கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பரிதாப மரணம்.... உண்ண உணவின்றி ஒரு சொட்டு நீர் இறங்கா ஒட்ட வயிரொட்டி ஓலமாய் இறந்தாயோ....??? குழுமி வந்து குளிர் கூட அடிக்கையிலே குறண்டி நடுங்கி - நீ குமுறி இறந்தாயோ....??? அக்கம் பக்கத்திலே ஆளுதவி யாருமின்றி ஜயா பாவி -நீ அநாதையாய் இறந்தாயோ...?? தூங்கியெழ கூட துண்டு நிலமின்றி ஊரார் கோடியினுள்ளே -நிதம் உறங்கியெழுந்தாயோ....?? சத்துணவின்றி சக்தி நீ இpழந்து சாவை நீ ஏற்றாயோ....??? கடமையாக நீ கதிரை பின்னி யே தினம் காலம் கழித்தாயே... வந்த யுத்தமதால் வருமானம் நீ இழந்து வறுமை உனையாழ வாடி இறந்தாயே.... ஒத்தாசைக்கு ஒருத்தரும் உனக்கில்லா அட..பாவி ஜயா நீ பரிதாபமாய் இறந்தாயே....!!! -வன்னி …
-
- 0 replies
- 728 views
-
-
கண்ட நாள் முதல் இந்த நாள் வரை.... கவிதை..... உன்னுடன் சேரத்துடிக்கும் முன்னர்.....! மின்மினியாய் என் கண்ணில் வந்தாய்.... முல்லையாய் மணம் வீசிச் சென்றாய்.... காகிதப் பூவாய் எந்தன் மனம் கவர்ந்தாய்... குயில் இசைபோல் பாடிச் சென்றாய்..... உன்னுடன் சேரத் துடித்தபோது.... ! என் மனதின் எண்ணங்கள் ஆனாய்.... என் பசிக்கோ உணவும் ஆனாய்..... என் மனதில் வண்ணத்துப் பூச்சியாய் இறகும் அடித்தாய்.... தொட்டாச் சிணுங்கிபோல் சிணுங்கவும் செய்தாய்.... பின் நாளில் நாம் சேர்ந்த போது....! விடிவெள்ளியும் வானமும் ஆனோம்... மயக்கும் சூரியனும் மாலைப் பொழுதும் ஆனோம்... மயிலும் மழையும் ஆனோம…
-
- 0 replies
- 645 views
-
-
சோல்ஜர் @ சொறிநாய் சொறிநாயைப் பிடித்து “சோல்ஜர்” எனப் பெயர் வைத்து கறியோடு சோறும் வெறியேற அபினும் குழைத்துண்ணக் கொடுத்து வடக்கே போ என்றான் வேட்டைக்கு காவாலி சோல்ஜர் கடைசித் தெருதாண்டி முக்கி முணகி மோப்பம் பிடித்தபடி கால்தூக்கி எல்லை வரைகின்றான் என் வீட்டுச் சுவரில் அடித்து விரட்ட ஆளில்லா வீடொன்றில் நாநீட்ட தாகம் தணித்தவளின் கைநக்கி கோரைப்பல் தெரியச் சிரித்தான் வேட்டை நாயில்லா வீடொன்றாய்ப் பார்த்து கோழி இரண்டையும் -தென்னங் குலை நான்கையும் தேசியச் சொத்தாக்கினான் சிதறுண்ட கால்கொண்ட சிறுபுலியின் கதவுடைத்து பெண்மையை அரசுடைமையாக்கினான் காலம் பொறுமையாய் காத்திருக்கிறது காலம் வருவதற்காய் http://www.eelavayal.com/2012/12/blog-post.html
-
- 0 replies
- 624 views
-
-
கடனில் முளைத்த பூ - கவிதை கவிதை: நிலாகண்ணன், படம்: அருண் டைட்டன் சில்லறை மீன் வியாபாரி விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான் கூடையிலிருந்து சிதறிய மீன்கள் அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது. பாவம் வியாபாரிதான் காற்று குடித்து மூர்ச்சையானான்... தவிர வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள் நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு. *** தையல் எந்திரத்திற்காக வாங்கிய கடனால் உறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது. நல்லவேளை துணைவி கத்தரி நிறத்தில் அதன்மேல் ஒரு பூ வரைந்துவிடுகிறாள். ஒரு தாவரத்தைப்போல் படருகின்ற கடனால் மறைந்துகொள்ள ஒரு காடும் கிடைத்துவிடுகிறது. என்னைத்தேடி வனம்புகும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
காதல் அழுகிறது ... என்னை காதலித்த என் உயிர் ... தேவதாஸை காணவில்லையே ....? அவன் காதலியை விரும்பியதை .... காட்டிலும் என்னையே (காதல் ).... காதலித்தான் .......!!! கையிலே ஒரு காதலி ..... கைபேசியில் ஒரு காதலி .... கைவிட்டு காதல் போனால் .... கைகுலுக்கும் காதலர்கள் ..... இதை காதல் என்று சொல்லும் .... காதலர்களே - தேவதாஸை கேவல படுத்தாதீர் .....!!! காதலில் தோற்றால் ... நாங்கள் தேவதாஸ் இல்லை .... காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ... செய்கிறோம் என்று கூறும் .... காதலர்களே ..... காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை .... காமத்தை காதலாக கருதாதீர் .... காதல் என்றும் காதல் தான் ....!!!
-
- 0 replies
- 670 views
-
-
"என்னருகில் நீயிருந்தால்" "என்னருகில் நீயிருந்தால் எரிமலையும் குளிராகும் கன்னங்கள் இரண்டும் சிவத்து ஒளிரும்! அன்ன நடையும் வஞ்சிக்கொடி இடையும் அன்பு உள்ளத்தின் கொஞ்சல் மொழியும் ஆன்மிகம் தராத சொர்க்கமே எனக்கு!" "உன்னருகில் நான் இருக்க வேண்டும் உயிருடன் நீயும் கலக்க வேண்டும்! உரிமை கொண்ட நண்பியாக நீயும் உச்சி முகர்ந்து காதல் பொழிந்து உமிழ்நீரால் என்னை நீராட்ட வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 148 views
-
-
என் கவிதைகள் கண்மூடி சிந்தித்தவைகள் அல்ல இதயம் கதறிச் சிதறியவைகள்...
-
- 0 replies
- 3.6k views
-
-
-
- 0 replies
- 423 views
-
-
சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும் ஐந்து முட்கள் கண்களில் குத்திக்கொண்டிருந்தன அது கனவு தான் அவை சில நாட்களாக திரும்பத்திரும்ப என் பார்வையில் பட்ட காயங்களின் எண்ணிக்கைகளாயிருக்கலாம். அவன் தம்பியைப் போலிருந்ததாகவும் மகனைப் போலிருந்ததாயும் அயலானைப் போலுமென எண்ணிக்கலங்குகின்றனர் முகப்புத்தக நண்பர்கள். எனக்கும் அவனைப் போல மகன் . பன்னிருவயதுக் குழந்தை சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும் பாசிசத்தின் நிழலும் புகைப்படத்தில். சரணடையும் குழந்தைகளின் சாவிற்கான குறியீடாக யுத்த நியாயத்துக்கான கேள்வி அவன் பிணம். தொலைக்காட்சிச் செய்திகளில் முந்த நாள் ஆந்திராவில் நேற்று பாகிஸ்தானில் இன்று சிரியாவிலென்று நாளாந்தம் இரத்தங்கள், காயங்கள், மரணங்கள். கண்களைத் திருப்பி…
-
- 0 replies
- 524 views
-
-
தளரும் நிலையது வந்திடலாமோ _இனியும் எழுந்திடமல் என்னினமே இருந்திடலாமோ புலரும் பொழுதின் தடையுடைக்க _புயலாய் இறங்கிடோமோ புலத்தில் நாம் புதுக்களம் கொண்டிடோமோ நிலமிழந்ததிற்காய் _நீ நிலைகுலைந்திடலாமோ வாழ்ந்த வளமிழ்ந்ததிற்காய் _உன் பலம் மறந்திடலாமோ கண்ணில் நீரேழுந்திட கலங்கிடும் காலமல்ல _இது உணர்வுகளில் தீஎழுந்திட எரிமலையாகிடும் நேரமிது வேரடி மண் பறித்து பகை வெற்றிகொண்டடிட _நீ வேரிழந்தவனாகிடலாமோ உறவைக்கொன்று _தமிழ் மகவை புணர்ந்து ஊடுருவ நிற்குது சிங்களம் _இன்று மாதகல் தனதென்று மார்தட்டுறான் கொடியவன் _அவனுக்கு சவரிவீசி ஆலவட்டம் பிடித்தொருகூட்டம் மகிழ்கிறது . கவரி மானினம் நீ _தமிழா புலத்தில் புது வே…
-
- 0 replies
- 834 views
-
-
கண்ணீரிலே எம் மக்கள்..... கூலிப்படை தாடி இப்போ செய்யுது கொலை ஓடி.... மக்கள் குரலை தேடி இப்போ அழிக்குது பார் ஓடி.... கூட்டமைப்பில் இழந்தோம் இன்று நாங்கள் ஒரு சோடி.... எங்கள் மக்கள் இவனையிழந்து இன்று இப்போ வாடி.... எம் தமிழர் இன்னல்களை எடுத்து சொன்னான் ஓடி.... ஜநா முன்னால் செய்தான் நேற்று ஆர்ப்பாட்டம் தான் கூடி.... அட.. அவனை கொன்று போட்டான் இந்த....தாடி வைச்ச கேடி... அண்டை நாடு தேடி ஓடி சொன்னான் எங்கள் அவலம் கூடி.... அவனை இழந்து எங்கள் மக்கள் கண்ணீரிலே இப்போ வாடி....!!! வன்னி மைந்தன்- :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:…
-
- 0 replies
- 904 views
-
-
தாயின் பாசம்-பா.உதயன் உரிமை மறுக்கப்பட்ட தேசம் ஒன்றில் ஓரமாக ஒரு மர நிழலில் உட்கார்ந்தபடி தனிமையாக பேசிக் கொண்டிருந்தாள் கரும்புலியின் தாய் ஒருத்தி அவர் அவர் பிள்ளைகளுடன் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எங்கும் உலா வருகிறார்கள் எங்கள் பிள்ளைகளை இப்போ மறந்திருப்பவர்கழும் அவர்கள் தியாகத்தை பேசாமல் இருப்பவர்களும் நாளை உன்னை பேசாமல் இருந்திருப்பார்கள் என்று நினைத்து நீயும் போய் இருக்க மாட்டாய் போகட்டும் விடு மகனே யார் மறந்தால் என்ன மூக்கும் முழியுமாய் உயிர் தந்து உன்னை பெற்றெடுத்த தாய் மனம் உனக்காய் அழுகிறது மகனே காற்றோடு சொல்லி கண்ணீரில் எழுதி அனுப்புகிறேன் உன்னை நான் கண்ணுறங்க …
-
- 0 replies
- 410 views
-
-
(இராஜரட்டையின்) கொடு வனம் புகு படலம். காரிருள் சாமம் ஒன்றிற் கரு வரியுடை தரித்த தமிழ் மறவர் படையணி ஒன்று, கரந்து, கானகம் நடுவே எதிரி வானகப் பாசறை புகுந்து, வானிடை ஏகி வல்ஈய எச்சமிடும் கொடிய எந்திரப் பறவைகள் வாழும் கூட்டினைச் சிதைத்து எரித்துத், தாமும் அக் களமிடை ஆகுதி ஆகியே, தம் மக்கள் இடர்தனைக் களைந்து வீரகாவியம் ஆகினர். (நினைவுகள்) -------------------------------------- அருண்டனர், பகைவரெல்லாம் மெய் விதிர்த்திட அஞ்சியேயோடி ஒளிந்தனர் நிலவறை தேடிக் கண்ணுறு இடமெலாம் மண்தூர் நிறைய மாண்டதம் மாந்தர் யாக்கை நில வரை பழித்து நிறைய நாலிரு திக்கும் அதிரக் கானகக் காவல் தகரக் கருவரியுடை கண்ணிடை தெரிய. ஊடுடிடைப் புகுந்த புலியோ உறுமியே எழுந்து பாய்ந்து வானிடையேக…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிசிர சிறிபத்தன -உன்னால் தேச அறிவு பண்பாடு கேலிக்குள்ளானது; பேராசிரியர் பெருமையும் கேள்விக்குள்ளானது திலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்த தமிழர் போராட்ட பொருளறியாமல் ’தமிழர் வணிகம் புறக்கணி’ என்றாயே.! இனவாத வணிகனாய் போன அலோபதி வைத்திய பீடாதிபதியே.. இன வாத அரசின் பிச்சைப் பதவிகளுக்காகவா இந்தளவுக்கு இழிந்து போனாய்.? இந்த நாட்டின் இனவாத நோய் இந்தளவுக்கு முற்றிப் போனதா.? https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85854/
-
- 0 replies
- 565 views
-
-
கரும்புலி கவிஞர் தாமரை வார்த்தைகளற்ற உயிலும்... ஒரு வாழ்வின் செய்தியும்... அவன் புன்னகைத்துக்கொண்டே இருந்தான் நான்தான் அழுதேன் அவன் கண்களும் சிரித்தன காணச் சகிக்காமல் நான்தான் கண்களை மூடிக்கொண்டேன் ஒரு புன்னகையையும் ஒரு கண்ணீரையும் ஒருசேர விசிறிக்கொண்டு போன அன்றைய தென்றலில் உப்பும் குளிரும் சம அளவில் கலந்திருக்கும் அன்றைய நிலவு... அது ஏன் அப்படி ஒளிர்ந்தது அவன் முகத்தைப் போலவே...? உன் கைகளைத் தொடலாமா என்று கேட்டேன் 'இதோ' என்று நீட்டினான் என் நடுங்கிய கைகளால் தொட முயன்று முடியாமல் இழுத்துக்கொண்டேன் தொட்டிருக்கலாமோ... மோட்சம் பற்றிய என் விசாரணைகள் முடிவுக்கு வந்திருக்கும்! நிதானமாய் அவன் உண்டு முடித…
-
- 0 replies
- 1k views
-
-
வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி... மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே, காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்.. என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள், வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் , பசித்து ஒட்டிய வயிறுகள்!!! மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது... பணம் பந்தியில் இருக்காது! "காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!
-
- 0 replies
- 514 views
-
-
எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்! Last Updated : இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம…
-
- 0 replies
- 320 views
-
-
[size=4]மனிதா நான் யாரு நீ யாரு சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு பண்போடு நல்ல அன்போடு நீ முன்னேறு நீதான் ஸ்டார் வாழ்க்கை ஒரு புதிர் போல எது எப்ப நடக்கும் தெரியாது கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில் நல்லது நடக்கும் நம்புங்கள் முயற்சி இல்லாமல் பலன் ஏது? குறைகளை சொல்வதினால் தடுமாற்றம் உனக்குள் ஒருவன் யார் அதை தேடு அதை நீ அறிந்தால் தான் வரலாறு போட்டி இல்லாமல் வெற்றி ஏது? பொறமை கொள்வதால்தான் தகறாரு நமக்கு தெரியாது பல உண்டு கற்றது கையளவு நீ என்னும் தேடு வா நண்பா மர்மமான வாழ்க்கையில் வாழ்த்துதான் பார்க்கலாம்...[/size]
-
- 0 replies
- 554 views
-
-
ஒரு சொல்.! புரோட்டாவும் நல்ல குருமாவும் முடித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்..! பல ரவுண்டுகளை மாத்தி மாற்றி அடித்தப் பிறகு என்ன தோன்றும் உங்களுக்கு.. அடப் போங்கையா..!.. உங்களின் பேச்சும் கருத்துக்களும் என்று இருக்கையில் எப்படி நினவு தப்பி வீட்டில் நிலை தடுமாறி குப்பற விழ முடிகிறது என்னால்..? வியப்பும் ஆச்சரியமும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன.. மீள்சிறகு
-
- 0 replies
- 543 views
-
-
வன்னி – மரணவெளிக் குறிப்புகள் கருணாகரன் முதற்காட்சி 1. பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை 2. நாட்களை மூடி காலங்களை மூடி மனிதர்களை மூடிப் பேரிருளாய் யுத்தம் விரிந்த போது நாங்கள் கூரைகளற்ற வெளியில் அலைந்தோம். போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை “எங்கேயுன் பிள்ளை? கொண்டு வா போர்க்களத்துக்கு“ என்ற கட்டளை யுத்தத்தின் பரிசாக அளிக்கப்…
-
- 0 replies
- 541 views
-
-
எதேச்சையாய் ஒரு காகத்தைக் கவனிக்க நேர்ந்ததுஇ எனது பள்ளி வளாகத்தில். உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகள் சிந்திய உணவுப் பருக்கைகளை தமது அலகால் கொத்தி அவ்விடத்தையே சுத்தம் செய்துவிட்டது காகம். இப்படி காகம் எத்தனையோ வகையில் ஒரு சாதாரண பறவையை விடவும் உயர்ந்த குணங்கள் கொண்டதாய் எனக்குத் தோன்றிற்று. ஆனால் அது் ஏனோ ஒரு பறவையாயக் கூட மதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அதன் நிறமோஇ வடிவோ அல்லது அபரிமிதமோ தெரியவில்லை. எனது ஆதங்கம் ஒரு கவிதையாக இங்கு வெளிப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 780 views
-
-
வெள்ளைப் புறாவுடன் வந்து... "சமாதானம்" வந்துவிட்டது என்றார்கள்!? சிவப்புப் பறவைகளாய்... சிதறிப் போயின அவை! அதன்பின்புதான் பார்த்தோம்... நம் மண்ணில், புறாக்களும் பிணந்தின்னும் என்று!
-
- 0 replies
- 557 views
-
-
புத்தாண்டில் உறுதியுடன்.... ------------------------ தேசம் கடந்து வாழ்ந்தாலும் தாய் மண் பாசம் கொண்டு நேசம் கொள்ளும் தமிழினமே நாம் ஓயும் நேரம் இதுவல்ல ! புதிய ஆண்டில் புதுமைகள் படைத்து நிமிரும் தமிழினமாக என்றும் எழுவோம் நீதியைக் காண நிமிர்வோம் நாமே விடியலுக்காக அடிமை விலங்கைத் தகர்த்தே எங்கள் விடியலைப் படைக்கும் புதிய ஆண்டாய் மாற்றிடுவோமே ! அவ்வண்ணம் நொச்சியான்.
-
- 0 replies
- 647 views
-
-
என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விடும் இரத்தம் அதிகரிக்கும் என் இதய துடிப்பு எனக்கு கேட்கிறது நான் சாக போகுறேனா.. ஒரு சிறு துக்கம் என் இனம் கூண்டோடு அழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாண…
-
- 0 replies
- 1.1k views
-