கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
முடிவின்றி தொடரும் இந்த அவல நிலை என்று மாறும் ??
-
- 0 replies
- 890 views
-
-
என்னா நான் உனக்கு ஆன்ட்டி இந்தியன்னா
-
- 2 replies
- 1.8k views
-
-
இன்று கனடாவில் குடும்ப தினம் நன்றி தர்சினி.(CMR)
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி மாற்றம் நல்லதென்று சாதகத்தில் சொல்லக்கேட்டு பாதகமில்லையென்று பறந்தாயன்று பனி நாடு ஒன்றுக்கு கடன் பட்ட பணத்தை திருப்பியுடன் தருவேனென உடன் பட்டுப்போயங்கு உழைப்புத் தேடினாய் தமிழ் மட்டும் தெரிந்த நீ திடங்கொண்டு மட்டும் திக்கிதிக்கியொரு மொழியை தினமொன்றாய் விழுங்கி கைப்பாசையோடு முன் ஒரு காலத்தை தொடங்கி நின்றாய் சறங்கட்டி வெறும் மேலில் தண்ணிவார்க்கும் உனக்கு பனங்கட்டி போல் அளவில் பனிவிழும் தேசத்தில் அடங்கிப்போய் ஆடைக்குள் ஆள் மாறலானாய் வெண்கட்டி வயல்களாய் வீதியெங்கும் குவிந்த பனிக்கட்டி சறுக்கி பழுவில் அடிபட்டால் சுடுதண்ணி வைத்து ஓத்தித் தடவுதற்கும் ஒருவரும் கிடையாது அப்புவின் பனந்தோப்புள் அதிகாலை போய்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
கண்ணீரை வரவழைக்கும் வீராவின் கவிதை
-
- 0 replies
- 1.1k views
-
-
காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழக் கவிஞனின், உள்ளத்தின் ஈரமும்.. இனத்தின் வலியின் ஆழமும்... புரியும், இக் கவியை கேளுங்கள். ஈழக் கவிஞர் கு.வீரா.
-
- 2 replies
- 1k views
-
-
இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் . (கவிதைக்கு முன்னம் இடம்பெறுகிற இந்த முன்னுரையின் சாரம்சம். ``என் கலைஞானம் பெண்கள் தந்த வரம். நான் இன்று உயிரோடு இருப்பது நான்கு இனங்களையும் சேர்ந்த எனக்கு தெரிந்த தெரியாதா பலர் நான் வாழ வேண்டுமென நினைத்ததால்தான் சாத்தியமாயிற்று. ``) . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . …
-
- 4 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி கவிஞர் இன்குலாப் நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள் கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து சிதற, மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள் பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள் வேடுவனின் இறையாண்மையில் குறுக்கிடமுடியாதென்று நாக்கைச் சப்புக்கொட்டி பறவைகளின் பச்சைக் கறிவிற்கக் கடைதிறந்த சந்தை வணிகர்களின் பங்கு நாட்கள். கிளிகளுக்கு இரங்குவதாய் அழுத பூனையொன்று ஒரு சிட்டு…
-
- 0 replies
- 731 views
-
-
“Happy Birthday” என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த தமிழ் பிறந்தநாள் பாடலை இனி பயன்படுத்துவோம். நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.! வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.! அன்பு வேண்டும்.! அறிவு வேண்டும்.! பண்பு வேண்டும்.! பரிவு வேண்டும்.! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.! உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும்.! சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் பிறந்த நாள் வாழ்த்துகள்.! பிறந்த நாள் வாழ்த்துகள்.! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!
-
- 1 reply
- 1.5k views
-
-
புலியென உறுமும் பெருந்தீ நாரை தலைகுனிந்திருக்கும் எல்லாப் பூக்களும் சிவக்கும் ஒரு பறவையாய் அசையும் நிலத்திற் புரள்வாள் தாய் வானம் மண்ணில் உருகித் தீரும் காந்தளின் விழிகள் கசியும் சிறகுகளில் விளக்குகளை சுமந்து துயில் நிலங்களை வட்டமிடும் பறவைகள் வரையும் தேச வரைபடத்தை எல்லோரும் குரலெடுத்து அழைப்பர் தாய் நிலம் கேட்டு கல்லறைகள் கண் விழிக்கும் வீரத் தலைவனின் பேருரை கேட்க ஒரு புலியென உறுமும் தேசம் மிலாசும் பெருந்தீயாய். ¤ தீபச்செல்வன் http://deebam.blogspot.com/2018/11/blog-post.html?m=1
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை) மாரிமழை பொழியும். மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும். துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும். மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள். விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள். தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள். விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான். குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு. …
-
- 4 replies
- 14k views
-
-
பயங்கரவாதி -தீபச்செல்வன்.. பனை மரங்களை பிடுங்கி கித்துல் மரங்களை விதைப்பாய் என் பூர்வீக வீடுகளை சிதைத்து இராணுவ முகாங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் ஆலமரங்களை வீழ்த்தி வெள்ளரச மரங்களை நடுவாய் என் ஆதிச் சிவனை விரட்டி புத்தரை குடியேற்றி எனை பயங்கரவாதி என்பாய் எனதுடலை நிர்வாணமாக்கி இராணுவச் சீருடையை போர்த்துவாய் எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து உனது வெறிச் சின்னங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் பிழையாய் எழுதியென் மொழியை அழித்து உனது மொழியை திணிப்பாய் எனது பாடல்களை அழித்து புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி எனை பயங்கரவாதி என்பாய் எனது நிலங்களை அபகரித்து உனது பெயர்களை சூட்டுவாய் எல்லைகளை மெல்ல …
-
- 0 replies
- 941 views
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! 01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமெ…
-
- 0 replies
- 911 views
-
-
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடி…
-
- 1 reply
- 996 views
-
-
காதலர்களாக சுற்றித் திரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால் சீ அசிங்கம் என்று.... கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்... இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்றால்... சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கு விழுந்து பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா என்றால் அவள்... …
-
- 0 replies
- 1k views
-
-
பார்த்தீபன் அன்று பசியோடு உந்தன் வாசலில் படுத்திருந்தானே முருகா! அவன் தேசப் பசி போக்க கண் திறந்து நீ அன்றுபார்த்திருந்தால்..., தனை வருத்தும் எவருக்கும் நீயருள்வாய் என்றவர்கள் உணர்ந்திருப்பர். குண்டுமழை பொழிகையில் குடியிருந்த வீடுவிட்டு எஞ்சிய உயிர் காக்க ஏதிலியாய் அவர் தன்னிலம் நீங்கி உன்னையும் தான் விட்டு ஓடோடிப்போகையிலும் கந்தனே நீயுமோ எம்மை கைவிட்டாய் என்றுதான் கண்ணீர் உகுத்து கரம்கூப்பினர் அன்று அசுரனை அழித்த உன் ஆறுமுகம் காட்டி அபயம் அளித்திருந்தால்..., கூப்பிட்ட குரலுக்கும் குவித்த கரங்களுக்கும் செவிசாய்த்து நீ அவர் துயர் துடைப்பாய் என்றவர்கள் நம்பியிருப்பர். ஈற்றில் முள்ளிவாய்க்கால் தன்னில் முடிவற்று செத்தொழ…
-
- 0 replies
- 740 views
-
-
காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்… ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகாவலி – தீபச்செல்வன்… உடலெங்கும் சிங்கக் கோடுகளில் இராட்சத பாம்புபோல காவி நிறத்துடன் நுழையுமொரு நதி மென்று விழுங்கியது என் காடுகளை நதியின் பெயரால் துடைக்கப்படும் தேசத்தில் முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள் தெற்கிலிருந்து பண்டாவையும் புத்தனையும் யுத்த டாங்கிகளையும் அள்ளி வரும் நதி எம் தலைநகரிலிருந்து ஒரு வார்த்தையேனும் எடுத்துச் சென்றதில்லை எம்மீது நதியின் ஒரு துளியும் பட்டதில்லை பீரங்கியிலிருந்து பாயும் குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே சிவந்த கண்களுடனிருக்கும் மாவிலாறு போலொரு சிறுவனும் முகம் மறைக்கப்பட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
. எப்போது கிடைக்கும் சுதந்திரம்..! "அ"னாதை இல்லங்கள் அழிக்கப்படும்போது..! "ஆ"தரவற்றோர்கள் அரவணைக்கப் படும்போது..! "இ"ல்லாதவனுக்கு இருப்பிடம் கிடைக்கும்போது..! "ஈ"கைப்பண்பு பணம் படைத்தவன் நெஞ்சில் துளிர்விடும்போது..! "உ"ணவில்லா ஏழையின் பசி ஆரும்போது..! "ஊ"ருக்குப்பாடுபட உள்ளம் முன்வரும்போது..! "எ"ழில் பொங்கும் இயற்கை அழிக்கப்படாதபோது..! "ஏ"ழைகளுக்கும் படிப்பு ஏமாற்றமில்லாமல் கிடைக்கும்போது..! "ஐ"ந்தாண்டு ஆட்சியும் மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும்போது..! "ஒ"துக்கப்பட்ட மக்கள் ஒருபடியாவது முன்னேற்றப்படும்போது..! …
-
- 0 replies
- 844 views
-
-
திருக்கேதீச்சரம்! தீபச்செல்வன்… பாடல்பெற்ற தலத்தில் பெற்றோம் கொன்று மறைக்கபட்டவர் எலும்புக்கூடுகளால் நிரப்பட்ட மாபெரும் சவக்குழியை உக்க மறுக்கும் எலும்புக்கூடுகள் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கமுடியாதவையெனச் சொல்பவனின் பல்லிடுக்குகளில் சிக்கிப் படிந்துள்ளன சதைத்துண்டுகள் உறக்கமற்ற மரணத்தோடு மாபெரும் வதையோடு சரிந்துபோய்க் கிடப்பவர்கள் உக்க மறுக்கும் வார்த்தைகளோடிருந்ததை நான் கண்டேன் …
-
- 0 replies
- 962 views
-
-
இரு கவிதைகள் – தீபச்செல்வன்… தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே கண்ணகைத் தாயே! வரணியில் உன் சந்நிதியில் சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்… ஊரெல்லாம் கூடி இழுக்கின்ற தேரை பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க நீ எப்படி அதில் அமர்வாய். நிச்சயமாய் நீ அங்கு இல்லை என்பேன்! நீதி செத்த கோபத்தால் பாண்டியன் நாடெரித்து மனம் ஆறாமல் பாம்பாகி எங்கள் ஈழநிலம் அடைந்தாய் இங்கும் செட்டிச்சி பெண் தெய்வமாவது எப்படி என உருமாற்றியவர் நாண உருக்குலையாது நீ நிம…
-
- 0 replies
- 1.1k views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய …
-
- 2 replies
- 1.6k views
-
-
'போர் இன்னும் ஓயவில்லை' மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா இப்போதும் நினைவி்ருக்கிறது போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும் அவர்கள் கொல்லப்பட்ட லட்சம் சனங்களின் சடலங்களை ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக அழித்து முடித்திருக்கக்கூடவில்லை காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து புழுக்கள் கொட்டித் தீரவில்லை திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல எல்லாம் முடிந்துவிட்டது இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும் வெள்ளைய…
-
- 0 replies
- 1.2k views
-