உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26660 topics in this forum
-
பிரித்தானியாவில்... 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில், எயார் டாக்ஸி: வெர்டிகல் எயிரோஸ்பேஸ் திட்டம்! பிரித்தானியாவில் 2020ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எயார் டாக்ஸிகள் வானை அலங்கரிக்கும் என வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெர்டிகல் எயிரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் கூறுகையில், ‘2025ஆம் ஆண்டு இந்த டாக்ஸி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக அமெரிக்காவின் பிளான்க் செக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். 193 கிமீ தூரம் வரை, சுமார் 4 பேரை ஏற்றிச் செல்லும் இந்த டாக்ஸி திட்டத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும…
-
- 0 replies
- 482 views
-
-
கனடாவில் மோசமான சூறாவளி - வான்கூவரை இணைக்கும் சாலைகள் துண்டிப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@RCAFOPERATIONS கனடா நாட்டின் வான்கூவரில் நூற்றாண்டிலேயே முதல் முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வீசி வரும் மோசமான சூறாவளி, வான்கூவரைச் சுற்றியுள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்புகளை துண்டித்துள்ளது. மேற்கு கடலோர நகரான வான்கூவரை இணைக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் கடுமையான வெள்ளத்தால் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் குறைந்தது இரண்டு பேரைக் காணவில்லை என்று மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். …
-
- 8 replies
- 644 views
- 1 follower
-
-
. வீரகேசரி இணையம். இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி(73). அவரது சொந்த ஊரில், அவரது கட்சிப் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசினார். பேரணியின் போது பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு வாலிபர் பிரதமரின் முகத்தில் உலோகத்தால் ஆன சிலையால் ஓங்கி அடித்தார். இதனால் அவரது வாய் மற்றும் மூக்கில் இரத்தம் கொட்டியது. பிரதமரது 2 பற்கள் உடைந்து விழுந்தன. பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாலிபரைப் பொலிசார் கைது செய்தனர். அவர் மனநோயாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
- 0 replies
- 829 views
-
-
அண்மையில் அமெரிக்காவின் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில்உள்ள விமான நிலையங்கள் கடுமையானபாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னிலையில் நத்தார் பண்டிகையினை முன்னிட்டுதொலைக்காட்சியில் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காமீது தாக்குதல் நடத்துவதற்கு அல்கெய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது அல்கெய்தா அமைப்பு அமெரிக்காவிற்கு பலவித்த்தில் அச்சுறுத்தலாக உள்ளார்கள். உலகில் எந்த மூலையில் அல்கெய்தா அமைப்பு இருக்கின்றதோ அவர்களை தேடிக்கண்டுபிடித்து அழிப்போம் மக்களை அல்கெய்தாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ந…
-
- 0 replies
- 654 views
-
-
. ஐ.நா தலைமையகத்தை டுபாய்க்கு மாற்ற நடவடிக்கை 2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து டுபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கும் எளிதில் செல்வதற்கான இடமாக இருக்க வேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும். …
-
- 0 replies
- 595 views
-
-
டெல்லி: வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் 15-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்க…
-
- 3 replies
- 518 views
-
-
மரியண்ணா ஸ்ப்ரிங் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 2020 இல் எடுக்கப்பட்ட யுக்ரேனிய குறும்படம் ஒன்றின் காட்சி, போர்சூழலில் எடுக்கப்பட்டதாக பரப்பப்பட்டது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 19 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பான பொய்ச்செய்திகளும் பலவிதமாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற பொய்ச்செய்திகளைத் தவிர்ப்பது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. போர் தொடங்கியதிலிருந்து, போலியான செய்திகளும், தவறான தகவல்களுடன் கூடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஏராளமாக பரவி நம் செல்பேசிக…
-
- 0 replies
- 268 views
-
-
ரஷ்யா படையெடுப்பால்... உக்ரைனுக்கு, 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு! ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இந்த இழப்பில், உட்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும். இதனால், 8,000 கி.மீ தொலைவிலான வீதிகள் சேதமடைந்துள்ளது. 10 மில்லியன் சதுரமீட்டர்கள் அளவுக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ரஷ்யர்கள் சுமார் 1 லட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் அளவுக்கான பணத்தை வெளிநாடுகளில் கருப்புப் பணமாக பதுக்கியிருப்பதாக அட்லாண்டிக் சபை என்ற அமெரிக்க சிந்தனைக்…
-
- 0 replies
- 229 views
-
-
துருக்கியில் டுவிட்டருக்குத் தடை! [saturday, 2014-03-22 17:48:19] துருக்கியில் தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசு டிவிட்டர் இணையத் தளத்துக்கு தடை விதித்துள்ளது.துருக்கி பிரதமர் மீதும், அவர் அரசின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் விசாரணை நிலவரங்கள் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துருக்கி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. துருக்கி பிரதமர் எர்டோகனின் இந்த நடவடிக்கை முற்றிலும் அடிப்படையில்லாதது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஐரோப்பியன் கமிஷன் துணை தலைவர் நீலீ கிரோஸ் தெரிவித்து…
-
- 0 replies
- 325 views
-
-
மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் அந்நாட்டு மொழியில் வெளியாகும் எம்கேஆர்யூ என்ற செய்தித்தாள் விமானம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மலேசிய விமானம் பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது என்றும், அதில் பயணி…
-
- 4 replies
- 2.3k views
-
-
“மிகவும் குளிரான நேரத்தில் நாங்கள் நிர்வாணமாக்கப்பட்டிருந்தோம்” “உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது” தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் – ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் அசாத் ஆட்சிக்கு எதிராக போர்க்குற்றகுற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர் ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் பஷர் அல்-அசாத்தின் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டிப் புதிய குற்றவியல் முறைப்பாடுகளை கடந்த புதனன்று பதிவுசெய்துள்ளனர். ஜேர்மனில் வாழும் சிரிய நாட்டு ஏதிலிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 13 பேர் “அசாத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு மிகவும் பொறு…
-
- 0 replies
- 410 views
-
-
Hi everyone, I wanted to see if I could get your quick help. I just started a petition on gopetition.com titled Srilanka: If this isn't Genocide, War Crime, Then What on Earth is?, and I'd love your support. You can sign the petition Please Sign Here: Justice and Reconciliation for Tamils http://www.gopetition.com/petitions/justice-and-reconciliation-for-tamils.html We ask People to sign here to save Human Rights & Justice in Srilanka. Please Forward to your Friends & Relatives. Thanks so much for the help! Thanks & Regards, Muthamizh Chennai
-
- 0 replies
- 456 views
-
-
தற்போதைய காலங்களில் இங்கிலாந்து மக்கள் சகல தளங்களிலும் ஆபத்திருப்பது போன்ற பிரம்மையிற் பயந்து வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகையிரதத்திற்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்களிலும், பயணங்களின் போதும், தான் இயங்கிப் படிக்கட்டுகளில் செல்லும் சமயங்களிலும், இனம் தெரியாத பய உணர்வு மக்கள் மத்தியிற் காணப்படுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புச் சந்தை நடைமுறைகளிலும், வேலை இடங்களுக்கான உத்தரவாதத்திலும் தேவையற்றுக் காணப்படும் சந்தேகம், பய உணர்வைத் தோற்றி நிற்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மக்கள், உணராத வகையில் பய உணர்வு அவர்கள் மனங்களில் ரகசியமாக குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் ம…
-
- 1 reply
- 444 views
-
-
அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணி இன்று வெளியேறியது ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணியும் இன்று வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது. சதாம் உசேன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள். இந்நிலையில், நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க…
-
- 3 replies
- 587 views
-
-
முள்ளிவாய்க்காலில் முடிந்த போர்களத்தினை .... இலங்கை நாடாளுமன்றத்திற்கு மாற்றுக.....! இங்கு டெல்லியில் 500 க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத்தில் 40 க்கும் குறைவான சிவசேனா உறுப்பினர்களால் நாடாளுமன்றம் ஒத்திவைக்க படுகிறது என்றால்..அதையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியும்.. இதில் அரசியல் தீர்வு வரும் வரை... காட்டு கத்தல்.. கூச்சல்... மனிதாபிமானம்.. கூச்ச நாச்சம் ....என்று எதுவும் பார்க்க தேவையில்லை... எவனும் எந்த பிரேரணையும் நிறைவேற்ற கூடாது ...உயிருக்கு பயப்படாமல் துணிந்து செயல் பட வேண்டும்... இதுவும் ஜன நாய்க வழிமுறைதான்... இவன் லாலு பிரசாத் ரயில் வே பட்செட்டை முதுகை திருப்பி கொண்டு படித்தான்.. தமிழ்நாட்டில் …
-
- 0 replies
- 629 views
-
-
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல்…. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல் தாக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஐரோப்பிய நாடுகளை அண்மித்த அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த எலேனோர் புயல் நேற்று ஐரோப்பிய நாடுகளை தாக்கியது. இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயங்கர்காற்றுடன் மழை பெய்து வருகின்றது. பிரான்சில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதனால் பாரீஸ் நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்ததுடன் ஈபிள் கோபுரம் மூடப்பட்டதுடன் அங்கு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்…
-
- 0 replies
- 415 views
-
-
புதிய இணையதளம் ஆரம்பித்து மக்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளார் மோடி! [Monday 2014-07-28 10:00] நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 2014 ஜூலை 26 அன்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் விதமாக 'mygov.nic.in' என்ற புதிய இணையதளத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து 2014 மே மாதம் 26ஆம் தேதி அன்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது. இந்த இணையத்தளத்தை துவக…
-
- 0 replies
- 232 views
-
-
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவுக்கு 700க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும் ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார். இந்த நோயினால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள கினீ, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய நாடுகளின் அதிபர்களை கினீயிலுள்ள கொனாக்ரியில் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.இபோலா நோய் அதன் சரித்திரத்தில் இதற்கு முன் இவ்வரவு பெரிய அளவில் பரவியது இல்லை என்று டாக்டர் சான் தெரிவித்தார். ஆனால் இந்த நோயைக் …
-
- 0 replies
- 283 views
-
-
போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். வலி நிவாரணியில் பயன்படுத்தப்படும் ’ஓபியாட்’ எனப…
-
- 0 replies
- 231 views
-
-
சோனியா, யாரும் எதிர்பாராத ஓர் அவதாரத்தை டெல்லி காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் எடுத்திருக்கிறார். ''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்தியிலும் சரி, எந்த மாநிலத்திலும் சரி... ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டால், அவர்கள் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதி இல்லை. காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஊழலை ஊக்குவிக்காது. அதில் சமரசத்துக்கு இடமே இல்லை. காங்கிரஸ், தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடும்!'' என்று சோனியா சொல்லச் சொல்ல, பலருக்கும் பைஜாமா வேர்க்க ஆரம்பித்தது. இந்தப் பேச்சுக்குப் பின்னால் நம்மைச் சந்தித்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து இருக்கும் நேரத்தில் ஊழலை எதிர்த்து சோனியா பேசுவதைப் பார்த்தால், தி.மு.க-வுக்கு எதிரான பிரசார உத்தியே இதுவாகத்…
-
- 1 reply
- 450 views
-
-
ஜப்பானில் பூகம்பம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:18 PM ஜப்பானில் இன்று திங்கட்கிழமை (நவ.14) நண்பகல் 6.1 ரிக்டர் அளவில் திடீர் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் மத்திய மீ மாகாணத்தில் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பகத்தின் தாக்கம் டோக்கியோ உள்ளிட்ட பிறநகரங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கியோவுக்கு வடக்கே உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
போராளிகளின் டிவிட்டர் கணக்குகளை முடக்கினால் டிவிட்டரில் பணியாற்றுபவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் அமைப்பான ஐஎஸ்ஐஸ் வெளியிடும் கீச்சுக்களை டிவிட்டர் முடக்கி வருகிறது. தலையை வெட்டுவது போன்ற வன்முறை செய்திகளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டுவருவதால் கணக்குகள் முடக்கப்படுவதாக டிவிட்டர் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டர் ஊழியர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டல் டிவிட் வெளியாகியுள்ளது. அதில் இது போன்று போராளிகளின் கணக்குகள் முடக்கப்பட்டால் ஸ்லீப்பர் செல்களால் டிவிட்டர் ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும், வா…
-
- 1 reply
- 338 views
-
-
ஸ்பெயினிலிருந்து கத்தலோனியா பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்துகிறது : அதிகரிக்கும் பிரிவினைக் கோரிக்கைகள் ஸ்பையின் நாட்டில் தன்னாட்சிப் பிரதேசமான கத்தலோனியா பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நவம்பர் 9ம் திகதி நடத்தப்போவதாக கத்தலோனியா பிரதேச அரசு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராட கத்தலோனிய உள்ளூர் அரசாங்கம் மக்களுக்கு ஆதரவளிக்கின்றது. திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடந்தே தீரும் என்று கத்தலோனியர்கள் எழுச்சிகொள்ள பிரதேச அரசு ஆதரவு வழங்கிவருகிறது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய் உடனடியாக கததலோனிய உள்ளூர் அரசைப் பேச்சுக்கு அழை…
-
- 0 replies
- 370 views
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய முன்னாள் தொலை தொடர்பு துறை அமைசர் ஆ.ராசா ரூ.3,000 கோடி வரை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது. 2ஜி ஊழல் குறித்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் நடத்திய கூட்டு விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக அந்த இரு அமைப்புகளும் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்களை மிக மலிவான விலைக்கு ஒதுக்கீடு செய்ததால், அரசு கஜானாவுக்கு ரூ.40,000 முதல் 50,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக டெல்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://tamil.webduni…
-
- 0 replies
- 540 views
-
-
10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் டாக்காவில் இன்று துவக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்குகிறது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் நடைபெற்று வந்த பயிற்சி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது. உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் இந்திரபுரியான இந்தியாவின் முதன்மையுடன், வங்கசதேசம், இலங்கை கூட்டாக நடத்தும் இந்தத் திருவிழா, வரும் சனிக்கிழமை முதல் களைகட்ட தொடங்கும். நாடே விழாக்கோலம்..! தொடக்க நாளான இன்று வங்கதேசமே கலைகட்டியுள்ளது. அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தும் மிகப்பெரிய பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி இது என்பதால் அங்கு நாடே திருவிழா பூண்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்…
-
- 0 replies
- 717 views
-