Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு. உயிராய் முளைத்த அவர் காதலில்... பூவாய் மலர்ந்தேன் செடியாகும் கனவோடு..! கருவறை தந்தவள் கருணையே இன்றி பாதியில் பறித்தாளே சாய்த்தாளே என்னுயிர்.! கண்ணீர் கூட காணிக்கை இல்லை உரிமைகள் கூட எழுத்தில் இல்லை கருக்கலைப்பென்று வாழ்வை அழிப்பவரே ஒரு கணம்... எனக்காய் அழுவீரோ..??! இல்லை தொலைந்தது தரித்திரம் சரித்திரம் படைபீரோ..??! நீரும் ஓர் நாள் கருவோடு இருந்தீர் மறந்தீரே துணிந்தீரே பாதகரே..! கண நேர சுகத்துக்காய் ஏனென்னை பலியிட்டீர்... சிதைக்கின்றீர் தளிருடலை..! பிறந்ததும் கொஞ்சும் உறவு பிறக்க முன் பாடையில் போவது பாவமில்லையோ..??! தளைக்க மானுடம்..!!! கரு…

  2. படித்தேன் பிடித்தது.. பிடிக்கவில்லையா.. அடிக்கவராதீர்கள்.. கவி(கமல்) பாவம்.. அவர்தானே எழுதியது.. மனித வணக்கம் தாயே, என் தாயே! நான் உரித்த தோலே அறுத்த கொடியே குடித்த முதல் முலையே, என் மனையாளின் மானசீகச் சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா! நீ என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று புரியாத வரியிருப்பின் கேள்! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா! என் தகப்பனின் சாயல் நீ அச்சகம் தான் ஒன்றிங்கே அர்த்தங்கள் வெவ்வேறு தமக்காய், ஓ தமக்காய்! தோழி, தொலைந்தே போனாயே துணை தேடி போனாயோ? மனைவி, ஓ காதலி! நீ தாண்டாப் படியெல்லாம் நான் தாண்டக்குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை. மகனே, ஓ…

  3. உறங்கிய காதல் பார்த்ததும் உன்மேல் பூத்தது காதல் என்னில் பழகாமலே ருசித்தேன் விலகியே நடந்தேன் விண்ணில் இருந்தே மண்ணில் இருக்குமுனை தொட நினைத்து நீட்டினேன் கைகளை முடியாமல் தவித்தேன் சிட்டாக மாறியுனை கட்டியணைக்க எண்ணி சட்டென வந்தேன் மண்மீது அருகிருந்தே உனை நான் அளந்தேன் பார்வைகளால் இதமாக இருந்த போதிலும் இமைகள் படபடத்தன பயத்தில் பூவான நான் காதலை இயம்ப புயலாக நீ மாறி எனை காயமாக்கி அனலான பார்வையால் எனை தகனம் செய்துவிடுவாய் என்று சொல்ல நினைத்த காதலை சொல்லாமலே புதைத்தேன் இன்றுதான் தெரிந்துகொண்டேன் அன்று நீயும் எனைபோலவே..... ம்ம்ம்ம்ம்...! உன்மீதான என் காதலும் என்மீதான உன் காதலும் உச்சரிக்கப்படாம…

    • 20 replies
    • 4k views
  4. முன்றில்வேம்பு வ.ஐ.ச.ஜெயபாலன் நினைவுள்புதைந்த வேப்பம் வித்து திறக்கும்இணைய ஓவியத் தளமாய் நெஞ்சுள்பசும் குடை விரிக்க காலத்தைமீட்டு வாழ்ந்தேன். முலை அமுது உண்டேன். நிழலில்தவள்ந்து மண் விழையாடினேன். என் அயல் சிறுமி `குஞ்சாமணியை` எங்கேதொலைத்தாள் என்று வியந்தேன். பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன். கோவிற்பொங்கலில் நீறு பூத்த தணற் பாவைகளாய் வெளியேநின்ற சிறுவரை எனது பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு அதிர்ந்தமனசை 'அது அது அவர் அவர் ஊழ்வினைப்பயன் ' என தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன். எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன் அம்மணமாக மாமா இருந்ததை கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன். ஆண்குறிவிறைக்க நோய…

    • 7 replies
    • 2.3k views
  5. கண்ணீரும் குருதியுமாய் ஈழம் ! செந்நீரின் மையெடுத்து நம் கண்ணீரின் கதையெழுதி புண்ணாகிப் போன நெஞ்சின் வலிகொண்டு கவிதை வரைந்தேன் அந்நாளில் நானும் குழந்தையாய் அம்மண்ணில் தவழ்ந்திருந்த ஆனந்தமான பொழுதுகள் அவை போன இடமெங்கே ? என் சொந்தங்கள் தூக்கமின்றி ஏக்கத்தில் வாழ்ந்திருக்கும் எண்ணத்தின் சுமை கொண்டு என் விழிகள் நிறையுதம்மா எரிகின்றது என் ஈழத் தேசமம்மா எண்ணை வார்க்க ஆயிரம் பேர் எவருமில்லை தீயணைக்க, அழுவதின்றி என் செய்வோம் ஆற்றாமையால் நாம் தவிப்போம். தவிக்கின்றார் தம்பி தங்கையர் தமிழர் என்னும் ஒர் காரணத்தால் தமைத் தாமே இழக்கின்றார் தமிழன்னை பாராளோ ? பதிலொன்று கூறாளோ ? சேறும் சகதியுமாய் நன்னிலங்கள் சீரழிந்து போவதுண்டு.…

  6. நிலா அக்காவின் கவிதைகள் நேக்கு மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கிற நேரம் பழையகளம் யாழ்களத்தில் போய் படித்தேன் அதில் பல கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன சோ அங்கே இருந்து தூக்கி கொண்டு வந்துட்டேன் ................நிலா அக்கா ஏசமாட்டீங்க தானே (அது தானே போட்சாச்சு பிறகு என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கு ) வெண்ணிலா அக்கா யாழ்களம் 2 யில் எழுதிய கவிதைகளிள் சில!! காத்திருக்கிறேன் வாழ்வின் தேடுதலுக்காக நகர்ந்த நாட்களில் என்னை நீதான் அடையாளப்படுத்தினாய் உன் மௌனத்தின் வேர்களில் பூத்திருக்கிறது என் காதல் பூ பனித்துளியை பேட்டி காணும் மேகங்கள் விண்மீனைப் பிடிக்கும் மூங்கில்களில் அவசரம்.. இப்படியான என் கனவுகளின் தொடர்ச…

  7. காலநதியின் வேகமென்ன? பனிக்காலக் காலைப்பொழுது பகலவன் இல்லாமலேயே விடிந்தது வழக்கம்போல, இறக்கைகளற்ற கடிகாரப்பறவை சிறகடித்துப் பறக்க காலக் கண்ணாடியில் என் முகம் பார்க்க முயன்றேன் கண்ணுக்குள் கலைந்திட்ட பல நூறு கனவுகள் நினைவுத் திரையில் நிழற்படமாய் காட்சிகள் மணித்துளிக்குள் கூவின எத்தனையோ மனக்குயில்கள் அருகே'அம்மா"என்ற அழைப்பொலி பக்கத்தே பள்ளிச் சீருடையில் என் பருவ மகள் என் நினைவப் புத்தகத்தின் பக்கங்கள் படபடக்க பள்ளிச் சீருடையில் துள்ளும் இளமையுடன் நான் அந்த மின்சாரக் கனவை மெல்ல உதறிவிட்டு பக்கத்தில் நிற்கும் பதினாறு வயதுப் பருவப் பெண்ணை நோக்கினேன் ஓ....நாளை இவளும் என்னைப் போல..... வீதிக் கடவையில் விசிலடிக்கும் மின்ச…

  8. மாவீரர்கள் பற்றிய கவிதைகள் வேண்டும். யாழில் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். உங்களிடமிருந்து மாவீரர்களின் தியாகங்கள், சாதனைகள் பற்றிய கவிதைகளை எதிர்ப்பாக்கிறேன். வான்புலிகள்,கரும்புலிகள் பற்றிய கவிதைகளும் வேண்டும். வருகிற செவ்வாய்கிழமைக்கு முதல் வந்தால் நன்றாக இருக்கும்.

  9. பூக்கள் கூட உன்னைப் ப்போல் புன்னகையால் முகம் மலர்ந்ததில்லை சமாதான புறா கூட உன்னைப்போல் சமாதானம் பேச உலகம் சுற்றியதில்லை உலக பேச்சுவார்த்தை மேசைகளுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த சமாதான புறா நீயல்லவா உன்னோடு ஆயுதம் குழந்தையாய் உறங்கியபோதும் அழகு தமிழ் சொல்லெடுத்து செல்வன் நீ அற்புதமாய் போரடினாயே வழிகாட்டி பலகைகூட காட்டிவிட்டு இருந்துவிடும் தளபதியாய் நீ இருந்தபோதும் கூடவே கைபிடித்து கூட்டி வந்து விட்ட தாயல்லவா நீ தேசத்தின் குரலோடு ஈழத்தின் விடிவிற்காய் அகிலம் சுற்றி வந்த ஈழத்தின் குயிலே கூட்டைவிட்டு நீ வாரக்கணக்கில் அல்லவா உலகம் சுற்றி வந்தாய் ஏன் ஏன் எங்கள் கூட்டில் இருந்தபடியே நீ நிரந்…

  10. ஒப்பிலாது நீ உலவினை உலகிடை!- பாவலர். பரணன் குழந்தை யோவெனுஞ் சுபதமிழ்ச் செல்வனே குழைந்த தோவுடல் கோழையர் குண்டினால் விழுந்தை யோநிலம் வென்றிடப் போகையில் இழந்த மேமதி யென்செய்கு வாமினி ஒப்பி லாதுநீ யுலவினை யுலகிடை ஒப்பி யேற்கிலா நாட்டினர் கூடவுன் செப்பு வாயதன் சிரிப்பினா லொப்பியே எப்ப வுந்துணை யாகுவம் என்றரே! அண்ணன் பாலசிங் கத்தையி ழந்தபுண் இன்னும் ஆறவில் லையதற் குளேயுமே அன்ன ரோடுநீ கலந்துமே சூழவும் பின்னர் அங்குதான் பெயர்ந்துந டந்தையோ! அண்ணன் பாலாவின் அரசியல் வடிவமே கண்ணைப் பிசையவே கடந்துமேன் சென்றனை மண்ணிற் புதைந்துநீ மறுபடி யெழுவையோ? விண்ணிற் பாலாவிடம் வெற்றிவி ரிப்பையோ? முங்கி னாரவர் மூழ்கடித் தோமெனச் சிங்கள நாய்களும் சிர…

  11. கல்லறை காயாது - தணிகைச் செல்வன் சிரித்தபடியேதான் நீ சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில் சந்தேகமில்லை எமக்கு. சமர்க்கள வீச்சாயினும் சமாதானப் பேச்சாயினும் இரண்டிலும்- சலவை செய்த உன் சிரிப்பைச் சந்திக்க எதிரிகளே அஞ்சினார்கள். உன்-புன்னகையின் வெண்ணிறமே புரட்சியின் விடிவெள்ளியாய்த் தோன்றியது புலித் தோழர்களுக்கு அந்தப் - புன்னகைக்குள்ளே ஒரு புரட்சியே பதுங்கியிருப்பதாகத் தோன்றியது பகைவர்களுக்கு. ஞாலச் சிறப்புக்கு வான்படையை ஊக்கிய உன் ஞானச் சிரிப்புக்கு நடுங்கினான் மகிந்தன். கருவிப் போரில் யுத்த தந்திரத்யுைம் அறிவுப் போரில் ராஜதந்திரத்தையும் கற்றுச் செரித்த களகர்த்தனே, எதிரிகள் உன்னைக் குறிவைக்கக் காரணம் உன் பெயரின…

  12. தேசத்தின் புன்னகை - இன்குலாப் மறுகரையில் தேற்றுதலின் தணியாத விசும்பல் கேட்கும் மரத்துப் போகாத செவிகளில். மாவீரர் விரும்பாத ஒப்பாரி காலம் காலமாய் மக்களின் மனசிலிருக்கிறது. இன்றென் சொல்லும் கண்ணீரில் நனையட்டும்! பகைநடந்ததற்குச் சாட்சியங்களான கருகிய பனை தென்னை ஊடாக நாங்களும் நடந்திருந்தோம். சிதைந்து கிடந்த டாங்கியும் சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும் பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும் முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ? கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே புதைந்து கிடக்கும் விதைகள் பசுமையாய் முளைவிடும் என்ற எல்லோருக்குமான எனது நம்பிக்கையும் துளிர்க்குமோ? கருகுமோ? உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட ஆயுதமாய்த் தடைப்பட்ட …

  13. இதயம் மட்டும் பேசட்டும் இசை மழைதனில் இன்பமாய் நனைந்து பசை கொண்ட மனிதருடன் பாங்காய் அசைந்து ஆடும் ஆட்டத்தின் உச்சம் இசைந்திடும் மனதின் ஆதாரம் என்றிருந்தேன் இதழுடன் இதழ் ஒன்றாய் இணைந்து பின்னிக் கொள்வதில் அந்த இன்பமான பிணைப்பே இணைப்பாய் அதுவே பேரின்பம் தரும் போதை என்றிருந்தேன் புண்பட்ட மனம் இங்கே நிதம் நிதம் புண்ணாகிப் போனதால் நாளாருபொழுதாய் புகைவிட்டு ஆற்றுகின்றேன் ஆஹா இதுவே புத்துயிர் தரும் டொனிக் என்றிருந்தேன் இத்தனை ஆனந்தம் எனக்குள்ளிருந்து இதுவே வாழ்வின் சொர்க்கம் என்றே நனைந்தவேளை இடப்பெயர்வு இன்னல்கள் சுமந்திடும் இதயங்களின் கதை கேட்டுணர்ந்தபோது இதயத்து சுகங்கள் இமைவழி மறைந்தோடிட இடையறா பங்களிப்பு இரட்டிப்ப…

  14. கொஞ்சி விளையாட..!!! புலர்ந்தது பொழுது மலர்ந்தது என் வதனம் எழுந்தேன் படுக்கைவிட்டு தொழுதேன் உன்கால்களை ஏன் என்று நீ கேட்கிறாயா? எப்போதேனும் உன் கால்களை வார நான் குனியும் போது உனக்கு ஐயம் வராதல்லவா? சரியன்பே கொஞ்சம் சிரி உன்னிதழ்விரித்து... குளிர்த்து நீராடிவிட்டு குளிர்போக சுடுநீரில் அன்பைக் கலந்து அணங்கு நான் தேநீர் தயாரிக்க போகணும் அன்பே... சிரி ஒருமுறை சிரி குவி உன்னிதழைக் குவி கவி நீயானாலும் பல கவி நான் எழுதுவேன் உன்னிதழ் மேல்..! மங்கை நான் அருகிருக்க அங்கை அள்ளத் துடிக்கையில் அன்பே... கொங்கைகள் ஏங்குமடா! சங்குக் கழுத்தும் உன்னிதழ் முத்தத்திற்காக காத்திருக்குதடா! பொங்குகின்ற இன்பம் கோடி மங…

  15. Started by Iraivan,

    குறட்டை என் உன்னைப் பார்தது சிலருக்குச் சிரிப்பு பலருக்கு முகச் சுழிப்பு எதற்காக? நீ என் நித்திரையின் சிரி;ப்பொலி. என் நிம்மதியின் எக்காளம்.

    • 12 replies
    • 2.9k views
  16. புன்னகை மழையே நீ எங்கே பொன் நகைகள் கொண்டாடும் புன்னகைக்கு புலிப்படையில் ஓர் அடையாளம்! தமிழ் ஈழத்தின் தரை மெழுகும் நிலவாய்... புலம் பெயர்ந்தோர் விழிகளிலும் தவழ்ந்து வந்த பூந்தென்றலாய்... எங்கள் இதயமெங்கும் பூத்துக் குலுங்கிய பூந்தோட்டமே! நீ சென்ற இடமெல்லாம் புன்னகை மழை பொழிந்து உன் தமிழால் உலகத் தமிழை உயர்த்தினாய்! எத்தனை செல்வங்கள் தமிழில் இருந்தாலும் தலைவனுக்கெனவே தனித்துவமாய் வாய்த்த தமிழ்ச்செல்வா எங்கே போனாய்? இதயத்தில் வலிகள் பெருகி கண்ணீர் வழிகிறது. இமயத்தின் இழப்பை எண்ணி இதயம் கனக்கின்றது.! அண்ணா உந்தன் புன்னகை எமக்கு வேண்டும் தமிழீழம் பூக்கும் நேரத்தில் புன்னகை சிந்…

  17. Started by Kuddi thampi,

    செல்வண்ணை! உன் பெயரை உச்சரித்துவிட்டு கண் கலங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிரிக்கும் புலி நீ சீறும் சினத்தை சின்னச் சிரிப்புக்குள் அடக்கிவைத்திருக்கும் பேராற்றல் உனக்கு. நெருப்பு வானத்தில் ஒரு குளிர் நிலவு நீ உனக்குள்ளும் நெருப்பாறுகள் ஆனாலும் அதை பக்குவப்படுத்தி பயன்படுத்தத் தெரிந்தவன். பத்திரிகைகளுக்கூடாகத்தான் உன்னோடு பழகியிருக்கிறேன். தீயாக தினேசாக சுழன்றடித்த சூறாவளியாய் உன்னோடு பழக்கமில்லையென்றாலும் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பனிபூசிய அனல்கள் பறக்கக் காண்பேன். ஒரு தவறிப் பிறந்தவனின் காட்டிக்கொடுப்புக்கு தமிழன் இழந்து நிற்பது "ஒரு பிரிகேடியரை". எதிரியின் எத்தனை பிரிகேடியர்களை கொன்றொழி்த்தாலும் ஈடாகுமா உ…

    • 4 replies
    • 1.8k views
  18. காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா? எதிர்பார்ப்புடன்... இக்கவிதை... பாவம் படர்ந்த வாழ்வது தொலைந்த தீபாவளி! தீண்டும் த…

  19. ஈழம் வரும் வேளையென்றே நினைத்திருந்தோம்..அண்ணா... பேரிடியாய்.. உன் பிரிவை உள்வாங்கிக்கொண்டோம்.. வேதனையில்.. விழுந்த நெஞ்சங்களை காணுகின்றோம்.. தமிழ்ச் செல்வன் அண்ணா உன்னை நினைந்து விழி ததும்புகிறோம்.. பூத்திருக்கும் புன்னகையில் ஒளி தருவாய்..நம் தலைவரவர் கரமிணைந்து செயல் புரிவாய்.. நெஞ்சமெல்லாம் வாடி நிற்க எங்கு சென்றாயோ.. நேசமெல்லாம் கண்டு கொள்ள ஒளிந்து கொண்டாயோ.. அழுதுவிடவேண்டாமென்று.. விழிகளிடம் சொன்னேன்.. இதயம் கிடந்து அழுகிறதே யாரிடம் சொல்வேன்.. புலிகள் பலம் குறையுமென்று. எதிரிகள் நகைப்பார்.... உன்னை விதைத்த இடம்.. செழிக்கும் அதை வீணர்கள் அறியார்.. வீரப்புலித் தலைவரரவர்.. சோர்வது இல்லை.. அவர் கரங்களிலே.. உறுதி சேர்ப்…

  20. பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம். அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன் பாலி ஆறு நகர்கிறது - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். …

    • 4 replies
    • 2.3k views
  21. போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே! ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான இன்முகத் தமிழ் எழிலே! பார் சுற்றி தாய் முற்றக் கதை சொல்லிப் பயணித்த பண்புநிறை தமிழ்செல்வா! உலகின்....... தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா, நீ தூங்கிப் போய்விட்டாய்? ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா, நீ உறங்கி ஓய்வெடுத்தாய்? நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா, நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள் நாயகனின் தோளான நல்லதொரு தோழனே! நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்? யார் குற்றம் செய்தோம்? விழிநீர் முட்டிக் காயாத விதி வ…

    • 1 reply
    • 1.2k views
  22. காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடா…

  23. கத்திக் கதறுது மனது-நீ இன்னும் இருக்கிறாய் என்று புழுதி புரண்டழுது. தெருவெல்லாம் இழுத்து வந்தேன் - என் இதயத்தை தேம்பியழும் அதை எங்கு மறைக்க ? அண்ணா அவசரப்பட்டயோ - நாம் அங்கீகாரம் உலகில்லல்லவா கேட்டோம் - நீ விண்ணிற்கு சென்றதேன் ? இனி அந்தச்சிரிப்பை எங்கு நாம் தேட ? உன் விழியில்லாத் தேசம் இருண்டல்லவா கிடக்கு ! தலைவருக்கு தோள் கொடுக்க யாரைத் தேடுவோம் ? நீயில்லாத செய்தி - வந்திருக்கவே வேண்டாம் !

  24. தள்ளாத வயதில் ஊண்டும் தடியை - முதுமை இல்லாத வயதில் ஊண்டியவன். தள்ளாடி சாகத் துடிப்போர் உலகில் - களத்தில் மல்லாடி சாகத் துணிந்தவன். அமைதி விளக்கு அணைந்த உலகில் - அமைதி காண நடந்த வீரன். குண்டு விழாத தேசம் காண - விமான குண்டேந்தி விழுந்த வேங்கை. நால்வர் வேண்டும் தூக்கி செல்ல - இவனோ ஐவரோடு சேர்ந்து நடந்தவன். காந்திக்குப் பின் கைத்தடி ஏந்தி - அமைதிக்கு பாடுபட்ட அழிவில்லா வேங்கை. பேசத்தெரியா சிங்கள அரசுடன் பேசுவதில் - இனி பயனில்லை என்று கண்டவன். பேச்சுக்கள் முடிந்துவிட்ட செய்தியை உலகிற்கு - தன் பேச்சற்ற முடிவால் சொன்னவன். அவன் பெயரைச் சொன்னால் எதிரியின் - வாய்க்குள்ளும் தமிழ் நுழைந்து போராடும். …

    • 0 replies
    • 1.9k views
  25. தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம் தேவனையும் நீ பறித்ததேன் தேசத்தின் குரல் ஓயந்து நாம் திகைத்து நின்றோம் - இன்று தேசியகீதமே அழிந்ததம்மா ! அலையொன்று அடித்தோய்ந்ததம்மா அந்த ஆண்டவனும் எம்மை மறந்தானம்மா தமிழின் செல்வனை பறித்தானம்மா எம் தாயக வேள்வியை அணைத்தானம்மா

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.