கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒழித்து விளையாடும் அம்மாவும் தெருவும் தேயிலை மலையும் மீண்டும் வருமெனக் காத்திருக்கும் குழந்தையின் முன்னால் குருதியை உறிஞ்சும் அட்டைகளும் வெறும் கூடைகளும் துளிர்த்திருக்கும் கொழுந்துகளும் அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும் உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன் கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன் மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின் புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண் ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள் புதைக்கப்பட அதன்மீதேறி கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று எவ்வளவெனிலும் சம்பளம் எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள் வெளியில் வர முடியாதிருந்தவர்கள் ஒரு நாள் மலைகள…
-
- 0 replies
- 471 views
-
-
காதல் உன்னைக் காகிதத்தில் எழுதி எழுதி தொலைத்து விட்டேன் Posted by கஜந்தி at 9:04 AM காதலன் ஐயோ! பாவம் என் காதலன் அழகழகாய் உடுத்தி என்னோடு திரிந்தவன் பணத்திற்கு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்ணைக் காதலித்து இப்படி வேலைக்காரன் ஆகி விட்டானே... Posted by கஜந்தி at 9:15 AM கணவன் இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்.. Posted by கஜந்தி at 6:07 AM புரியவில்லை... படிப்பது அக்காவா பிள்ளையா என்று …
-
- 0 replies
- 807 views
-
-
உயிரை எரித்து காதல் வளர்த்தேன் கடைசியில் அவளை இழந்து தனியாக நிற்கிறேன்..
-
- 0 replies
- 544 views
-
-
நெருடல் தந்த அகச் சிக்கல் பூமிப் பந்தில் புதியதோர் உலகம் வாரிச் சுருட்டிய மன அழுத்தம் நெம்பி மனமது விகல்பி நைந்து போயினவாம் நமதான வாழ்வாக! விரும்பிக் கேட்ட நிலையா? இடர் நீயாகத் தந்த வாழ்வாச்சு! உந்தன் பிறப்பு சாசுவதமாயின,; எந்தன் வாழ்வு அசுவதமாவோ? எமதான இறப்பில்,அதுவான இழப்பில், உமதான வாழ்வு சிறப்பாகும் என்ற நினைவுன்னை, சிதைவாக்கும் உண்மை சிந்தை கொள மறவாதே! உனதான வாழ்வுரிமை எமக்கானதுமாகும் இதை நீ மறுக்க கறுப்பாகும் உன் வாழ்வும்.; எமதான நிலத்தில் ஏகமாக நீயா? நமதான உரிமை நாதியற்று போமா? ஆனதான வாழ்வே ஆதியற்று போமா? வருடல் என்பது உனதான ஆத்மா! மருகல் ஒன்றே தமிழனவன் வாழ்வா! விரிதல் ஒன்றே எமதான ஆற்றல், பிரிதல் ஒ…
-
- 0 replies
- 592 views
-
-
ஈர்பத்து ஆண்டுகளில் திலீபனின் நினைவுகள். தித்திக்கும் பெயர்கொள் தேன்தமிழ் மறவா! திலீபா! சென்றனவே ஈர்பத்து ஆண்டுகள் எத்தனையோ பொன்மொழிகள் உதிர்த்தாய் திருவாயால் ஈழத்தாய் ஈன்றெடுத்த அரும்பொருட் பேறே! அத்தனையும் ஆணித்தர மாயெம் நெஞ்சினில் ஆழப் பதிந்து அகலவிரி கின்றனவே பத்தரை மாற்றுத் தங்கம்நீ புரிந்த பாங்கான ஈகைக்குப் பாரினில் நிகருண்டோ? கல்விச் செல்வமே கொடையெனக் கொள் கவினுறு இனத்தின் எண்ணத்தை உடைத்துத் துல்லியமாய் உணர்ந்தாய் தமிழீழ விடுதலையே தொடரும் வாழ்விற்கு முதன்மை வகிக்குமென. நல்கினாய் இன்னுயிரை இந்தியா நாணமுற நலமிகு உடலையும் ஈய்ந்தாய் மாணவர்க்காய் வல்லவனே இத்தகு கொடையினை அளித்திட வையகத்தில் யாருளர்? வணங்கினோம் வந்திடுவாய்! …
-
- 0 replies
- 828 views
-
-
அதிகாலையில் துயில் எழுந்து ... தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ... தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ... கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ... தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ....? கொட்டும் மழையில் உடல்விறைக்க... உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ... குருதியே வியர்வையாய் வெளிவர .... உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ... காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ....? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி .... விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு ... அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ....? உச்ச அறுவடை பொழுதினிலே …
-
- 0 replies
- 816 views
-
-
சில கற்பனைகள் உன்னுடன், இது போன்றதொரு தருனம், இனி நிகழாதெனில், இன்றே என் வாழ்வின், இறுதி நாளாகட்டும்..!!! உனைப் பார்த்த அந்த சில நொடிகளிலேயே, பற்றிக் கொண்டது காதல் நெருப்பு...! காதல் நெருப்பிலே, நான் கருகுகிறேன்..... நீ... குளிர்காய்கிறாய்....!!!!!!!!!! suddathu....http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_115712824924957211.html
-
- 0 replies
- 794 views
-
-
காற்று திசை மாறும்-நம் கண்ணீர் மறைந்துவிடும் நீர் ஊற்றும் பிணங்கள் வீழ்ந்தழுகும் அழும் பெருஞ் சாலைகளும் எரிந்த தோப்புகளும் கூரையிழந்த சுவர்களும் சாம்பல் பூத்த திண்ணைகளும் தலைதுறந்த தென்னைகளும் பனைகளும் சிரிப்பொலி மறந்துபோன செந்நீர் காயாத வன்னி மண்ணும் பழையநிலை காணக் காலம் சேரும் காற்று திசை மாறும் ஆடும் மாடும் கோழியும் குஞ்சுமென வாழ்ந்து பழகிவிட்டு பதுங்குகுழிகளுக்குள்ளும் எல்லாம்மறந்து பதறிக்கிடந்து..கதறிக்கிடந்து உறவையும் உயிரையும் கொஞ்சம் கொஞசமாயும்.. கூட்டம்கூட்டமாயும்..சிங்கள இனவெறியருக்குப்பறி கொடுத்து வாழ்வை வெறுத்துப்போன.. உலகையும் உள்ளமெலாம்தொழும் இறைவனையும் சபித்துக்கொள்ளும்.. ஈழத்தமிழனுக்காய்..நல்ல இதயங்கொண…
-
- 0 replies
- 1.6k views
-
-
அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம் தீபச்செல்வன் புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில் வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில் அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது கடவுள்கள் எங்களை கைவிட்டதாய் ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும் பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள் ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை பராசக்தி ஏன் கைவிட்டாள்? யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின் எந்தச் சித்திரவதைகளையும் பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள். வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில் என்னை கைகளில் அம்மா நிரப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹெர்மன் ஹஸ்ஸி- கவிதை தமிழில் மொழிபெயர்ப்பு : பேராசிரியர் மு. விஜயகுமார் ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். (1970) தலைப்பு: நிலைகள் நிலைகள் ஒவ்வொரு பூக்களும் தோன்றி மறைதல் போல இளமையும் மறைகிறது வாழ்வின் நிலைகளில். ஒவ்வொரு ஒழுக்கத்திலும் உண்மையை அறிகிறோம் மலரின் பருவங்கள் நிலையானதல்ல ஏனெனில் வாழ்க்கை ஒவ்வொரு வயதிலும் உள்ளது வருந்தாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள் பழைய உறவுகள் மறக்காமல் புதிய ஒளியைக் கண்டுபிடிங்கள் எல்லாத் தொடக்கமும் ஒரு மாயசக்தியாக வழிநடத்துகிறது. அதுவே நம்மைப் பாதுகாத்து உதவுகிறது அமைதியாக நெடுந்தூரப் பயணத்தைத் தொடங்குங்கள். வீட்டு நினைவுகள் நம்மைத் தடுக்கிற…
-
- 0 replies
- 323 views
-
-
நினைத்து பார்க்கிறேன் கோயில் திருவிழாவை பத்து நாள் திருவிழாவில் படாத பாடு பட்டத்தை ...!!! முதல் நாள் திருவிழாவிற்கு குளித்து திருநீறணிந்து பக்திப்பழமாய் சென்றேன் பார்ப்பவர்கள் கண் படுமளவிற்கு....!!! இரண்டாம் நாள் திருவிழாவில் நண்பர்களுடன் கோயில் வீதி முழுவதும் ஓடித்திரிவதே வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் திட்டும் வரை ....!!! மூன்றாம் நாள் திருவிழாவில் மூண்டது சண்டை நண்பர்கள் மத்தியில் - கூட்டத்துக்குள் மறைந்து விளையாட்டு ....!!! நாளாம் நாள் திருவிழாவில் நாலாதிசையும் காரணமில்லாது அலைந்து திரிவேன் ...!!! ஐந்தாம் நாள் திருவிழாவில் சேர்த்துவைத்த காசை செலவளித்து விட்டு வெறும் கையோடு இருப்பேன் ...!!! ஆறாம் நாள் திருவிழாவை ஆறுதலான நாளாக கருதி வீட்டிலேயே இர…
-
- 0 replies
- 1.9k views
-
-
கல்லரை முன் கண்ணீர் சிந்தி கண்துடைக்க என்னை எழுப்பிவிடாதே உன் கருவறையில் ஜனனிக்க வேண்டும் நான்! ......................... உன் உள்ளங்கையில் குடியேற ஆசைப்பட்டு முற்றத்தில் சொட்டியது அந்திமழை ....................... உதிர்ந்தது பூ வலியில் துடித்தாய் நீ! .................... சொட்டுச்சொட்டாக உள் இறங்கி உரைந்துப் பனிச்சிலையானது! மனசெல்லாம் நீ! ...................... தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி நீ என்ன முரண்களின் மகளா! .................. என் உதடு யாத்திரீகன்கள் உன் …
-
- 0 replies
- 10.7k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் – முள்ளிவாய்க்கால் போர்க் காலத்தின் சில கவிதைகள்: தொகுப்பு குளோபல் தமிழ் செய்திகள்:- முள்ளிவாய்க்கால் தமிழ் இனம் மறக்க முடியாத இனப்படுகொலையின் வடு. உரிமைக்காக போராடிய இனம் கறுவறுக்கப்பட்ட நிலம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உலகத் தமிழ் இனத்தையே உலுப்பிய நிகழ்வு. இந்த தாக்கம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்கள் பலவற்றில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலின் சாட்சியாக, குரலாக, இனப்படுகொலையை பதிவு செய்த சில குறிப்பிடத்தக்க கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து தருகிறது குளோபல் தமிழ் செய்திகள். -ஆசிரியர் ஜெய…
-
- 0 replies
- 2.3k views
-
-
அகதிப்பெருந்துயர்... வாடி இலை சொரிந்து வனப்பிழந்து கூடிக்குலாவிடக்குருவிகளற்று ஆடையிழந்து அம்மணமாய் நின்ற மரஞ்செடிகொடிகள் எல்லாம் வாடைக்காற்று வருடிட வலிமை பெற்று பூவும் கனியுமாய் பூத்துக்குலுங்கி புன்னகை செய்யும் இளவேனிற் காலங்களில் நீலம் ஒளித்திட நிலைகொண்ட இருள்கிளித்து பால்வெளி விந்தைகளாய் பரவிக்கிடக்கும் விண்மீன்களும் பால்நிலவும் வானில் உலாவரும் வசந்தகால இரவுகளில் நீலம் உடுத்திவந்து நிலவுடன் கொஞ்சிடும் நீரலைகள் தாலாட்டும் பேரழகுக்கடலின் பெருநீளக்கரைகளில் ஊரே கூடியிருக்கும் உல்லாச நாட்களில் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து உயரப்பறக்கும் இனிமைகள் நிறைந்த இரவுப்பொழுதுகளில் நான்மட்டும் தனித்திருந்து உயிர் வத…
-
- 0 replies
- 942 views
-
-
1 ‘மாவீரர்கள் சாவையே வென்றவர்கள் மக்கள் மனங்களுக்குள் வாழ்பவர்கள்’ நவம்பர்27ல் எங்கே நாங்கள் வருவோம்? நேசம் மிக்க எங்கள் தேசச்செல்வங்களே! உங்களைக் கண்டு எம் உள்ளத்துணர்வூகளை எடுத்துச்சொல்ல எங்கே நாங்கள் வருவாம்? நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தவர்களல்ல எங்களுள் நிலைத்து வாழும் மாவீரர்கள் எங்களை நேசித்தவர்கள் நீங்கள் எமக்காக உங்கள் உயிர்ப்பூக்களை உதிர்த்தவர்கள் எங்கள் நிம்மதிக்காக உங்கள் சுகங்களைத் துறந்து போராடினீர்கள் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக உங்கள் சாவூக்கான நாளை குறித்தவர்கள் நீங்கள் உண்மையாக எங்களை நேசித்தவர்கள் நீங்கள் -அதனால் உங்களிடம் மட்டுமே எங்கள் உள்ளத்து வலிகளை சொல்லி அழமுடியூம் அதனால்த்தான் உங்களைப்பெற்றவர்கள் உங்களின் சோதரங்கள்இஉறவினர்கள் த…
-
- 0 replies
- 617 views
-
-
நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை… நவம்பர் 11, 2020/தேசக்காற்று/உலைக்களம்/0 கருத்து நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை கைகளால் பொத்தலாம் என்றா நினைத்தாய்? மின்னாமல் ஒரு இடி எதிரியின் மடியிலே – விழுந்தது. பகைவனின் சிம்மாசனத்தின் பட்டு பட்டுத்துணியில் பொத்தல் விழுந்தது. கண்டியில் எண்கோண மண்டபத்தின் சுவர்கள் வெடித்துச் சிதறிக் கொண்டன. ஜெயவர்த்தனபுரத்தின் பாராளுமன்றப் படிக்கற்கள் மந்திரி;களின் பாதம்படுவதற்கு கண்டனம் தெரிவித்தன. ‘இலங்கை இராணுவம் அணிவகுப்புக்கு மட்டுமே அழகானது’ சிங்கள மக்கள் தெரிந்து கொண்டனர். “சிசில்” வெறும் விசில் என்பதை பூநகரிக்குள்ளே புலிகள் புகுந்தபோது கூலிப்படைகள் க…
-
- 0 replies
- 677 views
-
-
கைகள் இரண்டை கழுவாமல் கோக்குறாங்க உடல்கள் இரண்டை குளிக்காமல் தழுவுறாங்க இதழ்கள் இரண்டை எச்சிலுன்னு பாராமல் கவ்வுறாங்க நாக்கு இரண்டை நாதாரிகள் நக்கிறாங்க..! வாய்கள் இரண்டில் வார்த்தைகளோ ஆபாசம் கண்கள் இரண்டில் காட்சிகளோ அபந்தம் கைகள் இரண்டில் வேலைகளோ அசிங்கம்..! சோடி இரண்டு புதர்களுக்குள் குத்தாட்டம் உடல்கள் இரண்டு கார்களுக்குள் பந்தாட்டம் கால்கள் இரண்டு போடுவதோ கரகாட்டம்..! இணையத்தில் இணையுது இரண்டு FB இல் உடையுது இரண்டு துணிகள் துறந்து நடக்குது நாடகம் அதை காணொளின்னு பதியுது பகிருது காமத்தில் கோலோஞ்சினது..! கடைசியில்.. கொஸ்பிற்றல் நிறையுது பக்கெட்டுக்கள் குமியுது மாத்திரைகள் தீருது கூடவே கிருமிகளுக்கும் கொண்டாட்டம் அதுகளும் இது…
-
- 0 replies
- 705 views
-
-
எங்களுக்காய் அஞ்சலிப்போம் - நகுலேசன் கண்ணிலே தூசி என்றால் கைகள் வழக்கு வைத்து கூட்டம் வைத்து கடிதம் எழுதி காத்திருப்பதில்லை இங்கோ வாழும் வயதில் உண்ணா நோன்பிருந்து வாழ்வையே தந்தவன் நினைவெழுத மறுத்தவன் வாசலில் காத்திருப்பு இன்று அவகாசமும் முடிந்தது வசதியாய் ,ஒதுக்கமாய் நேர வரையறையுடன் உண்ணா நோன்பு போராட்ட அறை கூவல் கூடவே வழமைபோல் போட்டி போட்டு அறிக்கைக் கூவல் ’மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்றபடி மறைந்தவனுக்கு முன்னரேயே மரணித்துப் போனோமா… அனுமதி அவசியமில்லை எங்களுக்காய் அஞ்சலிப்போம்! – நகுலேசன் https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85463/
-
- 0 replies
- 559 views
-
-
பரமேஸ்வரா நீ தியாகத் தீ..! உன்சாவை கண்டுதானா உலகம் விழிக்க வேண்டும்.. நீயும் தமிழமகன்தான். தளராத ஒரு வீரன்தான். பரமேஸ்வரா பார்திருக்க உலகம் நீ பசித்திருக்கின்றாய். நல்லூர் வீதி விட்டு நகர்ந்துள்ள உன்யாகம் வெள்ளை வீதியில் ஆனால் கொடுங்கோல் முடிவில்லை அதை செய்தவரும் மாறவில்லை. தில்லையாடி வள்ளியம்மா பிறந்த மண் என்பார். காந்தீய யாத்திரையால் சுதந்திரம் கொண்டோம் என்பார்.. இன்று கொல்லும் போது எம்மை ஏன் மெளனமாய் உதவுகின்றார். புரியாத எமக்கு புரிய முன்னர் இழவுதான் மிஞ்சும்.. அவர் மெளனம் கலைக்க நீ தொடுத்த போராட்டம் பொய்க்காது. ஒற்றை மரம் தான் கண்ணுக்கு தெரியும் அதை தாங்கும் வேர்கள் என்றுமே தெரியாது. உனக்கு பின் தமிழர் …
-
- 0 replies
- 892 views
-
-
-
"காவோலை" "காவோலை விழ குருத்தோலை சிரிக்க காதில் மெல்ல காவோலை கூறிற்று 'காலம் மாறும் கோலம் போகும் காயாத நீயும் கருகி வாடுவாய்' குருத்தோலை சிரித்தது குலுங்கி ஆடியது குறும்பு பார்வையில் கும்மாளம் அடித்தது குருட்டு நம்பிக்கை வெயிலில் காய குருத்தோலை விழுகுது பாவம் காவோலையாக !!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 209 views
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர் …
-
- 0 replies
- 595 views
-
-
தேநீர் கவிதை: இல்லாத வீடு தன் நண்பனை அறிமுகப்படுத்தினான் என் நண்பன். ஒரு காலத்தில் ஒரே ஊரில் வசித்திருந்ததில் ஒருமித்தோம் இருவரும். ‘அந்த மாவு மில்லுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்கள் வீடு' என்றார். ‘உங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு துர்மரணம் நிகழ்ந்ததில்லையா?' என்ற என் ஊகத்தை மறுத்தார் அவர். ‘நீங்கள் வைத்திருந்த பவழமல்லி தெருவெல்லாம் மணக்குமே?' என்ற அவர் நினைவுப் பரிமாறல் என்னைக் குழப்பியது. …
-
- 0 replies
- 873 views
-
-
தமிழனென்று பெருமை கொள்வாய்.... சிறு கவிதை.... ஈழத்தின் மண்ணைப் பார் நீ வலிகளை உணர்ந்துகொள்வாய்....... மாவீரர் கல்லறையைப் பார் நீ தியாகங்களை புரிந்துகொள்வாய்..... இன்று தமிழரின் எழுச்சியை பார் நீ ஒற்றுமையை உணர்ந்து கொள்வாய்..... நம் தலைவனின் உறுதியை பார் நீ உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்வாய்...... வன்னியின் அடங்காத திமிரை பார் நீ தமிழனென்று பெருமைகொள்வாய்..... இளங்கவி
-
- 0 replies
- 536 views
-
-
காலத்தை வென்ற கவிஞன் விடுதலை நெருப்பில் குரல் எழுப்பிய புலவன் மலர்ந்தநாள். சுதந்திர சிறகடிற்பிற்காய் இயந்திரமாய் எழுதிய கவிஞன் மண்ணைப்பாட பிறந்தநாள். இவன் விற்பனை கவிஞனும் அல்ல கற்பனை கவிஞனும் அல்ல காலநதியில் கரைந்து போன கவிஞனும் அல்ல கூவி வந்த கந்தக துகள்களுக்குள்ளும் சாவு விழுந்த வலிகளுக்குள்ளும் மூசி மூசி வீசிய புயல்காற்று. இவன் காலத்தை வென்ற கவிஞன் ஈழயாகத்தை தமிழால் வளர்த்த அறிஞன் யாருக்கும் கொள்கையை விற்கா வியாசகன் யாதுக்கள் நிகழ்த்திய யாதனைகளை பாடிய பாவலன் தேசியத்தலைவனின் அண்ணனாய் மணணை நேசித்த சந்திரிகை. எப்படி ஜயா உமை மறப்போம் நீ பாடித்திரிந்த திசையை தேடிப்பார்க்கிறோம். விடியவில்லை விடுதலைராகம் கேட்கவில்லை மாறக நாற்…
-
- 0 replies
- 613 views
-