உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இங்கிலாந்தின் Tier 2 (General) visa புதிய சட்டத்தால் வெளியேறும் மக்கள்! சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதன் படி 'Tier 2 (General) visa' விசாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஆண்டுக்கு 35 ஆயிரம் பவுண்டுகள் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கு தங்க முடியும். இல்லாவிடில் குடியேறிய 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 6–ந் திகதி முதல் குடியேறியவர்களுக்கு இப்புதிய சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 55,589 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் இருந்து வெளியேற வேண்டும். அவர்களில் 31,058 பேர் இந்தியர்கள். இது அங்கிருந…
-
- 4 replies
- 373 views
-
-
ஜப்பானில் பயங்கரம்... ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர் பலி! டோக்கியோ: ஜப்பானில் சாதாரண ஊறுகாயை சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. ஈ கோலை பாக்டீரியாவால் கெட்டுப் போன ஊறுகாய் அது என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பேக் செய்யப்பட்ட சீன நாட்டு முட்டைகோஸ் ஊறுகாய் பேக் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதை வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 10 நாட்களுக்கு முன்பே பிரச்சினை உருவாகி விட்டது. இந்த கெட்டுப் போன ஊறுகாயை சாப்பிட்டு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் …
-
- 0 replies
- 644 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தளபதி காசீம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள 2 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவித்தபோதிலும் அமெரிக்கா அதை மறுத்துவிட்டது. இந்நிலையில், பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏராளமான ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தினர் என்பது குறித்தோ, அத்தா…
-
- 0 replies
- 256 views
-
-
சிரியாவில் பஷர் அல்-ஆசாத் தலைமையின் கீழ் அதிபர் ஆட்சி நடந்து வருகிறது. ரஷ்யாவின் நேச நாடாக இருக்கும் சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இந்த புரட்சிப் படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு ராணுவத்தினர் மீது புரட்சிப் படையினர் எதிர் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. புரட்சிப் படையினர் பதுங்கியுள்ள இடங்களின் மீது விமானப் படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானப்படையின் பலத்தை குறைத்துவிட்டால், அதிபரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என திட்டமிட்டு புரட்சிப்படையினரும் விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இந்நிலைய…
-
- 0 replies
- 584 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி. பிரிட்டன் உடனான வர்த்தக…
-
- 1 reply
- 174 views
- 1 follower
-
-
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா. வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம் ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை. ராணுவ வலிமை தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை …
-
- 9 replies
- 889 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 21 செப்டெம்பர் 2025, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார். புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68. மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக, மன்னர் தன்னுடைய மருமகனான 55 வயது முகமது பின் …
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
13 காசா உதவிப் படகுகளை தடுத்து நிறுத்திய இஸ்ரேல். காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 13 படகுகளை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் கிரேட்டா துன்பெர்க் உட்பட ஆர்வலர்களை கைது செய்துள்ளது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியை நோக்கி 30 படகுகள் தொடர்ந்து பயணித்து வருவதாக இஸ்ரேலிய கடற்படை அமைப்பாளர்கள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர். ராய்ட்டர்ஸ் செய்திச் சேவையாளர் சரிபார்க்கப்பட்ட இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஒரு காணொளியில், கடற்படையின் பயணிகளில் மிக முக்கியமானவரான ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் கிரேட்டா துன்பெர்க், வீரர்களால் சூழப்பட்ட ஒரு தளத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டியது. இது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு …
-
- 1 reply
- 184 views
- 1 follower
-
-
சாட் இராணுவத்தின் தாக்குதலில் 1000 பேகோஹராம் தீவிரவாதிகள் பலி! மத்திய ஆபிரிக்க நாடான சாட் டின் மேற்கு பகுதியில் போகோஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் ஆயிரம் பேகோஹராம் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. சாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மார்ச் 31 ஆம் திகதி சாட்டின் எல்லைப் பகுதிகளிலும், நைஜர் மற்றும் நைஜீரியாவின் பகுதிளிலும் ஆரம்பிக்கப்பட்ட பேகோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதல் நடவடிக்கையானது புதன்கிழமை முடிவடைந்துள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் 52 சாடியன் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், அனைத்து தீவிரவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். …
-
- 0 replies
- 601 views
-
-
கொரோனா வைரஸினால் ஆட்டம் காணும் உலக நாடுகள் – இதுவரை 28 இலட்சம் பேருக்கு வைரஸ் தொற்று! கொரோனா வைரஸ் தாக்கம் உருவான சீனாவின் வுஹான் நகரையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளை குறித்த வைரஸ் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் மரணங்கள் 1 இலட்சத்து 97 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரங்களில் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 616 புதிய நோயாளர்கள் உலகம் முழுவதும் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 28 இலட்சத்து 28 ஆயிரத்து 617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 174 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1 இ…
-
- 1 reply
- 354 views
-
-
[size=3][size=4]அமெரிக்காவில், அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று, அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில், அதிபர் தேர்தல், இன்று நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அமெரிக்க அதிபர் தேர்தலில், மாகாண ஓட்டுக்களே, அதிபர் தேர்தல் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின், தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) ஓட்டுகள் மூலம், அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். மொத்தம், 538 ஓட்டுகளில், 270 ஓட்டுகள் பெறுபவரே அதிபராக நியமிக்கப்படுகிறார்.பல மாதங்களுக்கு முன், அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளர்கள் …
-
- 3 replies
- 1.2k views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கடற்படைக்கு அனுமதி சோமாலியாவுக்கு அருகான கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்களால் நடத்தப்படும் தாக்குதல்களை கையாளும் நடவடிக்கைகளுக்காக அங்கு செல்வதற்கு இந்திய கடற்படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை துரத்தியடிப்பதற்கு இந்திய கடற்படைக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக டெல்லியை தளமாகக் கொண்ட கடற்படை வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன. ஆபிரிக்க முனையிலும், ஏடன் வளைகுடாவிலும், ரோந்து நடவடிக்கையில் கப்பல்களை ஈடுபடுத்தியுள்ள ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த வார முற்பகுதியில் கடற்கொள்ளையர் கப…
-
- 5 replies
- 1.3k views
-
-
Abraham Shakespeare என்ற அமெரிக்க கறுப்பினத்தை சேர்ந்தவருக்கு 2009ஆம் நடந்த ஒரு லாட்டரி குலுக்கலில் 30 மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. இந்த செய்தியை செய்தித்தாள்களில் பார்த்த Dorice Dee Dee Moore என்ற பெண், அவருடையை பணத்தை கொள்ளையடிக்க தனியாகவே சதித்திட்டம் தீட்டியுள்ளார். முதலில் சமுக வலைத்தளம் ஒன்றில் அவருடன் நட்புடன் பழகுவதாக அறிமுகபடுத்தி, தன்னுடைய படுகவர்ச்சியான புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் நேரிலும் சந்தித்து நட்பை விரிவுபடுத்தினார். இந்நிலையில் கிடைத்த ஒரு சரியான சந்தர்ப்பத்தில், Abraham Shakespeare ஐ கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு, தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அமெரிக்க போலீஸார்…
-
- 0 replies
- 589 views
-
-
துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி பெற்றால் அதனை அடக்கி ஒடுக்க அதற்கு எதிராக அந்த நாட்டு இராணுவத்தினர்களை அல்லது எதிர் கட்சிகளை தூண்டி விடுவதும் அவைகள் தோல்வி அடையும் பட்சத்தில் புதிதாக ஆயுத இயக்கங்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக உருவாக்குவதும் அதற்காக பாரியளவில் பணத்தினை செலவழிப்பதும் வரலாற்று ரீதியாக உலகில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளாகும். சிதைவடைந்த இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி தலைநகரான துருக்கியை பொறுத்தவரையில் இராணுவ புரட்சி என்பது புதியவிடயமல்ல. அந்த நாடு பல தடவைகள் இராணுவ புரட்சிக்கு முகம் கொடுத்த…
-
- 0 replies
- 381 views
-
-
மோதல் போராக மாறும்: இந்தியாவை குறைவாக எடை போட கூடாது - சீனா பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை இந்தியா-சீனாவிற்கிடையேயான மோதல் போராக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறி, சீனாவின் அரசுக்கு அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிவு: ஜூன் 29, 2020 07:25 AM பீஜிங் இந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு இந்தியாவின் ராணுவமும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர்…
-
- 0 replies
- 689 views
-
-
பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரி ஜேனட் ஜாக்சன் (வயது 46). இவருக்கும் கத்தார் நாட்டு கோடீசுவரர் விஸ்சாம் (வயது 37) என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், 2011ம் ஆண்டின் இறுதியில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களது திருமணம் கத்தாரில் நடைபெறும் என்றும் அதில் ஜேனட்டின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்காக தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும். விருந்தினர்களை உபசரிக்க சிறந்த சமையல் நிபுணரை வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேனட்டிற்கு இதற்கு முன்பு இரு முறை திருமணம் நடைபெற்றுள்ளது. கட…
-
- 5 replies
- 579 views
-
-
இத்தாலியில் பூகம்பம் 2 தேவாலயங்கள் சேதம் அடைந்தன (தினத்தந்தி) Font size: மிலன், டிச.25- இத்தாலியில் பார்மா நகரில் பூகம்பம் ஏற்பட்டது. அதன் வீரியம் ரிக்டார் அளவில் 5.1 ஆக இருந்தது. இதனால் மிலன் நகர் முதல் பிளாரன்ஸ் நகரம் வரை உள்ள பகுதிகளில் இது உணரப்பட்டது. சில நகரங்களில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 2 தேவாலயங்கள் தேசம் அடைந்தன. சில வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெலிபோன்கள் பாதிக்கப்பட்டன. பூகம்பம் காரணமாக அந்த நாட்டு மக்களிடம் பீதி நிலவியது. மாலையில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து 2-வது பூகம்பம் இரவு நேரத்தில் ஏற்பட்டது. அதன் வீரியம் 4.7 ஆக இருந்தது.
-
- 0 replies
- 851 views
-
-
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை: ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையான ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். பதிவு: ஜூலை 16, 2020 04:01 AM வாஷிங்டன், ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அண்மை காலமாக சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வந்ததால் அவற்றை ஒடுக்கும் விதமாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது. இது ஹாங்காங்கின் சுதந்திரத்தையும் சுயாட்சியும் பறிக்கும் செயல் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிற…
-
- 0 replies
- 324 views
-
-
இன்று ஒறூணர்வுள்ள இனத்தின் செய்தி கனடா சீ.எம்.ஆர் வானொலியில் சொன்னார்கள்.. காசாவில் இஸ்ரேல் செய்யும் படுகொலைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதால் அந்த நாட்டுப்பொருட்க்களை நிராகரிப்பதாக மலேசியா முஸ்லீம் சமூகத்தினர் முடிவெடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை கொக்கோ கோலா பானத்தை அவர்கள் கடைகளிலிருந்து எடுத்து விட்டார்கள். அனால் நாம் பலர் எத்தனையோ வருடமாக பலகாரணத்தைக் கூறிக்கொண்டு போகின்றோம். நான் பலபேருடன் கதைத்த போது கடையில் விற்ப்பதை நிறுத்தினால் நாம் வேண்டமாட்டோம் எனக்கூறினார்கள். கடைக்காரர்களோ மக்கள் வேண்டாமல்விட்டால் நாம் ஏன் விற்க்கின்றோம் சொல்கிறார்கள். இது இருசாராரும் தாம் செய்வதற்க்குக்கூறும் சாட்டு. அந்த மலேசியர்களால் செய்யமுடிந்தது ஏன் நம்மால் செய்யமுடியவில்லை. க…
-
- 5 replies
- 1.5k views
-
-
பாலிய வல்லுறவில் ஈடுபட்டால் தூக்கு- மத்திய அரசு அதிரடி சட்டம்! சனி, 2 பிப்ரவரி 2013( 09:49 IST ) பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாகவும், பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டாலோ அல்லது பெண்ணுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டாலோ குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் வாழ்நாள் முழுவதும் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க முடியும் என்றும் மத்திய அமைச்சரவை இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி ஜேஎஸ் வர்மா குழுவின் அறிக்கை அடிப்படையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங…
-
- 2 replies
- 776 views
-
-
மிக முக்கியத்துவம் வாய்ந்த, குவாடர் துறைமுகத்தை, சீனாவிடம் ஒப்படைக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது, கவலைக்குரிய விஷயம், என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார். பெங்களூரில், ராணுவ அமைச்சர், அந்தோணி கூறியதாவது:அரபிக் கடல் பகுதியில் உள்ள, குவாடர் துறைமுகம், பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை, சிங்கப்பூர் நிறுவனம், மேற்கொண்டிருந்தது. தற்போது, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக,இந்த துறைமுகம், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது, கவலை அளிக்கும் விஷயம் என்பதை, மறுப்பதற்கு இல்லை. தற்போது, ஆப்கனில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவம், அடுத்த ஆண்டில், அங்கிருந்து, வாபஸ் பெறப்படவு…
-
- 6 replies
- 806 views
-
-
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளதாக இரான் அறிவித்துள்ளது. தொலை தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஓமிட் எனும் செயற்கைக் கோளை ஏவிய ராக்கெட்டின் படங்களை அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவும் தொழில் நுட்பத்துக்கு நிகராக இருக்கும் இரானின் இந்த தொழில்நுட்பம் குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாக பிரான்ஸ் கூறியுள்ளது. இவ்வாறாக ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதன் மூலம் உலகுக்கு ஒரு சமாதானச் செய்தியை தாங்கள் விடுத்துள்ளதாக இரானிய அதிபர் மஹ்மூட் அஹ்மதிநிஜாட் தெரிவித்துள்ளார். தனது அணுசக்தி அபிலாஷைகள் குறித்து மேற்குலக நாடுகளுடன் இரான் மோதி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள…
-
- 0 replies
- 734 views
-
-
வெனிசுலா நாட்டு அதிபர் ஹியுகோ சாவேஸ் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு துணை அதிபர் நிக்கோலஸ் மார்கோ கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கியூபா சென்று சிகிச்சை பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களுக்காக போராடிய சாவேஸ்,தனது வாழ்வை நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்தார்.இதனால் அவர், தனது உடல் நிலையை கருத்தில் கொள்ளவில்லை எனதுணை அதிபர் கூறினார். http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%85-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B5-114500126.html As Chávez fights cancer, Venezuela prepares for life after the president While a gravely ill president undergoes a new, tougher cours…
-
- 1 reply
- 535 views
-
-
40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா? சிலியில் நாளை வாக்கெடுப்பு! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/chile-720x450.jpg சிலியில் அகஸ்டோ பினோசேவின் சர்வாதிகார காலத்தில் எழுதப்பட்ட 40 ஆண்டுகால அரசியலமைப்பை நாடு மாற்ற வேண்டுமா என்ற வாக்கெடுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மறுசீரமைப்பு கோரியும், புதிய அரசியலைப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் அண்மைக்காலமாக அங்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சாண்டியாகோ நகரில் நேற்றும் கூடிய மக்கள், அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …
-
- 0 replies
- 673 views
-
-
புதிய 4 இந்திய மொழிகள் உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலகசேவை அறிவித்துள்ளது. பிபிசி உலகசேவை விரிவாக்கப்படுகிறது இந்தியாவில் நான்கு புதிய மொழிச்சேவைகளை பிபிசி துவக்கப்போகிறது. 1940 ஆம் ஆண்டுக்குப்பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இடங்கள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது சுயாதீன ஊடகசெயற்பாட்டை பிபிசி கொண்டு செல்லும் நோக்கில் இந்த முடிவு வந்துள்ளது. அதில் நான்கு புதிய இந்திய மொழிச்சேவைகளும் அடங்குகின்றன. தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி …
-
- 0 replies
- 265 views
-