கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நிகழ்காலமும் நிகழ்ந்த காலமும்... பெற்றவரை பிள்ளைகள் பேணிவந்த காலமது பிள்ளைகளால் பெற்றவர்கள் கூணுகின்ற காலமிது சொற்ப பணமிருந்தால் சொர்க்கம் தான் அந்தக்காலம் மெத்த பணமிருந்தால் நரகம் தான் இந்தக்காலம் அவதியுடன் வாழ்ந்தாலும் ஆண் உழைக்கும் காலமது சவுதிக்கும் சென்று பெண் உழைக்கும் காலமிது உயிர்காப்பான் தோழன் என்பர் உண்மைதான் அந்தகாலம் உயிர்கேப்பான் தோழன் இதை உணருகின்றோம் இந்தக்காலம் கட்டுப்பாட்டுடன் மனிதன் காதலித்த காலமது இஸ்டபடி இளைஞன் எதையும் செய்யும் காலமிது பூஞ்சோலைக்குள் மட்டும் புனித காதல் அந்தக்காலம் மிருகத்தின் சாலைக்குள்ளும் மீதமில்லை இந்தக்காலம் இன்றையதை விட நேற்றயது நல்ல காலம் நேற்றயதை விட நாளையது எப்படியோ???
-
- 6 replies
- 1.4k views
-
-
கொழும்பு நகர (நரக) வாழ்க்கை... மனிதம் என்பதே இங்கு இல்லை மனிதரோ கோர உணர்வுகளுடன் மண்ணில் வாழ முடியா தமிழர் மரத்துப்போய் இங்கு வருகின்றனர் மரணத்துக்கு தள்ளும் வண்ணம் மனிதர்கள்(சிங்களவர்) நடக்கின்றனர் செல்லும் இடங்களிலெல்லாம் செல்லாத சோதனை செய்வர் செல் குண்டு வீச்சுக்களை தாங்கியவர்கள் சொல் வீச்சுக்களை கேட்டு தவிக்கின்றனர் செருப்பாக கூட இருந்து உதவுவார்கள் செருப்பாகவும் மதிக்கான் சிங்களவன் சிந்தனைகளின் ஊற்றாக திகழ்பவர்கள் சிந்தனை வாதிகள் எம்மக்கள் என்றும் சிந்தனை ஆமாம் மகிந்த சிந்தனை சிந்திக்க வைக்கவில்லை எம்மவரை சிதறடிக்க வைக்கின்றது இங்கே சிறுமையாக்க படுகின்றார்கள் எம்மவர்கள் பொருளுக்கு ஏற்ப விலையில்லை …
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்* கோதுமை மா நீ கொதி தண்ணி நான் இருவரும் சேர்ந்தால் ஆசையயாய் சாப்பிடும் தோசையாகலாம் உள்ளி நீ மல்லி நான் இருவரும் சேர்தால் இரசம் ஆகலாம் மிதுவான தேங்காய்் பூ நீ மிளகாய் செத்தல் நான் சேர்த்தரைத்்தால் சம்பல் ஆகலலாம் வழிப்பான புளி நீ வாடல் மரக்கறி நான் வா சேர்ந்து சாம்பாறு ஆகலாம்
-
- 26 replies
- 4.2k views
-
-
அம்மா! தொலைவில் ஒரு குரல் இன்னும் எதிரொலிக்கின்றது பய பீதியில் உயிர்கள் பரிதவிக்கின்றது கொலை வாழுக்கு முன்னால் குற்றுயிராய் முனகும் குரல்கள் உயிருடன் எரியும் உடல்களில் இருந்து மானுட பாசைகளுக்கு விழங்காத உயிர்களின் ஓலம் மூச்சோடு திணறுகின்றது கண்ணில் தூசி விழுந்தால் கண்கள் வலித்து கலங்கும் எம் உறவுகளின் கண்களையே தோண்டி எடுத்த போது மானுடம் நிர்வாணமானது வன விலங்குகள் சிங்களத்தின் முகத்தில் காறித் துப்பின கணங்கள் அவை கறுப்பு யூலை அம்மா……………! அருகில் ஒரு குரல் இன்னும் வங்காலையில் சாமத்தின் நிசப்தங்களை கிழித்தெறிகின்றது அல்லைப்பிட்டியில் பிஞ்சுகளின் குரல் ஊமையின் அலறலாய் உலக மனட்சாட்சியிம் நிய…
-
- 16 replies
- 2.4k views
-
-
அன்று நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம் மருதை குறிஞ்சி பhலை முல்லை நெய்தல் என நிலங்களை ஐந்தாக பிரித்து அழகான எம் நிலத்தில் அமைதியாக வாழ்ந்தோம் நெத்தலி மீன்க்ள் துள்ளி விழையாடும் கடற்கரையில் துள்ளி மகிழ்ந்தோம் குடலை நெற்கள் கதிர்விட அக மகிழ்ந்தோம் தடிமன் வந்தால் பாட்டி செய்த ஒடியற் கூழில் பஞ்சாய் பறந்து விட நிம்மதியாய் வாழ்ந்தோம் முற்றத்து செவ்வரத்தம் பூக்களில் முகம் விழித்தோம் துலா கப்பியில் தண்ணி அள்ளி சோம்பல் போக்கி முகம் கழுவினோம் தொட்டாற் சிணுங்கியை தொட்டு மகிழ்ந்தோம் பட்ட காயத்திற்கு வெட்டொட்டியால் கட்டுப்போட்டோம் நாலு மணிப்பூக்களில் நேரம் பார்த்தோம் சாலைகளில் நடக்கும் போது சுகம் விசாரித்தோம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
கடல் கடந்தபோதும் - எம் இனம் கனம் குறையவில்லை சாதி மதபேதத்தில் நாம் இன்னும் சபலத்துடன் அலைகின்றோம் விரிசல்பட்டு இனம் வீதியிலானபோதும் வீரியம் குறையவில்லை இன்னொருவன் எமை ஏன் அழிப்பான் எம்iமையே நாம் இன்றே அழித்திடுவோம்
-
- 5 replies
- 1.1k views
-
-
எழுதவேண்டும் என்பதற்காக எழுதி 2 ஆயிரம் கருத்துக்களை எட்டிவிட்டேன். அதன் சந்தோசத்தில் ஒரு காதல் விதையோடு. . . . மௌனம் கலைந்து விழியுடன் மோதி விடைகள் தேடும் இமைகள் பைங்கிளி பறந்து பருகிடுமோவென பயந்து ஒன்றுடன் ஓன்று உரசி மறையும் கனியிதழ்கள் சலனமற்ற நீர்தடாகததில் வீழ்ந்த துளியாய் அலைவீசிச்செல்லும் கன்னக்குழி வதனம் கூந்தல் மருவி காயமாகிவிடுமோவென கலைத்திட விரையும் கரங்கள் அடடா அழகிய சொர்ப்பனம் அர்ப்புத தரிசனம் விடியலின் எழுச்சியில் வீணாக கலைந்தது
-
- 8 replies
- 1.3k views
-
-
-
குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கனடாவிலிருந்து பவித்திரா- குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கும்மாள மிட்டுக் கூக்குரலி டுதல்தான் வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற வஞ்சனைச் செயல்களே வருத்தம் வேண்டாம் படுகுழியிற் தாம்வீழ்ந்த பரிதாப நிலைதனை பாரறியும் இழிவினை மறைத்திட வேண்டியே சடுதியாய் வகுத்த சூழ்ச்சியில் நின்றுமே தலைமைச் சிங்களம் தடுமாறி நிற்கிறது! மலைகள் பாறைகள் மருவிய நீர்நிலைகள் மலர்கள் மணம்வீசும் அடர்ந்த காடுகள் கலைகள் கழனிகள் கலப்பை பிடித்துழும் கண்ணியம் நிறைமாந்தர் கனிவுறை உழவர் தலைவன் கொள்கையே தமக்கெனக் கொண்ட தண்மைமிகு உளம்கொள் திராவிட மக்கள் நிலைபெற்ற…
-
- 10 replies
- 1.2k views
-
-
வட்ட..... வட்ட .... வெண்ணிலாவே... தொட்டு தொட்டு பேச வாவேன்..! நெட்டநெடு வானதிலே தன்னம் தனியாக நீ என்னை... என்னை சுற்றி வாறாய் இதை நிறுத்தாயா...? உன்னை...... உன்னை.... நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்.. நிம்மதியாய்... நித்தியமாய் இரண்டு வார்த்தை கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம் கீழ் இறங்கி வராயோ..? நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. கதிரவன்... கண்ணுறங்கும்நேரத்தில்... நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே.... எப்படித் தான் நன்றி சொல்வேன்.. நான் உனக்கு... மல்லிகை மொட்டவிழும் மாலை நேர…
-
- 24 replies
- 7.4k views
-
-
வெண்புறா பனியும் என்னிடம் கடன்கேட்கும். - பஞ்சு முகிலும் என்னிடம் கடன்வாங்கும். கனிவும் என்னிடம் மண்டியிடும். - எக் கருமமும் என்னிடம் சிரம் தாழ்த்தும். உயர்திணை, அஃறிணை பிரித்தெடுத்தால் அஃறிணை எந்தன் ஆதாரம். உயிரே இல்லாச் சடமல்ல - நான் உரைக்கும் கதையைக் கேள் மெல்ல! காவியத்தூது போனதுண்டு. கலங்கரை விளக்கு ஆனதுண்டு. சோவியத் வானில் பறந்ததுண்டு. சொர்க்க வாசலைத் திறந்ததுண்டு. வானிடை உலவும் மதியழைத்து - மந்த மாருத இழையில் ஏணை கட்டி மானுடப் பிறப்பைத் தாலாட்டி மகிழ்ச்சி தந்திடக் காத்திருந்தேன். இன்று..... அமைதிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார். அன்புச் சின்னமாய் ஆக்கி வைத்தார். அகிம்சை காக்கும் அரியணையில் அடிமைப்படுத்திப் …
-
- 11 replies
- 2.2k views
-
-
கொதிக்கும் பாலைத்திங்கள் சொல்ல முடியாத சொல்லுக்குள் அடங்காத வில்லங்க வேதனைகள் வீதியுலா வந்ததெல்லாம் 83 இன் யுூலைக்கே தெரியும்! தென்னிலங்கையில் தமிழன் தோலை உரித்துத் தொங்க விட்ட வேளைகளைச் சுமந்த பாலைத் திங்களிது! கோர நினைவுகள், கொடுமைச் சாவுகள், அப்பப்பா!.......... . ஈர மனங்களைத் தீப்பிழம்பாய் ஆக்கிய அன்றைய நாட்கள்! தமிழச்சி என்பதனால் கொங்கைகள் அறுத்தும், கொப்பழிக்கும் தாரினுள் எம் பிஞ்சுகளை முக்கி எடுத்தும், செங்களங்கள் ஆடாத சிறுமைக் காடையர்கள் செந்தமிழர் உயிர்க்குலையில் வெந்தணலை இட்டதெல்லாம் நேற்றைய நாட்கனவாக நினைவுக்கிப் போய் விடுமா? அழியாத வடுக்கள், ஆறாத ரணங்கள், இழிவான நிலைகள், இதயத்துச் சு…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஆடிப் போனது வாழ்க்கையா...? ------------------------ ஆடிக் கலவரத்தில் ஆடிப் போனது நாட்டு நிலவரம் என்பதால் ஆவணியில் அவனியின் ஆதரவுக்காய் ஆலாய்ப் பறந்தும் பயனில்லாது புரட்டாதியில் புதிய படை புறப்பட்டு புரட்சி செய்ய முற்பட்டு ஐப்பசியிலும் எப்பசியும் தீராத முட்டுக்கட்டை முகடாய் விரிய கார்த்திகையில் காரிருள் நீக்கும் காவலர் படை ஆகுதியாய் களமிறங்கி மார்கழியில் மரபுப் படையாய் மதங் கொண்டு போராடி தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் நம்பிக்கை பொய்த்துப்போய் மாசியிலும் மனதிலொரு நம்பிக்கை முளை விடும் எண்ணம் பொதிந்து பங்குனியில் சகுனிகளின் சதிவலை நீண்டு விரிந்து சதி செய்ய சித்திரையில் இத்திரை விலகும் கனவுடன் தமிழ் வருடம் தொடங்க வைகாசியில் வ…
-
- 11 replies
- 1.8k views
-
-
ஜூலை மாதம் வந்தால் . . . . . ஆடிமாதம் எம்தமிழர் ஆடிப்போன மாதம் கூடிவாழ்ந்த வீட்டைவிட்டு ஓடிப்போன மாதம் மாடிவீடும் குடிசைவீடும் வீதிவந்த மாதம் கோடிகோடி யாகச்சொத்தை தாரைவார்த்த மாதம் இறையும்கூடத் தேரிலேறி தெருவில்நின்ற மாதம் சிறையில்கூடச் சிங்களவன் பலியெடுத்த மாதம் மறையின்வழி நின்றவர்கள் பதைபதைத்த மாதம் குறைவிலாமல் தமிழன்நிலை உலகறிந்த மாதம் ஆண்டுபல போனபோதும் மறந்திடாத மாதம் மாண்டுபோன உறவினைநாம் நினைத்துநிற்கும் மாதம் கூண்டுவிட்டு அகதியாகப் பெயரவைத்த மாதம் சீண்டிவிட்ட சிங்களத்தின் அமைதிசெத்த மாதம் புத்தன்சொல்லே வேதமென்றோர் புலையரான மாதம் சித்தம்தன்னில் ஈரமிலார் கொடுமைசெய்த மாதம் சொத்துசுகம் பேணநாட்டின் தேவைகண்ட மாதம் சத்தமின்றித் …
-
- 19 replies
- 3k views
-
-
காரிருள் ஆடி இலங்கையை உலுப்பி இரத்தத்தை உறைய வைத்து . கலக்கத்தை மேம்படுத்தியதே காரிருள் ஆடி கலையாது எம்மவரின் காயம் தொலையாது . காலத்தின் தேவை கலங்கிய தமிழரின் பலத்தையும் தளத்தையும் பறை சாற்றும் . பாவியரின் குணம் பரவியதால் அகிலத்தில் நிலைத்ததே ஈழத்தவரின் பெருமை - இதற்கு . நிச்சயம் பதிலிறுக்கும் ஈழதேசம்.
-
- 17 replies
- 2.3k views
-
-
கறுப்பு யூலை மறக்கடிக்கப்படாத மறக்கப்படாத அழியாத அத்துயர் நினைவுகள் எல்லோர் தமிழர் நெஞ்சங்களிலும் தடம் பதித்திருக்கும் மாதம் யூலை கறுப்பு யூலை.... அப்பாவித் தமிழர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு அதில் இருந்து வெளியேறிய இரத்தம் அன்று இரத்த ஆறாக ஓடிய காலம்...! இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறிய கட்டவிழ்ப்புகளால் திட்டமிட்டே நம் இனங்களின் வாழ்விடங்களை எரித்தும் சொத்துக்களை அபகரித்தும் பலரை உயிரோடு எரித்தும் வெட்டியும், கொத்தியும் நம் இனங்களை நாட்டை விட்டு விரட்டிய காலம்... சிங்கள வெறியர்கள் ஆடிய ஆட்டத்தில் நம் இன உயிர்களை வதைத்து, கதிகலங்க வைத்து அதில் அவர்கள் குளிர் …
-
- 17 replies
- 2.6k views
-
-
தமிழ் வென்றிடப் போகுது..! வெல்லத் தமிழினி வெல்லும் எனும்படிச் சொல்லத் தகுமொரு சூழல் வருகுது! மெல்லத் தமிழனை மெல்லத் துணிகிற புல்லர்ப் படைமிசை பூசல் பெருகுது! உள்ளத் துணிவொடு நிற்கும் தெளிநிலை கொள்ளத் தமிழினம் எங்கும் திரளுது! கள்ளத் தனமொடு காடைத் தனமதும் தள்ளப் படுமெனக் காலம் புகலுது! கொல்லைப் புறவழி வந்தனர் என்பதும் கொள்ளைச் செயல் புரிகின்றனர் என்பதும் கிள்ளுக் கீரைகள் நாமிலம் என்பதும் வெள்ளிடைக் குன்றென நன்கு விளங்குது! குள்ள நரிகளும் கூலிப் படைகளும் கள்ளிச் செடிநிகர் காவிப் பிக்குகளும் எல்லை மிகக்கடந்(து) ஈனம் புரிவது சொல்லுந் தரமின்றிச் சோகம் தருகுது! துள்ளித் திரிந்திடும் பள்ளிப் பருவத்துக் கொள்ளை அழகுக் குழந்தைகள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
காதலும் நட்பும் என் விரல் நகம் கூட என் காதலியின் உடல் மீது படாமல் எவ்வளவு கண்ணியமாகக் காதலிக்கிறேன் என்பதை என் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தேன் அவளது தோளில் சாய்ந்தபடி.
-
- 19 replies
- 4.3k views
-
-
வணக்கம் இங்கு பலதரப்பட்ட கவிஞர்கள் இருக்கின்றீர்கள். அதாவது எழுச்சி கவிதைகள் எழுதுபவர்கள் அல்லது காதல் கவிதைகளில் கற்பனை சிறகை விரித்து பறப்பவர்கள் அல்லது இரண்டு கவிதைகளையும் காலத்துக்கு ஏற்ப எழுதுபவர்கள் என்று பலவகைப்படுத்தலாம். ஆனால் யாழ் வரும் வாசகர்கள் என்ன மாதிரி கவிதையை விருப்பி படிக்கின்றார்கள் என்பதை அறிய நீண்ட நாள் ஆசை. மற்றைய பக்கங்களை விட கவிதைப்பக்கங்கள் தான் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போகின்றது. எல்லாவற்றிக்கும் வாக்குப்பதிவு வைக்கின்றார்கள். இதற்கு நான் வைக்கின்றேன் . உண்மையாக வாக்களியுங்கள்.
-
- 11 replies
- 2.2k views
-
-
தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்கும…
-
- 3 replies
- 3.4k views
-
-
நாங்கள் நிறைய பேசுகிறோம்! ஆனாலும்........ வரிகளால் - வரிசை வரிசையாய்- யுத்தம்! நாலு மூலையிலும் தீ மூண்டாச்சு........ நடுவிலிருந்து கொண்டு .... நடு நிலமை பேசுகிறோம்! எலும்புகள் முறியும்போது ..... ஒலிவம் இலைகளை பற்றி புராணமா? போர் வெறி எதுவும் இல்லை.....!! உங்கள் சீரிய சிந்தனைகள்....... சிதறும் இரத்ததுளிகளை,,,, நிறுத்த முடியுமானால்..... தங்கத்தாம்பாளத்தில் நீங்கள் சமாதானத்தை வைத்து தர முடியும் என்றானால்.................. நம்புவோம் - உங்கள் வீரம் நாவில் மட்டும் இருந்ததில்லை!
-
- 2 replies
- 975 views
-
-
-
எப்போ சொல்வாய். கண்காணிப்பு குழு....??? பாதை திறப்பென்று பார்த்து போக வந்தவரே... பாவம் ஏனய்யா பங்கருள்ளே பதுங்குகிறாய்...??? உத்தரவு பெற்று வந்தே உள்ளுக்குள்ளே நீ நுழைந்தாய்..... இத்தனையும் அறிந்த பின்னே எறிகணைகள் ஏன் எறிந்தார்....??? கண் காணிக்க வந்த உந்தன் உயிர் காவெடுக்க ஏன் முனைந்தார்....??? உன் உயிர் நீ காக்க உள்ளுக்குள்ளே ஏன் ஒழிந்தாய்....??? உந்தனுக்கு பின்னாலே உலகமது நீ என்றாய்....??? ஈற்றில் வரை உந்தனுக்காய் இவ்வுலகம் என் உரைத்தார்....??? சமரசத்தை பேணிடவே சம்பந்தியாய் நீயும் வந்தாய்.... உன் உயிரை குடித்திடவே உந்தனுக்கு கணை எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
உன்னை மனிதன் என்பதா.....??? தேசத்து மக்கள் தெருவில் நிக்கையிலே... தின்னையிலே உட்காந்து வேடிக்கை பார்த்தவரே.... வெட்டி பேச்சுரைத்து வெறும ;காலத்தை ஓட்டியவரே.... சுதந்திர தேசத்தை பகை சுடுகாடாய் ஆக்கையிலே.... எதுவும் அறியாதது போல் இங்கன்று இருந்தவரே.... இன்று வந்து என் உரைத்தாய்....??? பெண்ணவளை ஏன் இழித்தாய்....??? இன்னல்களை கண்டுயவள் இதயமது அழுகையிலே.... கவியாக்கி வந்துயவள் குமுறல்களை கொட்டுகிறாள்... அவள் ஆக்கமதை வந்துயிங்கு அவமானம் செய்கிறியே.... உன்னை எல்லாம் அறிஞன் என்று வந்து நீயும் உரைக்கலாமா...??? அட கவிஞன் என்று வேறு வந்து உன்னை நீயே …
-
- 3 replies
- 1.1k views
-
-
அர்த்தமுள்ள காதல்....... பெண்ணே.......... நீ... என் இதயத்தில் இல்லாமல் போயிருந்தால் உறக்கம் என் உயிரை உருவிக்கொண்டு போயிருக்கும்...... நீ....என் உணர்வில் உதிக்காது போயிருந்தால் காற்று என் உடலை கரைத்துக் கொண்டு போயிருக்கும்.... நீ.... என்னோடு வாழாமல் போனால் நான் வாழ்வதில் அர்த்தமே யாருக்கும் தெரியாமல் போய் விடும்........ >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<
-
- 2 replies
- 1.3k views
-