Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தினசரி தூறல்கள்... பட்டப்பகலில் ஒரு நிலா..பிரகாசமாக.. அது நீதான்... ஒரு குயில்க்கூட்டம்.. கவலையாக மௌனவிரதம் இருக்கிறது.. நீ பாடியதை அவை கேட்டனவாம்.. நிலைக்கண்ணாடியின் தலைக்கணம் தவறேயில்லை.. தினமும் உன்னைத் தரிசிக்கின்றதே.. உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம்..கவிஞரானார்கள்.. உன் பேரைச் சொல்லியே.. எனது வாழ்க்கை.. முழுமை பெறாத நூலாகியது.. உன் முதல் பாதியை நான் படிக்கவேயில்லை.. எங்கள் முதலிரவில் மட்டும் நான் தூக்கத்தில் விழிக்கவில்லை.. அன்றுதான் நாம் தூங்கவேயில்லையே.. ஒரு ஏழையாயிருந்தும். இருபது வயதின் பின்..நான் பசிக்கொடுமையை உணவில்லாத போதும் உணர்ந்ததில்லை.. அப்போதிலிருந்து நீ என்னைக் காதலிக்கிறாய்…

  2. சீமைக் கிளுவைக்குள் சீவியம் செய்தவள் சீமைக்குப் புறப்பட்டாள் சீறி எழுந்த சிறீலங்கன் எயார் லைன்ஸில்..! கூலி கொடுத்து தாலி வாங்கி வேலி போட்டனள் நாணி நின்றவள் கூனி நிற்பாள் என்று..! மாதம் பத்து சும்மா இருந்தவள் சுமந்தனள் சுமைகளோடு சுதந்திரக் கனவு..! தாலி பிரித்து வேலி தாண்டி நடப்பது பகற் கனவு கண்டனள் ஏங்கினள்.. படிதாண்டிப் பத்தினியும் பரத்தையானதில்..! சீமையில் சீதனம் சீர் தனம் சீ சீ.. என்பதில் சிந்திக்க இருக்கு சில சுயநலம்.. அதில் அடங்கி இருக்கு பலவீனம்.. பண வீக்கம்..! சீமைச் சிறப்புக்குள் சீரழியும் இயற்கைக்குள் சீமைக்கிளுவைகள் சீர் பெறுமா..??! விடை தேட ஆணும் பெண்ணும் எங்கே..??! கலந்தடி…

  3. Started by Paranee,

    பூ விழுந்த மனசு இன்னும் வெளிவராத கவிதைத்தொகுப்பில் இருந்து சில கிறுக்கல்கள். 1. எனக்கென உனக்கென பங்குபோட போராட்டமென்ன நிலமா ? சூரியன் கிரணம் படுமிடமெல்லாம் விரும்பி அருந்தி கொள்ளலாம் 2. மேற்கில் கரைந்து கிழக்கில் பரவும் கிரணங்கள் போல்த்தான் போராட்டமும் வெற்றி தோல்வி நிரந்தரமல்ல 3. விலைவிட்டு வளர்ந்த நகம் விரைவிலேயே ஓடிவது போல் உன்னை விட்டு விலகியதால் ஓடிந்து மடிந்து போகின்றேன் 4. வானவில்லிற்கு வண்ணமோர் வரப்பிரசாதம் என் வாசல் தேவதையே எனக்கு நீதான் வரப்பிரசாதம் 5. இரவின் சுவடுகளை தேடுவதுபோல் - இழந்துவிட்ட இளமையை தேடுகின்றோம் விரிந்து கிடக்கும் வாழ்நாளை விரயமாகவே கழிக்கின்றோம் 6. …

  4. கொஞ்சும் நிலவு கொஞ்சா நெருப்பு நன்றி வெண்ணிலா. கண்கள் கெஞ்சும் அழவே துடிக்கும் உதடுகள் சுளித்து சிரித்து நடிக்கும் நெஞ்சம் உந்தன் நினைவில் வலிக்கும் மஞ்சம் என்னைப் பார்த்தே நகைக்கும்.

  5. என் இருப்பின் எல்லைக்குள் என் வசமாகுமா? வெள்ளி மீன் சிரிக்கும் வானக் கடலினுள்ளே பிள்ளை நிலா தவழ்ந்துவரும். மல்லிப் பூ விரிக்கும் மோகனப் பொழுதினிலே உள்ளம் என் வசமிழக்கும். படம் விரித்த கடல் நாகம் தரையிலே மோதும். - பாவம் இடம் விட்டு கரைமகுடி அதைத் திருப்பி அனுப்பும். உப்புக் காற்று வந்து - என் உடல் தழுவி, சப்புக் கொட்டி - பல சண்டித்தனம் செய்யும். தப்பென்று யான் முறைத்தால் அப்பால்ச் சென்று தென்னங்கீற்றோடு கை கொட்டிச் சிரிக்கும். பட்டுத் துகிலுடுத்திச் சிட்டுக்குருவி வரும். மொட்டவிழ் மலரினுள்ளே மட்டு எடுத்துக் கொண்டிருக்கும். வட்டமாய் விழி அகல, வெட்டாமல் யான் முழிக்க - தன் குட்டிச் சொண்டாலே, - எனைக் க…

    • 2 replies
    • 1k views
  6. கனவுகளைச் சுமந்தபடி தென்னங்கீற்றில் முகம் துடைத்து திங்கள் விழும் நிலாமுற்றம் கன்னல் தமிழ் பயின்றிட்ட கவின் கொஞ்சும் கலைக்கூடம் முன்னும் பின்னும் எல்லையிட்டு முப்புறமும் கடலேரி வான் நோக்கி உயர்ந்து வணங்கா மண்காக்கும் கற்பகத்தரு வைகறை மேகத்தைக் கிழித்து வாசல் தெளிக்கும் காலைக் கதிரோன் அந்த ஈரக் காற்றின் இதமான வருடல் முற்றத்து வேலிகளில் எட்டி நிற்கும் செம்பருத்தி இரட்டை வடக் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிய வேப்பமரம் கொத்தும் மீன்குஞ்சு குதித்து விளையாடும் குளக்கரைகள் இடையில் குடமசைய நடைபயிலும் இளமங்கையர் சிரிப்பொலிகள் மாதமொருமுறை எம்மை மகிழ்வூட்டும் திருவிழாக்கள் இன்றும் எம் இதயங்களில் இனிமையான நினைவலைகள் கனக்கும் இதயங்களி…

  7. இதயத்தில் , உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! முகம் இழந்தது அகம் சிவந்து நடக்கின்றேன் வரைந்துவிடு பெண்னே எனக்கு ஒரு கவிதயை கல்லுக்குள் காதலை தேடினேன்-என் நெஞ்சுக்குள் உன்னைத் தூவினேன் எத்தனை இரவுகள் கடந்து சென்றுருக்கின்றேன் எத்தனை நினைவுகளை மறந்து சென்று இருக்கின்றேன்- பெண்னே உன்னை மட்டும் மறந்து செல்ல முடியவில்லை பூட்டிய உன் இதயத்தால் ஈட்டியாய் தைக்கும் என் உயிரை மீட்டிய பல்லவி கொண்டு தீட்டியே விடடி எனைக்கவியாய் -இனியவள் பூட்டிய இதயம் ஓலிவடிவில்.....

  8. எமக்காகப் பிறந்தவர் எம்மில் பிறப்பாரா? வானத்து எல்லையெங்கும் வண்ணப் பூச்சொரியும் கார் காலத்து ஓர் இரவு களிப்பான மார்கழியில் ஞாலத்து இருளகற்ற நம் பாவம்தனை மீட்க காலத்தின் தேவைக்காய் கன்னி மகன் அவதரித்தார் ஓளியாக வந்த இந்த உத்தமனாம் இறை மைந்தன் வழியாக எம் வாழ்வில் வந்து பிறப்பாரா? துளிகூட அமைதியின்றி துன்புறும் சோதரரின் துயரைத் துடைக்க மனத் துணிவைத் தருவாரா? ஆயுதமே வேதமென்றும் அடக்குமுறை கொள்கையென்றும் அன்பை வெறுப்பவர்க்கு நற் பண்பைத் தருவாரா? ஆணவத்தின் பிடியினிலே அல்லலுறும் இப்பூமி காண்பதற்கு புது உலகக் கதவு திறப்பாரா? மனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான பூமியிலே தனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா? வன்முறைகள் சூழ்ந்த இந்த வக்கிர …

    • 3 replies
    • 11.2k views
  9. Started by இளைஞன்,

    தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? கன்னத்தில் முத்தமிட்டால் ...

    • 3 replies
    • 1.4k views
  10. Started by ரஞ்சித்,

    தம்பி ! நீயும் நானும் திரிந்தலைந்த எல்லப் பற்றைகளும்- முள்ளேறிய வீதிகளும் இப்போதும் வந்துபோகும் ! கருக்கம் மட்டை பிய்த்து-திராட்சை பறித்த கணங்களும் காரிருளில் மின்னி மறையும் ! பூவரசங்கிளையில் வாள் பிடித்து-மெய்யாவுமே அடித்தழுத நினைவுகளும் என்னைச் சுற்றி வரும்- ஆனால் நீ மட்டும் வராமலயே இருந்துவிட்டாய் ! நீ- புரவியேறிப் போன செய்தி கேட்டு விழித்திருந்தோம் இரவாகி நீ விண்ணேறிய சேதி வந்தது- கதறக் கூட முடியவில்லை- ஊர்சுற்றிக் காவலிருந்தது ! உன் இழப்பிலும் ஒரு உற்சாகம்-நான் கொடுத்து வைக்கவில்லை ! வைத்திருந்தால் உன் முன் நான் சென்றிருப்பேன் !

  11. தாய் நிலமும் தனையர்களும் இந்துக் கடலில், முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற என் அழகிய தேசமே என்னுடன் பேசு. நாவில் நீர் ஊற குட்டிகள் பின்னே அலையும் நாய்களைக் காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும் 'நெடுந்தீவின்' புல்வெளிகளை நாங்கள் இழந்து படுவோமா ..... 'அறுகம் குடாவில்' தோணிகள் மீது அலைகள் எறியும் கடலை அதட்டி, வலைகளை விரித்து நூறு நூறாண்டாய் முஸ்லிம் மீனவர் பாடும் பாடலை நாங்கள் இழப்பமோ? வரலாறொன்றின் திருப்பு முனையில் மார்புற எம்மை அணைத்த படிக்கு போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே சொல்க எனக்கு! எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே. உண்டே உண்டே விலங்குகள் பறவைகள் மரங்கள் நிமிர்ந்திட சரணாலயங்களும் தேசிய வனங்களும். மனுகும…

    • 0 replies
    • 793 views
  12. இரத்தம் எழுதிய கவிதை மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கனைத்த…

    • 3 replies
    • 1.5k views
  13. முதற் காதல் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் பஸ் வரும் வீதியில் தடைக…

    • 28 replies
    • 5.7k views
  14. எச்சரிக்கை மடல் மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும், தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவு செய்து மேற்கொண்டு, இக்கவியின் இரத்த ஓடையை இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்! ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது. நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது. உந்தும் வலு உறுதியாக வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம் வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது. பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால் எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும். வலியின்றி வளர்ச்சி இல்லை. வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும். வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு…

  15. Started by இனியவள்,

    மீள் ஆயுள் ஓலிவடிவில்... உன் தோள்களை விட்டு நகர்ந்தால் என்னை இழுத்து இழுத்து அணைத்தவனே இரவில் உலாப் போக பிடிக்கும் என்பதால் நிலாவை ஓய்வெடுக்கச் சொன்னவனே உனக்கு பிடித்த பகலை இரவாக்கி காத்திருக்கின்றேன் என் மரணத்திற்க்காய் வாழ்வின் இறுதி நாளில் தொலைத்த உன்னைத் தேடுகின்றேன் நீ தொலைந்ததை மறந்து யார் செய்த பாவமடா? யார் தந்த சாவமடா? உன்னை காதலித்தபடி இந்த ஆயுள் என்னை மறு ஆயுளுக்காக அழைக்கின்றது நான் சென்று வருகிறேன் -இனியவள்

  16. Started by nunavilan,

    உன் புன்னகை ஒரு பரவச தேசத்தின் பளிங்கு மாளிகை போல் பரிசுத்தமானது உன் புன்னகை. அது இரவை உடைக்கும் ஓர் மின்னல் கோடு போல தூய்மையானது தேவதைக் கனவுகளுடன் தூக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலைப் புன்னகையுடனும் ஒப்பிடலாம் உன் புன்னகையை. எனக்குள் கவிழ்ந்து வீழும் ஓர் பூக்கூடை போல சிதறுகிறது உன் சிரிப்பு. ஒரு மின்மினியை ரசிக்கும் இரவு நேர யாத்திரீகனாய் உன் புன்னகையை நேசிக்கிறேன். ஆதாமுக்கு ஆண்டவன் கொடுத்த சுவாசம் போல எனக்குள் சில்லிடுகிறது உன் புன்னகை. எனினும் உன் புன்னகை அழகென்று உன்னிடம் சொல்ல மட்டும் ஆயுள் கால தயக்கம் எனக்கு. நீ புன்னகைப்பதை நிறுத்தி விடுவாயோ …

    • 4 replies
    • 17.6k views
  17. Started by வெண்ணிலா,

    அன்பே வா...... நீயும் நானும் அன்போடு நீண்ட காலம் இன்போடு உறவு என்ற ஓடத்தில் ஏறி உல்லாசமாக ஒன்றாக உலகைச் சுற்றி ரசிக்கணும் என உறக்கத்தில் கனவு கண்டேன் உன் பொல்லாத கோவம் கண்டு என் கனவு நனவாகா என இன்றுதான் உணர்ந்தேன் நான் அன்று போலில்லை நீ என்பதை எப்போதும் இனிமையாக இருந்தேன் தப்பேதும் நான் செய்ததறியேன் வேண்டாம் என்மேல் அன்பே வீணான கோவம் உனக்கு துன்பங்கள் புடைசூழ நீயின்றி துவண்டு துடிக்கின்றேன் உனைப்போல் வேறோர் துணையின்றி ஊனை மறந்து கலங்குகின்றேன் விட்டுவிடு உன் கோவமதை கட்டியணை பாவியிவளை கெட்டிக்காரி என அடிக்கடி தட்டிக்கொடுப்பவனே அடிமேல் அடிவைத்து உனக்கு நடை பழக்கிய உன்னவளை இடி ப…

  18. Started by yaal_ahaththiyan,

    உன்னை நாளையும் சந்திக்கலாம் என்ற சந்தோசத்தைவிட இன்றும் உன்னைப் பிரிவதே கொடிது * நம் முதல் சந்திப்பை பற்றி யாரிடமாவது பேச நினைக்கும் போதெல்லாம் வாயடைத்துவிடுகிறது நம் முதல் பிரிவு * ராஜ்மகாலில் கூட கடைசியாக நின்றாலும் நுழைந்துவிடலாம் யாருமே காத்திராத உன் வீடுதான் என்னை நுழைய விடாது உலக அதிசயமாய் தெரிகிறது * எப்பதான் எனை உன் வீட்டுக்கு கூட்டிச் செல்லப் போகிறாய் நான் முதல் முதலாய் வாங்கிக் கொடுத்த பொம்மை கிழவியான பிறகா..? * உன்னைப் பார்த்தால் யாருக்கும் அலுக்காதுதான் அதற்காக உன்னை உன் வீட்டிலே வைத்திருந்தா என் கண்கள் சும்மாவிடுமா..? -யாழ்_அகத்தியன்

  19. துரத்துகிறேன்...என்னைத்தான்* நிஜத்தைத் தொட நிழலின் வாலைப் பிடிக்கிறேன். நான் திருப்பித் தீண்டிட நிழலும் திருப்பிக்கொள்கிறதே? கற்பனைக்கு எல்லை குறிக்கிறேன் - அது என்னை மீறி எங்கோ சஞ்சரிக்கிறது... சுடும் நெருப்பை அறிந்த பிறகும் - அதுவே சுகமென - என் சுட்டு விரலை கரித்துக்கொள்கிறேன். கொடுங்காயங்கள் நிச்சயமென அறிந்தும், விபரீதத்தோடு - நான் விளையாடுகிறேன்! ஆற்றுபெறா ரணங்கள் பெற்றுத் தந்த பாடங்களை புரிந்து கொள்ள - நான் துரத்துகிறேன்... விடாது... என்னைத்தான். - சூர்யா

    • 2 replies
    • 1.3k views
  20. Started by yaal_ahaththiyan,

    நீ எழுதும் கவிதை அழகுதான் அதற்காக யார் கண்ணையும் நம்பி என்னைக் கைவிட்டுவிடாதே * நீ இல்லாத தருணங்களில் வாடிப்போகும் எனக்காக நீ கொடுத்த பூச்செடிதான் என்னை மலரவைத்துக் கொண்டிருக்கிறது * எதுவும் கேக்காமலே என் மடியில் நீ உறங்கியபோதுதான் தெரிந்தது உன் அன்பின் ஏக்கம் அதற்காக உன் குழந்தைதனத்தை கையிலுமா வைத்திருப்பாய் என்னை பிடித்தவாறே உறங்குகிறாய் * எவ்வளவு அவசரமாய் வாசல் கடக்கையிலும் உன்னை ஞாபகப்படித்தி விடுகிறது முதல் முதல் சந்திப்பில் நான் வரும்வரை நீ சாய்ந்து நின்ற வீதிச்சுவர் * நீ பிரியும்போது கவனமாய் இரு என்று சொன்னதற்கு பதிலாய் உன்…

  21. ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் …

  22. ஏய்.. உலகமே விழித்துக்கொள்.. இரும்புக்கம்பிகள்.. நம்மை என்ன செய்யும்.. உலகமெலாம் தமிழனை உருட்டுவதேன்.. சிறைகள்.. வெறுமையாகும்.. நேரமெல்லாம்.. அப்பாவித்த தமிழனையா உள்ளே... அடைப்பது.. அடிப்பது... உதைப்பது... மனிதாபிமானத்துக்குள்.. அடங்காத மனிதனா கேட்பாரில்லாத.. குடிமகனா தமிழன்... மகிந்த மேய்க்கின்ற மந்தைகளா தமிழன்.. சொந்த நாட்டிலேயே.. அகதியான.. பாவியா தமிழன்.. ஏய் உலகமே.. விழித்திரு.... எங்களைப் பாதுகாக்க.. நீ வரவில்லை.. எங்களை நாங்களே பாதுகாக்க நீ விடவில்லை.. ஒரு கண்ணில் எண்ணெய்.. எம் துயர் உனக்கு தெரியமாலிருக்கலாம்.. என் தங்கையின் அழுகுரல்.. குழந்தைகளின்.. ஓலம்.. தாயின் விசும்பல்.. உன் காதுகளில் விழவில்லை.. கா…

  23. கவிதையின் அரசே! வாழீ! துள்ளிடும் வாலிபத்தால் துணையற்று வெண்நரையும், வில்லிடும் நாவளத்தால் வேதனை செய்விதியும், கள்ளிடும் கவின்பாவால் காணாமல் போகட்டுமென தள்ளி நிலம் வாழுகின்ற தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது. இருவயது மழலையாக இதயத்தில் உலவு கவியே! அறுபது அகவையய்யா அகத்திலே பதியவில்லை. ஆண்ட நின் புலமைகென்றால் ஆயிரம் அகவை தாண்டும். பூண்ட மண்கோலத்திற்குள் புதிர் கூடி நிற்குதய்யா! தீரப் பெருங்கவியே! தீராத மாவரம் தந்த துரோணக்குருவே! ஏறுபோல் நிமிர்ந்த எழுத்தின் வீரியமே! கண்ணூறு படுமய்யா! கரிநாச் சொல்லிது. காலடி மண்ணெடுத்துக் கற்பூரச் சுடரிலே போட்டிடுக! கூர்வடிவேலை ஆளும் சுந்தரப் பேச்சும், வேரடி வீரம் …

  24. Started by Kavallur Kanmani,

    வரமா? சாபமா? நாளை மணக்கோலம் காண மனமெல்லாம் பூரிப்பாய் மலர்ந்து விட்ட மல்லிகையே உன் சந்தோசக் கனவுகளுக்கு இன்றுடன் சாவுமணி அடிக்கப்படுவது உன் காதுகளுக்கு கேட்காது நாளை உன் கழுத்தில் இடப்படும் விலங்கு உன்னை ஆயுள் கைதியாக்குவதை நீ அறியாய் உன் கைத்தலம் பற்றக் காத்திருப்பவனின் கைகளில் நீ ஒரு விளையாட்டுப் பொம்மை நாளை உன் சிறகுகள் ஒட்ட நறுக்கப்படும் இன்று நீயோ பருவச் சிட்டு நாளை முதல் சிறகொடிந்த பறவை நாளையிலிருந்து உன் நெஞ்சில் மனச்சுமை அதனால் தான் இன்று உன் தலையில் மலர்ச்சுமை உன் உடலெங்கும் கொள்ளை நகைகள் காரணம் உன் புன்னகையை அபகரிக்கத்தான் குங்குமப் பொட்டு மங்கைக்கு மங்கலமாம் இதுவே உன் வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளி …

  25. Started by nunavilan,

    இளமைக்கால நட்பு நீயும், நானும் கரகமாடிய அந்த ஒற்றை விளக்கு அரசமரத்தடி... தோல் கிழிந்து இரவெல்லாம் சிராய்ப்பு வலி கொடுத்த நாய்க்கர் வீட்டு வேப்பமரம்... மட்டைகளை தோளில் சுமந்து மைல்கணக்கில் நடந்து கிரிக்கெட் ஆடிய சொசொரப்பு மைதானங்கள்... எதிரியின் பம்பரங்களை சில்லு சில்லாக உடைத்த பிரேமா வீட்டு முன்வாசல்... பசியெடுக்காத நிலாவுக்கு கும்மி தட்டி சோறு£ட்டிய தாவணி சிட்டுக்களை காண அமர்ந்த திண்ணைகள்... குமாரிடம் மூக்குடைபட்டு இரத்தம் சிந்திய நெருஞ்சி முட்புதர்... இப்படி ஒவ்வொன்றாய் பதினைந்து ஆண்டுகளில் எல்லவற்றையும் மிதித்தழித்துவிட்ட கால அரக்கன்.. மிஞ்சியிருக்கும் நினைவுகள் மட்டும் சுவடுகளாய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.