கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மே 17 இன் பின்னரான முடிவில் எங்காவது ஒமு முகாமில் நீ அடைந்திருப்பாய் ஆராவது கொண்டு வரும் மொபைலில் தொடர்பு கொள்வாய் இருக்கிறேன்……, என்ற செய்தி வரும் சந்திப்போம் மீண்டுமெனக் காத்திருந்த காத்திருப்பு காலாவதியாகிறது தோழா….. நீண்டநாளின் பின்னர் நேற்றிரவு வந்த அழைப்பில் உன் அக்கா பேசினாள்……. ‚‘அவனைப்பற்றி ஏதும் அறிஞ்சியளோ…..? எங்கினையும் இருந்தா என்ர தம்பி தொடர்பு கொண்டிருப்பான்…. எங்கையிருக்கிறானோ‘‘…..? ஏதாவது தெரியுமோ….? அவளது இனிமைக்குமாறான கதையிலிருந்தும் அம்மாவின் வளமைக்கு மாறான பேச்சிலிருந்தும் நான் புரிந்து கொள்வது….. இல்லையோ நீயென்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் தொடங்குகிறார்கள்…… அதிகம் கவலையுறுகின்றார்கள் …
-
- 4 replies
- 1.3k views
-
-
படுக்கையில் கிடந்தபடி பாதை கேட்காதே எழு….. உடல் முறித்து, பத்தடி நட. பாதை தெரியும். குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான். திரும்பிப் பார். விடுதலைக்காக கடந்த தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும் பார்வையில் புலப்படும். தணற்காடுகளில் தீய்ந்தபோது நெஞ்சம் வேகியது சதுப்பு நிலங்களில் புதைந்தபோது சலனம் ஆடியது. மீள எழவில்லையா? களத்திலேயே மீண்டெழுந்த உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்? போராட்டக்களம் மாறியிருக்கிறது. இப்போது சூறாவளி அவ்வளவே. ஒட்டுமொத்த இன அழிப்பை உலகம் கணக்கெடுக்கிறது. துயர் கொல்லுதென்று நீ முடங்கிவிட்டால் இழப்புகள் கூட மௌனித்துப் போகும். அழுவதாகிலும்... அம்பலத்தில் நின்று அழு. இது உனக்கு மட்…
-
- 0 replies
- 761 views
-
-
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன எங்கள் இமைகள் கவிந்துள்ளன எங்கள் உதடுகள் அண்டியுள்ளன எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம் எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக எங்கள் முதுகில் கசையால் அடிக்குக எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும் தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும் கவிந்த இமைகள் ஒருநாள் உயரும் இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும் கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும் அதுவரை நீங்கள் எங்களை ஆள்க அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து (பலர் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாகத் …
-
- 0 replies
- 3.5k views
-
-
மூன்று கவிதைகள் இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள். சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர் பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே" (கலித்தொகை - முல்லை - 13) நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின் சாயலைக் க…
-
- 0 replies
- 886 views
-
-
வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கவிதையாகின்றது கேட்கின்றதா உங்களுக்கு வயல் வெளி தோறும் என் தலைவனின் காலடிச் சுவடு தேடி ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு கேட்கின்றதா உங்களுக்கு? தன் தலையை மண்ணில் மோதி அலறி அழுகின்றது அது முழுச் சிறகும் உதிர்த்து ஒற்றைக் காலில் தவம் இருக்கின்றது அதன் அலறல் கேட்கின்றதா உங்களுக்கு அதன் குரலில் இந்த யுகத்தின் அலறல் இருக்கின்றது குருவியின் தனிமையில் காலம் உறைகின்றது உறைந்த காலத்தில் நாம் சிதைவுற்றிருந்தோம் ஆட்காட்டி குருவி கூட காட்ட ஆளின்றி ஊர் முழுதும் சுற்றி வந்து அழுகின்றதாம் அது முன்னர் வீரர்களின் கல்லறையில் இருந்து பாடி தூங்க வைத்தது …
-
- 17 replies
- 4.3k views
-
-
மதிலொன்று மறித்துக் கிடக்கிது. கருங்கல்லாய் இருக்கலாம் காரிரும்பாய் இருக்கலாம் ஒருவேளை தேவலோகத்துச் சாமானாயுமிருக்கலாம் மதில் தெரியிது அதன் பலம் தெரியிது முன்னர்: பூசாரி வந்து குளை அடிச்சுப்; பாத்தார் பரியாரி வந்து மூலிகை வைச்சார் பாம்புக்கடி வைத்தியரும் ஒருக்கா வந்துதான் போனார் கைமருந்து பலிக்கேல்ல சீமையில் படித்த சிறப்புச் சிகிச்சைகள், கேரள மாந்திரீகர், மட்டக்களப்புச் சமாச்சரம், ஒண்டும் தான் பலிக்கேல்ல மதில் இப்ப மினுமினுப்புக் கூடிக் கிடக்கிது பூசாரி ஊத்திய பாலும் பஞ்சாமிர்தமும் காரணமாயிருக்கலாமாம்;: பேச்சுமிருக்குது கனகாலம் கதைக்காது புதிராய்க் கிடந்த ஊர்க் கிழவர் ஒருநாள் திடுப்பெண்டு சொன்னார் "உதுக்கும் ஒரு சாமானிருக்க…
-
- 18 replies
- 2.3k views
-
-
எங்கோ பார்த்தேன் அங்கே தொலைந்தேன் என்பேனே அது இவளைத்தான் என்றோ பார்த்தேன் அன்றே தொடர்ந்தேன் என்பேனே அது இவள் காலடித்தடம் தான் நான் மெல்லிசை ரசித்த முதல் பொழுதொன்று சொல்வேனே அது பிறந்தது இவள் கொலுசில் இருந்துதான் நான் தினம் தினம் இசைத்திடும் பல்லவி இருக்கிறதே அது பிறந்தது இவள் மொனத்தில் இருந்துதான் சூரிய தேவன் ஏவிய கதிராய் எனைச் சுட்டெரித்த கதை சொல்வேனே அது இந்தக் கண்கள் தான் வண்டுக்கு மலர்ந்த வாசமலரையெல்லாம் சூடிக்கொள்ளும் வசியக்காரி என்பேனே அவள் இவள்தான் உன் புன்னகை என்பது என்ன விலை என எனைப் பிறர் கேட்பதெல்லாம் இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான் அப்பாவிய் நான் அன்று அழுது புரண்ட கதை…
-
- 0 replies
- 691 views
-
-
-
செஞ்சோலைக் குயில்கள்..... கவிதை - இளங்கவி..... புலியின் கோட்டையிலே பூத்த சிறுமலர்கள்..... பொசுங்கி விட்ட பின்பும் மனதில் பூத்து நிற்கும் கொடி மலர்கள்.... அவர் செஞ்சோலையில் வளர்ந்த சிரித்து நின்ற இளந்தளிர்கள் செத்து நம் சரித்திரத்தில் இடம்பிடித்த இளம் குயில்கள்.... வாழ்க்கையின் வசந்தத்தை ஏக்கத்துடன் பார்த்திருந்த.... வெண்பனியில் தவண்டுவரும் நம் ஈழத்துப் பென்குயின்கள்.... வணக்கத்துடன் சூரியன் கிழக்குவாசல் வந்துவிட..... செஞ்சோலைப் பூக்கலெல்லாம் சிறிதாக மலர்ந்துவிட.... வளமையான பொழுதென்று வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க.... வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று தெரியாத தேவதைகள்...... மகிந்தவின் கட்டளைக்கு எமன்க…
-
- 4 replies
- 848 views
-
-
மாறாத வடுக்களை எம் இதயங்களில் எழுதிவிட்ட எதிரியே.. இந்தப் பிஞ்சுகள் செய்த குற்றம் என்ன..??! ஏன் இந்தத் தண்டனை…??! உலகம் இயக்கும் இயந்திரப் பறவைகள் கொண்ட உன் பலத்தால்.. அதன் திமிரால் மக்களை… தண்டிக்க அவசரப்பட்ட நீ… இழந்து போன இந்த மொட்டுக்களின் வாழ்வை மீளளிக்க முடியுமா..??! போர் செய்து என்ன வென்றாய்..?! தமிழர் நிலங்களைப் பறித்தாய். மனித மனங்களை சரித்தாய்.. மனிதம் அழித்தாய்..! ஏன்… நீ.. மனிதன் அல்ல சிங்களப் பேரினப் பிசாசு என்று மொழிந்தாய். மனிதனாய் உன்னோடு வார்த்தைகளால் பேசிப் பயனில்லை.. இந்த மொட்டுக்கள் விர…
-
- 9 replies
- 1.3k views
-
-
வெற்றிடத்தில் ஒரு குறிப்பு அந்தக் கதையில் நிறைய அறைகள் இருந்தன ஒவ்வொருவராகப் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தனர் அந்தக் கதையில் நிறைய ஜன்னல்கள் இருந்தன காற்றும் இசையும் உள் நிறைந்து வெளி வந்தது அந்தக் கதையில் நிறைய மரங்கள் இருந்தன அணிலும் பறவைகளும் விளையாடின அந்தக் கதையில் விதைகள் நடப்பட்டிருந்தது படிக்கப் படிக்க பூத்துக் குலுங்கியது அந்தக் கதையில் மழை பெய்தது வானவில் தென்பட்டது கடவுள் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருந்தார் அந்தக் கதையில் வாசிப்புத் தன்மை கடைசி பக்கத்திலிருந்தும் படிப்பதுபோல் அமைந்திருந்தது முன்னிருந்தும் பின்னிருந்தும் படித்துக் கொண்டே வந்தவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் வெற்றி…
-
- 11 replies
- 1.4k views
-
-
தேரை இழு.! இறுகப்பிடி வடக்கயிற்றை..!!! ___________________________________________________ -வல்வைக்கடல்- இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை...பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல் கைவிட்டது சர்வதேசத்து குரங்குகள் மட்டுமல்ல..- உன் அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்... ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரை தேற்றாமல்விட்ட தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.! இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை-கவனம் அவிழ்ந்து வ…
-
- 11 replies
- 1.9k views
-
-
உடைந்த மூங்கிலானேன்: ஒரு உடைந்த மூங்கில் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம் உடைந்த மூங்கிலால் புல்லாங்குழல் ஆக முடியவில்லை அது முகாரி பாடியதா இல்லை புரட்சி பாடியதா இல்லை தன்னையே உடைத்து அழுகுரலை இசைத்ததா யாரும் கவலைப் படவேண்டாம் மூங்கிலின் மேலிருந்த குருவி தன் காதலனின் வீரச் சாவு கேட்டு அழுது குளறியது மூங்கிலை கடந்த காற்று தன் தலைவனின் வீர மரணம் பற்றி ஓங்கி அறைந்து ஒப்பாரி வைத்தது மூங்கில் அழவில்லை மூங்கில் ஒப்பாரி வைக்கவில்லை தன்னை கடக்கும் காற்றனைத்தும் அழுகை அல்ல இசை என்றது அதன் உடைவு ஆரம்பித்து இருந்ததை அது அறியவில்லை இன்னும் புல்லாங்குழல் ஆகலாம் எனும் கனவில் அது மிதந…
-
- 15 replies
- 1.9k views
-
-
மரணப்படுக்கையில் மறவர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இருந்த போதும் மானாட மயிலாட பார்த்து மோட்சம் பெறும் புலத்து தமிழன் நான் மானாட மயிலாடவில் இடைவேளை வரும் போது ஈழம் பற்றி ஆய்வு செய்கிறேன் ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன் புலிகள் தேவைப்பட்டார்கள் எம் பொதி சுமப்பதற்காய் இன்று நான் ஜனநாயகவாதி என் தவறை உணராது தோல்விக்கு விடைதேடும் கட்டுரை ஆய்வாளன் எந்த விமானம் எத்தனை பாகையில் குண்டு போட்டது.. எத்தனை அடி ஆழத்தில் பள்ளம் வந்தது எங்கேனும் தண்ணி வந்ததா என பார்க்கிறேன் என்வீட்டு கதவை எதிரி தட்டுவதை மறந்து ஏனென்றால் என்பெருமையை சொல்ல இதை விட்டால் எனக்கு ஏது சந்தர்ப்பம் நான் நாறுவதே தெரியாமல் ந…
-
- 9 replies
- 2.4k views
-
-
சும்மா கிடந்த நாம்.. தமிழீழ விடுதலை என்றோம்.. ஆயுதம் எடுத்து ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..! தமிழ் மக்களின் தலையினில் நன்றே.. மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..! ஆட்காட்டி வயிறு வளர்த்தோம்..! போகும் வழி இடையில் மறந்தோம்.. சிங்களச் சீமையில் சீமைப் பசுக்களிடையில் சரணடைந்தோம்..! தாடி வளர்த்து கம்னீசியம் காட்டினோம் வெள்ளை ஜிப்பாவில் ஜனநாயகம் பேசினோம் புலி எதிர்ப்பும் தமிழீழ அழிப்புமே எங்கள் அரசியலாக்கினோம். இன்று... ஆக்கிரமிப்பு படைகளோடு தும்பினியின் இடுப்பாட்டத்தில் சதியோடு குதி போடுறோம்.. தெரியுது தமிழீழம்.. சிங்களச் சீமைப்பசுவின் சிற்றிடையில் என்று வாக்குக் கேட்கிறோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயா…
-
- 17 replies
- 2.6k views
-
-
பிஞ்சுப் பருவத்தில் பாலுக்காய்க் காத்திருந்தேன் பள்ளி நாட்களில் விடுமுறைக்காய்க் காத்திருந்தேன் கொட்டும் மழையிலே வெயிலுக்காய் காத்திருந்தேன் கொளுத்தும் வெயிலிலே வான்மழைக்காய்க் காத்திருந்தேன் கல்லூரிக் காலத்தில் காதலிக்காய்க் காத்திருந்தேன் கடமைகள் வந்ததும் காசுக்காய்க் காத்திருந்தேன் காத்திருப்பே வாழ்க்கையாய் காலமெல்லாம் தொடர்கையில் காத்திருப்பற்ற வாழ்க்கையொன்றைக் கண்டறியக் காத்திருக்கிறேன் http://gkanthan.wordpress.com/index/waiting/
-
- 1 reply
- 733 views
-
-
ஒருவன்.... இருளுக்கு நடுவில் எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது? இன்னொருவன்.... உன் வாழ்வின் ஒவ்வொரு சொட்டும் வசீகரம் மிக்கது. மற்றொருவன்.... இன்றும் போல என்றும் இருந்தால் எப்படி இருக்கும்? நான்.... ஆற்று வெள்ளம் அள்ளிப்போகும் கிளிஞ்சல் வாழ்வு. வாழ்வின் கோப்பையை நிறைப்பது இரவு. இரவின் கோப்பையை நிறைப்பது நிலவு. ஆனால் அதிகாலை வேளைகளில் நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை நான் மட்டுமே அறிகின்றேன். என்னிரு விழிகள் போதவில்லை உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு நான் கவிஞன் என்பதால் என்னிடம் வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை. நீ ஏன் அழுகின்றாய் என்பதை இந்த உலகிற்கு சொல்லிப்போவதற்கு.
-
- 0 replies
- 574 views
-
-
அடம்பனெல்லாம் திரண்டு நின்றால் பலமும் கிடைக்குமே அடிமையெல்லாம் அணி திரண்டால் விலங்கும் ஒடியுமே ஏழையெல்லாம் எழுச்சி கொண்டால் ஏற்றம் விழையுமே நல்லாரெல்லாம் நன்றாய்ச் சேர்ந்தால் நன்மை நடக்குமே வேங்கையெல்லாம் வீறு கொண்டால் விடிவு பிறக்குமே தமிழரெல்லாம் ஒன்று பட்டால் ஈழம் மலருமே http://gkanthan.wordpress.com/index/onrupattaal/
-
- 4 replies
- 851 views
-
-
தோல்வி நிலையென நினைத்தால்..... கவிதை - இளங்கவி தொடர்வாய்ப் பெற்ற பல வீழ்ச்சியினாலும்..... தொடர்ந்து கொண்டிருக்கும் பல அதிர்ச்சிகளாலும்..... துவண்டு விடாதே தமிழினமே....! எங்கள் விதியினை நாமே எழுதுவோம் எழுச்சி கொள்ளு எம்மினமே...! எதிரியின் கூச்சலுக்கேல்லாம் பயந்து ஓட நீயொன்றும் கொல்லையில் பறக்கும் கோழியல்ல.... எதிரியின் குதம்வரை சென்று அவன் குடலைப் புடுங்கிய கோரப் புலியின் பலம் உனக்கு.....! நீ கோடியாய்ச் சேர்ந்து கொதித்து எழுந்திட்டால் ; அவன் கோட்டைகள் எரியும் உன் விடுதலைக்கு....! அவன் கோவணம் கழட்டி நீ தோய்த்துப் போட்டால் கொத்தடிமையாய் இருப்பாய் அந்தக் களிசறைக்கு.... நம் விரலை வைத்தே எம் கண்ணைக் குத்துறான் …
-
- 8 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=encZArh2wrY&NR=1 வாழ்க்கை இருளுக்குள் அடங்கி பரிதவித்து மடிகின்றது எங்கள் அவலக்குரல்கள் உலக ஜனநாயகத்துள் அமைதியாகின்றது வல்லவர்கள் வெல்வார்கள் என்பது இயல்பாகின்றது மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கின்றது வல்லரசுகளின் போட்டி இயந்திரத்தால் நாம் விழுங்கப்பட்டோம் இயந்திரத்தின் செமித்த கழிவுகளாய் எஞ்சி நிற்கின்றோம் கழிவுகளையும் மீள இரையாக்கும் புதிய உலக ஒழுங்கின் முன்னால் மண்டியிட்டு மெளனித்து நிற்கின்றோம் என்னை சாதி சொல்லி உதைத்த கால்களை இறுக்கப்பற்றிக்கொள்கின்றே
-
- 3 replies
- 755 views
-
-
வதை முகாம் -------------- சதி, திமிருடன் கைக்கோர்த்து - எங்கள் விதியுடன் விளையாடியதால்..... இன்று எம் அம்மையும், அப்பனும் ஆளுக்கொரு முகாமில் அழுகையும், ஆத்திரமுமாய்........ முட்கம்பிவேலி முழங்காலிட்டு நுழையும் கொட்டகை எலும்பும், தோலோடு - என் அண்ணன்களும், தங்கைகளும் ஆடும், மாடுமாய்........ குளிர்ப்பனியோ... கும்மிருட்டோ... சுடுவெயிலோ... கொடும் விடமோ... கடினமல்ல - எம் மக்களுக்கு காட்டிக்கொடுக்கும் கயவனின் கடும் செயலைவிட! சிங்கமுக சொறிநாய்... செருக்குற்ற வெறிநாய்... பிஞ்சையும் புணர்ந்து பேராண்மைப்பேசும் ஓநாய்... துப்பாக்கிமுனையில் துகிலுரிக்கும் கயவனே! உன் அக்காளாய், தங்கையாய் தமிழ்ப்பெண் உனக்குத் தெரியாதோ? அஞ்ச…
-
- 1 reply
- 619 views
-
-
கருணாநிதிக்கு நோபல் பரிசு... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம். இதற்கு ரூ. 10 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1) எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப
-
- 0 replies
- 684 views
-
-
இன்னும் உயிரோடிருக்கிறேன்! ஏதோ ஒன்றை உணர்த்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது காலம்! இனி மீதமென்ன இருக்கிறது என்று நிகழ்காலத்தை துகிலுரிந்த படியே துச்சாதனர்கள்! தொடரும் ஏமாற்றங்களால் பிடித்தவர்கள் கூட அந்நியமாகிவிடும் அபாயத்தில் உறவுகள்! படித்ததும் பார்த்ததும் ஒரே தளத்தில் ஆனாலும் 'உண்மையா"? என்று துழாவும் தொலைபேசி அழைப்புக்கள் இன்னும் விட்டுப்போகாமல் கண் சிமிட்டியபடி இருக்கிறது நம்பிக்கை! " அதனால் இன்னும் நான் உயிரோடிருக்கிறேன்"!
-
- 3 replies
- 1.5k views
-
-