Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க முன்னணி நடிகை ஓப்ரா ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் [11 - December - 2007] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பாராக் ஒபாமா தனது பிரசாரக் கூட்டங்களில் அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரம் ஓப்ராவை ஈடுபடுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு அனுமதி பெறுவதற்கு கிளின்டன் மனைவி ஹிலாரியும் பாராக் ஒபாமா என்ற கறுப்பு இனத்தலைவரும் மோதுகின்றார்கள். ஒபமா தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக அயோவாவில் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் ஒபாமாவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் தொலைக்காட்சி நட்சத்திரமான ஓப்ரா கலந்துக…

    • 3 replies
    • 1.7k views
  2. ஆர்ஜெண்டினா நாட்டுக்கு அருகே உள்ள போக்லாந்து தீவில் படைகளைக் குவித்து வரும் இங்கிலாந்து அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எஸ் டான்ப்லெஸ் ஐ அங்கு அனுப்பியுள்ளது.போக்லாந்து தீவை ஆர்ஜெண்டினா தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறது. 1982-ம் ஆண்டு ஆர்ஜெண்டினா போக்லாந்து தீவை கைப்பற்றி கொண்டது. இதனால் இங்கிலாந்து தாக்குதல் நடத்தி அந்த தீவை மீட்டது. சமீபகாலமாக ஆர்ஜெண்டினா மீண்டும் போக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து- ஆர்ஜெண்டினா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ஜெண்டினாதிடீரென தாக்கி விடக் கூடாது என கருதி இங்கிலாந்து போக்லாந்தில் படையை குவித்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எ…

  3. அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார். July 14, 2019 அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென பதவிவிலகியுள்ளார். 50 வயதான அலெக்ஸ் அகோஸ்டா மத்திய அரசின் சட்டத்தரணியாக இருந்து அரசியலுக்கு வந்தவராவார். அங்குள்ள 66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் என்னும் பெரும் கோடீஸ்வரர் 2008ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரலாம்’ எனும் நிலை காணப்பட்ட போது அப்போது அர ச சட்டத்தரணாக இருந்த அலெக்ஸ் அகோஸ்டா, ஜெப்ரியுடன் ரகசிய பேரம் நடத்தி தண்டனை குறைப்புக்கு வழி செய்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

  4. பிரிட்டனில் 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை நியூயார்க் விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டபோது. | படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடியின் பிரிட்டன் பயணத்தை சிறப்பிக்கும்விதமாக, லண்டனில் ஒரு மாத காலத்துக்கு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நவம்பர் 12 முதல் 14ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், லண்டன் வாழ் இந்தியர்கள் பயன்பெறும் வகையில், மோடியின் வருகையை முன்னிட்டு 'மோடி எக்ஸ்பிரஸ்' பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஒரு மாத காலத்துக்கு இயங்கும் இந்த பேருந்து சேவை மோடியின் பயண இடங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும். இதே போல தற்காலிக ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரிட்டனில் அயல் நாட்டுப் பிரதம…

  5. சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு July 21, 2019 அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக…

    • 7 replies
    • 1.2k views
  6. பயங்கர நிலநடுக்கம்: ஆப்கனில் 17 பேர், பாகிஸ்தானில் 12 பேர் பலி; டெல்லி, ஸ்ரீநகரில் நில அதிர்வுகள் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 12 பேர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஊடகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானில் ரிக்டர் அளவில் 4.8 என்று பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் …

  7. ஈரானை‌த் தா‌க்க‌த் தய‌ங்க மா‌ட்டோம‌்: ஜா‌ர்‌ஜ் பு‌‌ஷ் ‌மிர‌ட்ட‌ல்! தேவை‌ப்ப‌ட்டா‌ல் ஈரானை‌த் தா‌க்க‌த் தய‌ங்க மா‌ட்டோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌‌ர்‌ஜ் பு‌ஷ் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌‌ள்ளா‌ர். தனது பத‌வி‌க் கால‌ம் முடிவதை மு‌ன்‌னி‌ட்டு அமெ‌ரி‌க்க ம‌க்களு‌க்கு அவ‌ர் ஆ‌ற்‌றிய இறு‌தி உரை‌‌யி‌ல், வளைகுடா பகுதியில் அமெரிக்க கூட்டுப் படையினரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என்றார். "ஈரான் தலைவர்களுக்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறேன். அணுஆயுத சோதனையை உடனடியாக நிறுத்தி விடுங்கள். உள்நாட்டில் அடக்குமுறை அரசியலை கைவிட்டு விட்டு‌ச் சர்வதேச சமுதாயத்தோடு இணையுங்கள்' என்று‌ம் புஷ் கூறினார். …

    • 3 replies
    • 1.4k views
  8. தென் சீன கடல் பகுதி உலகிற்கு தான் சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கூறியுள்ளார். தென் சீன கடல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள், துரப்பண பணிகளை மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவித்த சீனா, பணிகளை நிறுத்தி விட்டு தென் சீனக்கடலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என எச்சரித்திருந்தது. இல்லாவிட்டால் அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, தென் சீனா கடல் பகுதி உலகிற்கு சொந்தம் என்பதே இந்தியாவின் கருத்து. இந்த பகுதி எந்த நாட்டின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பகுதியில் வர்த்தகம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என க…

  9. துருக்கி ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மீது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் குற்றம் சாற்றியுள்ளார். ரஷ்ய போர் விமானம் துருக்கியில், சிரியாவின் எல்லைப் பகுதியில் பறந்தபோது, கடந்த 24 ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி ரஷ்யா மற்றும் சிரியாவின் பாதுகாப்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டார். ரஷ்ய போர் விமானம் தங்களது வான் எல்லையில் பறந்தால், 10 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு சுட்டு வீழ்த்தியதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. …

  10. பாடசாலையொன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 பேர் மீட்பு- நைஜீரியாவில் சம்பவம் நைஜீரிய காவல்துறையினர் பாடசாலையொன்றில் மிகமோசமான விதத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் உட்பட 300 பேரை மீட்டுள்ளனர். நைஜீரியாவின் கடுனா நகரில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையின் உரிமையாளர் தான் இஸ்லாமிய சீர்திருத்த பள்;ளியை நடத்துவதாக தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் உட்பட பலர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து குறிப்பிட்ட பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் 13 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் உட்பட பல சிறுவர்களையும் இளைஞர்களை…

  11. நாற்பது ஆண்டுகளுக்கு பின் நடந்த அழகிப்போட்டி: 20 வயது மாணவி மிஸ். ஈராக் ஆனார்! கடந்த 1972-ம் ஆண்டுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றது. 20 வயது மாணவி மிஸ். ஈராக் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பாக்தாத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் 150 பேர் பங்கு கொண்டனர். இதில் கிர்குக் பகுதியை சேர்ந்த ஷ்யேமா அப்துல்ரகுமான் என்ற பொருளாதார மாணவி, மிஸ். ஈராக்காக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இறுதி சுற்றுப் போட்டிகள் பஸ்ரா நகரத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் சில அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து போட்டி நடுவர் உள்பட 15 பேர் போட்டியில…

  12. ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும். இன்று ரம்பின் புளோரிடா மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கிறீன்லாந்தையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவதைப் பற்றி விபரமாக கூறினார். கனடாவையும் அமெரிக்காவுடன் இணைக்கும் திட்டத்தையும் வரவேற்றுக் கூறினார். நான் பதவி ஏற்பதற்கிடையில் கமாசால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படவில்லை என்றாமல் மிகப் பெரிய அழிவு மத்திய கிழக்கில் நடக்கும் என்று பயமுறுத்தியுள்ளார். 1959 ம் ஆண்டிற்குப் பின் அமெரிக்க வரைபடத்தில் மாற்றங்களைக் காணலாம். குறுகிய நேரத்தில் மிகப் பெரிய குண்டுகளைப் போட்டுள்ளார். பூட்டினுக்கு போட்டியாக ரம்பும் தொடங்கப் போகிறாரோ? President-elect Donald Trump on Tue…

  13. பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. அவர்களுக்கு உதவுவது நமது கடமை. உதவ விரும்புபவர்கள் கேர் (Care)அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம். Care அமைப்பின் இணைய லிங் இதோ:- https://my.care.org/05/myanmar/?qp_source=170860490000

    • 2 replies
    • 1.1k views
  14. லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுதமேந்திய பொலிஸார் பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து பொதுமக்களை மீட்பதையும் பின்னர் மிக அருகிலிருந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நபர் ஒருவர்…

    • 26 replies
    • 2.5k views
  15. முதலிடத்தில் மீண்டும் பில் கேட்ஸ் Krish January 27, 2016 Canada போர்ப்ஸ் பத்திரிகையை போலவே உலகின் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் வெல்த்-எக்ஸ் (Wealth-X) இணையதளம் சொத்துகள், முதலீடு, லாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில், இந்த ஆண்டின் பட்டியலுக்காக சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை சீராய்வு செய்த வகையில் 87.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா 6…

  16. 14 MAR, 2025 | 10:20 AM அமெரிக்காவின் டென்வர் விமானநிலையத்தில் தரையிறங்கியவேளை அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீ பரவியதை தொடர்ந்து 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்வர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென தீ மூண்டது அனைவரும் ஸ்லைட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சிறிய காயங்களுடன் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமானநிலையத்திலிருந்து டலஸ் போர்ட் வேர்த்திற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வுகள் காணப்படுவதாக பணியாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து விமானம் டென்வர் விமானநிலையத்திற்கு பயணத்தை மாற்றியது என தகவல்கள் வெளியாகி…

  17. [size=4][/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே நடந்த சண்டையில், நக்சலைட்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்; மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆறு பேர் காயம் அடைந்தனர்.[/size] [size=4]சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்குள்ள பாஸ்தர் பிராந்தியம், பிஜப்பூர் மாவட்டத்தில், ஜாகர்குண்டா மற்றும் பசகுடா பகுதிகளில் சில்ஜெர் வனப்பகுதிகளில், நக்சலைட்கள் தேடுதல் வேட்டையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில போலீஸ் படையைச் சேர்ந்த 300 பேர், நேற்று முன்தினம் இரவில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடைய…

  18. மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார். "நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங…

  19. ஜுவாலாபுரம்: ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம், சான்றாக விளங்கும் சாம்பல் ரூ.1000க்கு விற்கப்படும் அவலம் படக்குறிப்பு,74,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்தியாவில் சுற்றித் திரிந்ததாக ஜுவாலாபுரம் ஒரு கருதுகோளை முன்வைக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம் உள்ளது. இந்தியாவில் மனித கால் தடம் எப்போது பதிந்தது என்பதற்கான ஆதாரம், கண்டங்களைத் தாண்டி மனித இனம் பயணித்ததற்கான உறுதியான சான்று, நந்தியால் மாவட்டத்தின் சாம்பல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரலாற்றுத் தளங்கள் குறித்து அறியாதவர்கள், அந்த சாம்பலை ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்று வருகின்றனர். மனித வரலாற்றுக்கா…

  20. புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்! மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு திங்கட்கிழமை (21) டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனல், விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று டெல்டா ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது. திங்கள்கிழமை காலை டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 1213 இல், ஆர்லாண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். இதையடுத்து விமா…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கவிதா பூரி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற "மக்கள் விஞ்ஞானிக்கு" 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார். சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர். அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் அமெரிக்காவுக்காக பணிபுரிந்த அவர், ச…

  22. இன்றைய நிகழ்ச்சியில்… - பிரஸல்ஸில் செவ்வாயன்று தேடுதலின் போது கொல்லப்பட்டவர் அல்ஜீரியாவை சேர்ந்தவராவார். இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பின் கொடியும் அங்கு காணப்பட்டது! - மத்திய ஆப்பிரிக்காவில் சட்ட விரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டு, அருகிவரும் யானைகள். - பாலியல் தொழிலாளர்கள், மாலுமிகளின் மற்றும் கைதிகளின் அடையாளமாக மாத்திரம் இருந்த பச்சை குத்தும் வழக்கம் கியூபாவில் இப்போது பிரபலமாகிவருகின்றது.

  23. பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார் கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி 27 ஜூன் 2025, 04:23 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு நாள் இசபெல்லா பள்ளி முடிந்து வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் அவர் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை திணித்தார். "உன் அழகைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது. கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் தனது பகுதியில் உள்ள டீனேஜ் மாணவிகளை குறிவைத்து ஒரு ஸ்டுடியோ செயல்படுவதாக இசபெல்லா கூறுகிறார். இந்த ஸ்டுடியோ, மாடல்களாக செயல்பட மாணவிகளை ஊக்குவிக்கிறத…

  24. ஈராக் கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி! (படங்கள்) பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக்கின் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வைத்துள்ளனர். அங்கு, ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாடில் இருந்த குபேயிசா நகரத்தை அரசுப்படைகளும் சன்னி பழங்குடியின போராளிகளும் தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்ய ரசூல் தெரிவித்து இருந்தார். இந…

  25. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 1600-ஐ எட்டியது! உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எணிக்கை 1600 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் உருவாகியது என கூறப்படும் சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை மட்டும் 139 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஹூபேயில் கோவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 1,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 ஆயிரம் பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.