Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Raja Gopalan,

    ஆதவனின் கட்டில் இமைகளின் கொட்டகை இரவின் விழி கால வழிப்போக்கன் ஞால சித்தன் நேர ஈடாளன் இருள் அவன் இருள் அரசன் இருள் அற்றவன் என் உயிர் கள்வன் என் துயர் துலக்கி என் தோழன் நின் முகத்தை கண்டவர் இலர் நான் காண்கிறேன் உன் பாதம் என் பள்ளியறை கண் அயர்ந்திட நய வஞ்சகர் பிறழ் சூழ்ச்சியர் எதிரில் கண்டிலேன் துப்பாக்கி ஓய்ந்திடும் தோட்டாக்க.ள் உறங்கிடும் புதை அறையில் உன்னில் இணைவேன் அன்புடன் அமைதியுடன் வாங்கிக் கொள் விடியும் முன் உன் இமை உறங்கும் முன் என்னை!

  2. குரங்குகள் கழுத்தில் பூமாலையாக விழுவது தான் எமது புத்திஜீவித்தனத்தின் இறுதி எல்லை குரங்குகள் பிய்த்தெறியும்போது பூமாலைகளில் தான் பிழைகள் இருக்கவேண்டும் என்பதே சிந்தனையின் எல்லை இந்தச் சிந்தனை முறை உயிர்வாழ முற்படும் போதெல்லாம் எல்லோரும் எல்லாமும் அர்த்தமற்றதாக்கப்படுகின்றது மிகச் சுலபமாக இந்தச் சிந்தனை முறை வானுயர்ந்த வீரத்தையும் தியாகத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும் எது குறித்து சிந்திக்கவேண்டுமோ எதையெல்லாம் நினைத்து உணர்வுகள் வளரவேண்டுமோ அதையெல்லாம் கத்தரித்து கப்பாத்து பண்ணிவிடும். அடிமைத்தனத்தால் கட்டப்பட்ட மேடைகளில் காட்டப்படும் குறளிவித்தைகளால் தொப்பிக்குள் இருந்து முயலை எடுப்பதுபோல் எமக்காக எதையும் எடுக்க முடியாது ஒருவேள…

  3. சின்ன வயசு எனக்கு அதைவிட சின்ன வயசு உனக்கு மீசை எனக்கும் ஆசை உனக்கும் வராத காலம் அதுவும் பசுமையான காலம் புத்தகங்களை சுமக்க இயலாத வயதில் உன்னை மட்டும் சுமந்ததில் சுகம் எனக்கு நாம் கை பிடித்து பொடி நடை போடுவதற்காகவே நம் பள்ளி வரவை அதிகரித்தோம் ஒரே விட்டில் வாழ்ந்தாலும் ஒரு வார்த்தை பேசிய‌தில்லை ப‌ய‌த்தால் நானும் வெக்கத்தால் நீயும் ஊமையாய் ஊன‌மாய் வாழ்ந்தோம் இதில்தான் உண்டான‌து என‌க்கும் உன‌க்குமான‌ உற‌வு உன்னில் விழிக்க‌ வேண்டும் என்றே தின‌மும் தூங்க‌ போவேன் நான் அத‌ற்காக‌ நீ அதிகாலை என‌க்கு முன் விழிப்பாய் உன்னில் விழிக்காமல் என்றாவது என் தூக்கம் கலைந்ததுண்டா பள்ளியில் விழுந்த‌ எறிக‌ணை என் உயிரை ப‌றித்…

  4. தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளி…

    • 8 replies
    • 27.6k views
  5. Started by nedukkalapoovan,

    கடலோடு பிறக்கும் அலைக்கு கரையோடு மரணம்.. காற்றோடு பிறக்கும் தென்றலுக்கு தோப்போடு மரணம்.. பூவோடு பிறக்கும் வாசத்திற்கு அந்தியோடு மரணம்.. வானோடு பிறக்கும் நிலவுக்கு நிழலோடு மரணம்.. மலையோடு பிறக்கும் நதிக்கு கடலோடு மரணம்.. மனதோடு பிறக்கும் ஆசைக்கு நிராசையோடு மரணம்.. கருவோடு பிறக்கும் குழந்தைக்கு மூப்போடு மரணம்.. காசோடு பிறக்கும் மனிதனுக்கு நோயோடு மரணம்.. புத்தியோடு பிறக்கும் கல்விக்கு ஆயுளோடு மரணம்.. ஆணாகிப் பிறக்கும் எனக்கு பெண் காதலோடு மரணம்.. பெண்ணாகிப் பிறக்கும் அவளுக்கு கனவோடு மரணம்..!

    • 13 replies
    • 2.1k views
  6. நிர்வாண மரங்கள் கிளைகள் தளிர் நிறைக்க இலையாடை அணிந்து தம்மை அழகாக்க ஆயத்தமாகின்றன பூமியின் காதலன் நிதம் கதிர் பரப்பி தூங்கிக் கிடக்கும் வேர்களைத் தட்டி எழுப்ப கிளைகள் எங்கணும் மகிழ்வின் துடிப்பில் மொட்டுக்கள் பூக்களாகி மாலை கட்டி நிற்கிறது மரம் மறைந்து வாழ்ந்த பறவைகள் மரங்களில் அமர்ந்து மகிழ்வாய்க் காதல் செய்ய மன நிறைவாய் தளிர்கள் நாளும் பொழுதும் விரிந்து நாட்டியமாடும் மங்கையராய் நடை பரப்பி நிதம் நகைக்க வைக்கின்றன பார்க்கும் இடம் எங்கும் பச்சை வண்ணம் காண பசுமை கொண்ட மாந்தமனம் மனதெங்கும் மகிழ்வோடு துன்பங்களைத் தூர வைத்து இயற்கை எழிலை எல்லையின்றி எங்கும் நிரப்பிக்கொள்ள போதும் இன்று என எண்ணித் கதிர்க் குடை சுருக்கக் கதிரவன் காலம…

  7. "கில்கமெஷ் பாடல் / Love Songs In Sumerian Literature" "ஆடை நெகிழ உடல் மிளிர சாடை காட்டி நளினமாய் அமர்ந்தாள் காலை அகட்டி காமம் தெளித்து தலை அசைத்து சிலையாய் இருந்தாள்!" "பெண்மை வனப்பு சுண்டி இழுக்க ஆண்மை ஆசை அவளில் போக்க கருத்த என்கிடு மிரண்டு வந்தான் பருத்த உடலை காட்டி வந்தான்!" "அருகில் வந்து முகர்ந்து ரசித்தான் உருண்டை கண்களால் கூர்ந்து பார்த்தான் எடுத்த எடுப்பில் அவளை தழுவினான் அடுத்து தன் உடையை நழுவினான்!" "ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டாள் நடுங்கும் அவன் தொடையை பற்றினாள் மலை சாரலில் மந்தை மேய மாலை மயக்க…

  8. Started by விகடகவி,

    அமாவாசை இரவுகளில்.. அவளோடு புறப்பட்டால்.. நிலவை மறந்து விடுகிறேன்... பனித்துளிகள் படர்வதனால்... நான் ஏக்கப்பட்டும் பூக்களைப் பறிப்பதில்லை.. சலங்கைகள்.. அடிபட்டுக்கொள்வதை.. தலையாட்டி ரசிப்பவன்.. விமர்சகன்.. மழைத்துளி விழுந்து வழிந்து.. ஓடாவிட்டால்.... நதிகள் பாவம்.. இரவில் மட்டும் பெருமையடிக்கும்.. மின்மினிப்பூச்சிகளுக்கு.. அருந்ததி..நகர்வது.. தெரிவதில்லை.. என் திருவிழா நாட்கள்.. என் செல்வத்தைக் கரைப்பதில்லை.. இதயத்தை.. தந்தை சொன்னது போல்.. நண்பர்கள்..துன்பத்தில்.. உதவிட வரவில்லை உயிர் விட வந்தார்கள்.. கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல்.

  9. கண்ணே!... வருகின்றேன். உறங்காத கண்மணிக்கு உயிர் நண்பன் வரையும் மடல் கூதலுக்குள் ஒடுங்கும் குருவிக் கூட்டம்போல - அன்று சுய தேவைகளுக்குள் ஒடுங்கிப்போனது என் சுதந்திரவேட்கை காதலுக்குச் சாவு மணி அடித்துவிட்ட பெண்ணே! சாதலுக்கு அழைப்புமணி கட்டிவிட்டாய் கண்ணே! உறவுகள் தேடும் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு உரிமைப்போருக்கு உன்னையே கொடுத்தவளே! உறவுகளை வாழ வைக்க உயிர்காத்து வந்தவன்நான். என்னுள்ளம் இங்கு இன்று உறங்கவில்லைக் கண்மணியே! களங்களில் சதிராடிக் காலிழந்து விட்டாயாம், இருப்பினும் கரும்புலிக் களத்திற்குக் காலாகி நிற்கிறாயாம்! செவிப்புலன் மோதும் சேதிகள் கேட்டுத் தவிப்புகள் என்னிடம் தளம் சமைத்துக் கொண்டன. உள்ளத்தில் எழுந்த அலையில் …

  10. மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.7k views
  11. கருமங்கள் கை கூடாமல். சறுக்குகிற நேரமெல்லாம். சனியன் நினைவுக்கு வருகிறான்! ஆச்சியும், அப்புவும், அன்போடு சேர்த்து, ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்! சனிபகவானுக்குச் சால்வையோடு, சந்தனமும் பூசியுள்ளார்கள்! பிரபலங்கள் எல்லாம், வரிசையில் நிற்கின்றன! எல்லோரும் படித்தவர்கள்! எனக்கும் பெருமையாக இருக்கிறது! முதல் முறையாக, அப்புவிலும் ஆச்சியிலும், அளவில்லாத மரியாதை, அணையுடைத்துப் பாய்கிறது! எண்ணைச் சட்டிகளும், பெரிதாகி இருந்தன! புலத்தில் பெரிய பிரச்சனைகள், பெரிய சட்டிகளும் தேவை தான்! வரிசை முடிவில், பெரியவர் சிரித்தார்! ஓய்வு பெற்றவராம்! முகத்தில் அமைதியின், முத்திரை தெரிந்தது! சனியன் விலகியதால், சாந்தமாகியது போலும்! …

  12. கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு! என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக! கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க தாம் தீம் தோமென தமிழே பொங்கு! எங்கனும் தமிழின் ஓசை சிறக்க, ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க, வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு! மங்கல ஒலியில் மண்மகள் குளிர, சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய, அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு! வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க, தேன்கவிராயர்கள் தீந…

  13. ஏற்றி வைப்பாய் விளக்கு நாடி வந்தோம் சக்தி உன்னை நல்ல வழி காட்டு நாடு இன்றி அலையும் தமிழர் வாழ்வில் ஒளியேற்று! வாடி நிற்கும் பயிருக்கும் கருணை மேகம் நீதான் வந்து நின்றோம் உன்னடிக்கு எங்கள் துணை தாய் தான்! குங்குமத் தாயே எங்கள் குறை களைய வேண்டும் கும்பிட்டோம் உன் பதமே நிறை அருள வேண்டும் எங்கும் நிறை சக்தியம்மா நீதான் வழிகாட்டி வாழ்க்கைச் சாகரத்தில் கரை சேர்க்கும் படகோட்டி மங்களத்தின் மறுபெயரே மகாலஷ்மி நீதானே சங்கடங்கள் தகர்க்கின்ற சங்கரி நீதானே பொங்குதனம் கொண்டவளே போற்றுகின்றோம் உன்னை பகை எரித்து நாட்டிடுவாய் எம் வாழ்வில் நன்மை! கொடுமை கண்டு கொதித்தெழும் கொற்றவையே தாயே! கொடுக்கும் கரம் கொண்டவளே உமையம்மை நீயே எதிர…

  14. கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும…

  15. ஒன்றென எழுவோம் வாடா! ஈழம் விடுதலை பெறும் வரை வேறு சிந்தனை எனக்கில்லை! சூழும் கலி யாவுமே மாளும்! "ஈழம்" மீளுமே!. பாழும் பிரிவினை கொண்டதால் எம் இனம் பட்ட பாடுகள் போதுமே! இனி! வீழும் துன்பம்" சொல்லியே இணைவோம் வா என் தோழனே! கொத்துக்கொத்தாய் உன் இனம் செத்து மடிதல் கண்டுமே! வேறு திசை நீ பார்க்கின்றாய் வரலாற்றில் ஏன் பழி ஏற்கிறாய்?!! தனி ஒரு மனிதனுக்கிங்கே உணவில்லை என்று கொண்டால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான்" அந்த பாரதி எங்கே சென்றான்?! உணவில்லை, உடையில்லை உறையுளும் நிலையில்லை! தினம் தினம் பொழிகின்ற குண்டுக்குள் எம் உயிர்!!. இனம் என் தமிழினம் வோரொடு அழிக்கினம் இதைக் கண்டுமா சோதரா கண் மூடிக்கிடக்கினம்?! விடு விடு பகைமைகள் …

  16. ஒரு தூக்கு கைதியின் கடிதம் http://youtu.be/tsiZx9omDjo

  17. ஊமையோ? குருடோ நீ?!!! செத்தொழியட்டும் தமிழ் இரத்தம் என்று கொத்தணிக் குண்டுபோட்டு கொடுமைகள் செய்கின்ற எத்தரின் நிலைகண்டும் கண்மூடி கிடக்கிறாயே உலகமே?!!! தடை செய்த குண்டுகளைத் தமிழர் மீது போடலாம் என்பது தான் உலக நீதியா?!! வேட்டுச்சத்தங்கள் எங்களுக்குப் புதிதல்ல! வெந்து நொந்து வேதனைப்படுவது எமக்கு அழகல்ல சொந்தம் இழந்தாலும் சொத்து சுகம் அத்தனையும் துறந்தாலும் எங்கள் மண் வாழ எம் உயிர் கொடுக்கும் எம்மை அடக்க நினைக்கிறாயே?!! இதுதான் நியாயமா?!! "ஈழம்" என்பது சிங்களத்தின் தேசமாம் வாய் கூசாமல் பொய்யுரைக்கும் புத்தரின் பரம்பரை வரலாறும் தெரியவில்லை தாங்கள் வந்தவழி அறியவில்லை! "பாடம் புகட்டுவோம்" என்ற எங்களின் வீரத்தைக் கண்டு கொதி…

  18. பல்லவி தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன் தாய் மண்ணை முத்தமிடு தமிழா ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன் ஈர மண்ணை அள்ளியெடு தமிழா எம் மண்ணை அள்ளித் தின்றேனும் நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம் குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை எதிரியின் குண்டுகள் தின்கிறதே போரிலே பாயும் பிள்ளைகளை பதுங்கிடும் குழிகள் காக்கிறதே சரணம்-1 வீட்டினை இழந்து நாட்டினை இழந்து காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா உணர்வினை இழந்து உறவினை இழந்து சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா போரை நிறுத்தென தமிழரின் குரல்கள் உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே செவிகளை விழிகளை மூடிய உலகம் செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே சரணம்-2 …

  19. காற்றுக்காக அவர்கள் விசிறிக்கொண்டிருக்கும் மின் மட்டைகளில் கொசுக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கின்றன? -சேயோன் யாழ்வேந்தன் (புழல் சிறையில் தற்கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு)

  20. "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனே உனக்கு எம் வீர வணக்கங்கள்" ஈழ தமிழருக்காக சத்திய பிழம்பாய் சாவினை ஏந்திய மறத் தமிழ் மைந்தனே உந்தன் மேனி தழுவி மெய் மறந்து விம்மிட நெஞ்சம் கனக்கிறது கடல் தடுக்கிறது உன் தேகம் எரித்த காற்று இந்த துயர் சொல்லி போயிட்டு குண்டுக்கும் கருகாத எம் கானகங்கள் கூட இன்று சோபையிழந்து கிடக்கிறது வீர மகனே !!! வேங்கையின் பிறப்பே !!! ஈழ மண்ணின் விடிவில் உந்தனுக்கொர் நீண்ட இடமுண்டு. நிம்மதியாய் சென்றுவா மகனே-இன்று தலைவராய் காமராஜர்கள் எவருமில்லை இந்த காங்கிரசில் காந்தி இல்லை நேரு இல்லை ஏன் தமிழ் காக்க என்று பேச்சுக்கு தானும் ஒரு தலைவன் இல்லை மகிந்தவின் காசுக்காக ஒருவன் …

  21. காதல் இல்லாமல் வாழ முடியவில்லை காதலோடு வாழவும் தெரியவில்லை விரைவில் மரணத்தை கொடு இறைவா, அவளை அதிகம் கேள்வி கேட்கின்றேன் அவள் மீது அப்படி ஒரு பிரியம் - ஆனால் எனது போக்கு அவளுக்கு கசப்பாய் இருக்கின்றது, அது தெரிந்தும் என்னை மாற்றிக்க முடியவில்லை மாறாவிட்டால் அவள் எப்படி இன்பமாய் இருப்பாள் அவள் சந்தோசம் தான் எனக்கு வேண்டும், எனக்கு அவளை விட யாரும் இல்லை அவள் இருந்தும் அநாதை போல் உணர்கின்றேன் நான் மண்ணோடு மண்ணாக வேண்டும், அப்போது தான் அவள் பூமியில் பெண்ணாவாள் இப்போது என் உயிராக அவள் இருப்பதால் அந்த பெண் உணர்வுகள் அடங்கிவிட்டன, முடக்கப்பட்ட அவள் உணர்வுகள் விரைவில் தெளிவு பெற வேண்டுகிறேன் ஆனால் அதை தாங்கும் சக்தி எனக்கில்லை, அந்த பெண் பெண்ணாக வேண்டும் அ…

  22. இரும்புக்காட்டின் பூக்கள் வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க சக்கரங்களும் இல்லை ஓட்டமும் இல்லை துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த யாருமற்ற இடுகாட்டில் பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச் சுமக்கின்றனர் சிறுவர்கள் இரும்பு படிந்த உடல்களிலிருந்து உதிர்கிறது துருவேறிய துகள்கள் மலிவான சிறுவர்கள் எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென விலைக்கு வாங்கப்பட்டனர் வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும் இரும்பை கொண்டு வருவார்களென இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர் அழுகிய இரும்பை நெறுக்கும் தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம் இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள் கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும் வெடிகுண்டுகள் நிறைந்திரு…

  23. இந்த கணங்களை கடந்து போவது எப்படி என்று தெரியாமல்.... கனத்த மௌனத்துடன் சலனமற்றுக்கிடக்கிறேன் வெறுமையை சுமந்தபடி ... நீ உனது பிரியங்களால் தின்று கொண்டிருக்கிறாய். கண்ணீர் கூடப் பிரியம் தான். கனவுகளை தின்னும் பூதத்திடம் மோதுகிற வண்ணத்துப்பூச்சியே, ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள் என் அறைகளில் அலைகின்றன.. திரண்டெழும் நீரை மறுப்பதாக நடித்து நீ விழுத்தும் வார்த்தைகளோடு மௌனித்துப்போவதை விட வேறெதையும் செய்ய முடியவில்லை என்னால். என்ன செய்ய முடியும் என்னால் கண்ணீரை துடைப்பதற்கு விழி துடைக்கும் சிறுகரத்தினைவிடவா..!!! அநேக பொழுதுகளில், வணக்கத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்துவிடுகிற வார்த்தைகளில் மூழ்கிக்க…

  24. அவனில்லை இன்று எம்மோடு அவன் நினைவுகள் நீர்சூடி வழிகிறது விழியிரண்டும். அவனில்லா வனம் ஆளில்லா நிலம். அவனின்றி அனைத்துமே அனாதைப் பிணம். ஆனைகள் மிதித்து அடங்காத் துயர் மூடி அ (உ)லையும் காற்றும் ஊழித்தீயூறி அடைகாக்கும் தாயாகிறது. அவன் போலொருவன் பிறப்பான். பிரபாகரன் என்ற பெருந்தீயாய் இருப்பான். அவன் வருவான் ஆன்மபலம் தருவான். அனைத்துமே அவனாகி எமையுருக்கி ஒளிர வைப்பான். காலக் கணக்கிருப்பை கார்த்திகை ஈரம் காலவிதி கடத்திக் கரையேற்றும். கனவுகள் விதைத்துக் காத்திருக்கிறோம். சாந்தி நேசக்கரம் …

    • 0 replies
    • 1k views
  25. Started by jcdinesh,

    இனியவளே உன் இதயத்தின் முகவரிக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்ததா? உன் உதயத்திற்காக நான் வருந்திப் பாடிய வாழ்த்துப் புரிந்ததா? உன் சிரிப்புகளில் தான் என் வசந்தம் சிக்கியுள்ளது உன் இதழ் விரியும் போது தான் என் மனம் குளிர்கிறது என் இளமைக் காடுகளில் அப்போது தான் மழை பொழிகிறது.

    • 6 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.