கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம். விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள் விதைகுழிகளில் வேர்பாய்ச்சி வான்வெளி எங்கும் கிளைபரப்பி விழுதெறிந்து வளர்வோம் இனியென்றும் வீழ மாட்டோம் காலக்கிண்ணமதில்-இனியும் கனவுகளையா குடிப்போம் இல்லை...இல்லை... தலைவனின் தடங்களில்-விடுதலை தேரிற்கு வடம் பிடிப்போம். நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. இது....., தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ..., …
-
- 9 replies
- 2.9k views
-
-
புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு பழையன மறந்து மன்னித்து மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு இனிய இப்புத்தாண்டில் புதிய நற்கனவுகளுடன் புதிய நற்கொள்கையுடன் பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது இனிய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தேச உறவுகளுக்கும் நற் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ........ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.
-
- 2 replies
- 1.3k views
-
-
உறவு உணர்வுகளை புரிந்துகொள்ளும் உன்னதமான மொழி இது பிறப்பு முதலாக நட்பு முடிவாக பல பரிமாணம் கொண்ட பன்முகக் கண்ணாடி இது தாயுடன் சேய் கொண்ட உறவும் உள்ளத்துடன் நீ கொண்ட உறவும் உயிருடன் உடல் கொண்ட உறவும் இயற்கையின் படைப்பினில் இமயமாய் நிற்பவை ஆனால் இன்று இயற்கையுடனான உறவு இயந்திரமானது இயந்திரதுடன் உறவு இயல்பானது மனிதனுடனான உறவு மறந்து போனது மனிதம் இங்கே மரத்துப்போனது உலகம் சுருங்கலாம் ஆனால் உறவுகள்??? உழைப்பின் உதவியை நாடினால் வாழ்வின் வாசல் வசப்படும் உறவுப் பூவை முகர்ந்தால் வாழ்வின் வாசம் புலப்படும் மானிடா..... உறவுகள் வாழ்வின் வேர்கள் உலகுடன் நீ கொண்ட உறவு முதல் மண்ணுடன் நீ கொண்ட உறவ…
-
- 3 replies
- 6.8k views
-
-
மனம் என்னும் மாயப் பிசாசு மறைந்திருந்து கொல்லும் எண்ணங்கள் எதிரிகளாக கடிவாளமற்ற குதிரைகளில் காததூரம் கடக்கும் சொற்களற்ற நிழல்களிநூடே சொல்லாது விடும் வார்த்தைகள் கோர்த்து சுவற்ற சிற்பங்களாய் கனவுகள் ஆயிரம் வடிக்கும் பகுத்தறிய முடியா உண்மைக்கும் பொய்க்கும் இடையே சஞ்சலம் மட்டும் கொண்டு சக்திகள் எல்லாம் அற சகலதும் துறக்கத் தோன்றும் ஏன் தான் மனிதற்கு மட்டும் இறைவன் ஒருமனம் தந்தான் விருப்பமற்றதை விலக்கி வேண்டாதவற்றை கழற்றி வில்லங்கம் கொண்டதை விடுத்து நின்மதியாய் நான் வாழ நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு
-
- 13 replies
- 1k views
-
-
இலைகளைந்து மரங்களெல்லாம் நிர்வாணமாகும். வெட்கத்தில் பனித்துளிகள் ஆடைநெய்து போர்க்கும். வெண்பனிகள் ஊர்முகட்டில் சித்திரங்கள் கீறும். சிற்றோடை தானிறுகி சிற்பமெனவாகும். வெள்ளாடை புூண்டதனால் - ஊர் தேவதை போலாகும். அழகழகு இதுவென்றே மனம் சொல்லியாடும். வானுக்கும் மண்ணுக்கும் ஊடல் இது போலும். ஊடலினால் கதிரவனின் முகமழிந்த தாகும். கதிரவனின் முகம் நினைத்து முகிலினங்கள் உருகும். உருகிவிடும் கண்ணீரே பனித்துளியாய் வீழும். மண் வீழ்ந்த பனித்துளியில் மனமுருகிப் போகும். அழகருந்தி மனமுருக உடல் நடுங்கலாகும். உடல் நடுங்க, திடம் ஒடுங்க வாழ்வு வெறுப்பாகும். வாழ்வு வெறுப்பாக - மனம் முகவரியைத் தேடும். வாழ்வு வெறுப்பாக - மனம் …
-
- 3 replies
- 1.3k views
-
-
"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு... 30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு... இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க.. கமல் படம். மன்மதன் அம்பு. மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு வந்து விட்@டா@மா என்கிற அளவிற்கு ஒரே கமலஹாஸன் களும்! கமல ஹாஸிகளும்! அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு நூல்தனம் காட்டும் அவரை பரமக்குடி பையன் என்றும் பெரியாரின் பிள்ளை என்றும் பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள் இந்த அம்பு... இராம பக்தர்களின் கைகளிலிருந்து …
-
- 34 replies
- 5.4k views
-
-
முதலிரவில், என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே நொறுங்கிப்போனது உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும். ஒவ்வொரு நாள் காலையிலும், தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில், பொய்த்துக் கொண்டிருக்கிறது மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும். புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும், உன் முகம் அடையும் பிரகாசத்தை நம் வீட்டு படுக்கையறையில் கூட இதுவரை கண்டதில்லை. உப்புப் போட மறந்ததையும், சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும், தாண்டி என்னிடம் பேச விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை. 'அவரு', 'என் வீட்டுக்காரர்' உன் உதடுகள் உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு என் பெயர் கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு. "ம்ம்ம்........ வந்து…
-
- 17 replies
- 3.3k views
-
-
புத்தம் புதியதோர் இராம கதை.....! முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும் முழுமையாய்க் கிடைக்கப் பெற்று ஒப்பரும் பதவியைத் துறந்து ஓதரும் கலைஞர் சென்றார் கட்டிய காவியோடு அன்னார் கால்நடை ஆகச் செல்ல கனிமொழி கண்ணீர் சிந்தி கதாநாயகன் பின்னே செல்ல சண்டையிட்ட மைந்தர்களும் சரிவரப் பின்னே செல்ல உற்ற நல் மனைவி மாரும் உளம் நொந்து வழி அனுப்ப காவியம் பாடிய கவிஞர் எல்லாம் கண்ணீர் சொரிந்து நிற்க சோனியா அம்மையாரும் இதை சோர்வுற்று பார்த்து நிற்க புத்தம் புதியதோர் இராமகாதை புவி மீது அரங்கேறிற்றன்றோ? இப்படித் தீர்ப்பை மக்கள் இணைத் தொன்றாய் அளிப்பாரென்று கற்பனைக் கனவில் கூட கண்டிரார் கலைஞர் அன்றோ? வித…
-
- 0 replies
- 1k views
-
-
இனியவளே… என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான் எனக்கு கோவம் வருமென்று நமக்குள் பிரிவே வரக்கூடாது அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக நீ இருந்துவிட கூடாதென்பதால் உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான் யோசித்தேன் எப்படி நுழைவதென்று நுழைந்தபின் மறந்தே போனேன் எப்படி யோசித்து நுழைந்தேனென்று ***************************************************** கவிதைகள் எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள் நான் தெரியாது என்றேன். அப்ப என்ன தெரியுமென்று கேட்டார்கள…
-
- 5 replies
- 1.3k views
-
-
CMR கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்/கவிஞர் ஒளவை விக்னேஸ்வரன்
-
- 0 replies
- 581 views
-
-
என் நினைவுகள் நம் காதலையும் மீட்டுப் பார்க்கின்றன தினம் தினம் என் உணர்வுகளை உனக்குக் கூற நினைக்கின்றன என் வேதனைகளை உன்னிடம் இறக்கி வைக்க ஆசைப்படுகின்றன வேதனைகள் வாட்டும் நேரத்தில் உன் தொலைபேசியின் இலக்கத்தை அழைக்கின்றன குரலின் மயக்கத்தில் துன்பங்கள் பறந்து சொல்கின்றன என் துயரங்களை கேட்டு நீ அவதைப்படுவதை என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை உன் மேல் உள்ள பாசங்கள் அதைக் கூற மறுக்கின்றன என் சோகங்கள் என் பாதையில் தொடரட்டும் உன் பாதைகள் பூவாய் பூக்கட்டும் இனியவனே எங்கிருந்தாலும் நீ வாழ்க!!!!
-
- 7 replies
- 2.2k views
-
-
முள்ளிவாய்க்கால் காற்றிடை வாழும் உயிர் பேசியது.. உலோகத் துகள்களிடை உடல் துகள்களாகி சிதறி நிற்க காற்றுக் கூட அவதிப் பட்டது அகதியாகி சன்னங்களிடை தன் இடம் பிடிக்க. இட நெருக்கடியில் உயிர்கள் உரசிக் கொண்டன செல்லுமிடம் சொர்க்கமோ நரகமோ திசைகள் தெரியாமல் சன்னங்களில் அவை படுத்துறங்கின. ஊழியக் காலமோ கலி காலமோ அல்ல அல்ல.. தமிழர் அழிப்புக் காலமாய் அது நிகழ்ந்து கொண்டிருந்தது..! சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன சதா மரண ஓலங்கள் உலகை ஆளும் அலைகளின் ஊளைகளை தாண்ட வழியின்றி களைத்தே மெளனித்தன. உலக மானுட மனச்சாட்சி கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...! மீண்டும்.. காற்றிடை வாழும் உயிர் பேசிக் கொண்டது.. அந்தக் கொடுமையின் தாண்டவம் கண்டு ஆண்டுகள் …
-
- 0 replies
- 594 views
-
-
ஆண்களின் நட்பு உதை பந்து போல எவ்வளவு உதைத்தாலும் உடையாது பெண்களின் நட்பு கண்ணாடி போல அவர்களை போலவே நொறுங்கி விடுகிறது...♥♥
-
- 0 replies
- 865 views
-
-
வணக்கம். தமிழீழ விடுதலை காணங்கள் தேவை. படைப்பாளிகளிடமிரந்து எதிர்பார்க்கப் படுகிறது . உங்கள் ஆற்ரலை வெளிப்படுத்த இவை நல்லதொரு சந்தர்பம் தமிழீழத்தின் பிரபல பாடக்கர்கள் ஊடாக இவை வெளி வர இருக்கின்றன இவை அணைத்தும் தமிழீழ தேசத்தை பற்றிய கருப்பொரளாக அந்த விடுதலை சம்பந்தமாக அமையப் பெற வேண்டும். இன்றே களமிறங்குங்கள் படைப்பாளிகளே ஆர்வலர்களே மொழியால். இனத்தால் ஒன்று பட்டு விடிகின்ற எம் தமிழீழ சேத்திற்கு பாட்டால் உயிர் கொடுத்து நாமும் உணர்வு கொண்ட எழுக உங்கள் படைப்புக்களை எமக்கு தனிமடல் ஊடாக அனுப்பி வையுங்கள். உங்கள் பெயர் தொலைபேசி இலக்கம் அல்லது கலகத்தின் அங்கத்தவராயின் தனிமடல் ஊடு தொடர்பு கொள்ளலாம். மேலும் படிக்க.... …
-
- 5 replies
- 2.1k views
-
-
நாசாவுக்கு (NASA) வயது 50 தீண்டாக் கனிமமாய் திட்டுக்களில் கிடந்த போதும் தீண்டித் தீட்டி திடமாய் இலக்கு வைத்த போதும் தீயில் தவிழ்ந்து உருப்பெற்ற போதும்.. தீராத வேட்கை விடுதலைத் தாகம் எனக்குள். தீர்வுகள் தேடும் அக்னிக் குஞ்சாய் வானில் பறக்கிறேன் அண்டம் திறந்து தேடித் தருவேன் இருளுக்குள் என்ன..??! விடை. வானத்து மின்மினிக்குள் மிண்ணுவதென்ன வைரமா..??! வட்ட நிலவுக்குள் வாழ்வதென்ன வாலைக் குமரியா..??! செக்கச் சிவந்த செவ்வாய்க்குள் சிவப்பு என்ன தோஷத்தின் கோபமா..??! வளையங்கள் தாங்கும் சனிக்குள் சூத்திரம் என்ன சாத்திரமா..??! அருந்ததிக்குள் வாழ்வதென்ன ஆகாய நங்கையா..??! தேடப் போகிறேன் எட்டாத் தீர்வுகள்..! வானில் எப்…
-
- 12 replies
- 1.8k views
-
-
-
மழை பெய்தது வயல் நிறைந்தது உயர்த்தி கட்டிய வரப்பில் நிறைந்து வந்தது வெள்ளம் நிறைந்ததால் நிமிர்ந்தது நிறை குலை தள்ளிய நிறைந்த நெற்கதிர் விளைந்தது விண்ணுயர்ந்து விளைவித்தவன் விவசாயி உழுது மறுத்துளுது உயர் விதை தேடி உண்மை உழைப்பை குருதியை உருக்கி வியர்வையாய் கொட்டி வான் பார்த்த பூமியில் தான் பார்த்து ஆய்ந்து நாற்று நடவு நட்டு அங்கெ இங்கே கடன வாங்கி அதிகமும் இல்லாமல் குறைச்சலும் இல்லாமல் அளவாய் வரப்பு வெட்டி அன்பான குழந்தைக்கு பால் புகட்டுவது போல் நன்றாய் நீர் விட்டு அந்த மருந்து இந்த உரம் என்று இன்னும் கடன் வாங்கி உழைப்பை போட…
-
- 2 replies
- 4.8k views
-
-
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்...... பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...... இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்... கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்... நான் இங்கே நல்லா…
-
- 0 replies
- 3.8k views
-
-
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் …
-
- 1 reply
- 4k views
-
-
(Mohamed Nizous) தெருக்கள் எங்கும் செய்தி தீயாகிப் பரவியது குருக்கள் மடத்தில் கடத்திக் கொன்று போட்டான்களாம் விடுதலை என்ற பெயரில் தறுதலைக் கூட்டம் செய்த கொடூர பேயாட்டத்தில் குருக்கள் மடமும் ஒன்று வாப்பா வருவாரென்று வாசல்நின்ற குழந்தையிடம் பேச முடியாமல் தவித்து பிள்ளையின் தாய் அழுத நாள் அப்பாவி இவர்கள் என்று அறிந்தும் கொடியவர்கள் துப்பாக்கி முனையில் செய்த துரோகத்தின் நினைவு நாள் பொருட்களை கொள்ளையிட்டு பொதுமக்களை தள்ளிச் சென்று பொறுக்கிகள் போல சுட்டார் பொறுக்காது எவரின் மனமும் எத்தனை அழுகைகள் எத்தனை சாபங்கள் அத்தனையும் பலித்தன அப்புறம் நந்திக் களப்பில் அம்பலாந்துறையில் தேடி அகழ்ந்து பார்த்தால் தெரியும் …
-
- 3 replies
- 1k views
-
-
தேடித் பார்க்கின்றேன் இன்னமும் பெரிதாக எதுவும் இங்கு மாறிவிடவில்லை எல்லாம் அப்படியே இருக்கின்றன இயல்பாகவே மண்ணில் இருக்கும் செங்குருதியின் நிறம் தோட்டத்தின் நடுவே இழுத்து போடப்பட்டு உருண்டு போய் பந்தாக காவிளாச்செடிகள் பச்சையாக வெட்டி சூடு மிதிக்கப்பட்ட பனை ஓலைகளும் மூரி மட்டைகளும் வேலிக்கரையில் வளர்ந்து ஆழமாக வேர் விட்ட அறுக்கம்புல் வேலியில் படந்து காய்த்து தொங்கும் பாவல்காய் முன்னர் பாட்டி வைத்த இடத்திலேயே அடுப்பு எரிக்க இப்போதும் பனையின் மட்டைகளும் கொக்காரைகளும் அதே சாணி மெழுகிய நிலம் தாத்தாவின் கயித்து கட்டில் கொடியில் படபடக்கும் தோய்த்த நாலுமுழ வேட்டி துலா கயிற்று கிணறு தாவாரத்தில் தொங்கும் தென்னோல…
-
- 4 replies
- 1.8k views
-
-
நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்... இறை தூது கொண்டு.. நீ வந்தாய் தூசிகள் படித்த மனித மனங்களை தூய்மைப்படுத்த..! அகிலத்தில் - முதலாய் அகிம்சை எனும் ஆயுதம் தூக்கிய இளைஞனே அப்பாவியாய் நீ உலகை வலம் வந்தாய். மனித மனங்களை மாண்பால் பண்படுத்த நீ முயன்றாய்..! ஆனால்... அடப்பாவிகள் உன் தலையில் முட்கிரீடம் இட்டு தோளில் சிலுவை வைத்தார் இறுதியில் அதில் உனை அறைந்தே வீரம் கொண்டார்..! அதர்மத்தின் வீரம் அகோரம் தர்மத்தின் வீரம் சாந்தம்..! இளைஞர் எம் முன்னோடியே விடுதலைப் போராளியே.. நாமும் வருவோம் உனது தடம்படித்தே..! தோழனே ஜேசுவே உன் பிறந்த நாளில் உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..! வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல சாண்…
-
- 8 replies
- 1.2k views
-
-
வானம் கறுத்து வடித்தது கண்ணீர் – மர வேரினை நனைத்து வீழந்தது மண்ணில்! உயிரது வாழ உதவிய அந்நீர் – அன்று மழையைப் போலே மண்ணில் சிலரும்! மானத்தமிழன் வாழ்ந்திட வேண்டி மரணத்தைக்கொடையாக கொடுத்திட்ட பலரில் உயரிய சிந்தனை பல கொண்டு உயர்ந்திட்ட உறவாய் நீயும் நின்றாய் எம் சோதரா! ஈழம் ஒன்றே தாகமாய்க்கொண்டு ஈய்ந்த உயிர்கள் பல எம்மண்ணில் உண்டு! தாயகக் கனவை நெஞ்சில் கொண்டு வாழ்ந்திட்டாய் நீயும் எம்முள் ஒன்று! நல்லது தீயது நெருப்பறியாது – தலைகீழாய் பிடித்தாலும் கீழ் பார்த்தெரியாது – காவிய காலத்தின் பின்னே மீண்டும் அக்கினி பூத்து உன்னால் புனிதமானது சகோதரா! மானத் தமிழரை உறவாய் கொண்டாய்! எங்கள் மனதை தமிழா நீ வென்றாய்! வாழ வேண்டும் ஈழம் என்றே வங்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அதிகாரத் திமிர் ஒன்று அடங்கிப்போனதின்று-பா.உதயன் அதிகாரத் திமிர் ஒன்று இடிந்து விழுந்தது இலங்கைத் தீவில் இன்று இனவாதத்தின் இன்னும் ஒரு முகம் எரிந்து வீழ்ந்தது வீரம் பேசிய கோத்தா வீட்டுக்கு போய் விட்டார் தோல்வியை சுமந்தபடி பேரினவாதத்தின் போர் முகம் ஒன்று போன இடம் தெரியவில்லை சர்வாதிகார ஆட்சி ஒன்று சரிந்து விழுந்திருக்கிறது பசியோடு கிடந்தவனுக்கும் உரிமைக்காய் போராடியவனுக்கும் தொலைந்து போன மக்களுக்கும் நீதி கிடைத்தது போல் இருந்தது இன்றைய நாள் கூட நின்றவனுக்கும் கூடிக் குடிச்சவனுக்கும் முண்டு கொடுத்தவனுக்கும் போலிச் சோஷலிசக்காரனுக்கும் அபிவிருத்தி என்று அந்த மக்களை ஏமாத்தியவனுக்கும் திருடர்…
-
- 0 replies
- 389 views
-
-
-
- 17 replies
- 2.4k views
-