றத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் சொந்தமான மற்றும் இயக்கப்படும் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது. தற்போதைய இராணுவ அரசாங்கத்தின் நியாயத்தன்மையை…

  22. மியன்மாருக்கு போப் ஃபிரான்சிஸ் விஜயம்! நவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராணுவ உயரதிகாரிகளையும் அந்நாட்டு மக்கள் தலைவர் ஆங் சான் சூ கீயையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது. மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், அந்தப் பிரச்சினை குறித்தே மேற்படி முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. நவம்பர் ஆறாம் திகதி முதல் டிசம்பர் இரண்டாம் திகதி வரையான இந்த விஜயத்தின்போது போப் ஃபிரான்சிஸ் பங்களாதேஷுக்கும் விஜயம் செய்யவுள்ளார். மியன்மா…

  23. மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் உயிரிழப்பு மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது. இதனை தொடர்ந்து இராணுவ …

  24. மியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை! மியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தடை பாரபட்சமானது என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான இனப் படுகொலையின் ஒரு தொடர்ச்சி எனவும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. 2017ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையை அடுத்து, சுமார் 75 ஆயிரம் ரோஹிங்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர். இந்த விரட்டியடிப்பு நடவடிக்கை ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் இனப் படுகொலை விசாரணைக்கு வழிவக…

  25. மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள் மற்றும் பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் உயிரிழப்புகளைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் மிகப் பெரிய நகரமான யாங்கோனில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மார்ச் 14 பின்னர் பாகோவில் புதிய இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. 82 பேரின் இறப்பு எண்ணிக்கை அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தால் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த சங்கம் பெப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் ஆங் சான் சூகியின் தேர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.