கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அதிகாலை எழுந்து..... ஆண்டவனை நினைத்து ..... இனிய புன்னகையுடன்..... ஈகை எண்ணத்துடன்...... உழைக்க ஆரம்பியுங்கள்.... அனைத்தும் வெற்றியாகும்.....!!! ^^^^^ இனிய காலை வணக்கம் இனிய உள்ளங்களே இவன் உங்கள் இனியவன் ^^^^^^ இனிய காலைமதியம் மாலை இரவு வணக்கத்தை தெரிவிக்க விரும்பும்உறவுகள் இந்த திரியில் தொடர்ந்து வாழ்த்தலாம் நன்றி நன்றி
-
- 0 replies
- 994 views
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண …
-
- 0 replies
- 465 views
-
-
கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை ......... மழைக்கால ஆரம்பம் ,மண் மீது தூறல்கள் ஒவ்வொரு இதயத்திலும் இனம் தெரியாத சோகங்கள். மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது ஈழத்து மக்களின்,வீர வேங்கை களின் நினைவுகளும் பிறந்த தினமும் ஒரு சேர மகிழ்வுற்றா ஒரு பொழுதும் மண்ண்ணில் விதைத்த மாவீரருக்காய் , என்இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி. எத்தனை எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ... கார்த்திகை தோறும் கல்லறைத் தீபங்கள். மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள் இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே சிந்திய குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே .... சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு மண…
-
- 0 replies
- 889 views
-
-
யாழ் நிலம் 0 தீபச்செல்வன் ---------------------------------------- 01 குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது நிலம் அள்ள வரும் கைகள் யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன இந்த யாழ் உடைந்து போகட்டும்! அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!! என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன் யார் யாரோ வந்திறங்கி யாழெடுத்து எறிகிறார்கள் வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும் விளம்பரப்பலகைகளின் நிழலில் அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு யாழோடு நிலத்தை யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத் தின்று கொண்டிருக்கின்றனர் நகரெங்கும் நிலமெங்கும் …
-
- 0 replies
- 805 views
-
-
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....! வெடிகுண்டுகளைச் சுமந்து சுமந்து மலடாகிப் போன மரண தேசத்தில் மறத்தமிழச்சியொருத்தியின் தாய்மை பறைசாற்றப்பட்டது அன்று.. "அக்கினி குண்டங்கள் மழையாய்ப் பொழிந்து எம் மக்கள் கூட்டம் மாண்டு மடியும் யுத்தக்களத்தில் ரத்தம் சிந்த இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்...! எம் குலப் பெண்களின் பெண்மையைக் கொன்ற ஆயுதம் ஏந்திய நாய்களின் சத்ருவாய் இதோ ஒர் போராளி உதித்துவிட்டான்....! போர்க்களத்தில் புதையுண்ட எம் இனத்தையும், மொழியையும் தோண்டியெடுத்து மகுடாபிஷேகம் செய்ய இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்......!" என பெருமிதிங் கொண்டவளாய் உணர்ச்சிப் பெருக்கில் தன் அறுபட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
"இது இனப் படுகொலை ..... !!!" "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" …
-
- 0 replies
- 209 views
-
-
ஈமத்தாழி - தீபச்செல்வன் ஈமத்தாழி மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறி…
-
- 0 replies
- 1.8k views
-
-
அன்பிற்கு புது பல அர்த்தங்கள் தேடி அகங்காரத்துடன் காதலையும் அலர்ச்சியம் செய்து தெரிந்தே நான் அவனுடன் புரிந்த சண்டைகள் தெளிவு தரும் என்று ஏதோ ஓர் நினைப்பில் வர்ணங்களில் வானவில்லை காண்பது போல் வாட்டும் ஏக்கங்களில் அன்புக்கு விளக்கங்கள் தந்தாலும் நெடுந்தூரத்தில் அவன் உருவம் என் விழிப்பார்வை கைது செய்தால் நெஞ்சில் சுமந்த சுமைகள் யாவும் நெகிழ்ச்சியில் உருகுதே கதிரவனின் வருகையில் மலரும் தாமரையாய் கண்களின் இரு கருமணிகள் விண்மீன்களானது ஏனோ ? சொற்களுக்கு எட்டாத உணர்வுகள் யாவும் உடனே விழித்துக்கொள்ளும் சொப்பனத்தில் கூட அழியா சுவடாய் மனதினுள் பதிந்து கொள்ளும் ஆன…
-
- 0 replies
- 821 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது... ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து... வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது... பயங்கரவாதம்..! இருந்தும்... மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே.... மனிதனை இயந்திரம் கொன்றால் "Just war"..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம் இது..! ஏவி விட்டு தூர இருந்து கொன்று விட்டால் இல்லை இல்லை.. ஊரையே அழித்திட்டால் சாட்சியும் இல்லை குற்றவாளியும் இல்லை அழுவதற்க…
-
- 0 replies
- 612 views
-
-
தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். மணியோசை க…
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னி வெடிகளுக்காய் உனக்கு இடிகள் காத்திருக்கு..... கவிதை.... சுனாமியில் அன்று வெள்ளத்தில் மிதந்தோம்..... சுட்டெரித்த பிணங்களாய்;வன்னியிலே இரத்தத்தில் மிதக்கின்றோம்.... பிணக்கும்பலின் மத்தியிலே மழலையொன்று தன் தாய் தேட சிதறிவிட்ட சதைக் கும்பலிலே தாயும் தன் பிள்ளை தேடும் ; இந்த அழிவை எங்கும் கண்டதில்லை எதிலும் பார்த்ததில்லை திரைப்படத்தில் பார்தால் கூட தேம்பி அழுததுண்டு... வீதியிலே பதுங்கு குழி; அதில் உயிருக்காய் பதுங்கிவிட்டு ஓட்டத்தை தொடரவென்றால்; வீதியிலே உறவுகளின் சிதறல்கள்.... எந்தப் பிள்ளை இறந்ததென்று பார்ப்பதற்கும் நேரமில்லை..... எந்த உடை உடுத்ததென்று கண்டுவிட முடியவில்லை; காரணம் எங்குமே சிவப்பு நிறம் எல்லாமே ச…
-
- 0 replies
- 1.8k views
-
-
தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீ…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழமணித் திருநாட்டில் சுற்றிவரும் அலையோசை வளங்கொழிக்கும் குளிர்வாடை நாட்டிடையே ஆர்ப்பரிக்க வடதிசை யொலிக்கின்ற ஓங்கார நாதமுமே நடைபோடும் நல்லுலகின் யேசுபிரான் நாமமும் கீழ்த்திசை யலையோடு குர்ஆனும் ஒலிகேட்க திரிகரண சுத்தியுடன் திடமாக நின்றறிருந்தால் பரிவில்லாச் சிங்களனும் பார்த்துமே பறந்திருப்பான் தமிழனிற்குள் தனித்தொரு அணிபிரிந்து அழியாவண்ணம் வழிவழியே வையகத்தில் வசையான கேலிக்கதை நிலையாமல் நெஞ்சத்தில் நிறுத்தி நாளும் கலையாத கருத்தோடு காண்கின்ற ஒற்றுமையுள் ஈழமண்ணின் கனிச்சுவையும் இனிப்பான நன்னீரும் பாணன் தன் புகழ்சூழ்ந்த யாழ்ப்பாண நகர்தன்னில் தங்கத் தமிழ்மக்கள் தனித்தோர் கோலோச்ச மங்காத மறவர்கள் மரணித்து விதையாகி வஞ்சக எதிரிகளை வென்ற…
-
- 0 replies
- 784 views
-
-
தமிழ் ஈழம்தான் சரியான தீர்வு என்றாலும் தற்காலிகமாக அதற்கு முன் ஒரு தீர்வு வேண்டும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திமுக வின் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தேர்தல் காலத்திற்கு சற்று முன் தமிழ் ஈழம்தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு எனக்கூறியதுடன் அதை அடைந்து கொடுக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கருணாநிதி அவர்களும் தமிழீழம் அமைய, தானும் முயற்சிக்கப் போவதாக தேர்தல் காலத்தில் கூறினார். காங்கிரஸ் கட்சியைத்தவிர ஏனையவர்களெல்லாம் ஈழத் தமிழ்மக்களின் விடிவுக்காக் குரல் கொடுத்துக் கொண்டே வந்துள்ள…
-
- 0 replies
- 1k views
-
-
தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே! தமிழ்த் தாயின் தன்மானம் காக்கவெனத் தம்முயி ரீய்ந்த சான்று தனயர்களே! அமிழ்தினு மினிய அன்புச் செல்வங்களே! ஆற்ற வியலாத் துன்பக் கடலிலெமை அமிழ்த்தி மறைந்த இன்னுயிர் மறவரே! ஆணி வேரென உறுதியிற் றிளைத்துக் கமழும் தமிழினத்தின் மணத்தை நன்றே காசினியிற் காட்டிச் சென்றகன வான்களே! முள்ளி வாய்காற் களமுனை தனிலே முடிவாகிப் போனீரென முழங்கி மகிழ்ந்து அள்ளி இனிப்பினை அளித்துச் சிரித்து ஆன்றவெம் மினத்தின் மானம் பறித்து எள்ளி நகையாடி ஏதிலிக ளாக்கி எக்காள மிட்டு இன்புற் றோர்அழியத் துள்ளி யெழுந்து தூக்கம் கலைந்து துண்டெனத் தலைகள் சிதறிடச் செய்வீர்! சாவென்பது உமக்கில்லை ச…
-
- 0 replies
- 667 views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
சுதந்திரம் என்றால் என்ன? நிஜத்தைப் புரிந்த கவிதைக் குரல் சுதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி எங்களுக்கு பல பிம்பங்கள் உண்டு. சிதறிய கண்ணாடித் துண்டுகள் என அவை சிதைந்து கிடக்கின்றன. உள்ளத்தில் ஓல ஒலி எழுப்புகின்றன எமது உள்ளத்தின் உணர்வுகளின் வெளிப்பாடாக ஒலிக்கிறது ஒரு குரல் ஆனால் அது தமிழ்க் குரல் அல்ல. சிங்களக் கவிஞனின் குரல். பிரச்சனையின் அடிநாதத்தைப் புரிந்த குரல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிடும் பிரவாகினி செய்தி மடலில் வெளியான கவிதை இது எழுதியது :- அலோகா ரணசிங்க மொழிபெயர்ப்பு :- மாக்ஸ் பிரபாஹர் சுதந்திரம் கிடைத்தது சோதரா, சுதந்திரம் கிடைத்தது அத்தனை நிலத்தையும் அபகரித்தணைத்திட சுதந்திரம் கிடைத்தது சோதரா சுதந்திரம் கி…
-
- 0 replies
- 569 views
-
-
உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில் உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே – பரமபுத்திரன் அணுங்கி ஒருகுரல் மீண்டும் சிணுங்குது தன்னையும் வெளிக் காட்டிட நினைக்குது இன்னமும் நம்பிட இருக்குது தமிழ்ச்சனம் இதனால் தெறிக்குது அவர்களின் உரைகள் ஏனென்றால் தமிழர் உளவியல் அடிமைகள் தன்னினம் பிறனால் இழிக்கப் படினும் மகிழ்ந்து சிரித்துக் கருத்தினை உவந்து எங்களைப் பிழையென்று எப்போதும் ஏற்கும் சங்கடக் குழுவென்று உலகமே நம்புது இந்த எண்ணத்தை வலுவாய்ப் பற்றி எடுத்துத் தொடங்குகிறார் திரும்பவும் பழங்கதை இவரின் செய்தியை கேட்கநாம் தயார்தான் காரணம் இன்னமும் புலிகளில் வெறுப்புண்டு இராசிவ் காந்தியைக் கொன்றது புலிகளா…
-
- 0 replies
- 445 views
-
-
பூத்த நெருப்பு அறிவுமதி * என் மரணம் அது கண்ணீரை யாசிக்கும் பிச்சைப் பாத்திரமன்று கவிதைக்குள் முகம் புதைத்து யாரங்கே கதறியழுவது... என் மரணம் இரங்கற்பா எழுதுவதற்கானதும் அன்று சவுக்கு மரத்து ஊசி இலைகளில் சறுக்கி விழுகிற பனித் துளிகளாய் நீங்கள் சிந்தும்கண்ணீர்ச் சொற்களால் என் பெயரை உச்சரிக்காதீர்கள் பூமி இது தண்ணீரின் கல்லறை கடல் அது பூமியின் சமாதி என வார்த்தைகளுக்கு வண்ணம் பூசுவதால் கவிதையை நீங்கள் கெளரவப்படுத்தலாம் வாழ்க்கையை கெளரவிக்க இந்த வண்ணங்கள் என்ன செய்யும் மின்னல் இருளின் விரோதியன்று அது மழையின் விளம்பரம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே காதலிக்கத் தெரிந்த உங்களின் கவிதைகள் கூட காதல் தோ…
-
- 0 replies
- 617 views
-
-
கல்லறைகளைத் தின்னும் பேய்கள் அல்ல நாங்கள்! செத்தவன் மேல் வன்மம் தீர்க்கும் நாய்கள் அல்லவே நாங்கள்! கல்லறைகளை கிண்டும் பன்றிகள் அல்லவே நாங்கள்! கற்பை தின்றதும்... கழுத்தை வெட்டியதும்.... சுட்டுக்கொன்றதும்.... குழந்தையை பிய்த்து எறிந்ததும்... ஆசுப்பத்திரியில் அடிச்சுக்கொன்றதும்.. "புள்டோசரால்" ஏத்திக்கொண்டதும்... நீங்கள் மறந்திருப்பியள் நாங்கள் மறக்கவில்லை! அடிச்ச அடியின் தழும்புகள் மாறவில்லை. வலிச்ச வலிகளும் மறக்கவும் முடியவில்லை! நாங்கள் கல்லறை தின்னும் பேய்கள் அல்ல! கல்லறைகள் மீது போர்தொடுக்கும் மோடையர்களும் அல்லர்! உங்கள் கல்லறைகள் எங்கள் மண்ணில் பத்திரமாகவே இருந்தது! இனியும் இருக்கும்! …
-
- 0 replies
- 455 views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு பகுதி 01: http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1 பகுதி 02 : http://www.scribd.com/doc/122361169/Puthuvai-Ulaikalam-collection-2
-
- 0 replies
- 3.6k views
-
-
கொதிக்கும் கல்லறைகள்...... கவிதை - இளங்கவி.... வன்னி முற்றத்தின் வெண்ணிலவைப் பார்த்து வான் குருவி சொன்னது.... உன்னைப் பார்த்து சோறு உண்ண இங்கே குழந்தைகள் இல்லை... இரத்தத்தில் தோய்ந்தும் கந்தகத்தில் எரிந்தும்... மண்ணிலே புதைந்தும்; அவர்கள் இறந்து பல மாதங்களாகிவிட்டது..... உன்னைப் பார்த்து சோறூட்ட இங்கே தாயுமில்லை அவர் மடியில் சேயுமில்லை.... ஆனாலும் உனக்கு வேலையொன்று இருக்கிறது... இலட்சியத்துக்காக உயிர் நீர்த்த மாவீரர் புதைகுளிகளுக்கு மேல் உன் குளிர்வையும் ஒளிர்வையும் காட்டு தலைவர்கள் எனும் பெயரில் தமிழ் தேசியத்துக்கு சேறு பூசுபவர்கள் செயல்கண்டு கொதித்துப் போயிருக்கும் கல்லறைப் பூக்களின் ஆன்மாவாவது சாந்த…
-
- 0 replies
- 681 views
-
-
-
- 0 replies
- 704 views
-